Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனத்துடன் டிப்பர் ஊர்தி கனராயன்குளம் மன்னகுளம் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  2. தமிழ் மக்களை அடுப்பில் இருந்து நெருப்பிற்குள் தள்ளியவர்கள் யார்? நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது, அந்தப் பிரச்சினை ஆரம்பித்த போதிருந்த சூழ்நிலையென்ன, அதன் வளர்ச்சிப் போக்கென்ன, அதன் இன்றைய நிலையென்ன என்பதை வரலாற்று வளர்ச்சியின் ஊடே புரிந்து கொண்டாலே பிரச்சினைக்குரிய தீர்வைக் காண முடியும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாது விடுவோம், இன்றைய நிலை பற்றி மட்டுமே கதைப்போம் என்பது எம்மை மேலும் மேலும் சகதிக்குள் தள்ளும் வேலையேயாகும். இதைத் தான் இன்று தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். முப்பது வருடங்கள் சாத்வீகம் பேசிப் பாராளுமன்றம் சென்று பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் கூடிக் குலாவி, அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து நின்று, இன்று அதுவும் தோல்வியில்…

    • 1 reply
    • 1.3k views
  3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. 47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனை…

  4. யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறி…

  5. தமிழ் மக்கள் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 12/20/2008 10:34:55 AM - தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க அணி திரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வெகுவிரைவில் கைப்பற்றப்படும் எனவும், அதன் பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல ந…

  6. Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention. IT SHOULD have been cause for unbridled joy. Having fled the trauma and tragedy of life in Sri Lanka, Ranjini had been found to be a refugee, married the man who would be a father to her two boys and begun a new life in suburban Melbourne. Now she was pregnant. Instead, confirmation of the pregnancy last Saturday only compounded her feeling of complete and utter despair. It came two days after Ranjini was told, without warning, that she had been deemed a threat to Aust…

  7. விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம் கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த 6 ப…

    • 3 replies
    • 1.3k views
  8. பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப…

    • 17 replies
    • 1.3k views
  9. சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதுகுறி…

  10. அரசியல் அதிகார பகிர்வுக்கு நான் தயார் ஆனால் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மாட்டேன் இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்‌ஷ. இன்று செய்தியாளரை சந்தித்த மஹிந்த தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் அதிகாரங்களை பகிர நான் தயார் ஆனால் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரம் வழங்குவேன். எனினும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். மேற்கத்தைய உலகத்துடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. கண்டா குடுவரவு சட்டத்தை மாற்றுகின்றது. இதனால் புலிகள் அங்கு குடிகொள்ள முடியாது. ஜேர்மனி, சுவிற்ற்சலாந்து புலிகளை கைது செய்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இலங்கையுடனான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றார் மஹிந்த. ஈழ நாதம்

  11. இராணுவத்தினருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை நடத்துங்கள.; அல்லது இன்னிசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள.; இவைகள் வேறு விடயம். ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளை, அவர்களின் இன்றைய நிலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகக் கருத்துகளைக் தெரிவிக்காதீர்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் படையினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற நத்தார் கரோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் வண தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட காலப் போருக்கு முடிவை ஏற்படுத்திய படையினருக்கு நன்…

  12. 'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, 'ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி' என்றும், 'அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்' என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளி…

    • 1 reply
    • 1.3k views
  13. அன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்', `கடாரம் வென்றான்' என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா? என தமிழகத்திலிருந்து வரும் வார இதழ் குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது.... அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு' விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா' போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள். இன…

    • 0 replies
    • 1.3k views
  14. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன்போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் துவக்கினர். பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். திமுக, அதிமுக எம்.பிக்களை அமைச…

  15. செவ்வாய் 10-01-2006 17:13 மணி தமிழீழம் [கனடா நிருபர்] சர்வதேசமே விழித்துக்கொள்! ஈழத் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வரும் மனித உரிமை அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து கால்ற்றன் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு பெரும் விசனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் தமது கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஜனநாயக அத்து மீறல்களை இலங்கை அரச படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது சார்ந்த அழுத்தத்தினை கனேடிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எமது கோரிக்கையினையும் இப்பிரசுரம் வழியாக சர்வதேச சமூகத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களாகிய நாம் முன் வைக்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் வன்முறைகளில் இருந்து எமைப் பாதுகாத்து கொள்ளவே …

  16. [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 01:33 GMT ] [ கார்வண்ணன் ] போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அ…

  17. பயங்கரவாதத்தை ஒழிக்க ரஷ்யா உதவுமென உறுதியளிப்பு 10/20/2008 3:31:09 PM - இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு உதவுமென ரஷ்யா உறுதியளித்துள்ளது ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ரஷ்ய அரசாங்கத் தரப்பினரைச் சந்தித்தபோது இவ்வாறு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடொலி செர்டியுகோவ், கோதபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பையேற்று ரஷ்யா சென்றிருக்கும் கோதபாய ராஜபக்ஷ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு விட…

  18. இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் அனுபவித்த உரிமைகளை மீண்டும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் வில்லியம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி தொடர்பான சட்டமூல விவாதமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் சகல இன மக்களும் சமாதானமும், சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய ஓர் பின்னணி உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டுக்கு முன்னர் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் எவ்வித முறுகலும் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தினால்…

    • 3 replies
    • 1.3k views
  19. ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தமது பங்களிப்பு தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவலை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகள் எவையும் நேற்றையதினம் இடம்பெற்ற முதல் கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினத்திலும் தான் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் இன்றும் நாளையும் அந்த கூட்டத்தில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இருந்து தனது பதவி நீக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிட்டதாகவும் சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&amp…

  20. 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்.

  21. 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்' 12 அக்டோபர் 2013 'வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்' மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபையிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர். இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்த…

    • 17 replies
    • 1.3k views
  22. Date: 2007-06-04 பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம் பேரினவாத மேலாண்மைப் போக்கில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசின் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்த வார இறுதியில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வெளி யிட்டிருக்கின்றார். ""யுத்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வந்து, இங்கு சுமார் ஆறு மாதங் களுக்கு மேலாக வேலையின்றி அலைந்து திரியும் மக்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இத்தகையோர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுவர். இதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை நாங்களே (பொலி ஸாரே) வழங்குவோம்'' இப்படிக் கூறியிருக்கின்றார் பொலி…

  23. தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை கடற்படை வெள்ளிக்கிழமை, அக்டோபர் 19, 2007 நாகப்பட்டனம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரிகாலன், முருகேன், சிலம்பு என்கிற சிலம்பரசன், சசிபாலன் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து நான்கு பேரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர். பின்னர் அவர்களது மீன் பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன் உள…

  24. எதிர்வரும் காலங்கள் எமக்கு சவாலானவை: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னியின் ஆழமான பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வதால் எதிர்வரும் காலங்கள் தமக்கு சவாலாக அமையப்போகின்றது என்று அந்நாட்டின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்றிருந்த சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது: எல்லாப் படையணிகளும், படையினரும் தன்னலமற்று செயற்பட வேண்டும். படையினரின் தற்போதை நடவடிக்கை தொடர்பாக நான் மகிழ்வடைந்துள்ளேன். தற்போது நாம் கிளிநொச்சியை அண்மித்துள்ளோம். எனவே எமது இலக்கு மிகவும் சவாலானது. அதனை நாம் எதிர்கொள்வோம் என்பதில் எமக்கு நம்…

  25. ஏ-32 பாதையை நோக்கி வகுக்கப்படும் உத்திகள்-அருஸ் (வேல்ஸ்)- இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவோ அல்லது அதனை நிறுத்தும் பொருட்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ திராணியற்ற நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது. இது சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தெளிவாக அம்பலப்படுத்திய போதும் இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பது மிகவும் வேடிக்கையானது. இந்தக்கால அவகாசம் என்பது அரசின் படை நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்படும் கால அவகாசமா என்ற கேள்வி மக்களின் மனதில் பலமாக எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல வடபோர்முனை மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. மிகவும் இலகுவான களங்களை தேடித் தாக்கும் பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.