கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
எம்பாவாய் September 5, 2020 அகரமுதல்வன் இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறா…
-
- 1 reply
- 841 views
-
-
எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறுஇடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்றசம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ளபோதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன. அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில்ஏதோவொன்று இருக்…
-
- 0 replies
- 567 views
-
-
'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்..... அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், ’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்? உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!! மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான். காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் …
-
- 1 reply
- 1.3k views
-
-
‘என்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்கு, வேலையால் வந்த களை! அத்துடன், சமையலை கெதியாய் முடித்தால்தான், மகளின் படிப்பைக் கவனிக்கலாம். அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும், இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது. ‘சுளகு இருந்தால் தாருங…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன். முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்” என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற …
-
- 8 replies
- 1.4k views
-
-
எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல்…
-
- 1 reply
- 2.7k views
-
-
எலியம் - உமா வரதராஜன் கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லாம் எனக்கே! ""செல்வி, இங்கே வாம்மா.'' செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது. ""செல்வி'' மீண்டும்…
-
- 0 replies
- 738 views
-
-
எல்லாம் ஒரு நாள் முடியும்! மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க …
-
- 0 replies
- 1k views
-
-
எல்லாம் நன்மைக்கே! லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார். அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார். ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அன…
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! இந்திரா பார்த்தசாரதி வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்த…
-
- 0 replies
- 942 views
-
-
எழிலரசன் என்கிற சகுனி -சித்தாந்தன்- அந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். சகுனியோ என்னைவிட இரண்டு மடங்கு பெரியவன் போலிருந்தான். நான் அவனுடன் திரிவதை அவ்வப்போது எனக்கொரு பாதுகாப்பெனக் கருதிக் கொண்டேன். ஒரு நாள் இடைவேளையின் போது சகுனி என்னை வெளியே கூட்டிப் போனான். நான் இண்டைக்கு ஒரு விளையாட்டை…
-
- 1 reply
- 2.1k views
-
-
வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …
-
- 5 replies
- 1.8k views
-
-
எழுச்சி - ஷோபாசக்தி சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன். நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர். துலாபாரம் சினிமா கண்ணீர். தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர். கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை வாசகரின் கண்ணீரை வரவழைப்பதுதான் நோக்கம் என்பது போல் சொல்வது இலக்கியமாகாது. உள்ளார்ந்த சோகம் ஓ என்ற அலறலுடன் இருக்காது. காசுக்காக ஒப்பாரி வைப்பது உள்ளார்ந்த சோகமாகாது. உள்ளார்ந்த சோக…
-
- 1 reply
- 913 views
-
-
ஈழத்து பிரபல சிறுகதை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் சிறுகதைகள்..எல்லாவற்றையும் இந்த ipaper மு்றையில் தொகுக்க பட்டிருக்கிறது ..விரும்பியளவில் பெருப்பித்தும் விரும்பிய பக்கங்களையும் பார்க்க கூடியதாயுள்ளது http://sinnakuddy.blogspot.com/2009/01/ipaper.html
-
- 0 replies
- 861 views
-
-
எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்…… “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும். “எங்க …
-
- 4 replies
- 5.9k views
- 1 follower
-
-
எழும்படி பெண்பாவாய் ஒரு பேப்பரிற்காக மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை ப…
-
- 16 replies
- 3.4k views
-
-
எவளுக்கும் தாயாக..... எஸ். அகஸ்தியர் - சிறுகதை அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-] நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே…
-
- 0 replies
- 903 views
-
-
எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா? வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தி…
-
- 0 replies
- 941 views
-
-
[size=3]ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.[/size] எஸ்தர் - வண்ண நிலவன் [size=3] [size=5]முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இட…
-
- 1 reply
- 733 views
-
-
ஏ.டி.எம் இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன் மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான். ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின் கண்ணில…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட் உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏகலைவன் யார் தெரியுமல்லவா? மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோண…
-
- 0 replies
- 4.4k views
- 1 follower
-
-
ஏகாந்தம் என்பதும் உனது பெயர் இளங்கோ வழமை போல வேலைக்குப் போவதற்காய் நிமலன் ஆறு மணிக்கு எழும்பியிருந்தான். இரவு திரைச்சீலையை மூடாததால் சூரிய ஒளி அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இன்றைக்கும் வேலைக்குப் போக வேண்டுமா என நினைக்க இன்னும் சோம்பல் கூடியது. சட்டென்று இன்று வேலைக்குப் போகாவிட்டால் என்ன எனவும் தோன்றியது. நல்ல விடயங்களை பிற்போடக்கூடாது என்று யாரோ சொன்னது நிமலனுக்குள் ஒலிக்க, உடனேயே மானேஜரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வேலைக்கு வரமுடியாதிருக்கின்றது எனத் தன் குரலைப் பதிவு செய்தான். சோம்பலாய் விடிந்த பொழுது இப்போது நிமலனுக்கு உற்சாகமாய் மாறியிருந்தது. கட்டிலிலிருந்தபடி இன்று என்ன என்ன செய்யலாமென பட்டியலிட முயற்சித்தான்…
-
- 0 replies
- 1.5k views
-