நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாழை தண்டு கூட்டு தேவையானவை வாழை தண்டு – ஒரு ஜான் அளவு துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்) எண்ணையில் வறுத்து பொடிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3 கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி முழுதனியா – ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை – 10 இதழ் சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி செய்முறை 1.வறுக்க கொடுக்க பட்டுள்ளவைகளை வறுத்து பொடிக்கவும். 2. வாழை தண்டை வட்ட வட்ட வடிவமாக நறுக்கி இடை இடையே வரும் நாரை பிரித்து எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். 3. பொடியாக அரிந்த வாழை தண்டில் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வே…
-
- 1 reply
- 7.4k views
-
-
உங்களில் யாருக்காவது சுவையான வாய்ப்பன் எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை தெரியுமா?...நிறைய வாழைப்பழம் பழுத்து கனிந்து போய் இருக்குது.சும்மா பழம் என்டால் எறிந்து விடலாம் ஆனால் இந்தப் பழத்தை எறிய மனமில்லாமல் இருக்குது ஆகவே யாராவது வாழைப்பழத்தில் செய்யக் கூடிய பலகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.செய்ய வேண்டும்...நன்றி
-
- 14 replies
- 7.4k views
-
-
இறால் தொக்கு தேவையானவை: இறால் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 6 பல் தேங்காய்ப் பால் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி செய்முறை: வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வ…
-
- 17 replies
- 7.3k views
-
-
பாண்டிசேரி ஸ்பெசல் புறாக் கறி மசாலா.. தேவையான பொருட்கள்: புறா கறி : 1/4 கிலோ.. வெங்காயம் : 100 கிராம் கடலை எண்ணெய் : 50கிராம் இஞ்சி: சிறுதுண்டு மிளகாய் பொடி : 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி: அரை டீஸ்பூன் பூண்டு: உரித்தது.4 ஆப்ப சோடா மாவு +உப்பு தேவையான அளவு செய்முறை: புறாக்க றியை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் பொடி மிளகாய் பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் .இஞ்சியை தோல் நீக்கி பூண்டு உரித்து பட்டை லவங்கம் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புறாக் கறி பாதிவெந்ததும் உப்பு ஆப்ப சோடாவை நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதி போட்டு மூடி…
-
- 14 replies
- 7.3k views
-
-
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …
-
- 12 replies
- 7.3k views
-
-
களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக.. இதுக்கு என்ன தேவை? பாகற்காய் - 1 தக்காளி - 1 வெங்காயம் - 1 மிளகாய் - 1 மிளகு தூள் - 2 தேக்கரண்டி உப்பு (இது கூட சொல்லணுமா?) எப்படி செய்யலாம்? 1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க. 2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க. 3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க. 4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.
-
- 33 replies
- 7.3k views
-
-
பேப்பர் தோசை. தேவையான பொருட்கள்: அரிசி - 3 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் சாதம் - 1 கப் சுவைக்கேற்ற உப்பு. தோசைக்கல்லுக்கு பூச எண்ணை. செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து, நைசாக அரைக்கவும். தனித்தனியே அரைத்த மாவை, ஒன்றாக கலக்கவும். சாதத்தை... ஊறவைத்த பருப்புடன் சேர்த்தும் அரைக்கலாம். உப்பு தேவையான அளவு போட்டு, முதல் நாளே... தோசை மாவை தயார் செய்து விடவும். மறு நாள் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, அரைத்த மாவை 2கரண்டி எடுத்து... தோசைக்கல்லில் ஊற்றி, வட்டம்... வட்டமாக, தேய்க்கவும். முறுகலாக தோசை வந்ததும், எடுத்து சாப்பிடவும். டிஸ்கி: அவள் விகடனில், வந்த சமையல் குறிப்பு இது. நாங்கள் இன்னும் செய்து பார்…
-
- 24 replies
- 7.3k views
-
-
[size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் தமிழ்நாட்டு செட்டிநாடு ரெசிபியில் ஒன்றான செட்டிநாடு இறாலை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இறால் - 400 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 5 பல் (அரைத்தது) பச்சை மிளகாய் - 5 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய…
-
- 6 replies
- 7.3k views
-
-
மாமிச கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய் செய்முறை: முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் …
-
- 16 replies
- 7.3k views
-
-
கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...
-
- 64 replies
- 7.3k views
-
-
[size=4]வீட்டில் மதிய வேளையில் சமைத்து சாப்பிடும் போது, எப்போதும் சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது சில்லி போன்று காலிஃப்ளவரை வறுவல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மேலும் இந்த டிஷ்ஷை மாலை வேளையில் கூட ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காலிஃப்ளவர் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]காலிஃப்ளவர் - 1 கடலை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/4 கப் கார்ன் ப்ளார் - 1/4 கப் அரிசி மாவு - 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால…
-
- 15 replies
- 7.2k views
-
-
செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது. தேவையான பொருட்கள் அரிசி – 1 /2 கிலோ சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ கொத்தமல்லி – 1 /2 கட்டு புதினா – 1 கட்டு பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 250 கிராம் தக்காளி – 250 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம் தயிர் – 1 /2 ஆழாக்கு எண்ணெய் – 1 குழிக்கரண்டி ஏலக்காய் – 2 கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2 மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி தனியாத்தூள் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல…
-
- 11 replies
- 7.2k views
-
-
வெங்காய பகோடா நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள். நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_22.html#more
-
- 30 replies
- 7.2k views
-
-
தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 2 கப்முட்டை - 3உப்பு - தேவையான அளவுவெங்காயம் - 1பூண்டு - 4 பல்எண்ணெய் - தேவையான அளவுகடுகு - சிறிதளவுஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டிகடலை பருப்பு - அரை தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3செய்முறை:முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும். பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேகவிடவும். http://tamil.webdunia.com/article/vegetarian…
-
- 22 replies
- 7.2k views
-
-
குடல் – ஒன்று வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 பச்சைமிளகாய் – 4 பூண்டு – 8 பல் இஞ்சி – அரை இன்ச் அளவு சோம்பு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி தேங்காய் – அரை மூடி புளி – பாக்களவு எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை – ஒன்று கிராம்பு – ஒன்று இலை – சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெ…
-
- 10 replies
- 7.2k views
-
-
வெந்தய கீரை: நீங்களை வீட்டில் முளைக்க வைக்கலாம் சின்ன பொட் இல், ஒர் மாதத்தில் அறுவடைக்கு ரெடி, வெந்தயத்தை ஊற போட்டு விதைத்தால் விரைவில் வளரும். வெந்தய கீரையில் பல கறிகள் செய்யலாம் & நல்ல சத்தான உணவு இது வெந்தயம் மாதிரி கயர்ப்பா இருக்காது, நல்ல ருசி, சிறுவர்கள் & கர்ப்பினி பெண்களுக்கு நல்லது தேவையான பொருட்கள் : கீரை- ஒரு கட்டு மைதா மாவு - ஒரு கோப்பை கோதுமைமாவு- முக்கால் கோப்பை கடலைமாவு- கால் கோப்பை மிளகாய்த்தூள்- அரைத்தேக்கரண்டி சீரகம்- அரைத்தேக்கரண்டி மஞ்சத்துள்- கால்த்தேக்கரண்டி உப்பு- காலத் தேக்கரண்டி எண்ணெய்- கால்க்கோப்பை செய்முறை : கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும். மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகா…
-
- 31 replies
- 7.1k views
- 1 follower
-
-
வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன். சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியிருக்கு. சீனிசம்பல் என பெயர் இருந்தாலும் இதில் வெங்காயம் தான் முதன்மை வகிக்கின்றது. உச்சரிக்கும் போது “சீனிச்சம்பல்” என சொல்லலாம். பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும். எங்க அண்டை நாட்டுக்காரங…
-
- 14 replies
- 7.1k views
-
-
[size=5] சுவையான மைதா அல்வா[/size] [size=4][/size] [size=4]வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1/2 கிலோ சர்க்கரை - 1 கிலோ கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன் உருக்கிய நெய் - 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன் முந்திரி - 8 திராட்சை - 8[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்…
-
- 4 replies
- 7.1k views
-
-
[size=5]சுவையான இட்லி தோசை சாம்பார்[/size] இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும். தேவையானப்பொருட்கள்: துவரம்பருப்பு - 1/2 கப் பயத்தம்பருப்பு - 1/4 கப் புளி - நெல்லிக்காயளவு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது கொத்துமல்லித்தழை - சிறிது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்…
-
- 1 reply
- 7.1k views
-
-
இது நான் வாசித்த ஒரு சமையல். விரியும் சிறகுகள் என்ற இணையத்தில் வி.ஜெ. சந்திரன் (canada)அவர்கள் படத்துடன் தந்த செய்முறை.நன்றி சந்திரன் நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள். சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய …
-
- 11 replies
- 7.1k views
-
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 01 'அறிமுகம்' / 'Introduction' இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தன. திராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிச…
-
-
- 33 replies
- 7.1k views
-
-
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....! தேவையான பொருட்கள்: நண்டு - 2 பெரியது தேங்காய் (துருவியது) - 1/2 கப் சின்ன வெங்காயம் - 25 மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: * நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய…
-
- 36 replies
- 7.1k views
-
-
"மசாலா பாஸ்தா'' செய்யும் முறை தேவையான பொருட்கள்: பாஸ்தா - 250 கிராம் வெங்காயம் - 5 புதினா - கால் கட்டு கொத்தமல்லி - கால் கட்டு கறிமசால் தூள் - ஒரு பாக்கெட் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சிறிது கடுகு - சிறிதளவு செய்முறை : பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும். பொரிந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும்.( ரெடி மேடாக கிடைக்கும் மட்டன் மசாலா, சிக்கன் மசாலா வையும் சேர்க்கலாம்.) சிறிது உப்பையும் சேர்க்கவும். மசாலா…
-
- 0 replies
- 7.1k views
-
-
வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…
-
- 4 replies
- 7k views
-
-
[size=6]கணவாய் மசாலா - Squid Masala[/size] தேவையான பொருட்கள் ; [size=4][size=4][/size][/size] [size=4][size=4]கணவாய் மீன் - அரை கிலோ வெங்காயம் - 100கிராம் தக்காளி -100கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன் கரம் மசாலா - கால்ஸ்பூன் சோம்புத்தூள் - கால்ஸ்பூன் மிளகுத்தூள் - கால்ஸ்பூன் மஞ்சள் தூள் - அரைஸ்பூன் மிளகாய்த்தூள் - முக்கால்ஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் ஸ்பூன் மல்லித்தூள் - 2டீஸ்பூன் மல்லி,கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு [/size][/size] [size=4][size=4]ஸ்குயிட் மீனை வாங்கி அதன் மேல் இருக்கும் மெல்லிய தோல் எடுத்து விடவும்,செவுள் உடன் சேர்த்து இழுத்தால் இலகுவாக வந்துவிடும்,உள்ளே இருக்கும் கழிவையு…
-
- 4 replies
- 7k views
-