கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்க…
-
- 22 replies
- 5k views
- 1 follower
-
-
அம்மா நான் போயிட்டு வாறன்.. புன்னகை தந்து விடைபெற்றான் சங்கர். இப்ப தான் வந்தாய்.. அதுக்குள்ள எங்கையடா போறாய்.. தாயின் பதில் கேள்வி அவசர அவசரமா வெளி வர, கொஞ்சம் திக்குமுக்காடிப் போன சங்கர் சுதாகரித்தபடி.. ஒரு இடமும் இல்ல அம்மா.. உவன் சிவா வீட்டடிப் பக்கம் சைக்கிளில ஒரு நாலு மிதி மிதிச்சு வட்டமடிச்சிட்டு வரப் போறன். உந்த உச்சி வெய்யிலுக்க உலாத்தாமல் கெதியா வந்து சேர்.. பாசமிகு எச்சரிக்கையோடு அம்மா விடை தர சங்கரின் சைக்கிள் லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது ஊர்ப் புழுதியில் குளித்தபடி. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சைக்கிள் நேராக காயத்திரி வீட்டு வாசலில் போய் நின்றது. காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சின…
-
- 22 replies
- 7.3k views
-
-
சரி பின்னக் காதலிப்பம்... அவளுக்குப் பயமாகவிருந்தது. எப்படி இந்த இரவைக் கழிப்பது? எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவனை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ? மனம் கிடந்து தவித்தது. "சே! சே! இதென்ன கலியாணம்? முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு. நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்? எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்ர்த்துக் கொண்டேன்? திடீரென்று இதென்ன. . .?" பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள். தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன். இப்போத…
-
- 22 replies
- 3.1k views
-
-
கண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்…
-
- 22 replies
- 3.1k views
-
-
அன்றுதான் அண்ணா வீட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் வழியில் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது எல்லோரையும் சோதனையிட்டார்கள் நானும் கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் என்னையும் கீழ் இறக்கு சோதனையிட்டார்கள் நீ மட்டக்களப்பை சேர்ந்தவன் உனக்கு என்னடா இங்கு வேலை என்று கேட்டு கேட்டு விசாரித்தார்கள் நானும் என் அண்ணனை பார்க்கதான் திருகோணமலை வந்திருக்கிறேன் என்று சொன்னேன் வாடா உன்னை விசாரிக்க வேணும் என்று சொல்லி முகாமுக்குள் கூட்டி சென்றனர் .அங்கு சென்ற எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது .யாரோ ஒருவர் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன் அவருக்கு கண்கள் தெரிய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தது. என்னை முன் நிறுத்தி இவனா என்றார்கள் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணனுக்…
-
- 22 replies
- 4.7k views
- 1 follower
-
-
சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றா…
-
- 22 replies
- 3.6k views
-
-
http://www.youtube.com/watch?v=2DAVIb9yzO0 ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் . சிறீக்குமார் நெறிப்படுத்த நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் . இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர் அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. நானும் இந்த கல்லூரியில் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன் ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்
-
- 22 replies
- 3.7k views
-
-
கண்ணோடு காண்பதெல்லாம் ..... வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன. வினாயகம் ஒருவினாடி தன…
-
- 22 replies
- 4.7k views
-
-
Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்….. அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான். ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாத…
-
- 22 replies
- 3.4k views
-
-
தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர். எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார். இறந்த போன மனிசியையும் நினைத்து http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html
-
- 22 replies
- 3.8k views
-
-
--------------------------------------------------இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது ---------------------- ஒரு தரும் விடை தெரிஞ்சு சொல்லுற மாதிரி இல்லை அதனால் இந்த பதிவை தூக்கி விட்டேன்
-
- 22 replies
- 4k views
-
-
மீன்பிடிப்படகு நீர்கொழும்பில் இருந்து புறப்படுகிறது. உடப்பைச் சேர்ந்த தமிழ்.. முஸ்லீம் இளைஞர்களும்.. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும்.. தென்பகுதியையைச் சேர்ந்த சிங்கள..இளைஞர்களுமாக.. மொத்தம் 30 பேர் வரை அதில் பயணிக்கிறார்கள். எல்லாரும் குடும்பக் கஸ்டம் காரனமாக.. கடனை உடனை வாங்கி கப்பல் ஏறியவர்கள் தாம். எல்லாருக்கும் கனவு இத்தாலியைச் சென்றடைவதும்.. பின் அங்கு செல்வம் சேர்ப்பதும்.. பின் குடும்பம் குழந்தை என்று.. பெருகி அந்த நாட்டில் நிரந்தரக் குடிகளாகி.. வாழ்வதும்.. வெறும் பந்தாவுக்கு ஊருக்கு ஹொலிடே போவதும் தான். ஆரம்பத்தில் படகுப் பயணம் உற்சாகமாக இருந்தாலும்.. போகப் போக.. அச்சம் கலக்க.. படகும் எங்கெங்கோ எல்லாம் திக்கு திசை மாறிப் போய் 40 நாட்கள் முடிவில் இத்தா…
-
- 22 replies
- 3.3k views
-
-
[size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size] [size=4]ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது![/size] [size=4]மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,[/size] [size=4]மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்![/size] [size=4]மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை![/size] [size=4]அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்![/size] [si…
-
- 22 replies
- 3k views
-
-
அந்த பள்ளிகூட பஸ் வழக்கம் போல் எம்மையும் எம்மவர்களையும் ஏற்றி தனது ஏக்கபெருமூச்சை புகையாக தள்ளி பொற்பதி பிள்ளையார் கோவிலடியில் வந்து அடுத்த பட்டாளத்தை சுமக்க தயாரானது. யாரோ ஒரு புதுவரவு வெள்ளை சட்டை, வேம்படி ரை ஆனால் கண் முட்ட மை,கறுப்பு பொட்டு,கை நிறைய வளையல்,காதில் சிமிக்கி, ஆள் அவித்து வைத்த முட்டை கலர். இதென்னடா புதுவரவு என நாம் வாயில் கையை வைக்க எனக்கு அடுத்து இருந்த குரங்கு “வேம்படியில் இப்ப சின்ன மேளமும் படிப்பிக்கினமோ” என கேட்க பஸ் முழுக்க ஒருமுறை சிரித்ததிர்ந்தது. முகத்தில் எதுவித உணர்ச்சியும் காட்டாமல் முதல் நாள் பாடசாலை ராகிங் இல் அனுபவம் போல் அப்படியே அமர்ந்துவிட்டது அந்த பெண். பின்னர் காலை மாலை அதே கோலங்களுடன் தினமும் காண்பதால் எங்களுக்கு அது பழகிப…
-
- 22 replies
- 2.5k views
-
-
மந்திரத் தீவுக்கான படகுப் பயணம் மாதங்கள், வருடங்கள் என்று... நீண்டு கொண்டே போனது. பூசாரிக்கோ தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதில் அவரசம் மேலோங்க.. சீடர்களை அழைத்து.. எப்படியாவது மந்திரத் தீவை இந்த யூலைக்குள் அடைந்தே ஆக வேண்டும். ஏற்கனவே புயலில் சிக்கிய சிதைந்து போயுள்ள எங்கள் படகு இன்னும் நீண்ட காலம் கடலில் பயணிக்க முடியாது போலுள்ளது. ஆகவே படகை குறுக்கு வழியில் என்றாலும் செலுத்தி.. மந்திரத் தீவுக்கு என்னை விரைவாகக் கொண்டு சென்றுவிடுங்கள். அடுத்த முழு நிலவு தினத்தில் நான் மந்திரத் தீவில் இந்தக் குடுவையைத் திறந்தாக வேண்டும். இன்றேல் என்னால் இந்த அதிசயக் குடுவை தர இருக்கும் சக்தியைப் பெற முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால்.. உங்களை எல்லாம் வெட்டி இந்தக்…
-
- 22 replies
- 3.6k views
-
-
தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்.. இந்த கதைக்கு உரியவங்கள் இதை படித்தால்...என்னை மண்ணிக்கவும்...யாரயும் கவலை படுத்த வேணும் என்று எழுத வில்லை... இதை படித்தாவது எனி வரும் நம்ம பெண்கள் திரிந்தட்டும்... நான் எல்லராயும் சொல்ல வில்லை.. பூஜா அவளின் பெயர்...பெயர் எவ்வளவு அழாய் இருக்கு..அவளும் அழகனா பெண்தான்..பூஜா அப்பா உனக்கு மாப்பிளை பார்த்து இருக்குறார் லண்டனில்... போடோ அனுப்பி வக்குறாராம் உன்னை பார்த்து விட்டு முடிவை சொல்ல சொன்னார்.. போடோவும் வந்தது பூஜா எனக்கு புடித்து இருக்கு அம்மா என்றாள் ... இரண்டு வீடும் சம்மதம் சொல்லி கால்யாணம் இந்த தேதி என்று முடிவு பண்ணினார்கள். ரவி போன் பண்ணினான்..பூஜா உனக்கு உண்மையிலே புடித்து இருக்கா? …
-
- 21 replies
- 5.1k views
-
-
தமிழமுதத்தில் முதன் முதலாக என் கதை... கண்விழித்து பார்க்கிறேன். அப்பாச்சி மெதுவா கதைக்கிற சத்தம். கொஞ்ச நாளா இப்படித்தான். கொஞ்சம் தள்ளி நாய் குலைக்கும். அப்பாச்சி எல்லாரையும் சத்தம் போடாம படுக்கச் சொல்லுவா. அம்மா எண்ட வாயை தன் கையால மூடிட்டு சொல்லுவா, “ரதி சத்தம் போடக் கூடாது.” இப்படிச் சொன்னாலே தெரியும் ‘ஆமிக்காரன்’ வாறான் என்று. அம்மா சொன்னதும் பயமா இருக்கும். பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா “கோதாரி பிடிச்சவங்களோட பெடி பெட்டையளை வச்சிட்டு இருக்க முடியுதே?” அந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும். அம்மாவி…
-
- 21 replies
- 7.3k views
-
-
காணாமற்போனவர் ஷோபாசக்தி எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது. இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த வீட்டுக்குள் அப்பா தரையில் விழுந்து இறந்து கிடந்தார். காவற்துறை வந்து பூட்டை உடைக்க வேண்டியிருந்தது. அம்மா …
-
- 21 replies
- 2.5k views
-
-
நம்ம யாழ் கள சாத்திரியின் மாந்தீரிக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை. டுபுக்கு டொட் கொம்முக்காக எழுதப்பட்டு, அவர்கள் அனுமதிக்காததால் எதுவரை நெற்றில் வெளிவந்தது. அகதிக்கொடி - சாத்திரி கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . …
-
- 21 replies
- 4.8k views
-
-
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி
-
- 21 replies
- 2.3k views
-
-
மூன்றாம் வகுப்பாக இருக்கலாம் தென்னை மட்டையில் பட் செய்து நெதர்லாந்தில் இருந்து வந்த உருளைக்கிழங்கு விதை பெட்டியில் ஒரு பகுதியை வெட்டி விக்கெட் ஆக்கி, வீட்டிற்கு முன் இருந்த ஒழுங்கையில் டென்னிஸ் பந்துடன் தொடங்கியது கிரிக்கெட் பைத்தியம் . பாடசாலை முடிய பின்னேரம் ,சனி ஞாயிறு காலை மாலை என விளையாட்டுத்தான் .எனது அண்ணர் ,தம்பி, அடுத்த விட்டுக்கார பகி ,சுதா என்று ஐந்து பேரும் தான் டீம் .மாறி மாறி பந்து எறிவதும் பாட்டிங் செய்வதும் என்று அலுக்காமல் விளையாடுவோம் .தம்பிக்கும் பக்கத்துக்கு விட்டு பகிக்கும் அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் அலுப்பால் அவர்களும் வருவார்கள் .பக்கத்துக்கு வீட்டு சுதா மட்டும் இடக்கை ஆட்டக்காரன். விடுமுறை என்றால் காலை எட்டுமணிக்கே கதவை…
-
- 21 replies
- 2.4k views
-
-
அமைதிக்கு பெயர் தான் சாந்தா ............ அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான இரு குடும்பங்கள் . .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள் .ஆணும் பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் . .குடும்பமும் குழந்தைகளுமாக iவாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர் பதவிஉம் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா வங்கியில் பணியில் சேர்ந்தாள். தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான் .. காலம் உருண்டு ஓடியது .சந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான் .ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண் கேட்டு தியாகர் செல்லமனியிடம் …
-
- 21 replies
- 3.1k views
-
-
அழகான காலைநேரம், கடற்கரை ஓரமாக காலாற நடந்துவந்தேன். என்ன அழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை நீலக்கடல் கரையும் தெரியவில்லை, ஆள்நடமாட்டமும் இல்லை. இன்னும் சிறிதுதூரம் நடந்தேன் கொள்ளைஅழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை பச்சைபசேல்என்று வயல்வெளிகள் அதைத்தொடர்ந்து சிறுபற்றைக்காடுகள். ஒருபுறம் நீலக்கடல் மறுபுறம் பச்சைஎன்று இவ்வழகை ரசித்தவாறு வந்த என்னை சிறுசலசலப்பு இவ்வுலகுக்கு கொண்டு வந்தது. அருகில் சென்று பார்த்தேன். ஒரு வாட்டசாட்டமான ஆளை கட்டிவைத்து சிலர் அடித்தபடி இருந்தனர். பக்கத்தில் செல்ல முற்பட்டேன். ஆனால் சுத்தியிருப்பவர்கள் முகங்களில் பயத்தைக்கண்டேன். அதையும் மீறி முன்னேற முற்பட்டபோது அதிலிருந்தவர் ஏதோ கேட்க முற்பட்டார். அடித்துக்கொண்டிருந்தவர்களிலொரு…
-
- 21 replies
- 2.6k views
-
-
அவளும் அவளும்! - வி.சபேசன் நன்றி : www.webeelam.com நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்.. அம்மா, நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்ப…
-
- 21 replies
- 4.1k views
-
-
அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்…
-
- 21 replies
- 3.9k views
-