கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
ஒரு நாள் கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து "தம்பி பக்கத்துல ஆள் வருதா?" " ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க" சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?" " ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார். ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?" நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?' இல்ல நான் உக்காரணும்" " சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பதினோராவது பொருத்தம் இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். ” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!” மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்… ”இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச த…
-
- 0 replies
- 1.1k views
-
-
புட்டுக்குழல் “மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு” “ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே சென்று வாய் பிள…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிவா இந்த வருடம் நாங்கள் பாபாவின் பிறந்தநாளிற்கு புட்டபத்திக்கு போகும் போது ஒருக்கா கொழும்பிற்கும் போயிட்டு தெகிவளை ஆஞ்சேநேயர் கோயிலிற்குன் போயிட்டு வர வேண்டும் என்று சுதா சொன்னதை கேட்ட சிவா ஏனப்பா போனமுறை தான் புட்டபத்திக்கு போயிட்டு வந்தனாங்கள் இரண்டு மூன்று வருசத்தால போகலாமே என்று சிவாவை பார்த்த சுதா உங்களிற்கு என்ன விசரா பாபாவின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் வாரேன் என்று மனதிற்குள் நான் அப்பவே நினைத்துவிட்டேன் ஒவ்வொருவருடமும் போக வேண்டும் இது பாபாவின் விடயம் இதில் ஒரு மாறுதலும் இல்லை சொல்லிபோட்டேன்.இப்ப நாங்கள் இந்த அவுஸ்ரெலியாவில் சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழுகிறோம் என்றா அதற்கு அந்த பாபா தான் காரணம். புட்டபத்தி போய் அவருடைய தரிசனம் கிடைத்து 2 கிழமையாவது அந்த…
-
- 17 replies
- 3.1k views
-
-
அகதியின் பள்ளி September 27, 2019 - பா.ரமேஷ் · இலக்கியம் / சிறுகதை டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த மணி , ஒரு பெட்டிச் செய்தியை பார்த்து , புருவத்தை அகல விரித்தவன் பேப்பரை வாகாக நாலாய் மடித்து , செய்தியை கண்களால் ஜூம் செய்தான் “ ஏலேய், சிவா இங்க பார்ரா ,பள்ளிக்கூடத்தில பிள்ளைகளை சேக்குறதுக்கு ,டி.சி தேவையில்லையாமுல்ல, பேப்பர்ல போட்டிருக்கான்” என்றான். “ அட ஆமாம்ப்பா 2010 லையே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருச்சுப்பா” , இதுக்கு ஆர்.டி.இ 2009 சட்டமுன்னு பேரு “என்றான் சிவா. “ஏப்பா சிவா , நாம படிக்கிறபோது , ஒரு பள்ளிக்கூடத்தில சேரணுமுண்டா எவ்வளவு கஷ்டமுப்பா .” “அன்னைக்கி, டி.சி இல்லாம எவனாச்சும் சேப்பானா ?” என்றான் மணி. “ ஏய் ,டி.சி மட்…
-
- 0 replies
- 773 views
-
-
1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டா வெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இ…
-
- 64 replies
- 8.6k views
-
-
இமயா - சிறுகதை அராத்து, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி லங்காவி தீவு. நள்ளிரவைத் தாண்டி இரவு தனக்கான தனி கேரக்டரை வடிவமைத்துக்கொண்டிருக்கும் நேரம். `அன்கான்ஷியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த பப்பில், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த இருவர், அடி பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் ட்ரம்ஸ் இசைக்கும், `ஒன்மோர் டிரிங்க் ப்ளீஸ்’ என உரசிக்கொண்டிருக்கும் பெண்களின் நச்சரிப்புகளுக்கும் இடையில் பேசிக்கொண்டு இருந்தனர். வீடு, வாசல், பிசினஸ் தாண்டி குழந்தைகள் பற்றி பேச்சு வந்ததும், இன்னும் கவனமாகவும் சத்தமாகவும் பேச ஆரம்பித்தனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். விட்டதைப் பிடிப்போம் என, குழந்தைக்குட்டியான பிறகும் லங்காவி டூர் வந்திருக்கின்றனர். ஒரு தந்தையின் பெய…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…
-
- 1 reply
- 3.7k views
-
-
அது மாசி மாசி மாதத்தின் ஆரம்ப நாட்கள் ... சுதந்திர தினத்தன்று புதுக்குடியிருப்பில் தனது கொடியினை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நின்ற சிங்கள படைகளுக்கும் வீரதலைவனின் சொல் கேட்டு மக்களை காக்க நின்ற மானமா வீர்களுக்கும் இடையை கடும் சண்டை புதுக்குடியிருப்பை சூழ இடம்பெற்று கொண்டிருந்தது. வேவு தகவல்கள் மூலம் பகைவனின் எறிகணை சேமிப்பு இடம் பற்றிய தகவல் அறிந்த புலிகள் படையணி ,அதனை கைப்பற்றவும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஒரு வலிந்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் ஒரு மகளிர் அணியில் பூங்கொடியும் இணைக்கபட்டாள். அன்று அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. கொடிய பகைவனுக்கு பதிலடி கொடுக்கும் அந்த தருணத்துக்காக அவள் ஏங்கிய பலன் அன்று அவளுக்கு கிடைத்திருந்தது. அ…
-
- 10 replies
- 2k views
-
-
வணக்கம் வணக்கம் வாங்கோ என்ன எதிர்க்கட்சியில் சேர சந்தாவும் கொண்டு வந்திருக்கிறீர்கள் போல.இப்போதைக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை.இப்ப சாமிமாரைப் பற்றி எழுதினால்த் தான் எல்லோரும் வேலையையும் விட்டு போட்டு அரக்க பரக்க ஓடி வருவினம்.அது தான் நானும் ஒரு சாமியைப் பற்றி எழுதலாம் என்று வந்தேன். எல்லோருக்கும் நடிகர் வக்கீல் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை தெரிந்திருக்கும்.இவரிடம் போய் என்ன ஐயா நீங்கள் யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் போட்டு விளாசித் தள்ளுகிறீர்களே அப்படியானால் நீங்கள் எந்தக் கட்சி என்று ஒருக்கா சொல்லுவீர்களோ? இதில பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐந்தாவது மருந்து எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்கு கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிபாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூட பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தாண்ணு படுது ‘என்றேன். ‘தளவாய் கிராக்கு மட்டுமில்லை. …
-
- 0 replies
- 857 views
-
-
தீர்ப்பு! ஒரு நிமிடக் கதை தீர்ப்பு! அவசரமாகக் கிளம்பிக்கொண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.youtube.com/watch?v=ApUVBLDxITM எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்<br /> http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html<br /> பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,, ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த…
-
- 0 replies
- 3.2k views
-
-
இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்.. சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொ…
-
- 49 replies
- 11k views
-
-
தெய்வம் தந்த பூவே ''மீனாட்சி...'' ''என்னம்மா?'' ''குழந்தை எங்க?'' ''பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடிட்டு இருக்கான்.'' ''நீ இங்க கொஞ்சம் வா... உன்கிட்ட பேசணும்.'' அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று புரிந்து போனது மீனாட்சிக்கு! ''நாலாவது வீட்டு பொண்ணுக்கு காலேஜ்ல பங்ஷனாம்... அவளுக்கு அர்ஜென்டா பிளவுஸ் வேணும்ன்னு சொன்னா... அதுதான் துணி வெட்டிட்டு இருக்கேன்; எதுக்கு கூப்பிடறீங்க... அங்கிருந்தே சொல்லுங்க...'' வராண்டாவில் அமர்ந்திருந்த மாமியார், ''எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்பே... உனக்குன்னு ஒரு துணை வேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி, " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......" எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில் " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, " எண்டு பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப் பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு. இன…
-
- 0 replies
- 1.7k views
-
-
இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு. *** திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ தூரத்தில். உள்ள கிராமம்” பதவிய”. 6400 எக்கர் பரப்பு அளவுள்ள பதவிய குளம் மகாசேன மன்னனால் கிமு 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர் இலங்கையை ஆண்ட 11ஆம் நூற்றாண்டில் செழித்து இருந்த பக…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க
-
- 14 replies
- 2.6k views
-
-
அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…
-
- 14 replies
- 1.7k views
-
-
மாயாவி ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை …
-
- 15 replies
- 2.5k views
-
-
யாழ் சுமந்த சிறுவன் - தீபச்செல்வன். சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில் தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன. கிளிநொச்சியின் பேருந்து நிலையம் என்பது பெரிதாக கொப்புகள் இல்லாத ஒரு பாலைமரம்தான். அது காயம்பட்ட பறவையைப் போல நெளிந்து நின்றது. அதன் சிறு நிழலில் பேருந்துகள் வந்து தரிப்பதுவும் போவதுமாய் இருந்தன. தமிழீழப் பேருந்து நிலையத்தின் வெட்டி வீசப்பட்ட மஞ்சள் தகரங்களில் ஒரு பெட்டிக்கடை. மணிக்கூட்டையும் வழியையும் மாறி மாறிப் பார்க்கும் சத்தியனை கவனித்துக் கொண்டே தோள் துண்டினால் தண்ணீர் போத்தல்களை துடைத்துக் கொண்டிரு…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு நிமிடக் கதை: மாமியார் சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே? ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்? சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்... “என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால ம…
-
- 0 replies
- 1k views
-
-
சிறுகதை: நேர்முகம் நேர்முகத் தேர்வுக்குத் தயா ராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி சீவி சடை போட் டுக்கொண்டால் என்ன!’’ - ஆதங்கத் துடன் நான் கேட்க, ‘‘அம்மா! என்னை பெண் பார்க்கப்போகிறார்களா என்ன? எப்போதும்போல் இருந்தால் போதும்’’ என்றபடி கிளம்பினாள். ‘‘சாமியிடம் வேண்டிக்கொண் டாயா? அப்பா உன்னுடன் வரவேண் டாமா?’’ என்றேன். அவளோ, ‘‘சாமி கும்பிட்டாச்சு. நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாய். அப்பா கூடவே வந்தால் அங்கு உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்’’ என்று கூறிவிட்டு, டாட்டா காண்பித்து வெளியேறினாள். மென்பொருள் நிறுவனத்தின் நேர் முகத்தேர்வுக்கு அ…
-
- 0 replies
- 2.3k views
-
-
வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது. கனடாவுக்கு வந்தநாள் தொடங்கி வந்த எத்தனையோ கடிதங்களை எல்லாம் கீழ்வீட்டுச் சிற்றம்பல வாத்தியாரிடம் காட்டி விபரம் கேட்பதற்காக நாய்போல அவர்கள் வீட்டு வாசலிலே காத்திருந்ததும் வாழ்க்கை இரகசியங்களை ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஒரே ஒரு காரணத்துக்காக அவர்களோடு பங்கு போட்டுக்கொள்ள நேர்ந்ததும் போன்ற அவலங்கள் இப்பொழுது சண்முகத்துக்கு இல்லை. சண்முகம் படித்தவன்;. கணக்கிலும் உலக அறிவிலும் அவனும் கெட்டிக்காரன் தான். ஆங்கிலம் மட்டும் தான் அவனுக்கு தெரியாது. ஆனால் கனடாவைப் பொறுத்தவரை அதுவே அவனுக்கு பெரிய தலை வ…
-
- 2 replies
- 1.2k views
-