நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல் மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம். தேவையான பொருட்கள் : மத்தி மீன் (sardine) - அரை கிலோ மிளகு - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 20 பல் எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி தயிர் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி …
-
- 7 replies
- 1.1k views
-
-
அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மசாலா தோசை சுடுகின்றார். கமலா அன்ரி
-
- 7 replies
- 1.2k views
-
-
பெரு நெல்லிக்காய் குழம்பு.. தேவையானவை: பெரு நெல்லி- கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 1/4 கப் புளி - கோலிக்குண்டு அளவு மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு நல்லெண்ணய் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறி வேப்பிலை + கொத்துமல்லி சிறிதளவு.. செய்முறை: வாணலில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து அந்த கலவையுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் விட்டு அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நன்கு பாதி பாதியாக கீறி பிளந்த நெல்லிகா…
-
- 7 replies
- 6.3k views
-
-
ஈரப்பலாக்காய்க் கறி தேவையான பொருட்கள் நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப கடுகு- சிறிதளவு கறிவேற்பிலை- சிறிதளவு ஒயில் – 1 ரீ ஸ்பூன் செய்முறை பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள். உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள். தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள். வெங்காயம்…
-
- 7 replies
- 9k views
-
-
கறி ரொட்டி தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு 1. மைதா மா – 2 கப் 2. ஈஸ்ட் – 1 ரீ ஸ்பூன் 3. உப்பு சிறிதளவு 4. மார்ஜரீன் – 1 டேபிள் ஸ்பூன் கறி தயாரிக்க 1. மீன் துண்டுகள் – 1 கப் 2. வெங்காயம் – 1 3. பூண்டு – 2 4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன் 5. கடுகு – ¼ ரீ ஸ்பூன் 6. மிளகாய்த் தூள் – ரீ ஸ்பூன் 7. மஞ்சள் தூள் – ½ ரீ ஸ்பூன் 8. கறிவேற்பிலை சிறிதளவு 9. உப்பு, புளி தேவையான அளவு 10. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை 1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள…
-
- 7 replies
- 1.9k views
-
-
சைவ மீன் குழம்பு ( புரட்டாசி மாத ஸ்பெசல் ) தேவையான பொருட்கள் சைவ மீன் செய்ய தட்டை பயறு / காராமணி 1 கப் பூண்டு 7 பற்கள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா 1/2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு வேர்கடலை எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு மீன் குழம்பு செய்ய சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது ) பூண்டு 20 பற்கள் ( விழுதாக அரைத்தது ) புளி - எலுமிச்சைபழ அளவு ( சுடு தண்ணீரில் ஊற வைக்கவும் ) பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கியது ) மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி தேங்காய் பால் 1 கப் சாம்பார் தூள் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி …
-
- 7 replies
- 4.3k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கிராம் * இஞ்சி- 50 கிராம் * பூண்டு- 50 கிராம் * கசகசா- ஒரு தேக்கரண்டி * தயிர்- ஒரு கப் * முந்திரி பருப்பு-20 கிராம் * உலர் திராட்சை-20 கிராம் * மல்லி இலை- ஒரு கட்டு * புதினா இலை- அரைகட்டு * எலுமிச்சம் பழம்- ஒன்று * பன்னீர்- 2 மேஜைக்கரண்டி * மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு * கறிமசால் தூள்-3 தேக்கரண்டி * தக்காளி- 100 கிராம். * உப்பு- தேவைக்கு செய்முறை: + கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். + பெ.வெங்காயத்தை ந…
-
- 7 replies
- 3.7k views
-
-
-
வேப்பம் பூ வடகம் யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமான ஒன்று, நாங்க இந்த காணொளியில எப்பிடி வேப்பம் பூ வச்சு இந்த வடகம் செய்யிற எண்டும், செய்த வடகத்தை எப்பிடி பொரிக்கிற எண்டும் பாப்பம் வாங்க, மரக்கறி சாப்பாட்டோட இத சேர்த்து சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. முக்கியமா சக்கரை வியாதி இருக்குற ஆட்களுக்கு இது மிகவும் நல்லம்.
-
- 7 replies
- 1.3k views
-
-
இது தமிழ் பிட்டும் சிங்கள கித்துளும் சேர்ந்த கலவை . சின்ன வயசில " பால் பிட்டு" என்று செய்வா அம்மா,பிடடை அவித்து கொதித்த தேங்காய்ப்பால் ,சீனியும் சேர்த்து கையில் பிடிக்க என்னை பிறக்கும். நல்ல ருசி
-
- 7 replies
- 500 views
- 1 follower
-
-
-
கச கசா ..இதனை எப்படி பாவிக்க வேண்டும் ? கச கசா ..இதன் பயன்கள் பற்றி கூற முடியுமா நண்பர்களே ? சர்பத் தயாரிக்கும் பொழுது கச கசா இதனை பாவிக்கின்றார்கள் இதனை சுடு நீரில் அவித்து பாவிப்பதா ,,அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா.. எப்படி என்ற தகவல்கள் அறியத்தாருங்கள் கச கசா ITHIL பலவகை உண்டா..அல்லது ? தயவு செய்து பதில் தாருங்கள்
-
- 7 replies
- 6.9k views
-
-
சிக்கன் தால் சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். .தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப் தண்ணீர் - 2-3 கப் கொத்தமல்லி - சிறிது…
-
- 7 replies
- 847 views
-
-
ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…
-
- 7 replies
- 2.7k views
-
-
சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, கத்திரிக்காய் - 100 கிராம் தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் வி…
-
- 7 replies
- 3k views
-
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
தேவையான பொருட்கள் 1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய் (ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்) Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie 2 . மேசை உப்பு - 1 1 /2 கப் 3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி 4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்) 5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper) 6 . 20 - 25 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் ) …
-
- 7 replies
- 6.3k views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
தேவையான பொருட்கள் உழுந்து – 1 கப் சோம்பு – 1 ரீ ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 3 கறிவேற்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு பொரிப்பதற்கு ஓயில் – ¼ லீட்டர் வறுத்து அரைத்து எடுக்க ஏலம் – 2 கராம்பு – 1 கறுவா – 1 குழம்பு செய்வதற்கு மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன் தனியாப்பொடி – ½ ரீ ஸ்பூன் தேங்காய்ப்பால் – 2 கப் உப்பு தேவையான அளவு எலுமிச்சம் பழம் – ½ மூடி தாளிதம் செய்வதற்கு கடுகு உழுத்தம் பருப்பு வெங்காயம் கறிவேற்பிலை செய்முறை உழுந்தை ஊற வைத்து வடை மாவிற்கு அரைப்பது போல சோம்பு உப்புச் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுங்கள். இத்துடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேற்பிலை கலந்து விடுங்கள். எண…
-
- 7 replies
- 1.4k views
-
-
திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 பூண்டு - 30 புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு அரைக்க: மிளகு - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - சிறிதளவு கல் உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை…
-
- 7 replies
- 6.3k views
-
-
இட்லி மாவு அரைக்கும் போது.... கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
-
- 7 replies
- 3.6k views
-
-
அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......! 😋
-
- 7 replies
- 1.3k views
-
-
மெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 7 replies
- 1.1k views
-
-
கணவாய் மீன் தொக்கு என்னென்ன தேவை? கணவாய் - 300 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், நறுக்கிய பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கணவாயை கழுவி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாசனை போனதும் மீனை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பர…
-
- 7 replies
- 1.9k views
-