ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…
-
- 20 replies
- 1.3k views
-
-
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக …
-
- 1 reply
- 608 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது எதிர்பார்த்தளவு ஹோட்டல்களுக்கு வருமானம் கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவார்கள என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பாத்தளவு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஹோட்டல்களில் தங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 4000 ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், வெறும் 2000 ஹோட்டல் அறைகளே பயன்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு நகர ஹோட்டல் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளை 2000 பேர் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர் எனத…
-
- 1 reply
- 433 views
-
-
-
ஆறுமுகம் தொண்டமானுக்கு 400 மில்லியன், சந்திரசேகனுக்கு 200 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் ரூபாக்களையும், அமைச்சர் சந்திரசேகரனுக்கு 200 மில்லியன் ரூபாக்களையும் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் மலையகப் பகுதிக்கான சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாக்களை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 808 views
-
-
ரவியைத் தொடர்ந்து ஐ.தே.கவின் இரண்டு அமைச்சர்கள் விசாரணை வளையத்துள் சிக்குவர் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவர் மீதும் விரைவில் ஆணைக்குழு விசாரணை நடத்தக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இவ்விரு அமைச்சர்களும் பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் விரைவில் அவர்களுக்கு ஆணைக்கு…
-
- 0 replies
- 207 views
-
-
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - சமூகப் பரவலாக மாறிவிட்டதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதான மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இறுதியாக 41 கோவிட் ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அடையாளம…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான படுகொலைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவே காரணம் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (4) கம்பல் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசும் போதே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளுக்கு கோத்தபயாவே பொறுப்பானவர் ஆனால் அவர் தற்போது என்னை குற்றம் சுமத்துகின்றார். படுகொலைகளை மேற்கொள்வதற்கென கோத்தபயா ஒரு குழுவை வைத்துள்ளார். அவர்கள் தான் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பெருமளவான படுகொலைகளை மேற்கொண்டவர்கள். நான் எனது சீருடையை துறந்த பின்னர் முதலில் களணியில் உ…
-
- 3 replies
- 859 views
-
-
மாகாணங்களின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதன…
-
- 0 replies
- 156 views
-
-
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.என சம்பந்தன் ஐயா நேற்று யாழில் கூறியுள்ளார். இந்தியா தான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன். ஆனால் என்ன திர்ர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தி…
-
- 25 replies
- 2.1k views
-
-
இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக…
-
- 0 replies
- 189 views
-
-
பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை 2010-01-17 07:15:10 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. x புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. இந்திய மத்திய உள்துற…
-
- 9 replies
- 1.5k views
-
-
நாட்டின் அரசியல் அமைப்பில் உள்ள தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு உரிமையில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என்றால் தமக்கு தேசிய கீதம் தேவையில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எனவே நாட்டின் தேசிய கீதத்தை பாட முடியாது என சவால் விடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று அதன் முன் சத்தியப் பிரம…
-
- 0 replies
- 336 views
-
-
கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் மீண்டும் பதற்றம் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று மாலை வரை வெளியேறாமல் பல்கலைகழக நிர்வாக கட்டிடத்தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைகழக வளாகத்தில் தரித்து நிற்கும் மாணவர்ககளில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியை பல்கலைகழக வளாகத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே மாணவர்களுக்கு…
-
- 0 replies
- 263 views
-
-
இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன? இம்ரான் எம்.பி கேள்வி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்…
-
- 0 replies
- 204 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது.பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு முற்போக்கான தேசியவாத நிலைப்பாடோ அல்லது வர்க்கம் கடந்த தூய்மையான தேசியமோ அல்லது இரண்டிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடோ எதுவித பங்கினையும் வகிக்கவில்லை. தமிழர் தரப்பினைப் பொறுத்தவரை, முக்கிய தமிழர் அரசியல் பங்காளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை தக்க வைக்கும் நகர்வுகளையே காணக் கூடியதாக இருக்கிறது. ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட்டமைப்பு இயங்க முடியாத நிலை நிலவியது. அதன் மூன்று நாடாளுமன்ற அங்கத்தவர்கள், ஆயுதக் கு…
-
- 1 reply
- 556 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர…
-
- 7 replies
- 430 views
-
-
மகிந்தவுக்கு எதிரான அரசியல் சதி! பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் 12 பேரை பதவிநீக்கி விசாரிக்க நடவடிக்கை!! .மகிந்த அரசுக்கு எதிராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து அரசியல் சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 12 உயர் அதிகாரிகளை உடனடியாக பதவிவிலகும்படி சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. பதவி விலகிய பின்னர் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளவர்களில் மூன்று மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள் மற்றும் கேணல், கப்டன் தர அதிகாரிகளும் அடங்குவர் என்று உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 599 views
-
-
திருகோணமலையில் வைத்து இலங்கை பாதுகாப்பு காடையர்களால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகின்றன. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நினைவஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த படுகொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும், பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/28863/85/5/d,article_full.aspx
-
- 4 replies
- 396 views
-
-
கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா? முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்திருந்தது. தேர்தல் மேடைகளிலும் வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் தீர்வு, காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 335 views
-
-
கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் கச்சத்தீவு பெருவிழா நடைபெறவுள்ளது. அதற்கு இலங்கை பக்தர்களை மட்டும் இம்முறை அனுமதிப்பது தொடர்பில், யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இம்முறையும் இருநாட்டு பக்தர்களையும் அனுமதிப்பது இல்லை என அரசு முடிவெடுத்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அத்துடன் இம்முறையும் மதகுருமார் மாத்திரம் சென்று பூஜை விடையங்களை முன்னெட…
-
- 0 replies
- 194 views
-
-
சிறிலங்காப் பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரத்திற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார் புதிய தேர்தல் தொடர்பான விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. http://www.eelamweb.com/
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை நினைக்கப் போவதும் இல்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமாக இருந்த உறவினையும், தற்போது இருந்துவரும் உறவினையும் அறியாமல் அதனை கொச்சப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளக் கூடாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார். 'கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால' வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைய…
-
- 10 replies
- 697 views
-
-
200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உறவினா்களின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. 200 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் எந்தவித உறுதிப்பாடுகளும் இல்லாது 200 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். http://www.virakesari.lk/article/24112
-
- 0 replies
- 295 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவ…
-
- 7 replies
- 580 views
- 1 follower
-