கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
-
- 13 replies
- 2.1k views
-
-
தேர் முட்டுக்கட்டை சந்தோஷ் பருத்தித்துறை சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பிடத்தில் தன் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு நிமிரவும் அவன் யாழ் செல்லவேண்டிய 750 பஸ் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது. "ம்...." பெருமூச்சொன்றை விட்டன். இன்று பஸ் வேறு குறைவு குஞ்சர்கடை சந்தியில் எதோ பிரச்னை என்று 750 மினி பஸ் ஏதும் ஓடவில்லை. இந்த பஸ் விட்டால் அடுத்து 8 .30 தான் வரும். அதில் சென்றால் வேலைக்கு பிந்திவிடும். சிந்தனையை அலைய விட்ட படி மெதுவாக பஸ் தரிப்பிடத்திற்கு வந்தான் சந்தோஷ். வந்தவன் வந்து நிற்கவும் ஓர் 751 மினி பஸ் ஒன்று ‘ஹாங்........’ பலமாக ஹோன் அடித்து தரிப்பிடத்திற்கு வந்து நின்றது. 751என்றால் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, வல்லை,அச்சுவேலி எல்லாம் சு…
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ் இணைய நண்பர்களையும் உங்க்ளுக்கு பிடித்த ஆறு ப்ற்றி கூறி.. இந்த விளையாட்டை இங்கையும் தொடரும் படி இந்த சின்னக்குட்டி அன்புடன் கேட்டு கொள்ளுகி்றான் http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-post.html
-
- 16 replies
- 2.1k views
-
-
இந்தவார ஒரு பேப்பரில் வெளியான சுதந்திராவின் ஞாபகப்பதிவுகளில் வெளியான கதை இது. எங்கள் ஊர் அழகியின் மரணம்...மறைபட்ட மரணமாய்....... ! மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் ப…
-
- 6 replies
- 2.1k views
-
-
தன் நகரம் தன் நகரம் இரா.முருகன் ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே …
-
- 0 replies
- 2.1k views
-
-
அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம் - சிறுகதை கணேசகுமாரன், ஓவியங்கள்: ஹாசிப்கான் என் தந்தை மேல் பிரியமானவருக்கு... என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது... இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். 'கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு வாழ்ந்திருவான். அவ…
-
- 1 reply
- 2.1k views
- 1 follower
-
-
காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்...’’ மூச்சுவிடாமல் பேசினாள். ‘‘ரொம்ப நன்றி!’’ ‘‘உங்களை ஒரு முறை... ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒரு நிமிடக் கதை - படிப்பு “இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது. “எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால். “நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரி…
-
- 0 replies
- 2.1k views
-
-
சுசீலாவுக்கு இன்று கொஞ்சம் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஒரு வருடமாக கொழும்பில் இந்தா அனுப்புறன் அந்தா அனுப்பிறன் என்று சொன்ன வெளிநாட்டு முகவர் இன்றுதான் இரண்டு நாளில் யேர்மனிக்கு அவளையும் மகளையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளான். கணவனுக்கு இன்று தொலைபேசியில் விடயத்தைச் சொன்ன போது அவனுக்கும் நின்மதியாகத்தன் இருந்தது. இரண்டு மூன்று முறை முகவர்களுக்குக் காசு கட்டி ஏமாந்து இப்பதான் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்துள்ளான். அரைவாசிக் காசு முதல் குடுத்தால் சரி. மிச்சம் மனைவி வந்து சேர்ந்தபிறகுதான். அதுகும் மனைவியின் தாயாரை கொழும்பில் பொறுப்புக்கு விட்டுவிட்டுத்தான் வரவேணும். ஒரு வருடமாக மனிசி கொழும்பில வீடெடுத்துத் தங்கிஇருக்கிற செலவு இனி இல்லை என்று காந்தனுக்கும் சற்று ஆறு…
-
- 30 replies
- 2.1k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (1) 'அந்தமானில் எருமையா... என்ன ரீல் சுத்துறீங்க...' என்று அந்தமான் சுற்றுலாச் சென்று வந்தோர் நினைக்கலாம்; அந்த கதைக்கு வருவதற்கு முன், பயணத்தின் முன்கதைக்கு வருவோம்... ஒரு மனிதனுக்கு, குரு, மனைவி, மக்கள் மற்றும் மனை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறது, இந்து சாஸ்திரம். அவ்வகையில், நாம் பணிபுரியும் இடத்தையும் குறிப்பிடலாம். காரணம், சுயநலமான இந்த உலகில், எத்தனை நிறுவனங்களில், எவ்வளவு முதலாளிகள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தல இன்பங்களை, தங்கள் ஊழியர்களும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று கருதுகின்றனர்! ஆனால், எங்கள் பாஸ், தான் அனுபவித்து மகிழ…
-
- 3 replies
- 2.1k views
-
-
நானும் என் ஈழமும் - 4 தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே. "சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார். அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார். என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது! --------------------------------------------------------…
-
- 10 replies
- 2.1k views
-
-
நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ........... புலம் பெயர் மண்ணில் , ஒரு மாசி மாத நாளிலே . மதியும் கணவனும் இரு பிள்ளைகளும் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக ,ஒரு சிறு உணவுப்பொருளை அருகிலிருந்த கடையில் வாங்கி கொண்டு , பயணத்தை தொடர்ந்தார்கள் . இவர்கள்வயது ஒத்ததா இரு சிறுவர்களும் அவ்வீடில் இருந்தார்கள். கனடாவின் ,பனிப்புயல் ,வீசியடித்து ஓரளவு ஓய்ந்து இருந்த காலம்,இன்னும் சில இடங்களில் இறுகிய கல்லாகவும் சில இடங்களில் வீட்டு தாழ்வார குழாய் மூலம் உருகி சொட்டு சொட்டாக ... வடிந்து கொண்டு இருந்தது .இவர்கள் அவ்வீட்டை அண்மித்ததும் ,சிறுவர்கள் இருவரும் இறங்கி ஓடி விட்டனர், மதியும் கணவனும் காரை விட்டு இறங்கி , ஒரு அடி எடுத்து வைத்தவள் , கதவு இ…
-
- 10 replies
- 2.1k views
-
-
டெரரிஸ்ட் - சிறுகதை ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி 20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடை…
-
- 1 reply
- 2.1k views
-
-
உஞ்சுக் உஞ்சு இது வேறை ஒண்டுமி;ல்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தாஎங்கையோ இருந்து பிடித்து வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன். எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவ…
-
- 10 replies
- 2.1k views
-
-
அமைதி காக்கும் படை என இலங்கையின் வடகீழ் மாகாணத்துக்கு வந்திருந்த இந்திய இராணுவத்தினர், மேற்கொண்ட அமைதிக்கு மாறான நடவடிக்கையின் ஓரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த முரசொலி நாளிதழ்களின் அச்சியந்திரங்களை, இரவு நேரத்தில் குண்டு வெடிக்கவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலை, வழமைபோல் கடமைக்கு அலுவலகம் சென்று, நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றது, உடைந்து கருகிக்கிடந்த இயந்திர பாகங்களைப பார்த்து பிறகு இருண்ட மனதுடன் வீடு திரும்பினேன். இனி வேலை இல்லை. வருவாய் இல்லை. எங்கே வேலை கேட்டது, யாரைக் கேட்பது? இன்னும் என்ன செய்வான்களே!;.......... கேள்விகளுடன் பேருந்து நிலையம் நாடி நடந்தேன். அடுத்த சில நாளில் இந்த இராணுவத்தின் பிரிவு ஒன்று தென்மராச்சிக்கு வந்து நில…
-
- 6 replies
- 2.1k views
-
-
என்ன அங்கிள் ஜிம்மியோட வாக்கிங் போறீங்கள் போல.... ஓமடா தம்பி. இந்தப் பார்க்கை யும் ஜிம்மியையும் விட்டா எனக்கு என்ன கதி.. சொல்லு பார்ப்பம். ஏன் அங்கிள் அப்படிச் சொல்லுறீங்க. ஊரில நீங்கள் டொக்டரா இருந்தனீங்கள் தானே. அந்த அனுபவத்தை வைச்சு.. இங்க சரிற்றி வேலை செய்தால் சனத்துக்கு நாலு நல்லது செய்ததாகவும் இருக்கும் உங்களுக்கும் ஓய்வு காலத்தில் நாலு பேரோட பழகின நட்பும் மனத் திருப்தியும் கிடைக்குமே..! நீ சொல்லுறது சரி தான் தம்பி. இப்ப பார் நான் லண்டன் வந்து 6 வருசம் ஆகிட்டுது. ஊரில உள்ள பென்சனைக் கூட எடுக்கப் போக முடியல்ல. மகனட்ட வந்ததோட அவன் கூடவே இருக்கிறன். அவனுக்கும் ஊருக்குப் போற நினைப்பில்ல. அட பென்சன் வருகுது வா ஒருக்கா போய் எடுத்துக் கொண்டு வரும் எண்டால்.…
-
- 11 replies
- 2.1k views
-
-
அம்மாளாச்சி.. என்ர மகளுக்கு கெதியா விசா கிடைக்கச் செய்..! அவளுக்கு இப்ப கலியாணப் பலனாம்.. நல்ல மாப்பிள்ளை கிடைக்கச் செய் தாயே. அப்படி செய்திட்டி எண்டா.. உனக்கு வடை மாலையும் சாத்தி, அடுத்த முறை அவள் டென்மார்க்கில இருந்து காசனுப்பினா தங்கத்தில ஒரு பொட்டும் செய்து தாறன். என்ர அம்மாளாச்சியெல்லே..! ஒரு முறை விழுந்து கும்பிடுற தெய்வத்தை.. வாசலுக்கு வாசல் விழுந்து கும்பிட்டுக் கொண்டு.. மீனாட்சியம்மா.. தன்ர குடும்பக் கடவுளான அம்மாளாச்சியிடம் வைச்ச வேண்டுதலை கோவிலில் இருந்து வீதி வரைக்கும் உச்சரிச்சுக் கொண்டே.. வீட்டை நோக்கி நடக்கலானா..! வீட்ட போனவா.. கேற்றடியில கிடந்த லெற்றரை எடுத்து.. விலாசத்தைப் பார்த்தா. மகள் டென்மார்க்கில இருந்து எழுதி இருந்ததால.. பெரிய எதிர்ப்பார்ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
எழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை அதிஷா, ஓவியங்கள் ஸ்யாம் இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது. என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின…
-
- 0 replies
- 2.1k views
-
-
பீஃப் பிரியாணி சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன் ஆனான். “என்னய்யா இது... நல்லா வாயில வருது. எதுனாச்சும் ஒண்ணுத்துலயா…
-
- 1 reply
- 2.1k views
-
-
அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..!! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு …
-
- 15 replies
- 2.1k views
-
-
ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன். சிறப்புச் சிறுகதைகள் (10) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கனக.செந்திநாதன் எழுதிய ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை. இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்…
-
- 1 reply
- 2.1k views
-
-
படித்ததில் பிடித்தது....வலைப்பூவில் எழுதும் கேமாவின் ஒரு நினைவுப்பதிவு இது. கோடரிக் காம்புகள். போர் நடந்துகொண்டிருந்த காலத்தின் நடுப்பகுதி.தமிழனின் இரத்தமும் சதையும் காட்டிலும் ரோட்டிலும் காய்ந்து அடையாளம் சொல்லி ,விழி நனைத்து வழி நடத்திக்கொண்டிந்த காலம் அது. அடர்காடு.மரங்களின் கிளைகளைக் காற்றுத் தடவும் சத்தமின்றி வேறு எதுமற்ற பேரமைதி. சொல்லப்போனால் செத்த தெரு அது.பூச்சி புழுக்களுக்கும் போரின் அழுத்தமும் அவஸ்தையும் இருக்குமோ.காக்கை குருவிகள் கூட புலம் பெயர்ந்திருக்கலாம். அங்கு அமைதி கிழித்து ,ஆனாலும் அமைதியாகவே சத்தமில்லாமல் பரபரப்பாக எதையோ செய்துகொண்டிருந்தார்கள் குமரனும் ஈழவனும்.ஈழவன் தெருவுக்கும் பற்றைக்குமாய் பறந்து பறந்து மிதிவெடி வைக்கும் வேல…
-
- 10 replies
- 2.1k views
-
-
தளை "காதே காந்தா- தனகத சிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா! த்ரிஜகதி ஸஜ்ஜன-ஸங்கதி-ரேகா பவதி பவார்ணவ- தரணே நெüகா' அந்த விடியற்காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகம் ராகத்துடன் ஒலித்து, கோமளவல்லியை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. ஒலி சன்னமாக இருந்தாலும் கோமளவல்லியின் செவிகள் வழியாக பயணித்து, நாளங்களை உசுப்பி, அவளை முழு விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது. ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் கோமளவல்லியின் கணவர் வேதமூர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரும் தூக்கத்தினின்று விழித்து கேட்கிறாரா என்பதை அ…
-
- 7 replies
- 2.1k views
-
-
மேன்மலும் பிடிக்காதவை.......கோவில்கள்.....கள்வர்....ராணுவம் . யாழ்ப்பாணத்தில் பல கோவில்கள் தமது தனித்தன்மையை இழந்துவிட்டது என்பது என் அப்பிப்பிராயம்....நல்லூர் கோவிலில்... கோவிலுக்கும் கேணிக்கும் இடையில் இருந்தபாதை இப்போ இல்லை, கேணியை கோவிலுடன் சேர்த்துக்கட்டியுள்ளார்கள், இதனால் உட்பிரகாரம் நீண்டு பிரமாண்டமாக இருக்கிறது....என்ன நோக்கம் என தெரியவில்லை....கீழே Terrazzo போட்டும், மேலே அழகான Chandelier lights போட்டு பயங்கர சோடனைகள் செய்திருக்கிறார்கள், வெளியே சுற்றுவட்டமாக கூப்பிடு தூரத்தில் Gate போட்டிருக்கிறார்கள்......மேலும் கோபுரங்களிற்கு சந்தனகலரில் வண்ணமடித்திருக்கிரார்கள்.... முன்பு திருவிழாவின்போது கால் புதைய நடந்த இடமெங்கே....கோபுரங்களில் பச்ச…
-
- 1 reply
- 2.1k views
-