கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
உறவுகளிற்கு வணக்கம் இது என்னுடைய இன்னும் ஓர் சிறியமுயற்சி. ஈழத்தமிழ் கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய விபரங்களை கணணிமுலம் ஆவணப்பதிவாக்குவதே என்னுடைய நோக்கமாகும்.என்னுடைய இந்த நோக்கத்திற்கும் வழைமை போல உறவுகள் அனைவரினதும் ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். ஏற்கனவே பிரான்சில் வாழும் திரு வண்ணை தெய்வம் அவர்கள் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்றொரு ஆவணத்தொகுப்பினை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது அனுமதியுடன் அவரது புத்தகத்தில் இருந்தும் நண்பர்கள் உதவியுடனும் மற்றும் எனக்கு தெரிந்ததையும் உங்கள் ஆதரவுடன் ஆவணமாக்குகின்றேன். நன்றி சாத்திரி. முதலாவதாக நாடகக்கலைஞர் திரு முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முகத்தார…
-
- 9 replies
- 2.7k views
-
-
கடந்த வாரம் 'ஒரு பேப்பரில்" பிரசுரமான சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் இடைப்பட்ட ஓர் வடிவம் மர்ம மயானம். எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'ஏய் மரமே! உனக்குக் கூடவா…
-
- 8 replies
- 2.7k views
-
-
ஆக்காட்டி கோமகன் திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது . 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு எலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப் பரக்க பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்கு பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் …
-
- 2 replies
- 2.7k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_20.html யாழ் குடாநாட்டில் ஒருவன் தடக்கி விழுந்தால் ஒரு பள்ளிகூடத்திலோ ஒரு கோயிலிலோ விழுவான் என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். கோயிலை சுற்றி வாழும் மத பண்பாட்டு கோலங்களினூடாக இவர்களின் வாழ்வின் அசைவும் இருந்தது. இந்த பக்தி மய கோசங்கள் ஜகதீகங்கள்,கர்ண பரம்பரை கதைகள் போன்றவற்றில் எங்கள் வீட்டு பெரிசுகளுக்கு ஈடுபாடு கொஞ்சம் கூட. இவர்கள் செய்யும் மூல சலவை செய்யும் கதைகளினூடாக வளர்ந்தாலும் பின்னர் இதில் நம்பிக்கை அற்றவனாக விட்டேன். இவர்கள் சொன்ன கதைகளில் ஒன்று ஞாபகத்தினூடு ஞாபகமாக
-
- 10 replies
- 2.7k views
-
-
எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல்…
-
- 1 reply
- 2.7k views
-
-
சுதர்சினி (சிறுகதை) – தமிழினி -மறைந்த தமிழினி அவர்கள் 2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ள…
-
- 5 replies
- 2.7k views
-
-
இமயா - சிறுகதை அராத்து, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி லங்காவி தீவு. நள்ளிரவைத் தாண்டி இரவு தனக்கான தனி கேரக்டரை வடிவமைத்துக்கொண்டிருக்கும் நேரம். `அன்கான்ஷியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த பப்பில், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த இருவர், அடி பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் ட்ரம்ஸ் இசைக்கும், `ஒன்மோர் டிரிங்க் ப்ளீஸ்’ என உரசிக்கொண்டிருக்கும் பெண்களின் நச்சரிப்புகளுக்கும் இடையில் பேசிக்கொண்டு இருந்தனர். வீடு, வாசல், பிசினஸ் தாண்டி குழந்தைகள் பற்றி பேச்சு வந்ததும், இன்னும் கவனமாகவும் சத்தமாகவும் பேச ஆரம்பித்தனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். விட்டதைப் பிடிப்போம் என, குழந்தைக்குட்டியான பிறகும் லங்காவி டூர் வந்திருக்கின்றனர். ஒரு தந்தையின் பெய…
-
- 0 replies
- 2.7k views
-
-
அந்த மைதானத்துக்கு போராளிகள் கரப்பந்தாட்டம் விளையாட வருவது வளமை... அண்றும் வந்திருந்தார்கள்... ஐந்து பேர் கொண்ட அணியாக சிங்கிள் சொட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்... பந்தின் வேகம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாய் அலைகிறது... அவர்கள் சாள்ஸ் அன்ரனி படையணி போராளிகள்.. மாவட்டரீதியாக பாரபட்சம் இல்லாமல் எல்லா மாவட்டத்தவரும் கலந்தே இருக்கிறார்கள்... பந்தின் வேகம் அதிகரித்து கிழே விழும் போதெல்லாம் தோல்வி உற்ற அணி வெளியேறி புது அணி உள்ளே நுளையும்... எனக்கும் கர பந்தாட்டம் எண்டால் உயிர்... என்னையும் ஒரு குழு அணியில் சேர்த்து இருந்தார்கள்.. வெளியேறும் அணிக்காகவும் எமது சந்தர்பத்துக்காகவும் காத்து இருக்கிறேன்... இது நடந்தது தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஏற்கனவே விளையாடி …
-
- 13 replies
- 2.7k views
-
-
வெண்டி மாப்பிள்ளை சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில் வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
யானை வீட்டுக்காரி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில் சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் …
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு பேப்பரிற்காக சாத்திரி வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்…
-
- 16 replies
- 2.7k views
-
-
சோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதையினை இப்போது படித்துமுடித்தபோது, ஒரு சிறு குறிப்போடு பதிவிடத் தோன்றியதால் இப்பதிவு. எனது பதிவைப் படிக்கு முன் கதையைப் படியுங்கள்: http://www.shobasakt...basakthi/?p=936 பிரபஞ்சம் எங்கிருந்து எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் 'எவ்வாறு' என்பதற்கான வியாக்கியானங்கள் இருப்பினும், எதிலிருந்து என்பது விடைகாணமுடியாத கேள்வியாகவே இருக்கின்றது. இது தான் பிரபஞ்சம் தோன்றிய மூலப்பொருள் என ஒன்றைக் குறிப்பிட்டால், அந்த மூலப்பொருளின் மூலம் என்ன என்ற கேள்வி உடனே பிறந்துவிடும். அந்த வகையில் எது தொடக்கம் என்பது வரையறுக்கப்படமுடியாதது. ஆனால் தொடங்கி விட்ட உலகில் ஒவ்வொரு கதைகள் தொடங்குவதுபோலவும் முடிவதுபோலவும் தோன்றி வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. என்…
-
- 21 replies
- 2.7k views
-
-
இந்த சின்னக்குட்டி நித்திரை கொள்ளுறாரோ வாட்டர் பம்மாலை தண்ணி இறைக்கிறோரோ என்ற மாதிரி கிடக்கு விடுற சத்தம்..இவற்றை குறட்டை சத்தம் மெதுவாக கேட்க தொடங்கி தீடிரென்று சுருதி கூடி பிறகு அந்த சத்தங்களே ஒன்றுக்கொண்டு அவைக்குளை சண்டை படுறமாதிரி ஒலி எழுப்பும் .சில வேளை ஏழு ஸ்வரங்களை வைச்சு வித்தியாசமான மெட்டு அமைத்து விடுற மாதிரி இருந்தாலும் அநேகமாக கேட்கிற ஆக்களுக்கு அரியண்டமாய் தான் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post_16.html
-
- 11 replies
- 2.7k views
-
-
வேதாளத்திற்கு சொன்ன கதை - யோ.கர்ணன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம், மீண்டும் அந்த விசாரணைக் குறிப்பைப் புரட்டியபடியிருந்தது. அந்த அறிக்கையிலிருக்கும் ஏதாவது ஒரு சொல் அல்லது வசனம் தனக்குரிய துப்பைத் தருமென்றோ அல்லது அவனது பொய்யை அம்பலப்படுத்துமென்றோ அது நினைத்திருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் என்ற அவனது பெயரை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என தனக்குத் தெரிந்த மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசித்து உறுதி செய்துகொண்டது. விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எந்தக் குழப்பமும் இல்லை. போதாததற்கு அவனது வாயாலும் பெயரை உச்சரிக்க வைத்தது. பிறகு பிறந்த ஆண்டு, மாதம், திகதி, விலாசம் எதிலும் பிசகில்லை. தனது வலது கையில் தூக்கி வந்த அந்த பெரிய விசாரணை அறிக்கைக்குள்ளிருந்…
-
- 15 replies
- 2.7k views
-
-
காயா ஷோபாசக்தி ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது. முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்…
-
- 17 replies
- 2.7k views
-
-
புதிய தலைமுறை..... நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று …
-
- 14 replies
- 2.7k views
-
-
மனிதன் பிறந்தவுடன் தொடங்கிய என்ட என்னுடைய என்ற சொல் அவன் இறக்கும் வரை தொடரும் என்பது யாவரும் அறிந்தது.சுரேஸுக்கும் அது விதிவிலக்கல்ல. அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசா…
-
- 20 replies
- 2.7k views
-
-
வெண்புறா எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள். தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று. அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி. அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம். கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வ…
-
- 6 replies
- 2.7k views
-
-
1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கின்றன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 95 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார் . நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எலாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பளகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் . அப்பர் அடிச்ச காயம் எனக்க…
-
- 29 replies
- 2.7k views
-
-
அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர…
-
- 15 replies
- 2.7k views
-
-
ஈழத்தோடான என் அனுபவங்களில் பல வலிகளையும், அதிர்ச்சிகளையும் கொண்டது. இவ்வலிகள் தினமும் இரவில் வந்து அழ வைப்பதுண்டு. சில வலிகள் தினசரி வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சில வலிகளோ உணர்வுகளோடு அதிகமாகவே விளையாடும். இத்தனை வலிகளுக்கிடையில் கிடைத்த சில மகிழ்ச்சியான அனுபவங்கள் நினைத்து நினைத்து பார்க்க இனிமையானவை. இந்த சில இனிப்பான அனுபவங்களுக்கு, பல துன்பமான அனுபவங்களை மறக்கவைக்கும் சக்தி அதிகமாகவே உண்டு. என்ன தான் ஒஸ்திரேலியாவில் வசதியும், பாதுகாப்பும் இருந்த போதும், ஈழமே எனக்கு பெரிதாக தோன்றும். ஈழத்தில் எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும் இங்கு கிடைக்கவில்லை என்பதே முதன்மை காரணம். இங்கு காலை தொடக்கம் மாலை வரை தனியே இருக்க வேண்டும். ஆனால் ஊருக்கு செ…
-
- 15 replies
- 2.7k views
-
-
கட்சிக்காரன் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய் தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்துக் கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறீங்க?” என்று கேட்டாள். “துண்டு.” “வேட்டி சட்டதான் போட்ட…
-
- 0 replies
- 2.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள்? என்னடா இவனைக் கன காலமா இந்தப் பக்கம் காணேல்லையே! ஊரப் பக்கம் சோக்காட்டப் போய் கோத்தபாயா கூட்டத்திட்டை மாட்டுப் பாட்டுக் கீட்டுப் பட்டுப் போனானோ எண்டு நினைச்சிருப்பியள்.... அப்படி எல்லாம் இல்லைப் பாருங்கோ! நாப்பது வயதைத் தாண்டினால் நாய்ப்பிழைப்பெண்டு சொல்லுறவை. அது உண்மை தான் போலை கிடக்கு... அங்கையும் இங்கையும் ஓடுப்பட்டுத் திரியிறதிலை இதிலை குந்தியிருந்து உங்களோடை புலம்பிறதுக்கு நேரமில்லாமல் கிடக்குது... சரி சரி உந்தப் பழைய பஞ்சாங்கங்களை விட்டுப் போட்டு நேரை விசயத்துக்கு வாறன்... இப்ப இந்த சமர் ஹொலிடேயோடை எங்கடை ஆக்கள் சில பேர் வெளிக்கிட்டு ஊர்ப்பக்கம் போகினம்...அப்படிப் போயபாட்டு வாற ஆக்களோட…
-
- 29 replies
- 2.6k views
-
-
பாலாண்ணா, இது உங்களுக்காக மட்டும்.. இன்று தற்செயலாய் தூர தேசத்திலிருக்கும் என் அண்ணன் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் என சாதாரணமாய் சொல்லிவிட என்னால் முடியவில்லை. சிறுவயதிலிருந்து நான் அண்ணன்கள் செல்லம். குடும்பத்தில் பல ஆண்களுக்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பெண்ணாயிற்றே. ஆயினும் எனக்கு என் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களை விட, ஈழத்தில் எங்கள் வீட்டின் முன்னால் இருந்த சகோதரர்களை தான் அதிகம் பிடிக்கும். நாட்டை காக்க வாழ்பவர்களை பிடிப்பதற்கு காரணம் தான் தேவையில்லையே. அப்படி சிறுவயதில் இருந்து அண்ணனானவர்களில் முக்கியமாக மதியண்ணா, முகிலண்ணா, நிலவண்ணா, பாலாண்ணாவை சொல்லலாம். இதில் நால்வரையும் மாவீரராக பார்த்தவள் நான். இன்று அவர்களின் படங்க…
-
- 11 replies
- 2.6k views
-
-
அவன் தான் மனிதன் ............ நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே .ஒரு ஒதுக்கு புறமான ,சிறு கிராமம் .காலத்தின் கோலம் , அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள் , ஒரு விறகு வெட்டியும் குடும்பத்தினரும் , வாழ்ந்தார்கள் .கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போகிடமும் இல்லை ,அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை , கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை .அவன் எங்கும் போகவில்லை . காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல…
-
- 11 replies
- 2.6k views
-