கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சின்ன வயதில் இருந்தே பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை முடித்து கல்லூரி சென்று பின் பல்கலை கழகம் வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு வாய்த்த மணமகள் சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை . காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வா…
-
- 27 replies
- 3.1k views
-
-
விலை மதிக்க முடியாத நினைவுப் பரிசு வேண்டுமா? இன்னும் சிறிது நேரத்தில் மணிவாசகன் (அட நான் தான்) இப்பகுதியில் ஒரு சிறுகதையைப் பிரசுரிக்க இருக்கிறார். அது சற்றுச் சர்ச்சைக்குரிய கருத்தான். இதன் முடிவு சரியானதா தவறானதா என்று எனக்குமே சரியான தெளிவில்லை. எனவே இந்தக் கதை தொடர்பான உங்களுடைய கருத்துக்கள் , விமர்சனங்கள் என்பவற்றைக் கட்டாயமாய் எதிர்பாhக்கிறேன். மிகச் சிறந்த விமர்சனத்திற்கு வெகுவிரைவில் அறுபட இருக்கும் ஆதிவாசியின் வால் நினைவுப்பரிசாக அளிக்கப்படும். பேனையும் கையுமாக சீச்சீ விசைப்பலகையும் விரலுமாகத் தயாராயிருங்கள். அன்புடன் மணிவாசகன்.
-
- 28 replies
- 6k views
-
-
வணக்கம் யாழ்உறவுகளிற்கு நீண்ட நாளின் பின்னர் மீண்டும் ஓர் தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதுவும் வழைமை போல உண்மை சம்பவமே நான் 2003 ம் ஆண்டு தமிழ் நாட்டில் சந்தித்த ஒரு ஈழ தமிழ் தாயின் கதை அதை எனதுநடையி்ல் எழுததொடங்குகிறேன் கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்ததில் தொடரும்.....என்றே வைத்தேன் காரணம் கதையின் இறுதியில் புரிந்து கொள்வீர்கள் நன்றி பாகம் 1 தொடரும்....... 2003ம் ஆண்டு நான் இந்தியா போயிருந்தேன் இங்கு பிரான்சில் வேலை பழு நேரமின்மையென்று ஏதோ பசிக்காக இரண்டு தடைவை சில நேரம் இரவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ள நான் இந்தியா போகும் போதெல்லாம் அங்கு காலை மதியம் இரவு என்று வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிடுவது வழைமை. அப்பே…
-
- 34 replies
- 5.3k views
-
-
தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
யேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தினால் இ.த. இராஜனின் (யாழ்கள மணிதாசனின்) நெறியாள்கையில் பொங்கல் விழா (தை 2007) அன்று மேடையேற்றப்பட்ட நாடகம். இது ஒரு சற் கதையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. இங்கே இணைத்து உங்களது கருத்துக்களை இதுபறற்றி அறிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.ன். http://tamilamutham.net/amutham/index.php?...3&Itemid=30
-
- 4 replies
- 1.7k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12) உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சியங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்…
-
- 6 replies
- 2k views
-
-
அரிசி சோமசந்தரம் மாஸ்ரரின்ர இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்றால் கறுப்போ வெள்ளையோ துணியால முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஒராளைப் போட்டுத்தள்ள வேணும். இல்லையென்றால் இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்றால் கள்ளனுக்கு மரியாதையில்லை. இவன் கள்ளன் இல்லையென்றும் இல்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செலவுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட்டைக் கழற்றிப் போட்டிட்டு ஈசிச் சேரில படுத்து வயித்தைத் தடவிக் குடுத்துக் கொண்டிருப்பார். இவன் பொக்கற்றுக்குள்ளயிருந்து இருபதோ முப்பது ரூபா எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். இன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மா…
-
- 0 replies
- 668 views
-
-
அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post.html
-
- 7 replies
- 2.4k views
-
-
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!" தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!" கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்" ஒரு ஜன்னல் கண்ணாடியில் …
-
- 43 replies
- 3.5k views
-
-
மனதுக்குள் எதோ ஒரு வலி தூக்கம் கலைந்து விளித்து எழுந்தேன்.அட நெஞ்சில் விழுந்த இரு துளி கண்ணீர்.ஏன்கேள்வி பிறக்கும் போதுதானே வேள்வி நடக்கும். றிஷானா கொடும் தவறு செய்த பெண்ணே உனக்கு மரணதண்டனை.மிகவும் சரியான தண்டனை.பலவருடங்களாய் உன்னைப்பற்றிய வாதங்கள் விவாதங்கள் அனைத்துக்கும் முடிவு .செத்து ஒளிந்தாய்.நீ ஒரு இஸ்லாமிய பெண் உனக்கான தண்டனை சரி.ஆனால் ஏனோ தெரியவில்லை .இன்னும் என் கண்கள் உகுத்த துளிகள் உயிரில் சுடுகிறது.உன் முதல் தவறு ஏழை பெற்றோருக்கு மகளானது.அதுவும் முதல் மகளானது.உன் வயதுக்கு இறக்கை முளைத்து சிறகடித்து பறக்கும் வயதில் பணம் கொத்திவர பாலைவனம் பறந்தாய் அது உன் மறுதப்பு. சிலவேளைகளில் நினைத்திருப்பாய் ஒழுகும் உன் குடிசைக்கு ஒழுங்கான கூரையிடுவெனென.அதுவும் உன் தப்பு.பல …
-
- 4 replies
- 965 views
-
-
மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு! வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும். பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள். 'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந…
-
- 0 replies
- 2.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் 18 வயது ‘‘பிறந்த நாள் அதுவுமா ஏன்டா சோகமா இருக்க?” என்ற நண்பனிடம், ‘‘எனக்கு 18 வயசு ஆகிருச்சுடா... இனிமே போலீஸ், கோர்ட் எல்லாம் பார்த்து, ரொம்ப பத்திரமா இருக்கணும்டா” என்றான் முருகன்! - உதயகுமார் ஆசுவாசம் தேர்வு முடிந்ததும் துள்ளிக்குதித்து விளையாடியது, பாடம் சொல்லிக்கொடுத்த அம்மாவின் மனம்! - கி.ரவிக்குமார் இது சத்தியம் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் பகவத் கீதையைக் காட்டி, `‘இதன் மீது ஆணையாக...’’ என சத்தியம் செய்யச் சொன்னார்கள். ‘`நான் இதைப் படித்ததே இல்லையே, பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் கூண்டில் நிற்பவர்! - எம்.ஆர். மூர்த்தி விளம்பரம் …
-
- 0 replies
- 954 views
-
-
அம்மணப் பூங்கா - ஷோபாசக்தி தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் புதிது. பிரான்ஸின் எல்லை நாடான இந்த நாட்டுக்கு நான் பல தடவைகள் வந்திருக்கிறேன் என்றாலும், இன்று அதிகாலையில்தான்; முதற்தடவைய…
-
- 15 replies
- 2.1k views
-
-
ஏவல் - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம் ‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கு…
-
- 0 replies
- 1.8k views
-
-
வான்கோழி நடனம் - ரஸவாதி அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்” நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார். அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை மரணம்’ – அடல்ற் டெத் என்று வாக்குமூலம் சொன்னார்கள். அவருக்கு ஏகப்பட்ட வருத்தங்களும் மனவருத்தங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவரது மனைவி தனது கணவனின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்று இலங்கையில் இருந்தபடி தெரிவித்தார…
-
- 2 replies
- 801 views
-
-
இடைவெளி.......................... நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்குது வாழ்க்கை. 25 வயதில் திருமணம். 2 வருடங்கள் சந்தோசமான திருமணவாழ்க்கை. அதைத்தொடர்ந்து 2 பிள்ளைகள் ஒருவருட இடைவெளியில். பின்னர் 4 வருடத்தால் இன்னொரு ஆண் பிள்ளை. இப்படியே நன்றாகத்தான் போகுது வாழ்க்கை. மூத்த பெண் பிள்ளை கேட்டாள் அவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள் நான் தனியே ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு துணையாக ஒரு தங்கச்சி வேண்டும். ஒருவாறு பெத்தாச்சு. அதுவும் பெண்ணாக. சரி பிரச்சினை முடிந்தது. அந்த பிள்ளைக்கு 3 வருடமாகும் வரை நிம்மதியாக இருந்தது. அதன் பின் தான் சிக்கல் வரத்தொடங்கியது. தங்கச்சி தங்கச்சி என தோழிலும் மார்பிலும் போட்டு தாலா…
-
- 49 replies
- 4.4k views
-
-
விற்பனைக்கு அல்ல... டவுன் பஸ் அந்த நகைக்கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள் பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை. அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி …
-
- 1 reply
- 1.1k views
-
-
சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை ஆனந்த விகடன் 9.10.1988 இங்கிலாந்து. 1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 799 views
-
-
------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------
-
- 1 reply
- 1.4k views
-
-
யாரோ புண்ணியவான் ஆரம்பித்து வைத்த இந்த சினிமாவை பற்றிய தொடர் விளையாட்டு பதிவுக்கு கானபிரபா என்னையும் போடும் படி அழைத்திருந்தார். இதனால் இந்த கேள்விகள எல்லாத்துக்கும் பதில் அளிப்பதால் நம்மளுக்கும் இதனால் ஒரு விஜபி அந்தஸ்து கிடைத்த சந்தோசம் .மற்றும் படி நம்மளை யாரு தான் பேட்டி காணப்போறாங்கள் ? நாம யாருக்கு தான் பதில் சொல்லப்போறோம்? அதை விடுங்க .....இப்ப..இவையளுடைய கேள்வியளுக்கு வருவம் அவற்றுக்கு பதிலையும் கொடுக்க முனைவம் 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள் முதலில் சினிமா பார்க்க தொடங்கினது எட்டு வயதுக்குள்ளை தான் அதுவும பெற்றோருடன் போனது.. http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-p…
-
- 19 replies
- 2.7k views
-
-
"கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேரத்துல நடந்துடலாம்" என்ற கோபுவிடம், "விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான். ஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டறமாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லா…
-
- 0 replies
- 694 views
-
-
பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை ஓவியம்: ஸ்யாம் விறுவிறுவென வீசிக்கொண்டிருந்த ஊதக்காற்றோடு போராடி, திமிலர்கள் கரை நோக்கி திமிலைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சில வங்கங்களும் வல்லங்களும் நாவாய்களும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. பரதவ குலப் பெண்கள் இரவு ஆகாரத்துக்காகப் புளியும் மிளகும் சேர்த்துக் குழம்பு செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே இருளை விரட்ட தீச்சுளுந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. கடலோடிவிட்டு வந்த பரதவர் கைகளில் விரால், கனவா, மத்தி மீன்களும், சிலரிடம் சிவப்பு இறால்களும் நிறைந்திருந்தன. இரை தேடிச் சென்ற குருகுப் பறவை கூட்டங்களும், கடலின் மேற்பரப்பில் நீந்திய மீன்குஞ்சுகளைப் பசியாற உண்டுவிட்டு, புன்னைத் தோப்புக்கு விரைந்துகொண்டிருந்தன. ந…
-
- 0 replies
- 2.6k views
-
-
சுலாப் இன்டர்நேஷனல் - பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: செந்தில் சின்னாரு, தன் அடிவயிறு கனத்திருந்ததை உணர்ந்தாலும், தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்தான். ஆனாலும், அடிவயிற்றின் அலப்பறை தூக்கத்தைக் கலைத்துப்போட்டது. இனியும் தாமதித்தால், டவுசரிலேயே பேர்வாதி முடிந்துவிடும் அபாயத்தை உணர்ந்தவனாக ஓட்டம் பிடித்தான். விவரம் தெரிந்ததில் இருந்து சின்னாருக்கு எப்போது எல்லாம் அடிவயிறு கனத்துவிடுகிறதோ, அப்போது எல்லாம் இப்படித்தான் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கும் சுலாப் இன்டர்நேஷனலுக்கும் டவுசரைப் பிடித்தபடி ஓடுவான். இப்போதும் அப்படித்தான். வீட்டில் இருந்து இருநூறு அடி தூரத்தில் பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. தன் ஜோட்டுக்காரன்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
பள்ளத்தாக்கு - அகரமுதல்வன் தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்…
-
- 0 replies
- 1.6k views
-