ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2025 | 05:26 PM "வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே சீனப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனப் பிரதமர் லி சியாங் சிநேகபூர்வமாக வரவேற்றார். மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் சீனப் பிரதமர் லி சியாங் உறுதியளித்தார். ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்ட…
-
-
- 5 replies
- 409 views
- 1 follower
-
-
இராவணன் காலப் பழைமையான சுரங்கப் பாதை வெள்ளவாயவில் இராவணன் காலத்து. மிகவும் பழைமையான சுரங்கப்பாதை ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்ல வெள்ளவாய வீதியில் 10 ஆம் கட்டை பிரதேசத்தில் சாதின்னாகலகந்த ஊடாக உமா ஓய திட்டத்துக்கான ஆய்வுகள், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இராவணன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராவணன் ஆற்றின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படும் மேற்படி சுரங்கப்பாதையை இராவணன், ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை தோவபன்சலை வரை செல்லப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கல்மலை ஒன்றை வெடி வைத்து அகற்றிய போ…
-
- 5 replies
- 746 views
-
-
தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரிக்கும் செயற்பாட்டில் சுமந்திரன்.! - முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.! தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுமந்திரன் எம்.பி போன்றவர்கள் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கல்முனை பிரச்சினையாக இருக்கட்டும் முஸ்லீம் தமிழ் பிரச்சினையாக இருக்கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இரண்டு வகையான நிலைப…
-
- 5 replies
- 867 views
-
-
டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்- டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது…
-
- 5 replies
- 3.1k views
-
-
அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் இலங்கை அரசாங்கத்தின் அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை நேரில் அழைத்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரோபேர்ட பிளே தமது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரோபேர்ட் பிளேன் அமெரிக்க அரசாங்கத்தின் கண்டனத்தை எழுத்த மூலம் இலங்கை தூதுவரிடம் கையித்து அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறும் கோரியுள்ளார். அமெரிக்க பிரஜையான சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சரத் பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க …
-
- 5 replies
- 1.2k views
-
-
குறைகிறது பாணின் விலை By T. SARANYA 31 OCT, 2022 | 03:01 PM 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/138793
-
- 5 replies
- 582 views
- 1 follower
-
-
Posted by குணா on 08/06/2011 in செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (03-06-2011) பாரிஸ் புறநகர்ப் பகுதியான நந்தேரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளால் கூட்டப்பட்ட இந்த அமர்வில் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் வட அமரிக்க மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு விவாதிக்கப்பட்டு, பல திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு ஏகமனதாக அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அவைத்தலைவர், ஆட்சிக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுக்களுக்கான தெரிவுகள…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை…
-
- 5 replies
- 770 views
-
-
மனித உரிமைகள் நிலவரம்: இலங்கை மீது அம்னெஸ்டி விமர்சனம் 'காணாமல்போனவர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டறிவதிலும் அவர்களை காணாமல் போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை' உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய இந்த ஆண்டுக்கான வருடார்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 'இலங்கையில் ஜனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுவந்தது. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், எதேச்சாதிகார கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமல்போகச் செய்யும் ந…
-
- 5 replies
- 556 views
-
-
-மேனகா மூக்காண்டி 'முன்னேஸ்வரம் சென்று நான்கு கால் மிருகங்களைக் பாதுகாக்க முயன்றவர்கள், தங்களது பிரதேசங்களிலேயே உள்ள இரண்டு கால் மனிதர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டனர்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நாளை உச்சகட்டத்தை அடையவுள்ளது. நீதியரசர் விடயத்தில் அரசாங்கம் விட்டுள்ள தவறினை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் அதற்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்காதுள்ளது. நாட்டின் சட்டம் தொடர்பில் நன்றாகத் தெரிந்திருந்தே இந்த அ…
-
- 5 replies
- 525 views
-
-
'யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் ' என்று சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர் (யூஎஸ்எயிட்) நிறுனவத்தின் ஆசியாவிற்கான சிரேஸ்ட பிரதி உதவி நிர்வாகி டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்தார். 'இலங்கை ஒரு அழகான நாடு, அமெரிக்க மக்களும் இலங்கையின் அழகை ரசிக்கின்றனர். அழகான இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அமெரிக்க மக்களின் சார்பில் நான் சந்தோசமடைகின்றேன்' என்றும் அவர் கூறினார். 'இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் பாரம்பரிய இசைகளினை வளர்த்துக் கொள்வதுடன், இசையினை பரப்புவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பிரேஸில், பங்களாதேஸ், இந்திய…
-
- 5 replies
- 687 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வழக்கம் போலவே நேற்றும் தங்காலையில் உள்ள கார்ல்டன் வதிவிடத்தில் சிங்களப் புத்தாண்டை கொண்டாடினர். இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள் நாமல், யோசித, றோகித, மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவி, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா அமைச்சர் ஜோன்டன் பெர்னான்டோ மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். எனினும், இந்த கொண்டாட்டங்களில் வழங்கமாக பங்கேற்கும் சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இளைய சகோதரரும், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ரா…
-
- 5 replies
- 552 views
-
-
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள…
-
- 5 replies
- 708 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்! பாணன் இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – பாணன்' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் கலை கலாசார கட்டுக்கோப்பான யாழ்ப்பாணத்தில் அது கைநழுவத் தொடங்கிவிட்டது என்பது பழைய கதை. 1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை மீட்டாயிற்று என்று சொல்லி ஆக்கிரமித்தபோது அங்கு விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தனர். ஆனால் 1996 இல் மீள இடம்பெயர நேர்ந்தபோது யாழ்ப்பாணத்தவர் மீண்டும் யாழ் மண்ணிற்கே செல்ல முற்பட்டனர். பின்னர் பாதை திறப்பு அது இது என்று நடந்தபோது யாழ்ப்பாணம் கொஞ்சம் நிமிர தொடங்கியது. வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக தொடங்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா ஆவேசம் DEC 31, 2014 | 0:50by கார்வண்ணன்in செய்திகள் அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரவூப் ஹக்கீம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பணியாற்றினார். தேர்தலில், மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார். மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார். அந்த தேர்தலில் …
-
- 5 replies
- 1k views
-
-
தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார் தமக்கும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கத்திற்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் பாதக நிலைமைகளை உருவாக்கும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 5 replies
- 938 views
-
-
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவரது சடலம் கிடைத்தது என்றுகூட தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பாலச்சந்திரன் என்பவர் பிரபாகரனின் இளைய மகன். அவர் ஆயுதம் ஏந்திய பெரியவர் அல்லர். ஒரு சிறு பிள்ளை என்பது பார்த்தவு…
-
- 5 replies
- 774 views
-
-
"அரசியல்வாதிகள் என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் சிலர் உயிர் அச்சுறுத்தலும் விடுத்து வருகின்றனர். என்னிடம் அமெரிக்கக் குடியுரிமை உள்ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலிகளின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; "நான் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் என்னைக் கைது செய்யப்போகின்றனர் என அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். அத்துடன் என்னைக் கொலை செய்யப் போகின்றனர் எனவும் அவர்களில் சிலர் மிரட்டுகின்…
-
- 5 replies
- 981 views
-
-
கோட்டபாய மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றன: காவல் துறை. ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளாக ஸ்ரீலங்கா காவல் துறையினாடர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் முச்சக்கர வண்டி கடந்த வருட இறுதியில் கொம்பனி வீதியில் உள்ள பள்ளி வாசலுக்கு அருக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தின் காவலாளி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேககிக்கப்படும் நபர் தன்னை முஸ்லீம் என அடை…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக மகிந்த ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர், சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் …
-
- 5 replies
- 854 views
-
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா் adminSeptember 27, 2024 ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தஇனம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன். வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவி…
-
- 5 replies
- 506 views
- 1 follower
-
-
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி கடற்றொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(stalin) தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள். குறித்த நிகழ்வில் இலங்கையிலிர…
-
-
- 5 replies
- 419 views
- 1 follower
-
-
சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டதில் கொலையுண்ட கேணல் உதயதீர என்ற படை அதிகாரி யாழ்ப்பாணத்தில் 11 ஆண்டு காலமாக செயற்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கை மீதான விசுவாசம் வலுவடைந்துள்ளது: கிளஸ்டர் பாவித்திருந்தால் பாரதூரமான குற்றம் : ஜெனிவா தொடர்பில் மங்கள விளக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழான நல்லாட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலும் இலங்கை மீதான சர்வதேசத்தின விசுவாசம் வலுவடைந்துள்ளதென தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, இறுதி யுத்தத்தின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் பாவித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பாவித்திருந்தால் அது பாரதூரமான குற்றமாகும் என்றார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடரில் இலங்கை சார்ப…
-
- 5 replies
- 469 views
-
-
ஈழத்தமிழகம் அமையாதது ஏன்? விளக்கும் கருணாநி திங்கள், 3 டிசம்பர் 2012( 11:09 IST ) ''தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததால் ஈழத் தமிழகம் அமையவில்லை'' என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில், இளமை காலத்தில் நானும், வீரமணியும் பெரியாரின் கொள்கைகளை பரப்ப தமிழகம் முழுவதும் பகல் இரவு பார்க்காமல் நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது. திராவிட கழகத்தில் சின்னஞ்சிறு பிள்ளையாக வீரமணி இணைந்த போது, ஒரு திருஞானசம்பந்தர் கிடைத்திருக்கிறார் என்று அண்ணா அறிவித்தார். பெரியாருக்கு பின்னர் அவரது சொத்துகளையும், கொள்கைகளையும் வீரமணி சிறப்பாக பாதுகாத்து வருகிறார். இந்த செயலை என்னால் கூட செய்ய…
-
- 5 replies
- 799 views
-