நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 3 replies
- 988 views
-
-
இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
-
- 18 replies
- 2.4k views
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... "பரோட்டா" செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... ✅ வர, நீங்களும், ஆண்டவனை 🙏 பிரார்த்தியுங்கள் என்று, வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து 👏 இருக்கிறார்கள் போலுள்ளது. நான் செய்த, பரோட்டா.... கடையில் வாங்குவதை விட, நன்றாக இருந்தது என்று, வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். ஓகே... இனி, நான் "பரோட்டா" செய்த முறையை, பார்ப்போம்... வீட்டில், ஐந்து பேர் இருந்தால்.... மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு தேவையான பொருட்கள். 🧐 இவை.... "பரோட்டா" மாவை, குழைக்க தேவையான பொருட்கள். கோதுமை மா. --…
-
- 24 replies
- 2.2k views
-
-
இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம். எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை. சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம். அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன். அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான். அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்…
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒ…
-
- 18 replies
- 3.1k views
- 1 follower
-
-
நெல்லிக்காய் சொதி பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள். வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான். சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்…
-
- 10 replies
- 2k views
-
-
சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…
-
- 17 replies
- 2.1k views
-
-
இலைகளை காயவிட்டிருக்கு, செய்தபின் சுவையை அறியத்தருகின்றேன் - வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல உணவு 👌👌
-
- 10 replies
- 1.6k views
-
-
லாக்டவுன் ரெசிபி: மீதமிருக்கும் சாதத்தில் அற்புதமான சிற்றுண்டி செய்யலாம்! மும்பையைச் சேர்ந்த பதிவர் ஆல்பா எம் எழுதிய இந்த ‘ரைஸ் பால் ஸ்னாக்’ செய்முறை உங்கள் மீதமுள்ள சாதத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வழியாகும் கொரோனா வைரஸ் லாக்டவுன் சவால்களுடன் தேசம் இருக்கும்போது, அன்றாட விஷயங்களின் மதிப்பை அதிகமான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். வெளியே செல்வதைக் குறைக்கும் முயற்சியில், பலர் வீட்டிலேயே எதை வேண்டுமானாலும் உணவாகத் தயாரிக்கிறார்கள், சிலர் வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு சில அத்தியாவசியங்களை கூட சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நீங்கள் காணக்கூடிய பொதுவான சமையலறை மூலப்பொருள் அரிசி. ஒவ்வொரு முறையும் நாம் சமைக்க வேண்டிய அரிசியின் அளவை…
-
- 0 replies
- 467 views
-
-
தேவையான பொருட்கள்: 1 ½ கப் பாசுமதி அரிசியை கழுவி தண்ணியில் அரை மணித்தியாலம் விடவும். 1 மேசைக்கரண்டி ஏதாவது சமையல் எண்ணை , 1 மேசை கரண்டி நெய், 1 றாத்தல் அல்லது ½ கிலோ பழுத்த தக்காளி பழம் , 10 பல்லு உள்ளி நீட்டாக பெரிய துண்டுகளாக வெட்டியது, 2 மேசை கரண்டி இஞ்சி உள்ளி அரைத்தது . 5 பச்சை மிளகாய் நீட்டாக வெட்டியது ½ றாத்தல் சிவப்பு வெங்காயம் மெல்லிய நீட்டு துண்டுகள், கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை விருப்பிய அளவு. 1 ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தனி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் , 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், உப்பு , 3 கராம்பு , சின்னத்துண்டு கறுவா, கொஞ்ச பெருஞ்சீரகம். செய்முறை: எண்ணை , நெய் இரண்டுயும் தாச்சியில் விட்டு கராம்பு, கறுவா, பெருஞ்சீரகம் …
-
- 2 replies
- 567 views
-
-
இதுவரை செய்து பார்த்ததில்லை, இதுவும் அவ்வளவு கடினமானது இருக்கவில்லை, எமது தோசை வார்க்கும் கல்லிலேயே செய்து விடலாம் என்று போட்டிருந்தார்கள், எனவே இறங்கி விட்டேன். சுவை சரியாக வந்தது, இன்னும் கொஞ்சம் மாவை பொங்க விட்டிருக்கலாம் என்று மனைவி சொன்னார். 4 மணி நேரம் விட்டேன், அப்பச்சோடா அல்லது தயிர் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறன். இங்கு யாரவது முன்னமே விலாவரியாக செய்து போட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பொழுது அநேகமான நேரம் சும்மா இருப்பதால், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாமாளித்து போக வேண்டி இருக்கும். ரெசிபி கீழே உள்ள வீடியோக்களில் உள்ளது. இரண்டாவது வீடியோவில் உள்ள ரெசிப்பியில் பாலும் சேர்த்திருந்தார்கள், நான் சேர்க்கவில்லை
-
- 2 replies
- 568 views
- 1 follower
-
-
ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்) இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது சொய்முறை
-
- 8 replies
- 1.2k views
-
-
மரக்கறி/மீன் ரொட்டி 500 கிராம் வெள்ளை கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய் 4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின் நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பி…
-
- 20 replies
- 4.7k views
-
-
இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை…
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
லெமன் இல் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)
-
- 34 replies
- 3.6k views
-
-
நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல். மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம். …
-
- 44 replies
- 3.7k views
- 1 follower
-
-
சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி. சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா. இங்கே, சற்று கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மி…
-
- 7 replies
- 1k views
-
-
ஒடியல் புட்டு செய்முறை தேவையான பொருட்கள் : ஒடியல் மா தேங்காய்ப் பூ தண்ணீர் உப்பு (சிறிதளவு ) விரும்பினால் கத்தரிக்காய் கீரை பச்சை மிளகாய் நெத்தலி செய்முறை ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும். பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அ…
-
- 15 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 409 views
-
-
-
-
-
- 1 reply
- 403 views
-
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-