நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள்: * மீன் - 300 கிராம் ( சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது.) * உருளைக்கிழங்கு - 150 கிராம் * பெரிய வெங்காயம் - 100 கிராம் * தேங்காய் - பாதி * மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி * பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி * முட்டை - 1 * பூண்டு - 7 பல் * ரஸ்க் தூள்- தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * இஞ்சி - தேவையான அளவு * மல்லித்தழை - தேவையான அளவு * புதினாத்தழை - தேவையான அளவு * நல்லெண்…
-
- 6 replies
- 3.8k views
-
-
தேவையான பொருட்கள்: அவித்த மீன் அல்லது மக்கரேல் டின் மீன் 1 வேக வைத்து மசித்த உருளை கிழங்கு 400 கிராம் சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 கப் சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 2 மே.க சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 2 மே.க மிளகு தூள் 2 தே.க பெரிய சீரகம் 1 தே.க பாண்தூள் Bread Crumbs முட்டை 2 பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டியவை: 1. முட்டையை உடைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக அடித்து கொள்ளுங்கள். 2. பாண் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்று வையுங்கள். செய்முறை: 1. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்கி …
-
- 16 replies
- 2.9k views
-
-
மீன் குருமா செய்வது எப்படி மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : (வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்) வாழை மீன் - 3 பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன் தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்) வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்) …
-
- 11 replies
- 3.2k views
- 1 follower
-
-
[size=5]மீன் குழம்பு - யாழ்ப்பாணம் முறை[/size] [size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்[/size] [size=5]மீன் - 1 கிலோ[/size] [size=5]சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3[/size] [size=5]தக்காளி: 4[/size] [size=5]பூண்டு: 7 - 8 பற்கள்[/size] [size=5]பச்சைமிளகாய்: 4 -5 [/size] [size=5]புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு[/size] [size=5]கடுகு: 1/4 தேக்கரண்டி[/size] [size=5]வெந்தயம்: 1/2 தேக்கரண்டி[/size] [size=5]சரக…
-
- 11 replies
- 2.2k views
-
-
தேவையானவை: மீன் துண்டுகள் -8 புளி - எலுமிச்சம் பழ அளவு மிளகாய்த் தூள் -4 தேக்கரண்டி மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி வெங்காயம் -4 பச்சைமிளகாய் -5 இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி எண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி இலை - சிறிது பொடி செய்ய தேவையான பொருட்கள் தனியா - 4 தேக்கரண்டி ஜீரகம் - 2 தேக்கரண்டி கிராம்பு - 4 செய்முறை: மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அத…
-
- 7 replies
- 1.6k views
-
-
மீன் கூட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சீலா மீன் அல்லது விரும்பிய மீன் துண்டுகள் – கால் கிலோ எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் – தலா அரைடீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பூண்டு – 4 பல் பச்சை மிளகாய் – 2 மல்லி இலை - சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - பாதி உப்பு – தேவைக்கு. செய்முறை : மீன் துண்டுகளை சுத்தம் செய்த…
-
- 0 replies
- 754 views
-
-
மீன் கோலா உருண்டை மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள். தேவையானவை மீன் துண்டுகள் – 4 பிரெட் துண்டுகள் – 5 வெங்காயம் – 1 கரம் மசாலா – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – சிறிது சீரகம் – 1 ஸ்பூன் முட்டை – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை மீன் துண்டுகளை நன்றாக மஞ்சள் தூளில் போட்டு சுத்தம் செய்த பிறகு, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி,…
-
- 4 replies
- 1.2k views
-
-
மீன் சூப் தேவையானவை: ஸ்லைஸ் மீன் - 4 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் புளி - சிறிதளவு மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பட்டை லவங்கம் - தலா 2 செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு ஊற வையுங்கள். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு நீர் விட்டு வேக வையுங்கள். மீன் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் பட்டை, லவங்கம் தாளித்துப் போட்டு கொதிக்க விட்டு இறக்குங்கள். மேலே பொர…
-
- 6 replies
- 1.9k views
-
-
சூப்பரான மீன் சூப் செய்வது எப்படி மட்டன், சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் குடித்து இருப்பீங்க. இன்று மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம். தேவையான பொருட்கள் : முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள் இஞ்சி - ஒரு செ.மீ பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 50 கிராம் பட்டை - ஒரு சிறிய துண்டு அன்னாசிப்பூ - ஒன்று ஏலக்காய் - ஒன்று மிளகு தூள் - ஒரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்: முள் இல்லாத மீன் துண்டுகள் - 4 இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன் கரம் மசாலா - 1ஸ்பூன் மக்காச்சோள மாவு - 1ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - சிறிது மிளகுத்தூள் - 3ஸ்பூன் புளி - ஒரு சிறு உருண்டை செய்முறை: புளி கரைத்து வைத்துக் கொள்ளவும். மீதி உள்ளஅனைத்தையும் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மீன் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். புளி தண்ணீர் 10 நிமிடம் சூடு செய்து வெந்த மீனை போடவும் மேல் கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும் ................
-
- 48 replies
- 7.5k views
-
-
மீன் சொதி தேவையான பொருட்கள்: மீன் -500கிராம் பச்சைமிளகாய் -5எண்ணம் பெரியவெங்காயம் -50 கிராம் கறிவேப்பிலை -சிறிது வெந்தயம் -1 மேஜைக்கரண்டி பெரும்சீரகம் -2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி தேங்காய்பால் -1 கப் உப்பு -தேவையான அளவு செய்முறை: 1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும். 4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்…
-
- 39 replies
- 6.2k views
-
-
எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க. அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொத…
-
- 37 replies
- 9.9k views
-
-
https://youtu.be/9AUf6rpDf44
-
- 0 replies
- 398 views
-
-
மீன் டிக்கா மசாலா என்னென்ன தேவை? மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, கிராம்பு - 2, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, முந்திரி - 20 கிராம், நறுக்கிய தக்காளி - 2, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 634 views
-
-
மீன் தந்தூரி * பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக…
-
- 1 reply
- 1.7k views
-
-
தேவையான பொருட்கள்: பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும் * பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடு…
-
- 6 replies
- 934 views
-
-
மீன் தலை கறி என்னென்ன தேவை? மீன் தலை - 4 நல்லெண்ணை - 5 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பில்லை - தேவையான அளவு சாம்பார் வெங்காயம் - 10 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் - 1/2 கப், புளி - தேவையான அளவு எப்படிச் செய்வது? முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின் அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வ…
-
- 8 replies
- 2.8k views
-
-
மீன் பற்றீஸ்,srilankan style fish patties,how to make patties,tasty patties recipe in Tamil மீன் பற்றீஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்: கோதுமை மாவு 300g பட்டர் 75 g உப்பு தேவையான அளவு ரின்மீன் 200g உருளைக்கிழங்கு 250g வெங்காயம் 100g லீட்ஸ் 25g இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க பெரிஞ்சிரகம் 1தே.க கடுகு 1தே.க மஞ்சள்த்தூள் 1/2தே.க கட்டைத்தூள் 1தே.க றம்பை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு மிளகு தூள் 1/2தே.க
-
- 1 reply
- 1k views
-
-
-
-
- 2 replies
- 838 views
-
-
மீன் புட்டு தேவையானவை: சுறா மீன் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு இணுக்கு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை: 1.சுறா, சூறை, கோலா போன்ற புட்டு செய்யும் மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 2.மீனை ஆற வைத்து முள் இன்றி எடுத்துவிட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு (வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும…
-
- 4 replies
- 3.1k views
-
-
மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
-
- 1 reply
- 757 views
-
-
-
- 10 replies
- 5.8k views
- 1 follower
-
-
-
அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான். தேவையானவை: உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள் (சின்ன மீன் என்றால் 5 மீன்கள்) மிளகாய் தூள் 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மல்லி தூள் 1/2 தே.க கரைத்த புளி 1 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வி…
-
- 25 replies
- 4.5k views
-