ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பு தீர்மானித்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் அமைப்புச் செயலாளர் நடராஜா ஜனகன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள இடதுசாரி அமைப்புக்களின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3ஆம் திகதிவரை நெதர்லாந்தில் இடம்பெற்றது. இதில் 28 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 191 views
-
-
விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது! [Tuesday 2020-01-21 08:00] மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. இதில் …
-
- 9 replies
- 1.5k views
-
-
வெடிகுண்டு மூலப்பொருட்களைப் புலிகள் பெங்களூர், மும்பையிலிருந்து தருவிப்பாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது வெடிகுண்டுத் தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை "தகவல் தொழில்நுட்ப நகரமான' பெங்களூரிலும், தொழிற்சாலை நகரான மும்பையிலிருந்தும் பெற்றுக் கொள்ளுக்கின்றார்களாம்! வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தித் தளம் ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கின்றது. வெடிகுண்டுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி சரக்குப் பொதியை தென் தமிழ் நாட்டின் மதுரை நகரில் இந்திய அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்டிருந்த இந்த சரக்குகள் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கையிலேயே பிடிபட்டிருக்கின்றன. புலிகளின் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்கள் அழுது துடிப்பது இன்று நேற்றல்ல.காலாகாலமாக அனுபவிக்கின்ற பெரும் துயரம் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை ஒரு கணம் புரட்டிப் பார்த்தால், இக்காலப் பகுதிக்குள் ஆட்சியில் இருந்த அரசுகளின் கட்டளைப்படி தமிழர்களின் பிரதேசங்கள் மீது நடத்திய எறிகணைத் தாக்குதல்கள்,விமானக் குண்டு வீச்சுக்கள் என எல்லையற்ற நாசகாரங்கள் நடந்தேறின. 1995இல் யாழ்ப்பாணத்தில் மேற் கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கையால் தமிழ் மக்கள் தங்கள் தேட்டங்கள் அத்தனையையும் இழந்ததுடன் மிக மோசமான இடப் பெயர்வையும் சந்தித்தனர். இதற்கு மேலாக 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பெரும்போர் 3 ஆண்டுகள் உக்கிர சன்னத மாடி, வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை காவுகொண்ட துயரம் இன்னமும் நீ…
-
- 0 replies
- 409 views
-
-
யாழ்.பொதுநூலகத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார். யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இந்தியன் கோர்னர் என்ற புத்தக நிலையம் ஒன்று …
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர் (எம்.நியூட்டன்) ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என எந்த கட்சிக்கும் நிலையானதொரு கொள்கை கிடையாது. நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எந்த கட்சிக்கும் அக்கறையும் இல்லை என்று விசனம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்கினேஷ்வரனுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றபோது விருந்தினராக கலந்துகொண்டு …
-
- 3 replies
- 582 views
-
-
(2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்- 2 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்பு [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 உடலங்களும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியுள்ளதாவது: மன்னார் - சன்னார் பகுதிக்கும் கொடிகட்டிய ஆற்றுப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி ஊடாக நேற்று வியாழக்கிழமை…
-
- 0 replies
- 791 views
-
-
யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:30 PM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217825
-
-
- 22 replies
- 678 views
- 1 follower
-
-
சென்னை: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திமுகவின் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மூலம் விரைவில் ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு அனுப்பி வைப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழ் ஈழம் என்று குரல் கொடுத்தவர்கள் இன்று எதிர்ப்பு குரல் தெரிவித்தால் என்ன பொருள்? நாதஸ்வர இசை முழங்கும்போது பக்கத்தில் உள்ள இன்னொரு வித்வானும் அதற்கு ஏற்றார் போல் நாதஸ்வரம் வாசித்தால் தான் கச்சேரி களைகட்டும். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொடுக்க நானும், சில தமிழக தலைவர்களும் சேர்ந்து டெசோ மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அந்த மாநா…
-
- 8 replies
- 1.2k views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58
-
- 2 replies
- 1.5k views
-
-
சாவகச்சேரி வெடிபொருட்கள் – இனவாதிகளே கூச்சலிடுகின்றனர் என்கிறார் வடக்கு ஆளுனர் சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இனவாதிகளே கூச்சலிடுவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வரும் நிலையில், இனவாதிகளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போரை வென்றதை விடவும் கடினமான விடயம் மக்கள் மனங்களை வெல்வதேயாகும். அந்த இலக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடைந்துள்ளார். அதிகம் மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவ…
-
- 0 replies
- 451 views
-
-
கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயம் பொறிக்கப்படல், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் 8 வது சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்று வரும் பிரத்தியேக வகுப்புக்களை ஞாயிறு மற்றும் போயா தினங்களில் சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என சபை உறுப்பினர் தயாளராசா தரணிராஜ் பிரேரணையை …
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
'உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றறோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழ் மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து விட விரும்புகிறோம். இந்த நல்லெண்ண நடவடிக்கiயாக, சார்க மாநாடு நடைபெறும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்ககைகளற்ற அமைதி நாட்களாகக் காத்து ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தைக் கடைப்படித்;து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்." இவ்வாறு அறிவித்திருக்கின்றனர் புலிகள். நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே 'சார்க்' மாந…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாடு மஹிந்தவிடம்.. பொருளாதாரம் பஸிலிடம்.. பாராளுமன்றம் சமலிடம்… என இன்று நாடே மஹிந்த குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லச்ஷ்மன் கிரியெல்ல கிண்டலடித்துப் பேசியுள்ளார். வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக மஹிந்தையர் அரசு தெரிவிக்கிறது. ஆனால் ஒன்றுமே அவ்வாறு இடம்பெறவில்லை. அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே இடம்பெறுகின்றன. மஹிந்தையர் அரசில், ஒரு தொழிற்சாலையாவது நிர்மாணிக்கப்பட்டமையை நிரூபித்துக் காட்டினால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 558 views
-
-
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் வருடாந்த வருடப்பிறப்பு விளையாட்டு நிகழ்வு, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின் வவுனியா பணிப்பாளர் உட்பட புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/169693/%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%…
-
- 0 replies
- 582 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் . செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் . முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது . தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்…
-
- 0 replies
- 780 views
-
-
28 JUL, 2025 | 06:00 PM கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களை…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி தலைமை விமானியாக பணியாற்றி வந்த ஜேர்மன் வாசியொருவா விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யபட்டு;ளளா. கடந்த பத்து மாதங்களாக விமானியாகப் பணியாற்றி வந்த இவர், ஒரு இணை விமானியே எனவும் பெரிய விமானங்களுக்கான கப்டன் அல்ல என்பதும் உள்ளக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அவரது சுய விபரச் கோவையிலிருக்கும் அனைத்து தஸ்தோவேஜூக்களும் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின், ஏ-340 ரக மிகப்பெரிய விமானத்தில்; பயிற்சிக்காக வந்த கனிஷ்ட தர விமானியொருவர், இந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
பரிசுப் பொருட்களை கைவிட்டுச் சென்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு வெள்ளியினாலான கலசம் ஒன்றை பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சங்கம் வழங்கியிருந்தது. அதனை உடனடியாக அவர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்துவிட்டார். என்.கே. இலங்கக்கோனின் பதவி ஓய்வை முன்னிட்டு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களையும் அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு கையளித்துள்ளார். அத்துடன் அவரது பதவிக் காலத்தில் பல்வேறு ந…
-
- 2 replies
- 473 views
-
-
“LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை! adminAugust 10, 2025 மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப் பட்டதோடு, அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து ‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி’ என குறிப்பிட்டு குறித்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். -குறித்த கடிதத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது…
-
- 1 reply
- 348 views
-
-
வடபோர்முனையில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் - பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன வன்னியின் வடபோர் முனைகளில் சிறிலங்காப்படையினரின் எறிகணை வீச்சுக்கள் நாளந்தம் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளாலி முகமாலை பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையாக எறிகணை வீச்சக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. பல்குழல் பிரங்கித்தாககுதல்கள் ஆட்லறி மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் என்பன இரவு வேளைகளில் அதிகமாக நடைபெறுகின்றன. இத்தாக்குதல்களால் பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன. http://www.tamilwin.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=4]சிறப்பு நிபுணர் மெகாலியும் உடன் வருகிறார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவினர் இன்று கொழும்பு வருகை தரவுள்ளனர். [/size] [size=4]இக்குழுவில் சர்வதேச நாடுகளின் குற்றவியல் தொடர்பாக தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற சிறப்பு நிபுணரான மெகாலி என்பவரும் இடம்பெற் றுள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைப்படியே தொழில்நுட்ப அதி காரிகள் குழுவினர் இலங்கைக்கான விஜ யத்தை மேற்கொள்கின்றனர்.[/size] [size=4]அண்மையில் சூடான் ஜனாதிபதி அல் பUருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்து குற்றவியல் விசாரணை செய்தவ ரான மெகாலி என்பவரே இக் குழுவின் தலை வராக ந…
-
- 1 reply
- 591 views
-
-
மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கவில்லை! - இலங்கை அரசு விளக்கம் [Tuesday 2016-04-19 18:00] இலங்கை கடலுணவுப் பொருட்கள் மீதான இறக்குமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குகிறது என வெளியான ஊடகச் செய்திகளை, மீன்பிடி அமைச்சு மறுத்துள்ளது. அந்தச் செய்தி அடிப்படையற்றது எனக் கூறும் செய்திக் குறிப்பு, இது தொடர்பிலான முடிவொன்றை எடுப்பதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளன எனவும் கூறுகிறது. முன்னதாக இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலர் எம்.டி.வன்னிநாயக்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக் கடலுணவு இறக்குமதிக்கு விதித்திருந்தத் தடையை நீக்க முடிவு ச…
-
- 0 replies
- 493 views
-
-
அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார். கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/அரசியல்-கட்சிகளின்-சின்ன/
-
- 0 replies
- 231 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் த…
-
-
- 6 replies
- 436 views
-