கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
இது இன்னொரு வாழ்க்கை! பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார். பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார். துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார். துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை. முடிவில் துறவி அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார். அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார், ''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் …
-
- 4 replies
- 1.1k views
-
-
வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று மெல் புன்னகையிட்டவன்… சட்டென்று சொன்னான் “வெயில்தான் அழகு. வெயில்தான் நம்மோட அடையாளம். வெயில் ஒரு இனத்தின் குறியீடு. வெயிலை பழகு…. சரியா ???? என்று. அவன் தலையில் தட்டி சொல்ல தோன்றியது “பக்கி…..மழை படிடா முதல்ல” என்று. அனால் சொல்லவில்லை. அவனுடனான முதல் சந்திப்பே எனக்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
அறநீர் - சிறுகதை அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். “தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
இறுமாப்பு கூடாது... ................................. மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து இறங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், ஒளியும் நிறைந்து காணப்பட்டது. ” உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் “மெசடோனியா” வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர். யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, …
-
- 4 replies
- 1k views
-
-
முதலிரவு கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின் காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா! ‘‘வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?’’ கலாவுக்குப் புரியவில்லை!‘‘இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!’’ - கலா சொல்ல, ‘‘சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?’’ எனக் கேட்டான் சிவா. ‘‘உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்... அப்புறம்...’’ - தொடர்ந்த கலாவைத் தடுத்தான் சிவா. ‘‘என்கிட்ட உண்மையா இருக்கச் சொல்லலியா?’’ ‘‘சொன்னாங்க. எப்பவும் உங்ககிட்ட உண்மையச் சொல்லணும்னு...’’ ‘‘உண்மையச் சொல்றதில்ல... உண்மைய…
-
- 4 replies
- 5.3k views
-
-
எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது #மே18 #முள்ளிவாய்க்கால் #தியா
-
- 4 replies
- 1.2k views
-
-
வெண்ணிலா வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழ…
-
- 4 replies
- 2.1k views
-
-
கடைசி பேட்டி 1 ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான். உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான். வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே…
-
- 4 replies
- 2.2k views
-
-
மதுரை, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பாண்டி-ராமாயி ஆகியோருடைய மகன் ராஜேஷ்கண்ணன். பி.காம். பட்டதாரி. அதே கூடல்நகர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன்-முத்தலட்சுமி தம்பதியினரின் மகள் வைதேகி. இவரும் ராஜேஷ் கண்ணனும் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலிக்கும்போதே இருவரும் சேர்ந்தும் விட்டனர். இதனால் கர்ப்பமானார் வைதேகி. அப்போது அவருக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை. மகள் கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் பதறிப் போனார்கள் வைதேகியின் பெற்றோர். இதையடுத்து தங்களது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் கண்ணனிடம் வற்புறுத்தினர். அவரும் விருப்பத்துடன்தான் இருந்தார். ஆனால் ராஜேஷ் கண்ணனின் பெற்றோர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரி…
-
- 4 replies
- 905 views
-
-
எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்…… “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும். “எங்க …
-
- 4 replies
- 5.8k views
- 1 follower
-
-
அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது... மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் …
-
- 4 replies
- 1.6k views
-
-
வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார். முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெற…
-
- 4 replies
- 2.2k views
-
-
நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
சப்பாத்து – குமார் மூர்த்தி – என் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது. பலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம் எடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கும். சப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு மிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே கழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு க…
-
- 4 replies
- 612 views
-
-
பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை ஜப்பானியச் சிறுகதை மூலம் : ஜினிசிரோ தனிஜகி ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 – 1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர். திருடன் பல வரு…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஊருக்குப் போனேன் - பாகம் 2 நயினைதீவை அடியாகக் கொண்ட அந்த இளைஞன், நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன் எனப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். பின்னர், கேள்விகள் தீர்ந்து போனதோ என்னவோ, 23 வயது நிரம்பிய அவ்விளைஞன் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். வறுமைப்பட்ட குடும்பம், பெண்சகோதரங்கள், அவர்களின் திருமணம், இயக்கத்தில் இறந்து போன தம்பி ... ஓ ! சபிக்கப்பட்டவர்களே. சபிக்கப்பட்டவர்களே ! எப்போதுதான் உங்கள் சிறுமைகளை விட்டொழிவீர்கள் ? எப்போதுதான் பெண்களுடன் பிறக்கும் ஆண்களுக்கு விடுதலையளிப்பீர்கள் ? எப்போதுதான் பெண்களைச் சீதனம் வாங்கி "வாழ்வு கொடுக்கும்" பண்டங்களாகக் கருதாது விடுவீர்கள் ? சீதனம் கொடுக்கச் சொத்துத் தேடப் பரதேசம் போனவர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒரு சிறிய கிராமத்திலே ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் . அவனை அவர்கள் கஷ்டப்பட்டு படி பித்து பெரியவனாக்கி விடவேண்டும் என கனவு கண்டார்கள். அவனும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக் பள்ளிக்கு கு செல்ல கள்ளமடிப்பான். ஏழைத் தந்தையோ மிடடாய் வாங்க காசு கொடுத்து அவனும் அந்த சந்தோஷத்தில் பள்ளிக்கு சென்றான். சற்றுபெரியவனானதும் உயர் கல்வி கற்க படடணம் செல்ல வேண்டும் . செலவாகும் என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தந்தை அனுப்பிவைத்தார். அவனும் படித்து முடித்து ஊருக்கு வந்தான். வேலைக்கு காக விண்ணப்பம் எழுதி போதுதான் . சில மாத தாமதத்தின் பின் நேர்முக பரீடசைக்கு அழைத்த்ர்கள் . படடணம் செல்லக் காசில்லை . அயலில்பெரியப்பாவிடம் கடன்பட்டு கொடுத்தார் தந்தை . அவனும…
-
- 4 replies
- 852 views
- 2 followers
-
-
எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன…
-
- 4 replies
- 1.6k views
-
-
சென்ற மாதத்தில் ஒரு வாரம் பானுமதி யின் அம்மவும் அப்பாவும் ...ஒரு விசேடத்துக்காக அயல் ஊர் சென்று இருந்தார்கள். போக முன்னமே மகன் கார்த்திக்கும் மகள் பானுவும் மகிழ்வாக் தான் அனுப்பி வைத்தார்கள். வளர்ப்பு நாய் லூனாமட்டும் எந்நேரமும் முகத்தை தொங்க .வைத்து இருந்தது ... .பாரும்மா அதற்கு கூட விளங்கி விட்டது போலும் ..... இவர்களுக்கும் ஒரு படிபினையாக் இருக்கட்டும் என் அப்பா சொல்லிக் கொண்டார் . பானு இளம் வயதுப் பெண் என்றாலும் .. சமையல் ..வீடுபரமரிப்பு என்பவற்றில் கள்ளம் ..ஏதாவது சாட்டு சொல்லி தப்பி கொள்வாள். அக்கா தம்பி இருவ்ரும் பொறு ப்பு எடுத்து கொண்டனர் ... உறவினர் வீடு அயலில் இருந்ததால் கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்றாரக கள் அம்மாவும் அப்பாவும். …
-
- 4 replies
- 3.5k views
-
-
சற்றே நீண்ட கதை.. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு. "யா..ழு" "டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்" கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது. "டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான். "ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்! ஒவ்வொரு தரமும் என்னை ஏ…
-
- 4 replies
- 1.2k views
-
-
விசித்ரி என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின் மதியப்பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறார்கள் எனவும் சொன்னார்கள். அந்த மதியப் பொழுதில் என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை. அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில்கூட காற்றில்லை.வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக்கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில்.வீட்டுக் கூரைகள், அலுமினியப் பாத்திரங்கள் வெயிலேறிக் கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை. சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஓடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதியும் படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில் இருந்தபடியே திருகை அரைத்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
புதியதோர் உலகம் அத்தியாயம் 01 தார் வீதியால் நடந்து வந்தவர்கள் அந்தக் குச்சொழுங்கையில் திரும்பிய தும் கடற்கரை அண்மித்து விட்டதை உணரத் தொடங்கினார்கள். இரண்டு பேர் மட்டும் அக்கம் பக்கமாக நடந்து போகும் அகலமுள்ள அந்தச் சிறிய ஒழுங்கை ஒன்று அல்லது இரண்டு வீடுகளைத் தாண்டியதும் அந்த மனிதர்கள் போலவே தன்னடக்கத்துடன் வளைந்து செல்லும். அந்தக் கிராமத்து மக்கள் மாதிரி ஒழுங்கைகளும் கம்பீரமாக நீட்டி நிமிர்ந்து செல்லும் துணிச்சலை கண்டறியாததுகள். மனிதர்களதும் கால்நடைகளதும் காலடி அடிக்கடி பட்டு நலிந்துபோன புற்களின் மத்தியில் இடையிடையே பீறிட்டு நிற்கும் தரையில், வெண்மையாக கடற்கரைக் குருமணல் கோலம் போட்டிருந்தது. ஒரே திசையில் வேகமாக சாய்ந்தாடும் தென்னை மரங்களிருந்து வீசி…
-
- 4 replies
- 1.2k views
-