நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இந்த வல்லாரை கீரை கண்டால் நான் கடைக்கு உள்ள போயு எல்லா கீரையும் வாங்கி விடுவன்.. ஏன் தெரியுமா உறவுகளே வல்லாரை வெள்ளி கிழமையில் மரக்கறியுடனோ இல்லை ஒரு சாம்பருடன் சாப்பிட்டால் நல்ல சுவையா இருக்கும்.. என்ன கொடுமை என்றால் நான் வல்லாரை கேட்டு வீட்டில் எல்லாரயும் தொல்லை பண்ணுவன்.. ஒரு நாள் என் அம்மா 5கட் வல்லாரை கொண்டு வந்து பண்ணி வைத்து விட்டு இதுதான் உனக்கு இன்று சாப்பாடு என்று சொல்லி விட்டார்கள்.. வல்லாரைக்கு தேவையானது சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு தேசிக்காய் புளி வல்லாரை நன்று கழுவி எவ்வளவு சின்னதான் கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதான் கட் பண்ணி அதே ஒரு பாத்திரத்தில் வயுங்கள் .. அது போலதான் சின்ன வெங…
-
- 5 replies
- 5.6k views
-
-
ஒவ்வொரு சைவ நாளிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் எங்க வீட்டில நடக்கும் பிரச்சனை இது. அண்ணாக்கு அசைவம் வேண்டும். அப்பாக்கு அசைவைத்தை கண்டாலே கோபம் வரும். பிறகென்ன, கதையை நீங்களே கண்டு பிடிச்சிருப்பிங்களே, எங்க தமிழ் சினிமா போல... எதுக்கு இந்த பிரச்சனை என, முதல் நாளே அண்ணாக்கு அசைவம் சமைத்து வைத்துவிடுவேன். அப்பா இந்த திருட்டுத்தனத்தை காணும் போதெல்லாம் சாப்பிட்ட அண்ணாவோட எனக்கும் தான் திட்டு. திட்டுக்காக அண்ணனை விட்டு குடுக்க முடியுமா? இப்போதை கதை என்னன்னா, அண்ணி எங்கப்பா பக்கம். அதனால பாவம் அண்ணாக்கு என்னை விட்டா வேற வழியே கிடையாது. இன்று வெள்ளி, நேற்றே அண்ணாக்கா சமைத்தவற்றில் இருந்து உங்களுக்காக ஒன்று.. வெங்காய தடல் & இறால் கருவாட்டு வறை தே…
-
- 5 replies
- 2.6k views
-
-
http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/
-
- 0 replies
- 2.3k views
-
-
இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…
-
- 9 replies
- 4.2k views
-
-
கோதுமை தோசை தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கோப்பை அரிசி மாவு - 1/2 கோப்பை மைதா மாவு - 1/2 கோப்பை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். 2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். 3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும். குறிப்பு 1. தோசையில் கொஞ்சம் புளிப்பு சுவை வேண்டுமென்றால், புளி…
-
- 17 replies
- 8.7k views
-
-
வணக்கம், இண்டைக்கு தூயாவிண்ட வலைப்பூவுக்கு சும்மா ஒருக்கால்போய் பார்த்தன். அதில இந்தப்பதிவை பார்த்தபோது கொஞ்சம் சுவாரசியமாய் இருந்திச்சிது. அதான் நீங்களும் பார்க்காத ஆக்கள் வாசிக்கிறதுக்கு அதை அங்கிருந்து சுட்டு எடுத்தி இஞ்சயும் போடுறன். நன்றி! *** என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..! நீங்கள் செய்ய வேண்டியது... தேவையான பொருட்கள். வறுத்த மிளகாய்த்தூள் வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு) பச்சை மிளகாய் ஒரு சில. பூடு (சில) இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது) தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படு…
-
- 7 replies
- 4.5k views
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில் முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்ற…
-
- 4 replies
- 6k views
-
-
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். …
-
- 7 replies
- 3.5k views
-
-
சுவையான முறுக்கு... செய் முறை: 2 சுண்டு அவித்த ஆட்டா மா/ வெள்ளை மா 1 சுண்டு கடலை மா சிறு துண்டு இஞ்சி 1 உள்ளிப் பல்லு சிறிதளவு நச்சீரகம் சிறிதளவு வெள்ளை எள்ளு சிறிதளவு உப்பு. துருவலான செத்தல் மிளகாய்த் தூள் சிறிதளவு முதலில் இஞ்சியையும் உள்ளிப் பல்லையும் நன்றாக நசியும் வரை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுள் ஒரு கப் கொதி நீரை ஊற்றி 5 - 10 நிமிடம் வரை விடவும். பின்னர் 5 - 10 நிமிடத்துக்குள் அந்த தண்ணீர் ஆறி விட்டிருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு அதனுடன் நச்சீரகம், தேவையான அளவு உப்பு, வெள்ளை எள்ளு, துருவலான செத்தல் மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு இஞ்சி, உள்ளி போட்டு வைத்திருந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மாத்…
-
- 4 replies
- 8k views
-
-
பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது. ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான். அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்: சொக்கிளட் குளிர்களி (ஐஸ்கிரீம்) பொரித்தவை (சிப்ஸ்) மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்) டோனட்ஸ் பேஸ்ற்றீஸ் பிஸ்கட்ஸ் இனிப்புகள் நெய்யில் செய்த பண்டங்கள் இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை. ஆனால் இவை இல்லா…
-
- 4 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் எள் 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை செய்முறை: 1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.] 3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள். 4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி,…
-
- 11 replies
- 5.6k views
-
-
தற்போது எம் சமையல்கட்டில் முக்கியமான இடத்தை பிடிப்பது மைக்ரோவேவ் ஒவன்கள் தான். பல நேரங்களில் சுவையான உணவுகளை குறுகிய நேரத்தில் சமைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதை நாம் ஒத்து கொண்டே ஆக வேண்டும். இப்படி சமைக்கும் நேரத்திலும், மற்ற நேரங்களிலும் நாம் பாதுகாப்பாக இருப்பதும், நாம் சமைத்த உணவு ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதற்காக பின்வரும் வழிமுறைகளை கையாள்வது அவசியமாகின்றது: 1. மைக்ரோவேவில் வைத்து சமைக்க கூடிய பாத்திரங்களை வாங்கி கொள்வது. 2. சமைக்கும் போது பாத்திரம் மூடி இருக்க வேண்டும். அப்போது தான் சூடு சமமாக பரவி தேவையற்ற பக்றீரியாக்களை கொல்லும். 3. பைகளில் இருக்கும் உணவுகளை அப்படியே சமைப்பது நல்லதல்ல. (ப்ளாஸ்டிக் பைகள்/ போர்ம் பாத்திரங்கள்) 4. சமைத்த…
-
- 10 replies
- 8.1k views
-
-
சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன். புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒர…
-
- 35 replies
- 7.7k views
-
-
வணக்கம், ரெண்டு நாளைக்கு முன்னம் ஒரு சின்னப்பிரச்சனை. என்ன எண்டால் வீட்டில இரவு சாப்பிடும்போது சோற்றுக்கு நல்ல கறி ஒண்டும் இருக்க இல்லை. வயிற்றில சரியான பசி. என்ன செய்வது எண்டு யோசிச்சுபோட்டு கடைசியாக ஒரு போத்தலுக்க இருந்த கடையில வாங்கி வச்சு இருந்த மிக்ஸரை (அந்த முறுக்கு, கச்சான், பருப்பு, கஜு, மிளகாய்த்தூள், உப்பு இந்தக்கலவை) சோற்றுக்க போட்டு கலந்து சாப்பிட்டன். பசியுக்கு நிறைவாக இருந்திச்சிது. இதுமாதிரி சிலவேளைகளில தயிர், ஊறுகாய், வேண்டுமானால் ketchup இதுகளையும் ஊத்தி வேற கறி ஒண்டும் போடாமல் சோற்றோட, புட்டு, பாணோட கலந்து சாப்பிடுறது. இப்பிடி வித்தியாசமான சாப்பாட்டு கலவைகளை நீங்களும் சாப்பிட்டு இருக்கக்கூடும். சின்னனில புட்டும், சம்பலும், சீனியும் கலந்து சாப்பிடுறத…
-
- 12 replies
- 4k views
-
-
எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.
-
- 13 replies
- 12.1k views
-
-
-
சுவையான இறால் கறி ........ தேவையான பொருட்கள் . றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும் மிளகாய் தூள் .........2 கரண்டி உள்ளி ...................... ஒரு பூடு வெங்காயம் ..........தேவையான அளவு கறி வேப்பிலை வெந்தயம் பழப்புளி (ஒரு தேசிக்காயளவு ) உப்பு ........... செய்முறை :.......... இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து …
-
- 34 replies
- 14.8k views
-
-
ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மாம்பழமே அதிக ருசியானதுதான். அதனை அல்வா செய்து சாப்பிட்டால்... என்ன சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதா... செய்து பாருங்கள். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை பழுத்த சுவையான மாம்பழம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏலக்காய் - 2 நெய் - 1 தேக்கரண்டி செய்யும் முறை மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும். ஏ…
-
- 21 replies
- 5k views
-
-
நவராத்திரியில் கடலைக்கு [சுண்டல்] எத்தனை முக்கியம் இருக்கோ; அவலுக்கும் உண்டு. 'அவல் கடலை' என்று சேர்த்தே அழைப்பது ஈழத்தில் உள்ள வழக்கம். நவராத்திரி தினங்களில் அவல் நிச்சயம் இருக்கும். ஈழத்தில் காலை நேர உணவாகவும் அவல் ஆவதுண்டு. ஊருக்கு போகும் நேரத்தில் பெரியத்தையின் அவலுக்காகவே காலையில் அவர் வீட்டுக்கு அண்ணன்களுடன் போய்விடுவேன். அத்தனை அற்புதமான சுவை. அப்படி வேறு யாருக்குமே சமைக்க தெரியாது என்பது என் கருத்து. புதிதாக துருவிய தேங்காய் பூவையும், சர்க்கரையையும் சேர்த்தால்...என்ன சுவை..என்ன சுவை... அவல் செய்வது ஒன்றும் பெரிய வேலையே இல்லை. ஆனாலும் கைப்பக்குவம் என சொல்வார்களே; அது அடிக்கடி வேலையை காட்ட தான் செய்கின்றது. அவல் - 250 கிராம் துருவிய தேங்காய் பூ - 50 கிரா…
-
- 19 replies
- 4.1k views
-
-
எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..? வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு.. சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?.. கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்.. சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க... சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா? சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?.. இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்.. …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஊருக்கு சென்றால் மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய், விளாங்காய் என மிளகாய்தூள்+ உப்புடன் சாப்பிட்டதற்கு; ஒஸ்திரேலியா திரும்பினால் பெரும் சோதனையாக இருக்கும். மாங்காய் மட்டும் சில மாதங்களில் கிடைக்கும். மற்றவை மருந்திற்கும் பார்த்ததில்லை. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படுவமா நாங்க? இவற்றிற்கான மாற்றாக Cucumber, Apple, Celary, Carrot, Orange ஆகியவற்றை உண்பதுண்டு. இவை உணவில் சாதாரணமாக சேர்ப்பதுண்டு என்றாலும் உப்புதூளுடன் சாப்பிட்டு பாருங்களேன். அப்படியொரு சுவை. இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது Cucumber. Cucumber + மிளகாய் தூள் + மிளகுதூள் + உப்பு சேர்த்தால்....ஆஹா... படம் Cucumber வெள்ளரிக்காய் இனத்தை சேர்ந்தது என பார்த்தாலே தெரியும். அதனால் இனி "வெள்ளரிக்காய்" என்…
-
- 11 replies
- 3.4k views
-
-
ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com] என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல் களத்தில் முன்பு சமையல் குறிப்புகள் கொடுப்பதற்கு ரசிகை ,தூயா இருந்தார்கள் ஆனால் ஆட்களை காணவில்லை அதனால் நான் இணைத்துள்ளேன் எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ கு.சா ஆமை வடையை கொண்டு வந்து போட்டுத்து போயிட்டார் அது முட்டையா விட்டு கொண்டு இருக்கிறது வெண்டைக்காய் பகோடா செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு முறை ருசித்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள். அதற்கான குறிப்பு இதோ. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்…
-
- 28 replies
- 5.8k views
-
-
ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவி…
-
- 35 replies
- 8.9k views
-
-
முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…
-
- 34 replies
- 13.4k views
-