நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
ஈஸியான... காளான் சூப் அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது) சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 1 reply
- 2k views
-
-
சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…
-
- 10 replies
- 2k views
-
-
காரமான மட்டன் மசாலா மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 2 replies
- 2k views
-
-
எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.
-
- 17 replies
- 2k views
-
-
INGREDIENTS * 1 1/2 pounds meaty frog legs * 1 cup milk * 1 eggs, lightly beaten, divded * 1 teaspoon garlic powder * 1/2 teaspoon onion powder * * 1 cup all-purpose flour * 1/4 cup fine dry bread crumbs * 2 tablespoons yellow cornmeal * 1/2 teaspoon baking powder * 2 teaspoons salt * 1 teaspoon fresh ground black pepper * 1 teaspoon cayenne pepper * 1 teaspoon paprika * 1/2 teaspoon dried oregano * 1/2 teaspoon ground thyme * 1/4 teaspoon cumin * 1 teaspoon dried parsley * * 1/2 cup olive oil * 3 tablespoons butter * * 1 small onion, diced * 5 large mushrooms, diced * 2 tablespoons all-purpose flour * 1 cup milk …
-
- 3 replies
- 2k views
-
-
அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…
-
- 14 replies
- 2k views
-
-
தேவையான பொருட்கள்: பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் மைதா - 2 கப் முட்டை - 3 சர்க்கரை - 1 1/2 கப் ஆயில் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன் பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 6 replies
- 2k views
-
-
என் குழந்தைகளுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் இலகுவாக உள்ளே போகாது. எப்பவும் ஏதாவது ஒரு அசைவ உணவு வேண்டும். ஆகக் குறைந்தது Chicken இருந்தால் தான் விரும்பிவினம் (அப்பனை மாதிரி என்று அவசரமாக முடிவெடுக்கக் கூடாது. எனக்கு மரக்கறி சாப்பாடு மிகவும் பிடிக்கும்) சரி, இப்படியே போனால் பிள்ளைகளுக்கு மரக்கறியே பிடிக்காமல் போய்விடும் என்பதற்காக நான் கண்டு பிடித்த ஒரு தீர்வுதான் மரக்கறிகளையும் கோழியையும் கலப்பது. தேவையானவ 1. கோழி: முழுக் கோழி (நாட்டுக் கோழி என்றால் இன்னும் நல்லம்) 2. Oyster souse மரக்கறிகள்: 3. Red pepper 4. Green pepper 5. லீக்ஸ் 6. கோவா 7. தக்காளி 8. கொஞ்சம் Spinach இவற்றுடன் 9. உள்ளி: உள்ளிப் பல்லுகள் 10 10.வெங்காயம் 1…
-
- 16 replies
- 2k views
-
-
காரசாரமான இறால் மசாலா விடுமுறை நாட்களில் வீட்டில் அசைவ உணவை நன்கு வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் உங்களுக்கு இறால் மிகவும் விருப்பம் என்றால் அதனை நன்கு காரசாரமாக மசாலா செய்து சாப்பிடுங்கள். இங்கு மிகவும் சிம்பிளான மற்றும் காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் …
-
- 2 replies
- 2k views
-
-
மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி
-
- 10 replies
- 2k views
-
-
இறால் - சைனீஸ் ஸ்டைல் இறால் - சைனீஸ் ஸ்டைல் தேவையான பொருட்கள் :- உரித்த இறால் - 500 கிராம் தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக்கரண்டி சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை மோனோ சோடியம் குளுடோமேட் கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 2 ஙூ மேஜைக்கரண்டி முட்டையின் வெள்ளைப் பகுதி - 1 உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி எண்ணெய் - 1 லிட்டர் செய்முறை :- முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், ஙூ தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும். அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளி சாஸ், …
-
- 0 replies
- 2k views
-
-
-
கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 200 கிராம் சின்ன வெங்காயம் - கால் கிலோ கருவாடு - 100 கிராம் தக்காளி - 2 பெரியது பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 பல் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் கறிவேப்பிலை , - சிறிது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் கொத…
-
- 4 replies
- 2k views
-
-
-
தேவையான பொருட்கள் : மைதா-ஒரு கோப்பை கோதுமை மாவு-ஒரு கோப்பை எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி உப்புத்துள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கோப்பை துருவிய தேங்காய்- அரைகோப்பை வெல்லம்-1/2 கோப்பை ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -காலக் கோப்பை நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை : 1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும் 3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் . 4.பின்பு அதே வாணலியில்…
-
- 23 replies
- 2k views
-
-
நெல்லிக்காய் சொதி பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள். வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான். சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்…
-
- 10 replies
- 2k views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் தால் இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள்…
-
- 0 replies
- 2k views
-
-
நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்
-
- 16 replies
- 2k views
-
-
இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்…
-
- 4 replies
- 2k views
-
-
துவரம்பருப்பு 100 கிராம் புளி 10 கிராம் அன்னாசி 4 துண்டுகள் உலர்ந்த மிளகாய் 6 தனியா 5 கிராம் கொத்தமல்லி சிறிது கறிவேப்பிலை சிறிது கடுகு அரைத்தேக்கரண்டி எண்ணெய் 10 கிராம் உப்பு தேவையான அளவு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள். எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள். மேலும் நன்றாகக் கொதி…
-
- 2 replies
- 2k views
-
-
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …
-
- 16 replies
- 2k views
-
-
முள்ளங்கி சாம்பார் தேவையானவை முள்ளங்கி_1 துவரம் பருப்பு_ 3/4 கப் சின்ன வெங்காயம்_10 தக்காளி_2 புளி_சிறு கோலி அளவு பூண்டு_3 பற்கள் மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி இலை_1 கொத்து உப்பு_தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு_கொஞ்சம் உளுந்து_கொஞ்சம் சீரகம்_கொஞ்சம் வெந்தயம்_கொஞ்சம் பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை_5 இலைகள் செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவிடு. புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவை.முள்ளங்கியைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி நறுக்கு. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் ப…
-
- 0 replies
- 2k views
-
-
குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி பிரெட் தூள் - ஒரு கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * நண்டை வேக சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து ஆற வைக்கவும். * நண்டு ஆறியதும் அதன் ஓட்டை உ…
-
- 0 replies
- 2k views
-
-