நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வீடுகளில் வாழை பழம் வாங்கி அதிகம் பழுத்து, சாப்பிட முடியாது போய்விட்டால் அப்படியான வாழை பழங்களை பயன்படுத்த இலகுவான வாழை பழ கேக் செய்முறை தேவையான பொருட்கள் 1 . நன்கு பழுத்த பெரிய வாழை பழங்கள் - 2 2 . சாதாரண கோதுமை மா - 2 கப் (500 ml) 3 . சீனி - 1 கப் ( 250 ml அளவு கரண்டி) 4 . பட்டர் அல்லது மாஜரீன் அல்லது கனோலா எண்ணெய் . -1 /3 கப் ( 80 ml) 5 . தயிர் (3 % கொழுப்பு yogurt ) - 1 /3 கப் ( 80 ml) 6 . முட்டை - 2 7 . உப்பு -1 /2 தே. கரண்டி 8 . பேக்கிங் பவுடர்…
-
- 13 replies
- 6.1k views
-
-
வெள்ளை அரிசி நூடில்ஸ் & தந்தூரிக் கோழிப் பொரியல் & குழம்பு வெள்ளை அரிசி நூடில்ஸ் (பல கடைகளில் ஊறவைத்து உடனே சமைப்பதற்குரிய ரைஸ் நூடில்ஸும் விற்பனை செய்கிறார்கள்) 1/4 பச்சை இலைக் கோவா (மெல்லிதாக அரிந்தது) 3-4 தண்டு செலரி(மிகச் சிறிய துண்டுகளாக வெட்டியது) 100 கிராம் பீன்ஸ் முளை 3 கரட் (மெல்லிதாக வெட்டியது சமையல் ஒலிவொயில் (தேவையான அளவு) 3 4 மேசைக் கரண்டி- சோயா சோஸ் உப்பு (தேவையான அளவு) ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். none stick பாத்திரத்தில் சமையல் ஒலிவொயில் தேவையான அளவு விட்டு எண்ணெய் நன்றாகக் சூடேறும் போது வெட்டியா மரக்கறிகளை சட்டியில் போட்டு, மரக் கரண்டியால் கிளறிய படியே பொரியவிட வேண்டும். அரைவாசி பொரிந்து வர…
-
- 13 replies
- 2.5k views
-
-
தோசைக்கறி. https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg தேவையான பொருட்கள்: --- கத்தரிக்காய் _________________________ 200 கி. --- வெங்காயம் __________________________ 01 பெரிது. --- பச்சைமிளகாய் _______________________ 4 , 5 . --- கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி ____ தேவையான அளவு. --- தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________ 01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.) --- இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் …
-
- 13 replies
- 2.6k views
-
-
பாகற்காய் கசப்பு என்பதற்காக பலர் இதனை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பாகற்காயை சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் அது மற்ற உணவுகளின் சுவையை விட சூப்பராக இருக்கும். அந்த வகையில் இங்கு அருமையான முறையில் எப்படி பாகற்காயை சுக்கா செய்வதென்று கொடுத்துள்ளோம். அந்த பாகற்காய் சுக்கா மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த பாகற்காய் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 4 (நறுக்கியது) வெங்காயம் - 2 (பெரியது மற்றும் …
-
- 13 replies
- 2.4k views
-
-
சமையல்:முருங்கைக்காய் கூட்டு ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க...... தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப் கடலைப்பருப்பு - கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் கடுகு - கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாச…
-
- 13 replies
- 9.3k views
-
-
Please like , comment and share this video also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/ITTJrDL98v4
-
- 13 replies
- 1.2k views
-
-
முந்தானை முடிக்கும் வெந்தயக்குழம்பு என் பசுமைதேசத்துக் கறுப்புத் தேவதைக்குச் சமர்ப்பணம். (யாழ்கள உறுப்பினர் கறுப்பிக்கு) பெயர் அறிந்து கறிகள் சமைக்கப்பழகவில்லை. எல்லாம் ஆதியின் கைங்கரியம்.... பசியின் கொடுமை தாங்க முடியாத என் வீட்டு எசமானியின் முறுவல்கள் மட்டுமே ஆதியின் நளபாகத்தின் ஆசிரியர். தான்தோன்றியாக ஆதியின் அக்கிரமத்தில் உருவாக்கப்படும் கறிகளுக்குப் பெயர் சூட்டுவிழாவை யாழ்க்கள வம்பர்களிடம் விட்டுவிடுகிறேன். சுவைஞர்களின் சிந்தனைகளில் உதிக்கும் அற்புதப் பெயர்களை ஆதியின் அடங்காப்பாகம் அட்டில் கலையில் சேர்த்துவிடுவோம்.சரி முந்தானை முடிக்கும் வெந்தயக் குழம்பு. எப்போதுமே உணவுத்தயாரிப்புக்கு குறைவாகவோ, அதிகமாகவோ அடுப்பின் சூட்டு நிலை இருக்கக்கூ…
-
- 13 replies
- 5.8k views
-
-
குறிஞ்சா புட்டு எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ . என்ன வேணும் : குறிஞ்சா இலை ஒரு கட்டு. சிவப்பு பச்சை அரிசி மா 500 g. உப்பு தேவையான அளவு. தேங்காய் பூ தேவையான அளவு . பட்டர் 20 g. கூட்டல் : குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியும் விட…
-
- 13 replies
- 5.9k views
-
-
எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.
-
- 13 replies
- 12.1k views
-
-
தேவைபடும் பொருட்கள்: கரட் 200 கிராம் தக்காளிப்ழம் 2 வெள்ளரிகாய் 1 குடை மிளகாய் 1 எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி மல்லி இலை (நறுக்கியது ) 1 மேசை கரண்டி உப்பு கடுகு அரைப்பு சிறிதளவு செய்முறை :கரட்டை துருவவும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும் மிளகாயை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும் சாப்பிடப் போகும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிளறி சுவைக்கவும்!! நன்றி சமையல் குறிப்பு புத்தகம்!! பி.கு- உடல் ஆரொக்கியதிற்கும்,கண் பார்வை சக்தி அதிகரிபதிற்கும் மிகவும் நல்ல உணவு இந்த கரட் சலாட்!! அப்ப நான் வரட்டா!!
-
- 13 replies
- 4.2k views
-
-
உள்ளிக் குழம்பு என்னவேணும் ??? உள்ளி 6 பிடி உரிச்ச சின்னவெங்காயம் 5 பச்சைமிளகாய் 3 கறிவேப்பமிலை ( தேவையான அளவு ) தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி பழப்புளி ( தேவையான அளவு ) மிளகு தூள் அரை தேக்கறண்டி முதல் தேங்காய் பால் 1 அரைக் கப் நல்லெண்ணை தேவையான அளவு உப்பு தேவையான அளவு கூட்டல் : உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ . தூள…
-
- 13 replies
- 1.8k views
-
-
] தேவையான பொருட்கள்: 8 சிக்கன் ட்ரம்ஸ்டிக் 3/4 கப் தயிர் 2 வெங்காயம் 2 தக்காளி 1 1/2" இஞ்சி 8 உள்ளி (வெள்ளை பூண்டு) 1/2 கப் பட்டர் (கொழுப்பு அதிகமானவங்க எண்ணெய் பாவியுங்கள்) 1 தே.க மஞ்சள் தூள் 1 1/2 தே.க மிளகாய் தூள் 1 தே.க காரம் மசாலா 1 தே.க khus khus 1 தே.க மல்லி 1 தே.க சின்ன சீரகம் 3 தே.க மின்ட் இலைகள் 3 கராம்பு 6 மிளகு செய்முறை: 1. தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காரம் மசாலா தூள் & உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். சிக்கனை இந்த கலவையில் போட்டு நன்றாக கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். (Marinate) 2. ஒரு சட்டியில் 2 மே.க பட்டரை சூடாக்கி, அதில் கராம்பு, மிளகு, Khus Khus, மல்லி & சீரகத்தை வறுக்கவும். ( Fry u…
-
- 13 replies
- 3.2k views
-
-
https://youtu.be/3LWD4bT3WB8
-
- 13 replies
- 1.6k views
-
-
கேரளா ஸ்டைல்: இடியாப்பம். தற்போதைய காலத்தில் அனைத்து பொருட்களும் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான் இடியாப்ப மாவு. பெரும்பாலானோருக்கு இடியாப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இடியாப்பமானது பலவாறு சமைக்கப்படும். இப்போது அவற்றில் கேரளா ஸ்டைல் இடியாப்பத்தை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். கேரளா ஸ்டைல் என்றதும், எங்கு கஷ்டமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் எளிமையானது மற்றும் பேச்சுலர்கள் கூட செய்யக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இடியாப்ப மாவு - 1 கப் தேங்காய் - 1 கப் (துருவியது) தண்ணீர் - 1 கப் உப்பு - தேவையான அளவு நெய்/எண்ணெ…
-
- 13 replies
- 1.9k views
-
-
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
* கோழி இறைச்சி துண்டுகள்- ஒரு கிலோ * தயிர்- அரை கப் * மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி * இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி * மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி * கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி * மல்லி இலை- ஒரு பிடி * கறிவேப்பிலை- ஒரு பிடி * ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து செய்முறை: தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அ…
-
- 13 replies
- 3.6k views
-
-
வார விடுமுறையாக இருந்ததால், இன்று ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றவே, சமையலைப் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். கண்ணுக்கெட்டியவரை கறிகளே காணப்படவில்லை. போன வாரம் சமைத்தது போக மீதியை வெட்டி ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பிறீசரில் இருந்தது. (இருந்தவை: கோழி இறைச்சி, வெட்டிய ரொட்டி, கோவா, வெண்டிக்காய், வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய்), முட்டை இவற்றை வைத்து உறைப்பாக எதாவது சமைக்கலாம் என்று யோசித்ததால் திடீர் ஐடியா உருவானது. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது, அதனால் செய்முறையை இணைத்துள்ளேன். நீங்களும் நேரம் இருக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்கள். 1) வெண்டிக்காய் 2) வெங்காயம் 3) பச்சை மிளகாய் 4) சுருள் கோவா 5) கருவ…
-
- 13 replies
- 1.9k views
-
-
அரைத்த ஆட்டிறைச்சி கறி செய்யத் தேவையான பொருட்கள்; அரைத்த ஆட்டிறைச்சி வெங்காயம் உள்ளி,இஞ்சி தூள்,உப்பு,மஞ்சல் தேவையான அளவு பச்சை மிளகாய் தக்காளிப் பழம் கருவேப்பிலை,ரம்பை[இருந்தால் போடவும்] வழமையாக இறைச்சி தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் தேசிக்காய் கொத்தமல்லி இலை செய்முறை; இறைச்சியை வடிவாய்க் கழுவி வடி கட்டி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்[வெள்ளைத் துணி இருந்தால் அதன் மூலம் பிழியலாம், வடியைப் பாவிக்கலாம் அல்லது கையால் பிழியவும். கழுவிய இறைச்சிக்குள் மஞ்சல்,உப்பு போட்டு புரட்டவும். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு எண்ணெயை விடவும். வெங்காயம் சற்று பொன்னிறமாய் வதங்க…
-
- 13 replies
- 2.7k views
-
-
தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி) சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 1/2 போத்தல் உப்பு அளவாக செய்முறை: மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவ…
-
- 13 replies
- 3.1k views
-
-
நெல்லிக்காயின் சாறு ! நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும். உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோசை உங்களுக்குப் ப…
-
- 13 replies
- 6.8k views
-
-
-
- 13 replies
- 1.9k views
-
-
-
வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம். கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும். 1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? 2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? 3. கேக் போன்றவற்றை செய்யும் போ…
-
- 13 replies
- 2.6k views
-
-
* இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும். * மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது. * மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும். * சூடான எண்ணையில் ஒரு தேக்க ரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்கா…
-
- 13 replies
- 11.6k views
-
-
காரைக்குடி மீன் குழம்பு !!! தேவையான பொருட்கள்: மீன்-1/2 கிலோ, தேங்காய்பால்-1/2 மூடி புளி-எலுமிச்சை பழ அளவு இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் தனியாத்தூள்-3டீஸ்பூன் மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன் சீரகம்-1டீஸ்பூன் வெங்காயம்-100கிராம் தக்காளி-100கிராம் மிளகு-1டீஸ்பூன் கொத்தமல்லி தழை-1/2கட்டு எண்ணெய்-1குழிக்கரண்டி எலுமிச்சைபழம்-1 கடுகு-1டீஸ்பூன் வெந்தயம்-1டீஸ்பூன் பச்சை மிளகாய்-4 உப்பு- தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு செய்முறை: புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்…
-
- 13 replies
- 8.1k views
-