Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மீது இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் நான்கு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காலை வவுணதீவு முகாமில் இருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினரால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்தே வவுணதீவு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவம் காலை 6:30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. ஈழநாதம்

    • 0 replies
    • 1.3k views
  2. (ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…

  3. தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இதனாலே சர்வதேச கண்காணிப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடமாக உள்நாட்டில் தீர்வு காணப்படாததாலேயே அது இன்று சர்வதேச மயமாக்கப்பட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை யாழ்.மாட்டின் வீதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வி…

    • 8 replies
    • 1.3k views
  4. [ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மர்சுகி தருஸ்மன்,…

  5. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் இறுதிக்கட்ட யுத்தம் இலகுவானதாக இருக்காவிட்டாலும் இது நினைக்கும் அளவில் அச்சமடையக் கூடிய ஒன்றாக இருக்காது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுரபிரியதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் விஷ வாயுத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், அரசாங்கம் இதனை மனித நேயத்திற்கான யுத்தம் எனக் குறிப்பிட்ட போதிலும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இரண்டு தரப்புக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும், இரத்தம் சிந்தும் மிகவும் கொடூரமாக மா…

  6. யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் 21 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வுகளே இன்று இடம்பெற்றுள்ளன. https://news.ibctamil.com/ta/internal-affairs/29th-of-the-massacre-of-the-teaching-hospital

    • 4 replies
    • 1.3k views
  7. புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான்: மகிந்தவுக்கு கருணாநிதி பதில் [வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:38 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்து குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். இதற்கு பதிலளித்து கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த 12 ஆம் நாள் இந்த சபையில் ஒரு மனதாக - ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை தமிழர்களின் இனம் கா…

  8. 'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்" -சேரமான்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது. இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது. தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்! …

  9. இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும். “இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். …

    • 3 replies
    • 1.3k views
  10. எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள்: கொழும்பு வார ஏடு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் வன்னியில் ஈடுபட்டுள்ளது என்றும், அவர்களின் வானூர்திகளில் ஒன்று மணலாற்றுப் பகுதியில் உள்ள பதவியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் வார ஏடு தெரிவித்துள்ளது. சண்ட ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: வன்னியில் பறப்புக்களில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானூர்திகள் ஒரு சமயத்தில் வானில் இருந்து தரைக்கு ?டுகளையும் வழங்கி பயிற்சிகளில் ஈடுபட்டதாக சிறிலங்காவின்…

    • 1 reply
    • 1.3k views
  11. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க அணியினர் ஈழத்தமிழர்கள் மேல் அதிக கரிசனை காட்டுவதும், அவர்களின் விடியலுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எமக்கும், எமது மக்களுக்கும் நம்பிக்கையினையும், மகிழ்ச்சியையும் தருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். "ஹெட் லைன்ஸ் ருடே" என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.நடேசன், ஈழத்திழர்களின் பால் இன உணர்வாலும், பாசத்தாலும் தமிழக மக்கள் ஒன்றியே நிற்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க வின் நிறுவுனரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கான விடி…

    • 10 replies
    • 1.3k views
  12. இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஓகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஓகஸ்ட் 14 முதல…

    • 0 replies
    • 1.3k views
  13. யாழ்.குடாநாட்டிற்கு சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் இன்று பயணம். யாழ்.குடாநாட்டிற்கு கொழும்பிலிருந்து சிறிலங்காப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று பயணம் மேற்கொண்டு பலாலி படைத்தளத்தில் குடா நாட்டு படை அதிகாரிகள் உடனான மாநாடென்றை நடத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்குழு முற்பகல் 11 மணியளவில் தென்மராட்சி வறணி படைத்தளத்திற்கு சென்று அங்கும் அதிகாரிகள் உடனான மாநாட்டை நடத்தியதாக தெரியவருகிறது. http://www.sankathi.com/

    • 0 replies
    • 1.3k views
  14. இலங்கை தோல்வி: கிளிநொச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது. நேற்று பிற்பகல் இந்த தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளில் ஈழத்தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் ஒரு கட்டத்தில் பட்டாசுகள் வெடி சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஈழத்…

  15. கனடாவில் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ரொரன்ரோ பெரும்பாகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.11.07) பிற்பகல் முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  16. அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடத்தல் முயற்சியொன்றிலிருந்துமயிரிழையில் தப்பியுள்ளார். எனினும் இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள் இவரது மனைவியையும் பிள்ளைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். செவ்வாய் இரவு 8.45 மணியளவில் நாவிதன்வெளி விவேகானந்தா வீதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவதுபிரதேச சபை தவிசாளர் கலையரசன் செவ்வாய் இரவு வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற இரு ஆயுதபாணிகள் திடீரென வீட்டினுள் நுழையவே அவர் வீட்டின் பின்புறத்தால் தப்பியோடியுள்ளார். இதையடுத்து அந்த இருவரும் வீடடிற்குள் வந்து அவரது மன…

  17. 'இலங்கை கிழக்குப் பகுதியை புலிகளிளிடமிருந்து மீட்டெடுத்து எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இங்கு அமைதி நிலவுகிறது. புலிகைளை நாங்கள் அழித்து விட்டோம் என்று இலங்கை அரச அதிபர் மஹிந்த கூறுகிறார். இவையனைத்தும் முழுப் பொய். புலிகள் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள்.' என்று தமிழக மூத்த அரசியல்வாதியும் , ஈழத்தமிழர் ஆதரவாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். சென்னையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கிழக்கை கைப்பற்றி விட்டோம் என்று மார் தட்டுகிறார். அங்கிருந்து புலிகளை முற்றக தூரத்திவிட்டோம், கிழக்கு மக்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து மீட்டு, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம் என்று கூறுக…

    • 0 replies
    • 1.3k views
  18. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுள் 22டோஸர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 9ரோலர்கள், 14 எக்ஸ்கிலவேட்டர்கள், 19 வீல் லோடர்கள் என்பன மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாம் என தெரியவருகிறது. இவை அனைத்தும் வடக்கின் அபிவிருத்திக்கு என கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் உண்மையில் மக்களுக்கான அபிவிருத்திக்கா அல்லது இராணுவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகினதா அவ்வாறாயின் முன்னுரிமை எதற்கு? இந்த கேள்விகளுக்கு காரணம் என்னவெனில் இதுவரை செய்யப்பட்ட அபிவிருத்திகள் என பார்க்கும் போது அவற்றை கீழ்வருமாறு பட்டியல் படுத்தலாம். 1 . ஆனையிறவு பரந்தன் தட்டுவன் கொட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட மீழ்குடியேற்ற கிராமங்களை நிர்மூ…

    • 7 replies
    • 1.3k views
  19. "எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …

    • 0 replies
    • 1.3k views
  20. சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன - நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள் தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான். 1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய். 2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள். 3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள். வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும். அறிவுமதியின் வலி "இந்தியாவின் அரசியல் நிலைப்பாடுகள…

    • 0 replies
    • 1.3k views
  21. 27 ஜூன் 2011 கனகராயன்குளத்தில் பெரும் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட உள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதற்கு எதிராக மிகுந்த எதிர்ப்புணர்வுடன் கனகராயன்குள மக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பியால் வளைத்துச் செய்யப்பட்ட பௌத்த விகாரை வளைவு ஒன்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது. ஏ-9 பாதையில் கனராயன் குளத்தில் குளத்திற்கு சற்று அருகாக புத்தர்சிலை வைப்பதற்குரிய இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஊயரமான மண்மேடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புத்தர்சிலை வைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் இராணுவ மயமும் அதிகரித்துள்ளது. இராணுவத்தினர் மிகவும் செறிவாக நின்று குறித்த இடத…

    • 4 replies
    • 1.3k views
  22. வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றது – அரசாங்கம் 15 அக்டோபர் 2013 வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் காணப்படுவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியாவின் ராஜாங்கச் செயலாளர் பீட்டர் புரியனை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் தீவிர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.…

  23. தாயகத்தில் மக்கள் படும் அவலங்கள் தொடர்பாகவும் புலம்பெயர் மக்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் வழங்கிய கருத்துக்கள் http://www.tamilnaatham.com/audio/2009/mar...an_20090314.mp3

    • 0 replies
    • 1.3k views
  24. Published By: VISHNU 05 NOV, 2023 | 04:57 PM (நா.தனுஜா) இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையினால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்கு தமக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நாம் 200' நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்ச…

  25. இலங்கை தொடர்பாக முன்னர் ஒரு மாதிரி கருத்து தெரிவித்த ICC(International Criminal Court), இப்போது லிபியா தொடர்பாக மாற்றி கதைக்கிறது. இதை தமிழ் சட்டத்தரணிகள் கவனித்து போர் குற்ற விசாரணையை தீவிரபடுத்த வேண்டும். In a press release last year on question of Srilanka War Crimes ICC said: "Office of the Prosecutor would like to clarify that Sri Lanka is not a State Party to the Rome Statute." Source: http://www.icc-cpi.int/menus/icc/press%20and%20media/press%20releases/press%20releases%20(2010)/pr541 Now the news is "International Criminal Court Begins Libya Inquiry". Source: http://www.nytimes.com/2011/03/04/world/africa/04hague.html Note that L…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.