கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…
-
- 13 replies
- 1.6k views
-
-
காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது போல் இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன் தாய் நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார். தாயார் வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர். .தாயார் ஆண்பிள்ளை என்று அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்படியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம…
-
- 13 replies
- 1.8k views
-
-
இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித் தெரிந்தே இருக்காது. எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது போன்றது. எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம…
-
- 13 replies
- 8.2k views
-
-
விரக்தியே வாழ்வாய்போன விதுசன் விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியை…
-
- 13 replies
- 2.7k views
-
-
கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள். "அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில…
-
- 13 replies
- 2.7k views
-
-
அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்…
-
- 13 replies
- 1.3k views
-
-
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக் கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும் தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை. இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஒரு காதல் கதை! அவனும் அவளும் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அவன் அவளுக்காக காத்திருப்பான். காத்திருப்பது சுகம் என்று கவிதை சொல்வான். அவள் அவனுடைய கவிதை கேட்பதற்காகவே நேரம் பிந்தி வருவாள். அவனும் அவளும் யாரும் இல்லாத நேரத்தில், யாரும் இல்லாத இடத்தில் சந்தித்துக் கொள்வார்கள். அதிகமாகப் பேசி கொஞ்சமாக தொட்டுக் கொள்வார்கள். அவனும் அவளும் வீதியில் காணுகின்ற பொழுது கண்காளால் மட்டும் பேசிக் கொள்வார்கள். காணாத போது மனதால் பேசிக் கொள்வார்கள். அவனும் அவளும் பேசிக் கொள்வதைப் பற்றி ஊரும் பேசத் தொடங்கியது. அரசல்புரசலாக தொடங்கியது ஒரு நேரத்தில் அதுவே எங்கு பார்த்தாலும் பேச்சு என்று ஆகிப் போனது. வழமை போன்று ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகுதான் அவனுடைய வீட்டிலும் அவள…
-
- 13 replies
- 3.3k views
-
-
வருத்தம் தான் ...இப்ப அதிகம் இங்கு எழுதுவது இல்லை என்றாலும் ..பலர் தமிழில் இணையத்தில் எழுதுவதை அண்ணாந்து பார்த்திருக்கிறேன் ,,பார்த்த என்னை தமிழ் எழுத பழக்கியது இந்த யாழ் தான்.. எங்கோ மூலையில் மூணு பெக் அடித்து விட்டு குப்பனெ கிடந்த என்னை எல்லாம் கூட இணையத்தில் தெரிய உதவியது இந்த யாழ் தான் ... மூட படப்போகுது என்ற சிவப்பு விளக்கை பார்க்க கவலையாக தான் இருக்கிறது ,,நடத்துபவர்களுக்கு என்ன என்ன கஸ்டமோ தெரியாது ..இதை கேட்டவுடன் பார்த்தவுடன் மிகவும் கஸ்டமாகவும் இருக்கிறது. இதில் சண்டை பிடித்து இருப்போம் தமாசாக கதைத்து இருப்போம் இது எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக பதிந்து இருக்கின்றன...நாங்கள் கும்மியடித்த பொற்காலத்தில் இருந்த யாழ் கள நண்பர்களை நினைத்து பார்க்கிறேன் புனை பெய…
-
- 13 replies
- 2k views
-
-
இந்திய மனைவி திவ்யமதி. ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்.... எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'என…
-
- 13 replies
- 3k views
-
-
காட்டாற்றங்கரை அத்தியாயம் 1 கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும் சுடு புழுதி செம் பருந்துகளாய்ச் சுளன்றது. காய்ந்த புதர்கள் கானல் நீரில் அசைந்து முள்ளம் பன்றிகள் போல ஓடின. முதலையின் முதுகுபோலப் பாழாய்க் கிடந்த களர் நிலத்தில் ஒரு மாடு விழுந்து கிடந்தது. அந்த மாட்டின் நோக்கி அலகை நீட்டியபடி காகம் ஒன்று காத்திருந்தது. உலர்ந்து வெடிக்கும் காட்சிகளெல்லாம் ‘ஈழத்தின் திணை பாலை’ என்கிற விவாதத்தையே ஞாபப்படுதியது. பாலை நிலத்துக்கு தனது குடி மக்களைத் தாங்கி வைத்திருக்கப் போதிய…
-
- 13 replies
- 2.7k views
-
-
தேவதை..தேவன்....பிசாசு நிழலாடும் நினைவுகள். சாத்திரி ஒரு பேப்பர் நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன்.பழகியிரு
-
- 13 replies
- 2.6k views
-
-
காலங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் சில நினைவுகளை நினைக்கும் போது சந்தோசம் தருவதாக அமைந்து விடுவதுண்டு.இப்ப இந்த இணையம் வந்த பிறகு காலங்களும் இடங்களும் இன்னும் குறுகி விட்டது.இந்த புலப்பெயர் சூழல் காரணமாக.ஒரு 27 வருடங்களுக்கு மேலாக தொடர்பில்லாத எனது ஓரு வகுப்பு தோழனின் சிறுகதைகளை யாழ் பல்கலைகழக மாணவி தனது இறுதி ஆண்டு ஆராய்ந்து கட்டுரை சமர்பித்திருத்திருக்கிறார் என்ற செய்தியை தற்செயலாக இணையத்தில் மேயும் போது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ..அவர் தான் எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன்.... படிக்கும் காலங்களிலே சிறுகதை எழுதுபவர் என்று தெரியும் ..இவர் நல்ல திரைபட ரசிகன் என்று தெரியும் ..திரைபடத்தில் நடிக்கும் அடிமட்ட திரை துணை அடிமட்ட நடிகர்களின் பெயர் கூட இவருடைய…
-
- 13 replies
- 2.3k views
-
-
கல்யாண(ம்) வை! போவமே? -இ.ஜெயராஜ்- உலகை மகிழ்விக்கும் சொற்களுள் கல்யாணம் என்பதும் ஒன்று. உறவு நிறைவு குதூகலம் கொண்டாட்டம் இப்படி சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெருமை கல்யாணம் என்னும் சொல்லுக்கு உண்டு. ஓர் ஆணையும் பெண்ணையும் முழுமையுறச் செய்யும் இனிய வைபவம் அது! ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது! ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது! சந்ததி விருத்திக்காய் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இயற்கை அமைத்த ஏக்க எழுச்சியை சாந்தி செய்யும் சடங்கு அது! அறவாழ்வுக்காய் அமைக்கும் அடிப்படை அது! ஆணுக்கும் பெண்ணுக்குமாய் அமைக்கப்படும் அசையாத உறவுப்பாலம் அது! அன்பு விர…
-
- 13 replies
- 2.2k views
-
-
முழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற பெரியவருக்கு ஒரே ஆச்சரியம்!! அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்து கொள்வார்கள்? என்று. பொறுமையாக இருந்த பெரியவர் அங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காம பசியை எப்படி தீர்த்துக்கொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர். அடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற பெரியவர் அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார். அதில் ஒரு ஆண் பெரியவரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள் …
-
- 13 replies
- 2.3k views
-
-
அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன். அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். ...... என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும். பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம் சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
கவுண்டிங் இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.... க்ரிஷ், காதர், ஹனி மூவரும் டென்ஷனாக இருந்தார்கள்.... அவர்கள் இருந்தது ஒரு விண்கலம்... விண்வெளி உடையில் இருந்தார்கள்.... க்ரிஷ் அந்தக் கலத்தின் கமாண்டர்.... கலத்தின் பெயர் ராம்-பாபர்.... காதர் ராம்-பாபரைச் செலுத்தப் போகிறவன்... ஹனி கமாண்டரின் வலதுகை.... இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் இவர்கள் தான்.... ராக்கெட் ஒன்று பூமியின் புவியீர்ப்பு எல்லை வரை இவர்கள் கலத்தை இழுத்துச் செல்லும்.... அதன் பின்னர் காதர் தான் கலத்தைச் செலுத்த வேண்டும்... மூன்று பேரின் உயிரும் அவன் கையில் இருக்கிறது.... சுமார் 5 ஆண்டுக்கால அசுரப் பயிற்சி அவன் கண்களில் தெரிந்தது.... க்ரிஷ்-ன் சிறுவயது கனவு நிறைவேறப் போக…
-
- 13 replies
- 2.6k views
-
-
பங்குனி வெய்யில் அக்கினி தாண்டவத்தை ஆடி கொண்டிருந்தது. ஊரே ஊரடங்கு போட்டமாதிரி இருந்தது. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத படி வெப்பம் கண்ணை பஞ்சடைத்த மாதிரி ஆக்கி விட்டிருக்கு . இந்த கொதிக்கும் வெய்யிலின் அகோரத்தையும் பொருட்படுத்தமால் நீண்ட பரந்த பரப்புடைய அந்த தோட்டத்து ஊடாக நடந்து கொண்டிருந்தார் சண்முகம் வாத்தியார். அந்த தோட்டம் அநத ஊரிலிருந்து அடுத்த ஊரையும் ஊடறத்து விரிந்து இருந்தது. வாத்தியார் நடக்கின்றாரோ நாட்டிய மாடி வாறரோ என்ற மாதிரி இருக்குது.கொதிக்கும் நிலத்தில் முழும் பாதம் வைத்து அழுத்த முடியாமால் கெந்தி கெந்தி நடந்து வருவதால்.. முன் கால்விரலுக்குளை கொழுவிற இடத்தில் அவருடைய பாட்டா செருப்பு அறுந்திருந்தது. அதை. சட்டை ஊசியால் செருகி இவ்வளவு காலம…
-
- 13 replies
- 2.6k views
-
-
ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்…
-
- 13 replies
- 2.2k views
-
-
அந்த மைதானத்துக்கு போராளிகள் கரப்பந்தாட்டம் விளையாட வருவது வளமை... அண்றும் வந்திருந்தார்கள்... ஐந்து பேர் கொண்ட அணியாக சிங்கிள் சொட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்... பந்தின் வேகம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாய் அலைகிறது... அவர்கள் சாள்ஸ் அன்ரனி படையணி போராளிகள்.. மாவட்டரீதியாக பாரபட்சம் இல்லாமல் எல்லா மாவட்டத்தவரும் கலந்தே இருக்கிறார்கள்... பந்தின் வேகம் அதிகரித்து கிழே விழும் போதெல்லாம் தோல்வி உற்ற அணி வெளியேறி புது அணி உள்ளே நுளையும்... எனக்கும் கர பந்தாட்டம் எண்டால் உயிர்... என்னையும் ஒரு குழு அணியில் சேர்த்து இருந்தார்கள்.. வெளியேறும் அணிக்காகவும் எமது சந்தர்பத்துக்காகவும் காத்து இருக்கிறேன்... இது நடந்தது தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஏற்கனவே விளையாடி …
-
- 13 replies
- 2.7k views
-
-
29.02.2008 காலை 09.35 இன்று காலை எனக்கு மனம் மிகவும் மனம் பாரமாக இருக்கிறது. உண்மையில் சுஜாதாவின் இழப்பு தொடர்பாகத்தான் அது. ஒரு அறிவாளியின் இழப்பு அது. அவருடனான நேரடி தொடர்பு எனக்கு இருந்தது. பழகுவதற்கு மிக அன்பானவர். ஒரு தேர்ந்த விஞ்ஞானி அவர். அவரின் இழப்பு மிகவும் கவலையாக இருக்கிறது. அனஸ்
-
- 13 replies
- 2.9k views
-
-
நேற்று ஒரு அழகான தோழியை.. கன நாளைக்குப் பின்.. சந்திச்சு மனம் நெகிழ பேசிப் பழகினதில் இருந்து மனசில் ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு நித்திரைக்குப் போனனா.. நடுநிசியில்.. பேச்சுவார்த்தைக்குப் போகச் சொல்லி மக்கள் சார்பில் ஒரு அழைப்பு... யாரோட பேச்சு வார்த்தை.. வேற யாரு.. பிரபாகரன் அரசியலை விட்டு விலகினால் நான் அரசியல் செய்யாமல் விலகிக் கொள்வேன் என்று மார்தட்டித் தட்டியே யாழ்ப்பாணத்தை வன்னியை சிங்களவனோட சேர்ந்து சுடுகாடாக்கிய டக்கிளசு கும்பலோட தானாம். ஏன் அவையோட பேச்சு வார்த்தை.. பிரபாகரனை தானே உலகத்தை விட்டே விலக்கி வைச்சிட்டீங்க.. இருந்தும்.. நீங்க என்ன இன்னும் அரசியலில் இருந்தும் விலகல்ல.. கொலை.. கப்பம்... பஞ்சமா பாதகங்கள்... காட்டிக்கொடுப்புக்கள…
-
- 13 replies
- 1.1k views
-
-
சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…
-
- 13 replies
- 2.8k views
-
-
கபடி கபடி...... இனக்கலவரத்தால் சிங்களவனால் பந்தாடப்பட்டு, பந்து போல் எதுவுமில்லாது ஊருக்கு வந்து பாதை தெரியாது, பயணம் புரியாது கால்கள் போன வழியில் திரிந்த காலம். நண்பர் வட்டம் பாடசாலைகளுக்கு சென்றுவிடும். என்னைப்போல் அகதியல்லவே அவர்கள். தனிமை. வெறுமை. சரி கிடைப்பதை தெரிவு செய்யலாம் என்றால் நண்பனாக கிடைத்தார் ஒரு அண்ணன் முறையானவர். 3 வயது வித்தியாசம். அவர் சொந்தமாக யாழில் தொழில் வைத்திருந்ததுடன், ஊரிலிருந்து யாழுக்கு வாகனசேவையும் செய்து வந்தார். பொழுதுபட என்னைச்சந்திக்க வந்துவிடுவார். ஒரு நீரோடையைக்கடந்து தான் எனது வீட்டுக்கு அவர் வரவேண்டும். வழமையான சந்திப்பு என்பதால் பொழுதுபடமுன் எங்கிருந்தாலும் அந்த இருபகுதியையும் பிரிக்கும்…
-
- 13 replies
- 4k views
-
-
மானிப்பாய் மருதடி பிள்ளையார் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்.மானிப்பாய் சந்தியில் நடுநாயகமாக ,வயலும் வயல் சார்ந்த இடத்தில் வயலை பார்த்தபடி சிவனே என இருந்தார் ,இருக்கின்றார், இருப்பார்.எனது பெற்றோருக்கு அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்க அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறு வயதிலிருந்து சென்று வருகின்றேன். அந்த ஊருக்கு அவர் சைவ மன்னர்களால் அறிமுகமானாரா அல்லது தனிநபரகளின் மூலம் அறிமுகமானாரா என ஞான் அறியேன் பராபரனே. பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்.அது தனிநபர் ஆகட்டும் சமுகமாகட்டும்.யாழ்நகரில் பல கோவில்கள் போரினால் பாதிக்கப்பட்டது.மீண்டும் அவை புனர்நிர்மானம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.இதில் புலம்பெயர்ந்த மக்களின…
-
- 13 replies
- 1.3k views
-