ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவை…
-
-
- 5 replies
- 390 views
-
-
தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58422-2013-02-07-01-44-39.html
-
- 5 replies
- 589 views
-
-
இலங்கைக்குத் தேவையான உதவிகளை செய்ய கனடா தயார் இலங்கையில் சமாதானமும் நல்லிணக்கம் தொடர தேவையான உதவிகளை செய்ய கனடா தயாராக உள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கனேடியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் சமகால அரசின் செயற்பாடுகளையும் கனேடிய பிரதமர் பாராட்டியுள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றினை சரியான அடையாளம் காணவும் சமகால அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். 30 வருடங்களாக நீடித்த போர் நிறைவுக்கு கொண்…
-
- 5 replies
- 447 views
-
-
இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்ப தற்கு மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: ஜெனரல் பொன்சேகாவின் சுருக்கமான சாட்சியத்தைப் பெறுமாறு பணிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரியின் முன்னிலை யில் தோன்றுவதற்கு ஜெனரல் சரத் பொன் சேகா மறுத்துவிட்டார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்ண நாயக்காவைப் பணித்திருந்தார். அரசைக் கவிழ்க்க முயன்றமை, ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்ட மிட்டமை மற்றும் ஆயுத ஊழல்கள் தொடர்பாக எழுத்து மூலமான சுர…
-
- 5 replies
- 847 views
-
-
அடக்குமுறை சட்டங்களால் அச்சுறுத்த முடியாது - சீமான் ஞாயிறு, 11 ஜூலை 2010( 14:43 IST ) வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, அடக்குமுறை சட்டங்கள் எங்களை அச்சுறுத்த முடியாது. தொடர்ந்து போராடுவோம் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். …
-
- 5 replies
- 984 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வட்டரக்க விஜித்த தேரர், சிகிச்சை நிறைவடைந்து வெளியேறிய நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதே வேளை, பொய் முறைப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் பாணந்துறை நீதவா…
-
- 5 replies
- 687 views
-
-
மன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம் மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் கொழும்பில் தனது கடமையை அவர் பெறுப் பேற்க்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து தனது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு வி…
-
- 5 replies
- 871 views
-
-
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 30.04.2007 தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெள…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்திய அரசினால் அண்மையில் வழங்கப்பட்ட புதிய தொடருந்து பரீட்சார்த்த வெள்ளோட்ட பயணமாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பில் இருந்தும் பயணத்தை ஆரம்பித்து இன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் புதிய தொடருந்து தரித்து நின்கும். இதனை அதிகளவானோர் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/17/யாழில்-புதிய-தொடருந்து.html
-
- 5 replies
- 943 views
-
-
வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 03:21.51 PM GMT ] திருகோணமலையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றது. திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவக் காவலரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார் தட்டிக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்? இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் …
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களினால் நாட்டின் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் n;சயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதியிறக்கம் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. http://www.tamilwin.com/show-RUmtzCTcSWlo1H.html
-
- 5 replies
- 906 views
-
-
வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] யாழ் தென்மராட்சி வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி, காலை 7:00 மணி வரை இடம்பெற்ற போர் ஒத்திகையில், எழுநூற்று ஐம்பதுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்பொழுது, போர் ஒத்திகையில் ஈடுபட்ட துருப்புக்களுக்கு பாதுகாப்பாக, வரணிப் பகுதியின் வீதிகளில், பவள் கவச வாகனங்கள் சகிதம் தரைப்படை கவச அணியினர் ரோந்துகளை மேற்கொண்டதாக, குடிசார் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே, யாழ் நகரின் …
-
- 5 replies
- 1.5k views
-
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1439568
-
- 5 replies
- 440 views
- 1 follower
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்…
-
- 5 replies
- 516 views
-
-
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொ…
-
- 5 replies
- 354 views
- 1 follower
-
-
ஈரானிய சரக்குக்கப்பல் தப்பிச்சென்றுவிட்டது வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 22:26 உயர்நீதிமன்றத்தின் உத்தரவின பிரகாரம் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக்கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களின் பிரகாரம் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கப்பலுடன் தொடர்பு கொண்டு நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும், எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எம்வி அமினா என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியின் டிவிபி வங்கி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கு அமைய, 2012 ஆம் ஆண்டு ட…
-
- 5 replies
- 635 views
-
-
எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை - இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பே…
-
- 5 replies
- 896 views
-
-
இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன் வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009, 16:59 [iST] ராமேஸ்வரம்: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன்தாக்குதல்கா
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். ராஜாஜி ஞாபகார்த்த மாநாட்டில் விசேட உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா பதின்மூன்றாவது அரசியலமைப்புத்திருத்ததத்தின்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை இந்தியா ஆதரிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதே நேரம் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கை இணைக்க தாம் அழுத்தம் கொடுப்போம் என கூட்டமைப்பிற்கு இந்தியா உறுதி மொழி வழங்கியது ஆனால் இப்போ அது பற்றி எதுவும் கூறுவதில்லை. ht…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் பேசினார். அப்போது அவர், ’’விடுதலைப் புலிகள் முன்பு போர்க்களத்தில் இருந்தவாறு, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர். போர்க்களத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட உடன், தங்கள் நடவடிக்கைகளை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இலங்கைக்கு வெளியில் வேறு நாடுகளில் இருந்தவாறு, தூதரக ரீதியாக தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர். இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை. எனவே இது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேணடும்’’ என்று கூறியுள்ளார். நக்கீரன்.
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
- 5 replies
- 1.9k views
-
-
ஐந்து பேர் கொண்ட ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வரவுள்ளது. கொழும்பில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவிராஜ் தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்தே ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று இலங்கை வரவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது த…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ்க் கட்சிகளை அவசரமாக சந்திக்கின்றார் கோபால் பாக்லே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை மறுதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் டெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துகொள்ளவுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும…
-
- 5 replies
- 729 views
- 1 follower
-
-
செப்டம்பரில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைiயை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம், என கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் டுரூடியு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைகூறும் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் யுத்தம் ஆறு வருடங்களுக்க முன்னர் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,சமாதானம் என்பது இன்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. பலர் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்கின்றனர், குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை இராணுவத்திடம் பறிகொடுத்துள்ளன. பொதுமக்கள் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் சுமத்;தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இலங்…
-
- 5 replies
- 494 views
-