கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
தண்ணீரிலே தாமரைப் பூ (1) 'வசந்தங்கள் வாழ்த்துரைக்க வான்மேகம் பூத்தெழிக்க சொந்தங்கள் சூழ்ந்து நிற்க சொர்க்கமே அருகிருக்க மங்கள மேளமது சங்கமம் என ஒலிக்க தங்கமாய் வந்ததொரு தரமான வசந்தவிழா' விடிந்தால் திருமணம். வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்…
-
- 30 replies
- 6.6k views
-
-
முதலே சொல்லிடுறன்.இது கதைக்குள்ள வருமா தெரியேல்ல.வேற ஒரு பகுதியும் சரியாப்படேல்ல அதான் கதை என்ற பகுதில போடுறன். ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும் மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன். பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை. என…
-
- 8 replies
- 2.3k views
-
-
கடை - சிறுகதை ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஏகாந்தம் என்பதும் உனது பெயர் இளங்கோ வழமை போல வேலைக்குப் போவதற்காய் நிமலன் ஆறு மணிக்கு எழும்பியிருந்தான். இரவு திரைச்சீலையை மூடாததால் சூரிய ஒளி அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இன்றைக்கும் வேலைக்குப் போக வேண்டுமா என நினைக்க இன்னும் சோம்பல் கூடியது. சட்டென்று இன்று வேலைக்குப் போகாவிட்டால் என்ன எனவும் தோன்றியது. நல்ல விடயங்களை பிற்போடக்கூடாது என்று யாரோ சொன்னது நிமலனுக்குள் ஒலிக்க, உடனேயே மானேஜரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வேலைக்கு வரமுடியாதிருக்கின்றது எனத் தன் குரலைப் பதிவு செய்தான். சோம்பலாய் விடிந்த பொழுது இப்போது நிமலனுக்கு உற்சாகமாய் மாறியிருந்தது. கட்டிலிலிருந்தபடி இன்று என்ன என்ன செய்யலாமென பட்டியலிட முயற்சித்தான்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எழிலரசன் என்கிற சகுனி -சித்தாந்தன்- அந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். சகுனியோ என்னைவிட இரண்டு மடங்கு பெரியவன் போலிருந்தான். நான் அவனுடன் திரிவதை அவ்வப்போது எனக்கொரு பாதுகாப்பெனக் கருதிக் கொண்டேன். ஒரு நாள் இடைவேளையின் போது சகுனி என்னை வெளியே கூட்டிப் போனான். நான் இண்டைக்கு ஒரு விளையாட்டை…
-
- 1 reply
- 2.1k views
-
-
கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன் என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் என்றும் சொல்ல முடியாது, படகுகள். துரதிஸ்டவசமான உண்மையென்னவெனில் யுத்தபூமிகளிலிருந்து தப்பிப்பதற்கு பலரிடமுமுள்ள முதல் தெரிவாகவும் வாய்ப்…
-
- 4 replies
- 2.1k views
-
-
மீண்டும் அப்பாவாகிறேன்.... [size=5]தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும். ஒரு நாள் வேலையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என்னுடைய பொறுப்பதிகாரி வந்து உடனே வா உன்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னை கூட்டிக் கொண்டு தனது அலுவலகத்துக்குள் …
-
- 28 replies
- 3k views
-
-
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது. பிற்காலம் அநுராதபுரத்தில் இரு…
-
- 5 replies
- 5.3k views
-
-
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: தொலைவு “என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்க” என்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர். வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான். சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள். வசந்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு கனவு ஒரு கனவு இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம். சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம். கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே. என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும். ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா ப…
-
- 0 replies
- 668 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் http://www.vikatan.com
-
- 0 replies
- 889 views
-
-
விழாக்கோலம் பூண்டிருந்தது, சிவதாணுவின் வீடு. 'தாத்தா...' என, ஓடி வந்த பேரன் ராம், சிவதாணுவின் மடியில் ஏறி உட்கார்ந்தான். ''ராம்... மெதுவாக ஓடி வரணும்; இப்பப் பாரு மூச்சு வாங்குதில்ல... சரி, எதுக்கு இப்ப ஓடி வந்தே?'' என்று கேட்டார், சிவதாணு. ''வெளிநாட்டுலருந்து, சித்தப்பா இன்னைக்கு வர்றாராமே...'' ''ஆமா... உனக்கு எப்படி தெரியும்...'' ''பாட்டி சொன்னாங்க... சித்தப்பா வெளிநாட்டுலருந்து எனக்கு பொம்மை, சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாராம்; உங்களுக்கு எதுவுமே வாங்கி வரமாட்டாராம்,'' என்றான். ''ஏன் எனக்கு வாங்கி வரமாட்டானாம் உன் சித்தப்பா?'' ''நீங்க தான் சித்தப்பாவ திட்டி, அடிச்சு, வீட்டை விட்டே விரட்டினீங்களாம்...'' என்றான். ''அப்படிக் கேளுடா என் பேராண்டி... இனி…
-
- 0 replies
- 530 views
-
-
தவிர்க்க முடியாத திடீர் விஜயம். கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருந்தது. லண்டனில் இருந்து போவர்கள் கட்டுநாயக்காவில் விசாரிக்க படுகிறார்கள். நான் நேராக கொழும்பு செல்லாமல் ஒரு மத்திய கிழக்கு ஆசியா நாடு ஊடாக எனது பயணத்தை தொடர்ந்தேன். கொழும்பு செல்ல அதிகாலை நேரமாக இருந்த படியால் பலர் கடமையில் இல்லை. என்னை விசாரித்தவர் சில சாதாரண கேள்விகளை கேட்டார். எனது பதில்கள் அவரை திருப்தி படுத்தியதால் என்னை உள்ளே அனுமதித்தார். இதிலிருந்து வெளியே வரும் வரைக்கும் பல கழுகு கண்கள் வரும் பயணிகளை நோட்டம் இட்ட படி இருந்தது. நான் ஒருவாறு வெளியில் வந்து எனது பயணத்தை நான் பிறந்த ஊருக்கு தொடர்ந்தேன். பகல் பயணம் ஓமந்தையில் எனது அடையாளத்தை காண்பித்துவிட்டு வன்…
-
- 35 replies
- 4.1k views
-
-
இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் சிறுகதை - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைக…
-
- 0 replies
- 600 views
-
-
புகை( ப் )படம் செல்லமாய்ச் சிணுங்கியது இவனது செல்பேசி. மாலைக் குளியலில் சுகங்கொண்டிருந்த விசுவநாதன் உள்ளிருந்தவண்ணம் உரத்துக் குரல் கொடுக்கிறான் : "ஜானகி, ஃபோனை எடும்மா !'' முழு நிலவென மஞ்சள்முகங் காட்டும் உப்பிய பூரியும், கொதித்து மணத்துத் தளதளக்கும் உருளை மசாலாவிலும் கவனங்கொண்டிருந்த ஜானகி , அடுப்புச் சூட்டைக் குறைத்து, வேகமாக வந்து, செல்பேசியை எடுத்துப் பேசுகிறாள். அம்முனைச் செய்தி கேட்டு ஜானகி , ஆனந்தக் குரலில் , " ஓ , அப்படியா ! ரொம்ப மகிழ்ச்சி . அவர் குளிச்சிட்டு வந்ததும் உடனே பேசச் சொல்றேன்'' என்றவள், பேசியவர் பெயர் , எண்ணைப் பாதுகாத்துக் கொள்கிறாள். " மும்பையிலிருந்துத…
-
- 5 replies
- 2.3k views
-
-
தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார். என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெர…
-
- 4 replies
- 4.1k views
-
-
வெட்டுக்கத்தி - சிறுகதை குமாரநந்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் அவர்கள் வெகுநேரம் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெயில் மிதமாக இருந்தது. காலை நேரத்தின் அடையாளமாய் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கறிக்கடையைத் திரும்பவும் நோட்டமிட்டார்கள். இளைஞன் ஒருவன் கறி வெட்டிக்கொண்டிருந்தான். மெள்ள கடைப் பக்கம் நகர்ந்து சைகை காட்டினார்கள். அந்த இளைஞன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு ‘காசு கொடு’ என்பது போலக் கையை நீட்டினான். வந்த இருவரில் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவன் உள் பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். இளைஞன் பணத்தை வாங்கி, கறி வெட்டும் கட்டைக்கு அப்பால் இருந்த பெட்டியில் வ…
-
- 1 reply
- 2k views
-
-
பெத்த அம்மா...வளர்த்த அம்மா... கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி பெற்ற குஷியுடன் மட்டையைச் சுழற்றியபடி வீட்டில் நுழைந்தான் கார்த்திக். சமையலறையில் எண்ணெய்யில் பொரியும் பூரியின் மணம் வாசலிலேயே வரவேற்றது. "ஹை... பூரி ...'' மட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்தான்... கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டபடி கத்தினான்... " அம்மா டிபன்'' "மல்லிகா கார்த்திக் வந்துட்டான் பாரு.இந்தா அவனுக்கு கொண்டுபோய் கொடு''...ஒரு தட்டில் நாலைந்து பூரிகளை வைத்து குருமாவையும் ஊற்றி நீட்டினாள் வனஜா. "வேண்டாண்டியம்மா உன் பிள்ளைக்கு நீயே பரிமாறு. சொல்லிட்டேன்...'' "உனக்கும்தான…
-
- 1 reply
- 5.3k views
-
-
இரத்தம்! … மு.தளையசிங்கம். November 12, 2018 சிறப்புச் சிறுகதைகள் (18) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – மு.தளையசிங்கம் எழுதிய ‘இரத்தம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ‘இன்னும் இந்தப் பு… அவங்கட…. ஊ… போறாங்கள்!” சோமு, ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத்தாலும் உடலாலும் எல்லாவற்றாலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்கலின் நோவை, வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை. மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது. ஒன்றாய் உலா வருகிறார்கள்.. பச்சை எரிச்சலாய் இருக்கிறது. உடுப்புக் கடை, சப்பாத்துக்கடை, கோப்பி சொப், சினிமா என்று சுற்றித் திரிகிறாகள்... என்னோடு கார் ஓடியதையும், மலை ஏறியதையும், பந்தடித்ததையும், எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும், யானை மே…
-
- 8 replies
- 1.6k views
-
-
நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். . நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது மிக இலகு. இப்பவும் இடைக்கடை ஒலித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கும் மனித குரல்களின் கோரஸ் சத்தங்கள் தான் காதுகளில் தார் ஊற்றியமாதிரி அவரது நித்திரைக்கு பங்கம் விளைவித்து கொண்டு இருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/03/blog-post.html
-
- 17 replies
- 3.3k views
-
-
உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெ…
-
- 13 replies
- 2.5k views
-
-
- --- ----------- XXXXX --------------- - --- ----------- XXXXX ---------------
-
- 1 reply
- 1.4k views
-
-
(ஏற்கெனவே 2005 மாசியில் எழுதிய சிறுகதை. இறுதியாக எழுதிய கதையும்கூட. சுனாமியின் நினைவாக மீண்டும் இங்கே..) அது ஒரு 'சொக்கலேற்' தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை 'சொக்கலேற்' வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி களஞ்சியப் பகுதி விநிய…
-
- 2 replies
- 1.1k views
-