ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
இலங்கை விமானப் படைக்கான பராமரிப்புத் தளம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப் படை முகாமுக்குள் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு அந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கும் முடிவு செய்திருக்கின்றது. அது, புதுடெல்லி அரசு மட்டத்தில் பெரும் சீற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏனைய மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சீனத் தரப்புடன் நத்திய பேச்சுக்களை அடுத்தே இந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்திருந்த சமயம் இந்தக் கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க முய…
-
- 4 replies
- 992 views
-
-
பாதுகாப்பு சீர்குலைவு: சிறிலங்காவிலிருந்து வெளியேறுகிறது மலேசிய நிறுவனம் சிறிலங்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு நிலைமை சீர்குலைவினால் பிரபல சமையல் எரிவாயு நிறுவனமான ஈ-காஸ் அந்நாட்டிலிருந்து வெளியேற உள்ளது. ஈ-காஸ் நிறுவனமானது மலேசிய முதலீட்டாளரைக் கொண்டது. சிறிலங்காவின் சமையல் எரிவாயு துறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஸ்லன் சா மொகமெட் சா கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் உள்ளது. கடந்த 2003-2004 ஆம் ஆண்டைப் போலவே உள்நாட்டு பங்குதாரர் ஒருவரை நாம் தேடுகிறோம். ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எமது விற்பனையில் 40 விழுக்காடு பாதிப்படைந்…
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம். மேற்கு நாடொன்றில் இருந்து கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் "மக்களுக்கு உதவ முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்" என்று சொன்னதை வைத்துக் கொண்டு "பின் எதற்காக இவர்கள் எம்பிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்பது நல்ல வேடிக்கை. இதே கேள்வியை அந்த மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் கேட்டிருந்தால் உங்களை நான் பெரிய துணிச்சல்காரன் என்று அழைத்திருப்பேன். உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவந்த நீங்கள் (நானும்தான்) அந்த மண்ணில் உயிர் ஆபத்துக்கு மத்தியில் செயல்படும் நா.உறுப்பினரை (களை) தரக் குறைவாக விமர்ச்சிப்பது உங்களுக்கு அதிகப் பிரசங்கத்தனமாகப் படவில்லையா? யோகேஸ்வரன் போன்றோரை யோசேப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், சிவநாதன், மகேஸ்வரன் சென்ற பாதையில் ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரம் அந்த அறிக்கைக்கு எதிராக வீட்டோ வலுவை பாவிக்கவும் மாட்டாது. ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைக்கு பாதுகாப்பு சபையில் தீர்மானம் இயற்றும் போது இரஷ்யா வீட்டோ வலுவை பாவிக்கலாம் என கூறியுள்ளது. இது இலங்கை அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையினை நிராகரித்து தீர்மானம் இயற்றும் படி இலங்கை இரஷ்யாவை கேட்டுக்கொண்டது. இதற்கு சிறிலங்கா அரசிற்கு இரஷ்ய தூதுவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்லார். "We should not veto the report itself, but we may veto a resolution," http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0…
-
- 4 replies
- 3.3k views
-
-
3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம் JAN 19, 2015 | 2:23by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில், சுமார் 3 மணிநேரமாக சந்திப்பு இடம்பெற்றது. வழக்கத்துக்கு மாறான முறையில் மிக நீண்டநேரமாக நடந்த இந்தச் சந்திப்பில், இந்திய – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்துதக…
-
- 4 replies
- 761 views
-
-
மகிந்த ராஜபக்ஸ - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு. சுவிஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்கா அரசு, மனித உரிமை மீறல்களைக் குறைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அதிபர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்த சந்திப்பில் எடுத்து விளக்கப்பட்டதாக, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஐ-நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளபட்டுவரும் மனித உரிமை மீறல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல…
-
- 4 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு, நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 06 மாதங்களில் மொத்த வருமானமாக மீனவர் ஒருவருக்கு சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாக இந்த மீன் வளர்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள க.அருள்நாதன் தெரிவித்தார். 'விவசாய அபிவிருத்தி மூலம் வறுமையை குறைத்தல்' எனும் தொனிப்பொருளில் வாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் நாவலடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஒன்பது மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒன்பது கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி 3…
-
- 4 replies
- 3.3k views
-
-
இலண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்ததும் விகாரைக்குள் இந்த பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் 4 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேர் வரை…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் மீ்ண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை : சுமந்திரன் எம்.பி "ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்ப…
-
- 4 replies
- 624 views
- 1 follower
-
-
அனைத்தின மக்களிடையே சமத்துவம், சகவாழ்வு உருவாகி உலக சமாதானம் மலர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தையொட்டி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார். புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல், இறப்பு போன்ற முக்கிய மூன்று நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாகவே உலகவாழ் பௌத்த மக்களால் வெசாக் போயா தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையர்களான எம் அனைவருக்கும் இந்த வெசாக் போயாப் பண்டிகை முக்கிய சமயப் பண்டிகையாக விளங்குகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இலங்கை மக்களுக்கு இந்த வெசாக் போயாப் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவிக்க கிடைத்த சந்தர…
-
- 4 replies
- 520 views
-
-
தமிழர்களைக் கொல்லும் கொத்தபாயா, சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கிற்கு உதவி செய்யுங்கள் https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் இடம்பெறுகின்ற இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையுடனான நட்புறவை இடைநிறுத்துமாறும், தமிழீழத்துக்காக கருத்துக்கணிப்பை நடத்தவும், பொருளாதார தடையை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சித் நேற்று அறிவித்திருந்தார். இதேகருத்தையே இந்துஸ்தான் டைம்ஸ{ம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கம் இலங்கை கிரிக்கட்வீரர்களுக்கும் தடை விதித்துள்ளமையையும், ஹிந்துஸ்தான் பத்திரிகை கண்டித்துள்ளது. விளையாட்டுத்துறையையும், அரசியலையும் இணைக்க கூடாது எ…
-
- 4 replies
- 790 views
-
-
மாங்குளம் பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, பல கால்நடைகள் காயம் மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன. வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று,…
-
- 4 replies
- 754 views
-
-
தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள். flaghoistகடந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ”ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?” என சிங்கள மீடியாக்கள் இதை வைத்து உசுப்பல் வேலை தொடங்கிவிட்டன! டெல்லியில் இலங்கையின் தூதராக இருந்த சுதிஷ்வர சேனபிரான் ஒர…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பாவித்து ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை பெறத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்பணிப்புடன் செயற்படும்;இவ்வாறு இலங்கை தமிழருசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறினார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து காரைதீவு நந்தவனம் பிள்ளையார் சன சமூக முன்றலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்களின் ஜனநாயக சக்தியான தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் தேசிய இனத்திற்காக அந்த இனம் தமது மண்ணில் தன்னை ஆழ்வதற்காக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர்களாகவும் சுதந்திரமுள்ள மனிதர்களாகவும் வாழ்வதற…
-
- 4 replies
- 873 views
-
-
மாவீரர் தினம் தோல்வியடையவேண்டும் என்பதில் குறியாக இருந்தது சிறீலங்கா அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 15:32 உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் நேற்று (27) மிகவும் உணர்வுபூர்மாக கொண்டாடப்பட்ட மாவீரர் தினம் மிகுந்த வெற்றியடைந்துள்ளது. பிரித்தானியாவில் 50,000 தமிழ் மக்கள் எக்சல் மண்டபத்தில் திரண்டதுடன், உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களால் தமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான திரு சீமான் அவர்கள் சிறையில் இருந்து கூட மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்திருந்தார். எனினும் இந்த மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்ட…
-
- 4 replies
- 1.7k views
-
-
[Monday April 02 2007 01:40:51 PM GMT] [யாழ் வாணன்] வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் எந்தவொரு வானூர்தியும் வான்படையினருக்கு அறிவிக்காமல் பறக்கக் கூடாது என சிறிலங்கா வான்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் ரொசான் குணதிலக்க பணி…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தீர்மானம் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இத்தகைய நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது எனவும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு இந்தியா அனுப்பும் எனவும் கூறியுள்ளார். இது இப்படியே தொடர முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் உறுதியான புரிந்துணர்வுக்கு நாம் வரவேண்டும் என எண்ணுகிறேன் என இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். 14 இந்திய மீனவர்களை கைதுசெய்ததாக வெளியான குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரித்ததாக செய்தி வெளி…
-
- 4 replies
- 956 views
-
-
புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன – நெதர்லாந்து : 09 ஜூலை 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சில உறுப்பினர்களிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதன் உள்ளிட்டோரிடம் திரட்டப்பட்ட சாட்சியங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதர்லாந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மொ…
-
- 4 replies
- 564 views
-
-
அமெரிக்க தூதுவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் - வெளிவிவகார அமைச்சிடம் அமைப்புகள் கடிதம் 31 AUG, 2023 | 05:38 PM இலங்கையில் அமெரிக்க தூதுவரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் கடிதமொன்றை தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்த கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். அமெரிக்க தூதுவர் அதிகளவில் இலங்கையின் உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் நுவான் பலண்டுவாவ தெரி…
-
- 4 replies
- 453 views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளத்தில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்: "டெக்கான்" ஏடு சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில், …
-
- 4 replies
- 1.9k views
-
-
மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பு மாணவரான ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திர…
-
- 4 replies
- 978 views
-
-
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். திகதி: 12 May, 2024 12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப்போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டமக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள்- …
-
- 4 replies
- 672 views
- 1 follower
-
-
தமிழ்வின், லங்காடிசென்ட், Defence.lk
-
- 4 replies
- 2k views
-
-
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாக உள்ள நிலையில், தனக்கு முழு அளவில் அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்டதொரு வெளிநாட்டு ஊடகவியலாளர் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைக்குழுவில் சில்வாவை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுக்கள் சிலவற்றால் அவருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. இலங்கைக்கெதிராக குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளர் எப்போதுமே தரக்குறைவான நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சில்வா அரச வானொலிக்கு…
-
- 4 replies
- 1.2k views
-