நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையானப் பொருட்கள் வௌவால் மீன் - 2 புளி எண்ணெய் - 150 மி.லி. கடுகு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - அரை கப் இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது) பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் - அரைத் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கிராம்பு - 2 ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி தேங்காய் - ஒன்று வினிகர் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் த…
-
- 10 replies
- 3.5k views
-
-
நெல்லிக்காய் சொதி பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள். வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான். சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்…
-
- 10 replies
- 2k views
-
-
கிராமத்து மீன் குழம்பு கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - 1 (நறுக்க…
-
- 10 replies
- 5.3k views
-
-
மலாய் பேடா ---------------- வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் -5 காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 5 புளி - சிறிதளவு மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: ------------- முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும். மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். இத…
-
- 10 replies
- 4.6k views
-
-
ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா. என்னென்ன தேவை? நண்டு கால்கள் குறைந்தது 10 ரசப் பொடி - மூன்று டீஸ்பூன் புளி, எலுமிச்சை - தேவையான அளவு பூண்டு - 1 மஞ்சள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்யவும். பின்னர் அம்மிக்கல் அல்லது மத்தில் வைத்து ஓடுகள் உட…
-
- 10 replies
- 1.9k views
-
-
கன நாளா லட்டு செய்யவேணும் எண்டு யோசிச்சு யோசிச்சு செய்ய நேரமில்லம விட்டிட்டன். இப்ப தான் ஒரு கிழமை விடுமுறை. என்ன வித்தியாசமா செய்யிறது கன நாளா செய்யோணும் எண்ட லட்ட தான் செய்ய முடியும் எண்டு செய்தன். இது உங்களுக்கான பங்கு. சாப்பிட்டு பாத்து சொல்லுங்கோ
-
- 10 replies
- 6.8k views
-
-
விரால் மீன் குழம்பு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : விரால் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் தேங்காய்ப்பால் - 2 கப் பூண்டு - 1 கடுகு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு வெந்தயம் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - அளவுக்கு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு ப…
-
- 10 replies
- 4.4k views
-
-
ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி? ‘கடல் மீன், ஆத்து மீன், குளத்து மீன், ஏரி மீன் என்று எங்கெங்கெல்லாமோ மீன்? வஞ்சிரம், கொடுவா, வாளை, இறால் என்று கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!' - இப்படியொரு கவிதை வரியை படித்தது நினைவில் வருகிறது. மீன் என்றதும் நாவில் எச்சில் ஊறும். பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையைத் தின்பதிலும், சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை சக்கையாகும்வரை பற்களால் மென்று தின்பதிலும் ஒரு சுகம். இவை எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில் மீன்களுக்கு நிகர் மீன்களே! உலகத்திலுள்ள தானியங்கள், காய்கறிகள், ஜீவராசிகள் போன்றவை முற்றிலும் அழிந்துபோனாலும்கூட மனிதக்கு…
-
- 10 replies
- 9.8k views
-
-
போஞ்சி காய் வறை போஞ்சி எனும் பெயர் green beans க்கு எப்படி வந்தது தெரியவில்லை. பொதுவாக போஞ்சி காயில் கறி வைப்பது தான் வழாக்கம். சிறுவயதில் என்னிடம் ஒரு கேட்ட பழக்கம் இருந்தது. யாராவது நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு சமையல் நேரத்தில் போனால் அவர்கள் என்ன சமைக்கிறார்கள் அல்லது என்ன கறி சமைத்து மூடி வைத்துள்ளார்கள் என பார்ப்பது. அந்தவகையில் பெரியம்மா வீட்டுக்கு போனபோது அவர் போஞ்சி காயில் வறை செய்துள்ளதாக சொன்னார். எனது வீட்டில் முன்னர் ஒருபோதும் போஞ்சி காய் வறை செய்ததில்லை. பெரியம்மா வீட்டில் பார்த்த பின் எங்கள் வீட்டிலும் போஞ்சி காய் வறை செய்ய சொல்லி, அடிக்கடி சமைப்பதுண்டு. இந்த சமையல் குறிப்பு க்கு சாதாரண போஞ்சி (green beans) அல்லது பட்டர் போஞ்சி (yellow b…
-
- 10 replies
- 8.3k views
-
-
-
- 10 replies
- 675 views
-
-
குடல் – ஒன்று வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 பச்சைமிளகாய் – 4 பூண்டு – 8 பல் இஞ்சி – அரை இன்ச் அளவு சோம்பு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி தேங்காய் – அரை மூடி புளி – பாக்களவு எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை – ஒன்று கிராம்பு – ஒன்று இலை – சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெ…
-
- 10 replies
- 7.2k views
-
-
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சை அரிசி 1/2 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் 2 பச்சைமிளகாய் 4 இஞ்சி 1 துண்டு உப்பு, நல்லெண்ணை தேவையானது தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து செய்முறை: புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும். ---- குழிப்ப…
-
- 10 replies
- 5.5k views
-
-
- 1 / 2 கி. கோதுமை மா. - 250 கிராம் நெய். - 250 கிராம் ஐஸின் சுகர். - 5 கிராம் பேக்கின் பவுடர். - 2 மே. கரண்டி வனிலா எசன்ஸ். - 100 கிராம் கசுக்கொட்டை அல்லது கச்சான் (நொறுக்கியது). செய்முறை: ஒரு அளவான பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து குழைக்கவும். ஒரு பெரிய தட்டில் (ரே) அதை பிஸ்கட் பருமனில் தட்டிப் பரவிவிட்டு பின் பிஸ்கட்டுக்குரிய அச்சுகளால் (சதுரம் , வட்டம், நட்சத்திரம், முக்கோணம் போன்றவை) அழுத்தி வெட்டி பின் அவற்றை சூடு தாங்கும் தட்டில் அடுக்கி ஓவனில் 180 c° டிகிரியில் சுமார் 15 , 20 நிமிடங்கள் பேக் பண்ணி எடுத்து ஆறியதும் பரிமாறவும்.
-
- 10 replies
- 4.7k views
-
-
-
- 10 replies
- 3k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
மொறுமொறுப்பான... இட்லி மாவு போண்டா மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: இட்லி மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 10 replies
- 3k views
-
-
"கருவாட்டு குழம்பு செய்யும் முறை'' தேவையான பொருட்கள் : நெத்திலி கருவாடு - 25 மொச்சை - 1 கப் கத்திரிக்காய் - 2 சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 1 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை - சிறிது சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது உப்பு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க செய்முறை : நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து …
-
- 10 replies
- 4.8k views
-
-
இதன் செய்முறையை இதற்கு முன் யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை...என்டாலும் எனது முறையில் ஆன மரக்கறி கட்லட் இதோ... செய்ய தேவையான பொருட்கள்; கரட் 2 வெங்காயம் 3 உருளைக்கிழ்ங்கு 2 கருவேப்பிலை தேவையான அளவு மிளகுத்தூள் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் கடலைப் பருப்பு 1/4 கீரைக்கட்டு 1 உப்பு தேவைக்கேற்ப பச்சை மிளகாய் 3 சோளமாவு கைப்பிடி அளவு மிளகாய்த்தூள் விரும்பினால் இனி செய்முறையைப் பார்ப்போம்; கடலைப் பருப்பையும்,மரக்கறியினையும் சிறுதளவு அளவான தண்ணீர் விட்டு அவிக்கவும்.[அதிகளவு தண்ணீரை விட்டு விட்டு தேவையில்லாமல் மிகுதி தண்ணீரை ஊற்றக் கூடாது சத்துப் போய் விடும்] மரக்கறியினை தோலை நீக்கி விட்டு சிறிதாக வெட்டிப் போட்டு அவித்தால் இலகு... மரக்கற…
-
- 10 replies
- 5.5k views
-
-
-
சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…
-
- 10 replies
- 2k views
-
-
தற்போது எம் சமையல்கட்டில் முக்கியமான இடத்தை பிடிப்பது மைக்ரோவேவ் ஒவன்கள் தான். பல நேரங்களில் சுவையான உணவுகளை குறுகிய நேரத்தில் சமைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதை நாம் ஒத்து கொண்டே ஆக வேண்டும். இப்படி சமைக்கும் நேரத்திலும், மற்ற நேரங்களிலும் நாம் பாதுகாப்பாக இருப்பதும், நாம் சமைத்த உணவு ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதற்காக பின்வரும் வழிமுறைகளை கையாள்வது அவசியமாகின்றது: 1. மைக்ரோவேவில் வைத்து சமைக்க கூடிய பாத்திரங்களை வாங்கி கொள்வது. 2. சமைக்கும் போது பாத்திரம் மூடி இருக்க வேண்டும். அப்போது தான் சூடு சமமாக பரவி தேவையற்ற பக்றீரியாக்களை கொல்லும். 3. பைகளில் இருக்கும் உணவுகளை அப்படியே சமைப்பது நல்லதல்ல. (ப்ளாஸ்டிக் பைகள்/ போர்ம் பாத்திரங்கள்) 4. சமைத்த…
-
- 10 replies
- 8.1k views
-
-
Please subscribe to my YouTube channel to support me. Thanks
-
- 10 replies
- 1.3k views
-
-
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா, வாதம், பித்தம், சிலேத்தும நோய் கண்டு தவிப்பவருக்கு கோடைசம்பா, பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ஈர்க்கு சம்பா... இப்படி மருந்தாகவே விளங்கிய அரிசி ரகங்களை விளைவித்துச் சாப்பிட்டு நெடுவாழ்வு வாழ்ந்த சமூகம் நம்முடையது. உணவே மருந்து என்பதுதான் நம் வாழ்வியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, பின்பற்றி வந்த உணவு வழிகளில் இருந்து வெகு…
-
- 10 replies
- 7.7k views
-
-
இதுவும் சுட்டி சுட்ட சமையல் குறிப்பே. சிக்கன் வடை தேவையான பொருட்கள் : கோழி இறைச்சி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் உள்ளி - 10 பல் தேங்காய்ப்பூ - 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி நறுக்கிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி செய்முறை : பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் தூளாக நறுக்கவும். இஞ்சி, உள்ளி,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி இறைச்சி, நறுக்கின வெங்காயம் சேர்த்து முட…
-
- 10 replies
- 2.9k views
-
-
தேவையானவை:- முழுக்கோதுமை மாவு - 1 கப். வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:- வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.
-
- 10 replies
- 3.2k views
-