Jump to content

திருமணம் ஆகாதவர்கள் கவனிக்க: நெடுக்காலபோவானின் உடாங் சம்பல்


Recommended Posts

வணக்கம்,

இண்டைக்கு தூயாவிண்ட வலைப்பூவுக்கு சும்மா ஒருக்கால்போய் பார்த்தன். அதில இந்தப்பதிவை பார்த்தபோது கொஞ்சம் சுவாரசியமாய் இருந்திச்சிது. அதான் நீங்களும் பார்க்காத ஆக்கள் வாசிக்கிறதுக்கு அதை அங்கிருந்து சுட்டு எடுத்தி இஞ்சயும் போடுறன். நன்றி! :D

***

நெடுக்காலபோவான் என்னுடைய யாழ்.கொம் சகோதரர். சிலநாட்களின் முன்னர் உடாங் சம்பல் செய்முறை எழுதிய போது தான் செய்யும் முறையை எனக்கு சொன்னார். உடனே எழுதி தர முடியுமா என கேட்டேன். காரணம் நெடுக்ஸ் புலம்பெயர் நாட்டில் படித்து கொண்டிருப்பவர். தானே சமைப்பவர். திருமணமாகாதவர். காலை நேரங்களில் இலகுவாக உணவு தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றது என சொன்னார். நெடுக்ஸை போலவே எத்தனையோ பேர் இருப்பீர்கள். உங்களுக்கு அவரின் செய்முறை உதவட்டுமே:

sambaltumisudang.jpg

என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..!

நீங்கள் செய்ய வேண்டியது...

தேவையான பொருட்கள்.

வறுத்த மிளகாய்த்தூள்

வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு)

பச்சை மிளகாய் ஒரு சில.

பூடு (சில)

இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது)

தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படுத்தலாம்) -ஒரு கப் (றைஸ் குக்கரோடு வரும் சிறிய அளவிலான கப் (மிகச் சிறியதல்ல)

மாசிக் கருவாடு தூளாக்கியது. அல்லது இறால் கருவாடு தூளாக்கியது ( சைவ ஆக்கள் இதைத் தவிர்க்கலாம்) - விரும்பிய அளவு.

செய்முறை.

சுத்தமான பொரி பானில் சிறிதளவு சன்பிளவர் ஒயிலை இட்டு சூடாக்கிய பின்.. கடுகு.. பெருஞ்சீரகம்.. கொண்ட கலவையில் ஒரு தேக்கரண்டி இட்டு தாழிக்கவும். அதன் பின்னர் சிறிதாக நறுக்கிய வெங்காயம்.. பச்சைமிளகாய்.. பூடு.. இஞ்சி எல்லாவற்றையும் போட்டு வதக்கி எடுக்கவும்.(கறிவேப்பிலை போட விரும்புபவர்கள் சிறிதாக அரிந்த கறிவேப்பிலையும் போட்டு வதக்கலாம்)

அதன் பின்னர் இரண்டு மேசைக்கரண்டி மிளகாய்த் தூளை சேர்த்து வறுக்கவும். அத்தோடு பொடியாக்கிய கருவாடு அல்லது இறால் போட்டு சில நிமிடங்கள் வறுத்து எடுத்த பின்.. தேங்காய் துருவலைக் கொட்டி வறுக்கவும். தேவையான உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.

சில நிமிடங்கள் வறுக்க.. எல்லாம் பொன்னிறமாகி.. வரும். அப்போது இறக்கி விடவும்.

ஆற வைத்த பின்.. போத்தலில் அடைத்து வைத்து உணவோடு சாப்பிடலாம். சாப்பிடும் போது தேசிப்புளி சேர்க்கலாம். விரும்பியவர்கள். அவசியம் என்றில்லை. செய்யும் போதே சிறிதளவு வினிகர் விட்டால் அதுவும் தேவையில்லை..!)

(அதிகம் எண்ணை விட்டால் குழையும். உலர்த்தாத தேங்காய் துருவல் வைத்திருந்தால் அதை தனியே உலர்த்தி எடுக்கவும்)

(செய்முறையின் போது தேவையென்றால்.. எண்ணெயின் அளவைக் குறைத்து (தாழிக்க எண்ணெய் அவசியம்) கொஞ்சம் தண்ணீர் கலந்து சற்று அவிய விட்டும் வறுத்தெடுக்கலாம். தேசிப்புளி விட்டும் இறக்கலாம். சாப்பிட முதல் விடுவது எனது வழமை.காரணம் சூடாக்கும் போது சில விற்றமின்கள் எளிதில் ஆவியாகி விடக்கூடியவை.)

நான் கேட்ட உடனேயே செய்முறை எழுதி தந்த நெடுக்ஸுக்கு நன்றிகள். நீங்களும் உங்களுக்கு தெரிந்ததையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

மூலம்: தூயாவின் சமையல் கட்டு - http://thooyaskitchen.blogspot.com/2008/12...-post_5576.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ நெடுக்காலபோவானின் உடாங் சம்பல் ஏண்டவுடனே நித்திரையாலேயும் எழும்பிட்டினம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஒரு கேள்வீ உத சாப்பிட்டா ரண் பண்ணாது தானே ???? :):lol::lol:

சின்னப்பு சுகமா இருக்கிறியளே.. இருக்கிற படியால் தானே இங்க ஸ்ரெடியா நிற்கிறன் என்றப்படாது..! :o

அப்ப எனக்கு தினமும் ரண் பண்ணிட்டா இருக்குது.. சரியான முறையில.. சுத்தம் சுகாதாரத்தோட செய்தால்.. அப்படி ஆகாது...! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( சைவ ஆக்கள் இதைத் தவிர்க்கலாம்)

:unsure: ... :unsure: ........ :)

Link to comment
Share on other sites

மக்கள் ஒரு கேள்வீ உத சாப்பிட்டா ரண் பண்ணாது தானே ???? :):unsure::unsure:

சி*5 கனகாலத்திற்கு பிறகு.நலம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடாங் சம்பலை யாரும் விடுறதாயில்லை. அதுவும் லேசில விடாது!!!

Link to comment
Share on other sites

  • 2 years later...

உடாங் சம்பல் செய்முறை எல்லாம் ஓகே... நானும் செய்து பார்த்தனான் எனக்கு படத்தில இணைச்சது மாதிரி றால் எல்லாம் வர இல்லை... :( உங்களுக்கு என்னண்டு வந்தது துயா? ஒரே குழப்பமா இருக்கு... :blink::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.