ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…
-
- 11 replies
- 3.5k views
-
-
முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயி…
-
- 18 replies
- 3.5k views
-
-
கொழும்பு தெஹிவலையி மிருகக் காட்சிசாலையினுள் சற்று முன் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி, கைகுண்டொன்றே வெடித்தாகவும் இதனால் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார். ஜானா
-
- 11 replies
- 3.5k views
-
-
இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும். இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவரான லூயிஸ் ஆர்பர் அவர்களின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்று பிரிட்டிஷ் துணை வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இன விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழரின் கருத்துக்களை அறியும் வகையிலான இந்தச் சந்திப்பில், மேலும் பேசிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மன்…
-
- 5 replies
- 3.5k views
-
-
தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது - இராணுவ தளபதி தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் …
-
- 22 replies
- 3.5k views
-
-
வே.பிரபாகரனின் சர்வதேச பிரசாரத் தலைவர் டி.பிரபாகரன் [17 - May - 2007] அமெரிக்காவில் முன்னைய செய்மதித் தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக இயங்கிவருவதும் வாஷிங்டன் பிரதேசத்தில் அமைந்துள்ளதுமான `இன்ரெல்சற்' (INTELSAT) செய்மதி சேவையின் தலைமை நிருவாக அதிகாரியாகிய பிலிப் ஸ்பெக்ரர் அண்மையில் வாஷிங்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று தூதரக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கம் இன்ரெல்சற் சேவையைப் பயன்படுத்துவதை கடந்த ஏப்ரல் 21, 22 ஆம் திகதி வார இறுதியில் நிறுத்திவிடப் போவதாகக் கூறியிருந்தார். ஆயினும் ஏப்ரல் 22 ஆம் திகதி கடந்து மே 5 ஆம் திகதி வரையில் சுமார் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் அவ்வாறு `இன்ரெல…
-
- 2 replies
- 3.5k views
-
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் க…
-
- 46 replies
- 3.5k views
-
-
தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல் ராணுவம் மீது மக்கள் தாக்குதல்; மேலும் பலர் கைது. நேரடி செவ்வி Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
யூதாஸ், எட்டப்பன் வரிசையில் இன்னொரு பெயராக 'கருணா'வை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள
-
- 9 replies
- 3.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளம் -10 வீட்டுத் தொகுதியில் உள்ள தமிழர் வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் பிரவேசிக்க முயன்ற சிங்கள இரணுவ சிப்பாய் ஒருவர் சரமாரியாகக் கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.இவரை சக இராணுவத்தினர் இன்று காலை உழவு இயந்திரம் ஒன்றில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றனர். இச்சம்பவத்தால் அக்கிராமம் முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவுகின்றது.அவ்வீட்டில் திருமணம் ஆகாத இளம்யுவதிகள் மூவர் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடன் வசிக்கின்றார்கள் என்றும் சிப்பாய் தவறான நோக்கத்துடனேயே வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருக்கின்றார் என்றும் அக்குடும்பத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்திருப்பவை வருமாறு:-"அப்போது…
-
- 40 replies
- 3.5k views
-
-
தமிழ் செல்வன் அண்ணாவின் வீரமரணத்தை இலங்கை தொலைகாட்சி சொர்ணவாகினி ஒலிபரப்பியது அதில் சிங்கள பேரினவாதிகளின் உரைகளும் சந்தோசங்களும் பரிமாறப்பட்டன இடையில் பார்த்தால் ஒருவர் சிங்களத்தில் அறிவுரை சொல்கிறார். கீழே இருக்கும் காணொளியில் அவர் அலட்டுவது இருக்குது காணொளியின் 2.46 வது கட்டத்தில் இவரின் அலம்பல் வருகின்றது. அவர் அலட்டியதை கீழே மொழி பெயர்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபாகரனுக்கு சொல்ல விரும்புகிறேன் தேவை இல்லாத வேலை செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நிப்பாட்டுக.இப்பொழுது புரிந்திருக்கும் அவருக்கு. அவருக்கு முழு உலகமே எதிர்ப்பு அதற்கு காரணம் அவரது யுத்த ஆசை அவர் நினைத்தமாதிரி செய்கிறார்.நீங்கள் நல்லா இருகிறீர்கள் அதே போல மற்றவர்களும் இருக்க வாய்பளிக்க.இந்த நேரத்தில் …
-
- 7 replies
- 3.5k views
-
-
02 FEB, 2024 | 07:53 PM முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற…
-
-
- 40 replies
- 3.5k views
- 1 follower
-
-
பொய்ச் செய்திகளால் குவிந்துகிடக்கிறது போர்! பிரபாகரன் முல்லைத் தீவை விட்டு எப்போதோ போய்விட்டார். அங்கு முக்கியத் தளபதிகளே இல்லை. இன்னும் ஒரு சில நாட்களில் முல்லைத்தீவுப் பகுதியையும் இராணுவம் கைப்பற்றிவிடும். இப்போது சுமார் 600 போராளிகள்தான் அமைப்பில் இருக்கிறார்கள். அவர்கள்தான் மக்களைக் காட்டைவிட்டு வெளியில்விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...... மரபுரீதியான இராணுவமாக இருந்த புலிகள், இன்று அதை இழந்துவிட்டார்கள். வெறுமனே காடுகளில் மறைந்திருந்து சில கெரில்லா தாக்குதல்களை நடத்த மட்டுமே அவர்களால் இனி முடியும். அவர்களது விமானப் படை ஓடுதளம் அத்தனையும் கைப்பற்றப்பட்டுவிட்டன. இனி அவர்களால் வான் படையை இயக்க முடியாது. சாலை என்ற கடற்படை முகாமையும் கைப…
-
- 20 replies
- 3.5k views
-
-
December 7, 2018 விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து த…
-
- 25 replies
- 3.5k views
-
-
-
- 16 replies
- 3.5k views
-
-
சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூக வகுப்பும் இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடு களும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம். ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர். உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப் போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்…
-
- 16 replies
- 3.5k views
-
-
இதன் அர்தம் தான் என்னவோ?சுகி சிவம் Intha Naal Iniya Naal
-
- 22 replies
- 3.5k views
-
-
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கட
-
- 0 replies
- 3.5k views
-
-
வவுனியாவில் உள்ள வன்னிப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மீது நேற்று அதிகாலை மூன்று வழிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களில் அந்தத் தளத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருகின்றது தமது விமானங்கள் மூலம் குண்டு வீசியும், ஆட்லறிகள் மூலம் ஷெல் குண்டுகளை ஏவியும், கரும்புலிப் படை அணி மூலம் ஊடுருவியும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நேற்று விடியும்வேளை நடத்தியிருக்கிறார்கள். வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சற்றுப் பின்னாக புறப்பட்ட புலிகளின் இரண்டு மர்ம விமானங்கள் வன்னிப் படைத்தலையகத்துடன் இருந்த விமானத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கட்டமைப்பை இலக்குவைத்து அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசின. புலிக…
-
- 0 replies
- 3.5k views
-
-
பாடலை கேட்க்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.imeem.com/people/KPM_djB/music/...i_kai_papommp3/
-
- 11 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும், அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என்றும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது. வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம்காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்ற…
-
- 57 replies
- 3.5k views
-
-
இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூட…
-
- 14 replies
- 3.5k views
-
-
சூசையை சுற்றிய புனை கதைகளும் கிழக்கை சுருட்டும் புனை கதைகளும் -சி.இதயச்சந்திரன்- ஒளியைவிட அதிவேகமாகப் பரவும் பரப்புரையொன்று எதிரிகளால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் என்று சகலத்திலும் முதன்மைச் செய்தியாகவும், மக்களின் அடிப்படைச் பிரச்சனை போன்றும் சோடிக்கப்பட்டு அலங்கார ஊர்தியாக பவனி வருகின்றது. சூசைக்கும் பொட்டம்மானிற்கும் லடாய். இரண்டு ஆதரவாளகளுக்கு இடையே நோர்வேயில் வாள்சண்டை. கடற்புலிகளின் பொறுப்பாளர் பதவியிலிருந்து சூசை விலக்கப்பட்டுள்ளார். அண்மையில் மூண்ட கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலித் தளபதிகள் இருவரின் இறுதி நிகழ்வில் சூசை கலந்துகொள்ளவில்லை என்றவாறு சுயதிருப்திப் பரப்புரைகள் மகிந்த விசுவா…
-
- 8 replies
- 3.5k views
-
-
யாழ். குடாநாடு நோக்கிச் சென்ற கப்பலில் விமான உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முடியும் வரை கப்பலை நகர்த்த வேண்டாம் என சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை கப்பலின் உரிமையாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் ஆணையகத்தின் ஆணையாளரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ்பாணம் செல்லவிருந்த வேளை தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைகளை குழப்புவதாகவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப…
-
- 17 replies
- 3.5k views
-
-
13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி January 30, 2022 ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2022/172475
-
- 59 replies
- 3.5k views
- 1 follower
-