ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
தொடங்கியது வேட்புமனு தாக்கல்! மாவட்ட செயலகங்களுக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு! பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட செயலகங்களுக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகமெங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட கலகம் அடக்கும் நீர்ப்பாய்ச்சி வாகனங்களும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்தல் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் இன்று 06 ஆம் திகதி முதல் 10ம் திகதி வரை காலை 08.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிவரை மாவட்ட செயலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும். இறுதித் தினமான 13 ஆம் திகதி பகல் 1…
-
- 1 reply
- 1.3k views
-
-
தற்சமயம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆய்வுக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் கடந்த 13 ம் திகதி ஆரயப்பட்ட போது இலங்கைக்கு இந்தியா முதுகு கொடுத்து முழு அளவில் உதவி அளித்துக் காப்பாற்றியிருக்கிறது. இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவு வழங்கியமையாலேயே இலங்கை சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து தப்பியுள்ளது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் கடும் விமர்சனங்களில் சிச்காமல் தப்புவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை காரணமாகக் கொண்டே, மனித உரிமைக் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறலாம் என்ற நம்பிக்கை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி கூட்டத்தில், இலங்கiயில் இடம்பெறும் கண்மூடித்தனமான …
-
- 3 replies
- 1.3k views
-
-
தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது …
-
- 3 replies
- 1.3k views
-
-
மதுபோதையில் திரிவதற்குத் தடை :யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு _ வீரகேசரி இணையம் 6/27/2010 3:13:25 PM யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், "அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தியாவிடம் தோற்றுப்போகாத தமிழ்த் தேசியம் ஒருபோதும் சிங்கள மேலாதிக்கத்திடம் தோற்றுப்போகாது என்ற யதார்த்தத்தினை சிங்கள அரசுகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மகிந்த அரசின் பக்கம் தமிழ் மக்கள் இல்லை. ஏனெனில் புலிகளின் போராட்டத்தின் ஆணிவேராக தமிழ் மக்களே இருக்கிறார்கள். இந்நிலையில் போர்க்கள வெற்றிகள் நிலையற்றவை என்பதனை மகிந்த அரசு உணர்ந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதல்களையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தமிழ் மக்களின…
-
- 0 replies
- 1.3k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 03:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் வீடு வாங்குவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்தி முரளிதரன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “காணிப்பிரச்சினைகள் தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. எல்லா சமூகத்தினருக்கும் உள்ளது. இந்தப் பிரச்சினையை நிர்வாக ரீதியாகவே நாம் தீர்க்க வேண்டும். சிறிலங்கா அதிபருடனும், அரசாங்கத்துடனும் இணைந்து கொள்வதன் மூலமே எமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களால் நன்ம…
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்தியா மற்றும் சீனாவுடனான புவிசார் அரசியலை கவனமாக கையாளாவிடின் சர்வதேச யுத்ததில் மாட்டிக்கொள்ள ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தார். பொருளாதார நலனுக்காக நாட்டின் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கமல் அரசாங்கம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் என பெரேரா அரசாங்கத்தை எச்சரித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகள் போன்று இலங்கை மாறிவிடுமோ என நான் பயப்படுகிறேன். சீனா துறைமுகத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இதனையிட்டு இந்திய கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா தூதுவரின் குற்றச்சாட்டுக்கு நோர்வே உத்தியோகப்பூர்வ மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 18:08 ஈழம்] [ப.தயாளினி] நோர்வே கடவுச்சீட்டுகள் பெருந்தொகையில் திருடப்பட்டதாகவும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அல்குவைதாவுக்குத் தொடர்பிருப்பதாகவும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னார்ட் குணதிலக்க குற்றம்சாட்டியுள்ளதை நோர்வே உத்தியோகப்பூர்வமாக மறுத்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நோர்வே கடவுச்சீட்டுகள் 1,30,000 திருடப்பட்டதாகவும் 700 நிரப்பப்படாத நோர்வே கடவுச் சீட்டுகள் தாய்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா மற்றும் இதர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இதில் தமி…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள் என விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம். இக் கருத்துப்பரிமாற்றம் 5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம் திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்ச…
-
- 6 replies
- 1.3k views
-
-
பல முதுபெரும் பல தலைவர்கள் தமிழருக்கு சம ஆட்சி அரசு தேவையில்லை சிங்களவரும் தமிழரும் சகோதரர்களாக எப்பொழுதும் இருக்கலாம் என்று தமிழின விரோத அரசியலை நடத்தினார்கள். தந்தை செல்வாவின் பல அறவழிப் போராட்டங்களை ஒடுக்க பல தமிழ் தலைவர்களை இலங்கை அன்று உருவாக்கியது. இராணுவத் தீர்வே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்ற கொள்கையுடன் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குள் பல முரண்பாடுகள். ஒவ்வொரு இயங்கங்களும் நான் பெரிதா நீ பெரிதா என்ற அடிப்படையில் எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் பல எட்டப்பர்கள் உருவானார்கள். தமிழீழ விடுதலையைப் பெற்றெடுக்கக்கூடிய ஒரே விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் வளர்ந்ததும் விடுதலைப் புலிகளுக்கு எதிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010 இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து எச்சரிக்கையுடனும் பல நிபந்தனைகளுடனும் விடுவிக்கப்பட்டு தற்போது கிளிநொச்சியில் கடமை புரியும் டாக்டர் சிவபாலன் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளித்துள்ளார். ஆரம்பத்தில் சாட்சியம் அளிக்க மறுத்துள்ளபோதும் பலரின் வற்புறுத்தலின் பேரில் இவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் சகோதரர் உட்பட டாக்டர் சிவபாலன் பயணம் செய்து கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தால் மோதப்பட்டு இவரது சகோதரர் படுகாயமடைந்தார் டாக்டர் சிவபாலன் காயம் இன்றி பிழைத்துக்கொண்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது சாட்சியத்தில் பெருமளவான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாக கருதி அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கூட்டமைப்பின் தலைமை மாறினால் வேட்பாளராக களமிறங்கத் தயார் ஆர்.ராம் அதிரடியாக அறிவித்தார் சி.வி. சம்பந்தனுடன் எனக்கென்ன பிணக்கு? கூட்டமைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்தியாவுடன் நல்லுறவு உள்ளது முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
TVO தொலைக்காட்சியில் தமிழர் பிரச்சனையைப்பற்றி விவாதம் நடைபெறுகிறது பார்க்க முடிந்தவர்கள் பாருங்கள். The roots of hate: former Sri Lanka interlocutor Bob Rae on the causes of that country's horrible civil war. The Debate: The Tear Drop Civil War
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு சிலரின் பொறுப்பற்ற நடத்தையால் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் யாழ். சமூகம்; இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் சீ.வி.கே. சிவஞானம் அறைகூவல் அண்மைக்காலமாக குடாநாட்டில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள் சட்டவிரோத மதுபான, விற்பனை மற்றும் கலாசாரச் சீரழிவை உண்டு பண்ணும் செயற்பாடுகள் தொடர்பாக காவற்றுறையினரும் உரிய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் நிர்வாக உறுப்பினர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: …
-
- 1 reply
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, ஜனவரி 24, 2011 முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட ஹொட்டேல் அமைக்கும் போது எவ்வளவோ தடுத்துப் பார்த்ததாகவும் அது பயனற்று போனதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். ஹோட்டல் கட்டுவதனை கூட இந்த அரசாங்கத்துடன் பேசி தடுக்க முடியவில்லையே என கூறிய சங்கரி புலிகளின் காலத்திலும் கருத்து சுதந்திரம் இருக்க வில்லை என கூறினார். சங்கரி அவர்களே புலிகளின் காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் எப்படி கிளினொச்சிக்கு போய் புலிகளுடன் பேசினீர்கள். புலிகள் காலத்தில் நீங்கள் எவ்வளவோ அறிக்கைவிட்டும் புலிகள் உங்களை அச்சுறுத்தவும் இல்லை கொலை செய்யவும் இல்லையே. இப்போதுதான் புலிகள் இல்லையே இப்போ நடக்குற விசயத்தை பேசுங்க…
-
- 4 replies
- 1.3k views
-
-
மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள் (கட்டைப்பஞ்சாயத்து - 'ஜனசபா') என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவாராகில் அல்லது ரனிலுடன் இணைந்தாவது தமிழரது தனித்துவத்தக்கு ஆப்புவைப்பதே திட்டமாக இருக்கும். அப்போதாவது எலும்புக்கலைவோரும், குளிர்காய முனைவோரும் புரிந்துகொள்வார்களா? http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/01/AR2010040101464.html நன்றி - வாசிங்டன்போஸ்ட்
-
- 18 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தின…
-
- 8 replies
- 1.3k views
-
-
புலுட்டுமான் ஓடை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 15:35 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு புலுட்டுமான் ஓடைப் பகுதியில் இன்று காலை சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை சாலைக்கு வடக்காக உள்ள புலுட்டுமான் ஓடையில் விடுதலைப் புலிகளின் நிலையை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு 4 கவச ஊர்திகள் மூலம் முன்நகர்ந்தனர். இதனையடுத்து இராணுவத்துக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர்;. காலை 8.10 வரை நடந்த மோதலையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்கு விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
[size=3] [size=4]நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேன் என்கிறார் டக்ளஸ்:-[/size] [size=4]நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது போராட்ட முடிவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் உங்களது நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன்.அவரும் உறுதி வழங்கியுள்ளார். இதை குழப்பும் வகையில் நீங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.இவ்வாறான சீண்டல்கள் என்னை பொறுமையிழக்கச் செய்துவிடும் இதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் எண்ணம் இப்போதைக்கு இல்லை! புலிகளின் இராணுவப் பேச்சாளர் தகவல் http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
மூலம்: http://amudhavan.blogspot.de/2013/03/blog-post.html மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வ…
-
- 8 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
நிராயுதபாணிகளாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கம்போடியாவின் பொல்போட் மற்றும் ஈராக், குர்திஷ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை என்பனவும் போர்க்குற்றங்கள். இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினர் போர்க்குற்றங்களை செய்யவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் துப்பாக்கி முனையில் ஆயிரக்கணக்கான மக்களை பணய கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை வி…
-
- 9 replies
- 1.3k views
-
-
உலங்குவானூர்தியின் பயன்பாடு -அருஸ் (வேல்ஸ்)- போர் என்ற மனநிலைக்கு வளர்த்து விடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக படைத்துறை வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. அதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அதன் தொடர்ச் சியாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அபிவிருத்திகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், நாட்டில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பன காரணமாகும். எனவே தென்னிலங்கை மக்களை திருப்திப் படுத்த போரைத் தவிர வேறு வழிகள் அரசிற்கு இல்லை. இலங்கையில் ஏற்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை முன்னிட்டு இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் பிரித்தானியா இலங்கைக்கான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் உதவ…
-
- 0 replies
- 1.3k views
-