கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
-
இன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலை முடிந்த சந்தோசம் வழமை போலவே வெள்ளிக்கிழமை என்றபடியாலும் இரட்டிப்பு சந்தோசத்துடன் டாக்கர் ரவி இன்று இரவு எந்த நாட்டு சாப்பாடு சாப்பிடலாம்;; என்று யோசிக்கும் போது தான் புதிதாக திறந்த அப்கானிஸ்தான் ரெஸ்ரோறன்ருக்கு போகலாம் என்று எண்ணியவாறே வீடு சேர்ந்தார். ரவி வழமை போல் பாதணிகள் வைக்குமிடத்தில் நின்று என்ன கதவு திறக்கும் போதே சுடச்சுட ஆவிபறக்க தேநீருடன் வந்து வரவேற்கும் மனைவி மலரைக் காணவில்லையே என்று சுற்றி சுற்றி பார்த்தார்மெதுவாக பாதணிகளைக் கழட்டி விட்டு படுக்கை அறைக்குப் போய் மலருக்கு பக்கத்தில் இருந்த போது தான் மலர் அழுது கொண்டு படுத்திருப்பது கண்டு சிலையாகிப் போனார்.மெதுவாக எ;னன நடந்தது என்று கேட்பதற்கிடையில் ரவியே அழுதுவிடுவார் போல்…
-
- 17 replies
- 3.1k views
-
-
என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் …
-
- 34 replies
- 4.6k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல
-
- 53 replies
- 6.2k views
- 1 follower
-
-
மௌனங்கள் கலைகின்றன - 2 முட்டிய விழிகளும், முதல்வலியும் வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும். …
-
- 17 replies
- 3.9k views
-
-
மணமகள் கிடைத்தாள் சந்தாலி ராஜ்யத்து மன்னருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே பிறக்கவில்லை. தனக்குப்பின் ஆட்சிப் பீடத்தில் அமர ஒரு மகன் வேண்டும் என்று மன்னர் மிகவும் ஆசைப்பட்டார். அந்த ஆசை நேடுங்காலமாக நிறைவேறாததைக் கண்டு, பட்டத்து ராணி மன்னரை மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த, மன்னரும் இன்னொரு பெண்ணை மணந்தார். அவளுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதனால், மேலும் இரண்டு பெண்களையும் மணந்து கொண்டார். அதன் பின்னரும், குழந்தைகள் பிறக்கவில்லை. மன்னருக்கு வாரிசு தோன்றாமல் இருப்பதைக் கண்டு குடிமக்களும் வருத்தமடைந்தனர். ஒருநாள், அந்த ராஜ்யத்திற்கு ஒரு யோகி விஜயம் செய்தார். யோகியின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட முதன் மந்திரி அவரை அரண்மனைக்கு வரவழைத்த…
-
- 7 replies
- 1.9k views
-
-
அவன் கோமாவில் என்று அறிந்தது இப்போ தான் ,ஆனால் ஒரு வருடமாக இருக்கிறானாம் ...அதை ஒரு செய்தியாக மட்டும் கேட்டு விட்டு செல்லமுடியாமல் என்னுள் ஏதோ...இன்னும்... .அவனை எனக்கு பாலியல் காலத்திலிருந்தே தெரியும் ......என்ன பாலியல் காலம் ...மீசை அரும்பி குரல் தடிக்கும் காலத்துக்கு முன்பே தெரியும்....ஓடிப் பிடித்து ...கல்லு குத்தி அடிச்சு பிடிச்சு ...கிந்தி தொட்டு ...என...விளையாடிய காலத்திலிருந்தே தெரியும் ...எங்களை போல இருக்கும் சராசரிகளை விட ....கொஞ்சம் ...வசதி ....கொஞ்சம் ....சொத்தின் செழிப்பு அவனில் தெரியும் .. அடிக்கடி மாற்றும் டெரிலின் சேட்டும் .....அந்த சேட்டு பொக்கற்றுக்குள்ளை தெரியும் பொக்கற் மணியும் .....அதாவது ...எங்களுக்கு ...சில்லறைகள் கிடைப்பதே கனவுகளாக இருக்கும்…
-
- 15 replies
- 2.8k views
-
-
கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார். காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று க…
-
- 24 replies
- 3.8k views
-
-
கனவு மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில் என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது. டேய்..! எந்திரி..மணி எட்டாகுது சே..! பயங்கரமான கனவு. என்னடா இ…
-
- 0 replies
- 854 views
-
-
கதிரி எழுதியவர் மானிடப்பிரியன் "இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள். "அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு. "அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது. "அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி! "இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள். என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும். பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
மந்திரத் தீவுக்கான படகுப் பயணம் மாதங்கள், வருடங்கள் என்று... நீண்டு கொண்டே போனது. பூசாரிக்கோ தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதில் அவரசம் மேலோங்க.. சீடர்களை அழைத்து.. எப்படியாவது மந்திரத் தீவை இந்த யூலைக்குள் அடைந்தே ஆக வேண்டும். ஏற்கனவே புயலில் சிக்கிய சிதைந்து போயுள்ள எங்கள் படகு இன்னும் நீண்ட காலம் கடலில் பயணிக்க முடியாது போலுள்ளது. ஆகவே படகை குறுக்கு வழியில் என்றாலும் செலுத்தி.. மந்திரத் தீவுக்கு என்னை விரைவாகக் கொண்டு சென்றுவிடுங்கள். அடுத்த முழு நிலவு தினத்தில் நான் மந்திரத் தீவில் இந்தக் குடுவையைத் திறந்தாக வேண்டும். இன்றேல் என்னால் இந்த அதிசயக் குடுவை தர இருக்கும் சக்தியைப் பெற முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால்.. உங்களை எல்லாம் வெட்டி இந்தக்…
-
- 22 replies
- 3.6k views
-
-
பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 7 replies
- 3.3k views
-
-
அப்பதான் டியூசன் முடித்து வெளியிலை வந்து கொண்டு இருந்தோம்... மாலை ஐந்து மணி ஆறு மணியில் இருந்து ஊரடங்கு நண்பர்கள் எல்லாரும் போகும் வழமையான பாதை... புறப்படும் போது எங்களை தாண்டி ஒரு ஜீப் வேகமாக போகிறது... மச்சான் ஆமியடா விலகி நில்லுங்கட எனும் நண்பனின் குரலுக்கு செவிசாய்த்து எல்லாரும் ஒதுங்கி நிக்கிறோம்.... அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது... ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத…
-
- 16 replies
- 2.2k views
-
-
உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெ…
-
- 13 replies
- 2.5k views
-
-
உறவும் வரும் பகையும் .வரும் ..... பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர் .மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள் .தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களு…
-
- 8 replies
- 1.8k views
-
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.4k views
-
-
அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு. அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது. சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்ட…
-
- 22 replies
- 3.8k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் க…
-
- 3 replies
- 5.1k views
-
-
ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …
-
- 1 reply
- 952 views
-
-
தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம். ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது. 'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்த…
-
- 0 replies
- 709 views
-
-
சாதனை சாதனை சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு…
-
- 17 replies
- 2.7k views
-