கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
தெளிவு ---------- துடியாய்த் துடிக்கிறார். இந்திய அமைதிப் படையின் ஷசெல்| தாக்குதலால் உடம்பெல்லாம் கிழிந்து போய் ஒரு கிழட்டு உயிர் சாவோடு போராடுகிறது. உரும்பிராயில் எல்லோருடனும் 'நல்ல மனிதராய்' வாழ்ந்துவிட்ட ஒருவர். செல்வா காலம் - சிவகுமாரன் காலம் - பிரபாகரன் காலம் மூன்றையும் தன் நீண்ட நெடிய வாழ்வில் நேரில் கண்டு, வீறு மிக்க விடுதலைப் போரில் தன்னையும் எங்கோ சேர்த்துக் கொண்ட பெருமை. நல்ல விடுதலை உணர்வாளர். அதிகம் பேசாத வாய். இத்தனை காலமும் சாவுக்குத் தப்பிய அந்த நல்லவர் இந்திய வெறிப்படையின் ஷ செல் | அடித்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். கண்களில் நீர் பொங்கப் பக்கத்து வீடுகளின் சிறுவர்கள் - இளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net
-
- 0 replies
- 637 views
-
-
அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…
-
- 1 reply
- 1k views
-
-
அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம் மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு தன் தாயார் வீடு நோக்கி பட்டணத்துக்கான பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள். ஒரு மணி நேரத்துக்குபின பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல் எழுந்து விடான். அவள் புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று வர…
-
- 7 replies
- 2.8k views
-
-
இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வ…
-
- 1 reply
- 1.6k views
-
-
புலத்தில் மட்டும் அகதியாக இடம் பெயர்ந்து அதன் வலியை உணர்ந்த நான் , என் தாய் மண்ணில் அகதியாக இடம்பெயர்ந்த வலியை உணரத்தவறி விட்டேன் .அவை எனக்கு வெறும் செவிவழிச்செய்திகளே . நெருடியநெருஞ்சியில் , எனது பால்ய சினேகிதி பாமினி மூலம் இடப்பெயர்வின் வலியைத் தொடமுயற்சித்தாலும், அதுவும் எனக்கு ஓர் அனுபவப் பகிர்வில் வந்த வலியே . அண்மையில் என்னை மிகவும் பாதித்த ஓர் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன்.................................... அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும் கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் ச…
-
- 4 replies
- 1.4k views
-
-
அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 10 இன்பமயமான வருடங்கள்... அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்ட…
-
- 4 replies
- 1.7k views
-
-
நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலால் வளர்ந்து நிற்கும் மரத்தை ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொப்பை வளைக்கும் போது யாழ்ப்பாணத்து காலை பனி தலையில் கொட்டும்….. ப்ச்ச்… ஒரு சின்ன ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவை புடுங்கி போட்டுக்கொண்டு அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகை பூக்கள்? அம்மா இந்த செம்பரத்தை “ஒட்டில்” FRCS செய்தவர்! அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஓடித்து போட்டுக்கொண்டு; தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூவில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ எல்லாம் சாமிக்கு வைக்க கூடாதாம். கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்கு வைக்க தேவை. ரோசா விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்…
-
- 6 replies
- 1.6k views
-
-
அமைதி காக்கும் படை என இலங்கையின் வடகீழ் மாகாணத்துக்கு வந்திருந்த இந்திய இராணுவத்தினர், மேற்கொண்ட அமைதிக்கு மாறான நடவடிக்கையின் ஓரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த முரசொலி நாளிதழ்களின் அச்சியந்திரங்களை, இரவு நேரத்தில் குண்டு வெடிக்கவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலை, வழமைபோல் கடமைக்கு அலுவலகம் சென்று, நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றது, உடைந்து கருகிக்கிடந்த இயந்திர பாகங்களைப பார்த்து பிறகு இருண்ட மனதுடன் வீடு திரும்பினேன். இனி வேலை இல்லை. வருவாய் இல்லை. எங்கே வேலை கேட்டது, யாரைக் கேட்பது? இன்னும் என்ன செய்வான்களே!;.......... கேள்விகளுடன் பேருந்து நிலையம் நாடி நடந்தேன். அடுத்த சில நாளில் இந்த இராணுவத்தின் பிரிவு ஒன்று தென்மராச்சிக்கு வந்து நில…
-
- 6 replies
- 2.1k views
-
-
[size=6]வண்டிற்சவாரி![/size] அ.செ.முருகானந்தன் 1 இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு …
-
- 3 replies
- 1.5k views
-
-
அனாதை பிணம் பணம் மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ... தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்...” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்... கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை மடிந்தது. பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு. ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள். “ஐம்பத்தேழு ரூபா” …
-
- 0 replies
- 565 views
-
-
மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி ”சும்மா சாப்பிடுங்க” பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான். வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டை…
-
- 0 replies
- 510 views
-
-
நீ எங்கிருந்து வருகிறாய்?' வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் அம்மா! அம்மாவின் பதினாறாம் நாள் காரியத…
-
- 0 replies
- 869 views
-
-
ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இ…
-
- 1 reply
- 866 views
-
-
ஆற்றாமை கு-ப-ராஜகோபாலன் ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் …
-
- 1 reply
- 2.5k views
-
-
நிழலாடும் நினைவுகள் ஒரு மே மாத நினைவு எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக…
-
- 16 replies
- 2.8k views
-
-
ராஜ்சிவா- இதோ 2012ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான். “சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது. இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.அது….! ‘மாயா’. மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன…
-
- 67 replies
- 35.3k views
-
-
மகிந்த சிந்தனை இதுதான் சரியான சந்தர்ப்பம் இவன் டக்லஸ்ஷால நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை இந்தியாவால் வேறு தேடப்படுகின்ற குற்றவாளி இதால நம்ம நாட்டுக்கு வேறு கெட்ட பெயர். நான் இந்தியா போகும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இவன எப்படியாவது போட்டு தள்ளனுமே என்ன..... பண்ணலாம் ஆ.... ஒரு ஐடியா மகிந்த உடனே தனது அமைச்சரை அழைத்து அமைச்சரே நான் சொல்லப்போகும் விஷயம் உனக்கும் எனக்கும் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது அமைச்சர் பதிலுக்கு என்ன.. சனாதிபதி நீங்க போடுற எழும்பை தின்னுட்டு உங்களுக்கே துரோகம் பண்ணுவனா நான். சரி சரி இந்திய போய்ட்டு வந்த பிறகு வீட்டு பக்கம் ஒருக்கா வா ஓகே சோ்.சரி சனாதிபதி அது என்ன இரகசியம்.நாங்க டக்லஷ கொலை செய்யப்போறம் டக்லஸ்ஷால நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை இந்தி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
உன்னை வாழ்த்தி பாடுகிறேன். -சண்முகம் சிவலிங்கம் எனக்கு மனம் கொதித்தது. நாங்கள் பியர் குடித்து மகிழ்ந்த வாடி வீடு இப்போது இந்தியன் வசம் ஆகிவிட்டதே என்று. எதிரே கடல். ஓங்கி எழும் அலைகள் தெரிகின்றன. அலைகளின் இரைச்சல் நிரந்தரமாக எங்கும் நிறைந்திருக்கிறது. கடல் காற்று வீசிச் சூழன்று இதோ இந்த அரசமரத்தில் மோதித் துடிக்கிறது. அரசமரத்தை ஒட்டியிருக்கிற ‘போச்’ இல் நிற்கிற ஜீப் யாருடையது? அதுதான் அந்த மேஐரின் ஜீப்பா? மேஐர் இப்போது எங்கே இருப்பான்? ‘போச்’ ஐ தொட்டிருக்கும் போட்டிக்கோவை மையமாகக் கொண்டு இரண்டு பக்கமும் ஓடும் அந்த கொரிடோர்’களில் நாம் எத்தனை முறை ஸ்ற்றூலையும் கதிரைகளையும் இழுத்துப் போட்டு கடலையும் காற்றையும் இடையில் உள்ள வெள்ளை மணல் வெளியையும் அனு…
-
- 1 reply
- 967 views
-
-
சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்தில…
-
- 0 replies
- 733 views
-
-
பூஞ்சிறகு ரிஷபன் திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன். "பாபு.. நீயும் வா" அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன. திடுக்கிட்டு திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின. ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது. …
-
- 2 replies
- 915 views
-
-
றாகிங் – ஒரு வன்முறை “நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்” சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ். “எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”. தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”. இவையெல்லாம் அண…
-
- 2 replies
- 725 views
-
-
"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி! வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள…
-
- 4 replies
- 2.1k views
-
-
படிப்பு தவிர்ந்த நேரத்தில் ரொம்ப யாலியாக இருப்பது எனது வழக்கம். நன்றாக தூங்குவேன். நன்றாக சாப்பிடுவேன். நன்றாக ஊர் சுத்துவேன். நல்ல படங்கள் அதிலும் ரஐனி படம் முதல் காட்சி பார்ப்பேன். பாடசாலை கட் பண்ணாமல். அண்ணருடைய வீடு ஐம்பெற்றா வீதியில். மதியம் பாடசாலை முடிய அப்படியே 155இலோ 101 இலோ வந்திறங்கி 167 எடுப்பேன். சிலவேளை அப்படியே 167இல் போவேன் அல்லது கடைக்கு வந்து சைக்கிளில் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன்.. (கலருகள் ஏறுவதைப்பொறுத்தே போக்குவரத்து வாகனம் தெரிவு செய்யப்படும் உள்ளே போவதா வெளியில் தொங்குவதா என்பதுதும் அவர்கள் உளள்ளே இருக்குகும் இடத்தைப்◌ாறுத்தேத ததீர்மானிக்கப்படும் ) அதன் பின் ஐயாவைப்பிடிக்கமுடியாது. ஒன்றில் ஊர் சுற்றுவது. அல்ல…
-
- 91 replies
- 8.4k views
-