கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
குணா “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே. ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை. நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கை…
-
- 1 reply
- 1.7k views
-
-
மறுமுறை சொல் உடையார் குமார் கிளம்பிச் சென்றதும் வாசல் கதவைத் தாளிட்டாள். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் படர்ந்தது. காலில் சிக்கிய தலையணையை வெறிகொண்டு எத்தித் தள்ளினாள். சில்வர் செம்பொன்று நாற்காலியில் இருந்து தரையில் விழுந்து உருண்டது. விளக்கினைப்போட்டு கண்ணாடி முன்நின்று பார்த்தாள். தன்முகம் ஏன் இவ்வளவு கிழடு தட்டி விட்டது. முப்பத்தைந்து வயதிற்குள் எல்லாம் முடிந்து போனதனாலா? உதடுகளைக் குவித்து பரிசோதித்தாள். ஐந்து வருட இடைவெளிக்குள் தனக்குப் பத்து வயது கூடிவிட்டது போல் உணர்ந்தாள். தொப்புளைச்சுற்றிய பிள்ளைப் பேற்றுத் தழும்புகளை வலது கை விரல்கள் அன்னிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தன. ஒவ்வொருமுறையும் குமார் அறைக்குள் வந்து கதவைச்சாத்திய உடன் அவள் அ…
-
- 2 replies
- 790 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் ஜடம்! காலையில் ஆபீஸுக்குக் கிளம்பும் அ…
-
- 1 reply
- 3k views
-
-
கிறிஸ்மஸ் நேரம் எண்ட படியால் கூட வேலை. பதினான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டம் எடுக்க காரில் ஏறினால், பெட்ரோல் குறைவு என்று டிங்கு டிங்கு எண்டு சத்தம் போட்டு காரும் வெறுப்பேத்தியது. பெற்றோலை போட்டுவிட்டு மட்டையை பாவிக்காமல் காசுடன் உள்ளுக்கு சென்றார் சின்னதுரை, ஒரு போலிஷ் கார வயோதிபர் கவுண்டரின் பின்னால் நின்றார். சின்னதுரையை பார்த்தவுடன், ஏன் கவலையாய் இருக்கிறாய் என்று கேட்டார்? சின்னதுரைக்குள் ஒரு பரப்புரை பொறி தட்டியது. சின்ன: எனது ஊரில எண்ட சொந்த காரரை ஸ்ரீ லங்கா இராணுவம் கடத்தி போட்டான். போலிஷ்: என்னது? உனது நாட்டு இராணுவமே மக்களை கடத்துகிறதா? சின்ன: இராணுவம் மட்டுமில்லை. எங்கட அமைச்சர், ஜனாதிபதி எல்லாம் ஆக்கள் கடத்து…
-
- 12 replies
- 1.8k views
-
-
என்னடி மாலா.. திரும்பவும் வீடு மாறப் போறியே. சமான் சக்கட்டை எல்லாம் கூட்டிக் கட்டி வைச்சிருக்கிறா என்ன சங்கதி. அதுவும் இப்ப கவுன்சில் வீடு எடுக்கிறதும் கஸ்டமான நேரத்தில..... வாங்கோ.. ரேவதி அக்கா. இப்பதான் வந்தனியளோ. ஓமடி. பிள்ளையளை சுவிமிங்கில விட்டிட்டு.. இஞ்சால வந்திட்டு போவம் என்று வந்தால்.. உன்ர வீடு இப்படியாக் கிடக்கு. என்ன வீட்டுக்காரனோட பிரச்சனையே..?! வீட்டுக்காரன்.. பறுவால்லை அக்கா. 1200 பவுன் வாடகை வாங்கிக் கொண்டு.. 200 பவுன் கையில வாங்கிறார். மற்றவை இதே வீட்டுக்கு 1300 பவுன் வாடகையும் கையில 300.. 400 பவுனும் கேக்கினம். அந்த வகையில இந்தாள் பறுவாயில்லை.... அப்ப என்ன தான் பிரச்சனை உனக்கு. அடிக்கடி வீடு மாறிறதே வேலையாப் போச்சு. என்ன மகளுக்கு கச்மெண்…
-
- 2 replies
- 2k views
-
-
மறுபடியும் ஒருதடவை! ராஜேஷ்குமார் ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன. ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் கேட்டார். “மிஸ்டர் சிவசீலன்’ “எஸ்’ என்றேன். “ஐயாம் ஜெர்ரி ஹாப்ஸ். தொழில்துறை மாநாட்டின் அமைப்பாளர்களில் நானும் ஒருவன். வெல்கம் டூ பாங்காக் மிஸ்டர் சிவசீலன்’ நான் பொக்கேயை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ’ சொல்லி புன்னகையொன்றை உதிர்த்தேன். தன் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாவியொன்றை நீட்டினார். “உங்களுடைய…
-
- 0 replies
- 800 views
-
-
தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்" *கதாநாயகன் - "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் பிரசாந்தன் *கதாநாயகி - அறிமுக நட்சத்திரம் "அழகிய மகள்" ப்ரியா (ஜரோப்பிய வருகை) *இவர்களுடன் அறிமுகம் சின்ன கலைவாணன் செந்தூரன் (அவுஸ்ரெலிய வருகை) அறிமுகம் சிரிபழகி அனுசா (ஜரோப்பிய வருகை) *கெளரவேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்நாற்சந்தியில் காண்பிக்கபடுகிறது) சுண்டல் அண்ணாவின் அட்டகாசமான நடிப்பில்!!! கண்களை மட்டும் அகல் விரித்து மூடிய திரைகுள் முகத்தை தேடி என்…
-
- 40 replies
- 14k views
-
-
பிடிமானம்: உமாஜி ‘கடவுளே. பஸ்ஸை நிப்பாட்டி என்னை அவமானப் படுத்திடக்கூடாது’ தலையை உயர்த்திப் பார்த்தவாறு குப்புறப் படுத்திருந்தவன் மனதிற்குள் அலறினான். ஆனாலும் இக்கட்டான தருணங்களில் கடவுளைப்போலவேதான் பேரூந்தும். அவனுக்கு முன்னால் இருபதடி தூரத்தில் நின்றுவிட்டிருந்தது. அது இறுதி யுத்த காலம்தான். ஆனாலும் அவன் ஒன்றும் பேரூந்துக்குக் குண்டு வைக்க எல்லாம் படுத்துக்கொண்டு காத்திருக்கவில்லை. சில வினாடிகளுக்கு முன்னர்தான் அந்தப் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக நடத்துனர் பதட்டமாக இறங்கு வர, அவசரமாக எழுந்து கொண்டான். சடுதியான அதிர்ச்சியை எதிர்கொண்ட உடல், உடனடியாகவே ஒன்றும் நடந்துவிடவில்லை என்று சமாதானம் செய்துகொள்வதைப் போலவே மனதோடு இ…
-
- 1 reply
- 804 views
-
-
வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில். நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன். நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்…
-
- 31 replies
- 3.7k views
-
-
மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6.…
-
- 16 replies
- 3.6k views
-
-
“அவன் அப்புடித்தான், தேளு கொட்டுன மாதிரி என்னமும் சொல்லிருவான்.. கொஞ்ச நேரத்துல மறந்துட்டு எப்பமும் போல சாதாரணமா பேசுவான், நாம்தான் கெடந்து தவிக்கணும்” அரைத்து வைத்த மசாலாவைக் குழம்பில் கலக்கியபடியே ராஜீவின் அம்மா சாதாரணமாகச் சொன்னாள். கேட்டுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கௌசி. அவளுக்குத் தேள் கொட்டிய நேரடி அனுபவம் கிடையாதே தவிர, பக்கத்து வீட்டு மகேஸ்வரிக்கு நெறி கட்டிக்கொண்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டாள் என்பதை அருகிலிருந்து கவனித்திருக்கிறாள். கொடுக்கைத் தூக்கிக்கொண்டு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் தேள், தன் பாதையில் ஏதோவொன்று வந்ததும், இடைஞ்சலாக எரிச்சலாக உணர்ந்தோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவென பயந்தோ, சுளீரெனக் கொட்டி விஷத்தையெல்லாம் கொடுக்கு…
-
- 0 replies
- 893 views
- 1 follower
-
-
கொலையுதிர்காலம் http://www.mediafire.com/?w93xkvto8y3x88q
-
- 3 replies
- 2.3k views
-
-
தொடரும் துயரங்கள்…..! இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது. பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது. 000 000 000 எதிர்முனையில் ஒரு பெண்குரல்... நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க….. நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்ன…
-
- 16 replies
- 2.2k views
-
-
மணவாழ்வின் மதியம் – காலத்துகள் “நைட் பூரா இருக்கணுமா” “..” “பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா” “..” அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது கையில் குடை. மழையால்தான் இவன் வர தாமதமாகிறது என்று எண்ணியிருந்தாள். ஏழேகாலுக்கு மேல் அவனுக்குத் தாமதாமாவதில்லை, அதிகபட்சம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
"சத்தம் போடாதே" இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு…
-
- 0 replies
- 591 views
-
-
நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பா…
-
- 2 replies
- 783 views
-
-
[08] அஞ்சலி எங்கே உட்கார்ந்திருக்கின்றாள் என்று ஒரு பார்வையை விட்டபடி... அந்த கொஃபி சொப்பிற்குள் நுழைந்த இருவரும் அஞ்சலியும் றிஷானாவும் இருக்கும் இடத்தை நெருங்கவும்... அவனும் விமலும் வருவதைப் பார்த்த அவர்கள் இருவரும் எழுந்து ஹாய் என்று புன்னகையுடன் வரவேற்றார்கள். விமலுக்கு வாய் சும்மா கிடக்காமல்.... மச்சான் நீ 'வாத்தி' எண்டுறதை இவையள் இன்னும் மறக்கேலப் போல கிடக்கு... என அவனுக்கு மட்டும் கேட்கக்கூடியமாதிரி கிசுகிசுத்தான். இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத அவன்... "ஹாய்... ஹலோ..! இவன் என்னுடைய பெஸ்ட் பிறண்ட் விமல்" என்று விமலை அறிமுகப்படுத்தியவன் புன்னகைத்தபடி உட்கார... விமலும் ஒரு "ஹாய்... ஹலோ " சொல்லிவிட்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்…
-
- 48 replies
- 10.7k views
-
-
என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் …
-
- 34 replies
- 4.6k views
-
-
ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை) "என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள். இத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01 மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவ…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை - படிப்பு “இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது. “எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால். “நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரி…
-
- 0 replies
- 2.1k views
-
-
அளவோடு ஆசைப்படு ! ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? எ…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா "கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே. ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’ என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
காஞ்சக்கடலை..... வகை : அனுபவம்... | author: பிரபாகர் சில நிகழ்வுகள் நம்மை கடைசிவரை பல்லில் மாட்டிய பாக்கென நிரடிக்கொண்டே இருக்கும். அந்த விதத்தில் என்னை மிகவும் பாதித்த ஒன்று இந்த இடுகையில். இரண்டு வருடத்திற்கு முன் ஊருக்கு சென்றபோது தம்பி 'அண்ணா வரும்போது ஒரு நல்ல வாட்ச் வாங்கி வா' என்றான். ’யாருக்கு’ என கேட்டதற்கு ’காஞ்சக்கடலைக்கு’ என்றான். சட்டென சிரிப்பாய்தான் வந்தது. 'அதென்ன காஞ்சக்கடலை?' எனக் கேட்டதற்கு அவரின் பட்டப்பெயர் எனவும், அவர் அவனுக்காக செய்த உதவிகளையும் சொல்ல ஆரம்பிக்க, ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வர, சரி ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் என மட்டறுத்து, மறக்காமல் வாங்கிச் சென்று கொடுத்தேன். ஆனால் குறுகிய பயணமாதலால் அவரை சந்திக்க முடியவில்லை. …
-
- 0 replies
- 545 views
-