கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மேஜர் சபர்வால் என்பவர் இந்திய இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடிமருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும் கூட. இவர் தனது அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும் ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்! ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக…
-
- 0 replies
- 682 views
-
-
நான் ஓர் ஈழத் தமிழன். எமக்கு எனத் தனித்துவமான பேச்சுத் தமிழ் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்துகிற பல சொற்களை நாம் பயன்படுத்த மாட்டோம். சொற்களைப் பயன்படுத்துவதில் இரு பிரதேசத் தமிழர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு வந்த ஆறு மாத காலத்துக்குள் இங்கு உள்ள பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், அரசுத் தரப்பு சித்திரிப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலங்கைத் தமிழர் பயன்படுத்தாத, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தே ஒப்புதல் வாக்குமூலம் என் சொல் படி எழுதப்படவில்லை என்பதும், அவர்களின் இஷ்டத்துக்குத் தகுந்தபடி எழுதப்பட்டது என்பதும் அப்பட்டமாகத் …
-
- 0 replies
- 564 views
-
-
அரிபாபு நினைவுகளை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது! அவரைப் போல் சிவராசன் என்னை அழைத்திருந்தாலும், அன்றைக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு நானும் போயிருப்பேன். அங்கே அரிபாபு உடன் நானும் சிதறித் செத்திருந்தாலும், தினம் தினம் இன்றைக்கு இவ்வளவு உளைச்சலுக்கு ஆளாகிச் சாக வேண்டிய நிலை வந்திருக்காது. சம்பவ இடத்துக்குப் போயும் உயிர் தப்பியவள் என் மனைவி நளினி. ‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பது நளினிக்குத் தெரியாது. சுபாவும் தாணுவும் இலங்கைத் தமிழில் பேசினால் சந்தேகம் வரும் என்பதால்தான், தமிழ்ப் பெண்ணான நளினி அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்’ என அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை நிறைவேற்றும் கடைசிக் கணத்தில் கூட தனது திட்…
-
- 0 replies
- 607 views
-
-
கரண்டி ஏந்திய... 3000 பேர். குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மண்வெட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்? துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள். 2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மண்வெட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியி…
-
- 1 reply
- 572 views
-
-
செங்கற்களாலான பழையது என்றோ, புதியது என்றோ கூற முடியாத நடுத்தரக் கட்டிடம். சீமெந்தால் அழுந்திப் பூசாமல், செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீமெந்தால் ஒட்டியதுபோன்ற வெளித் தோற்றச் சுவர்களாலான கட்டிடம். மூன்று மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் மும்மூன்றாக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் அந்தக் கட்டிடத்துக்குள் அடக்கம். அதில் ஒரு வீடு வெறுமையாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, வெளிநாட்டவருக்கு, அதுவும் ஆசிய நாட்டுக் கறுப்பினத்தவனுக்கு வாடகைக்குக் கொடுப்பார்களா என்று குழம்பி, தயங்கி, எதற்கும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு, அது சரிப்பட்டு, ஏதோ சாதனை புரிந்த பெருமிதத்துடன் அங்கு குடிவந்து ஒரு மாதந்தான் ஆகிறது. அருகில் சிறுவர்கள் விளையாடவென அமைக்கப்பட்ட சாதனங்களுடன் கூடிய பொழ…
-
- 15 replies
- 1.8k views
-
-
அவன் ஓடி கொண்டிருந்தான். அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள். அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது. வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம். அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள். அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான். தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான். இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம். இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை. என்னை வைத்து, என…
-
- 18 replies
- 3.7k views
-
-
என்ன பிள்ள சுமங்களா.. கொலிடேக்கே ஊருக்குப் போறியே. பவளம் அன்ரி லண்டன் முருகன் கோவிலில் கண்டு விசாரிக்க.. ஓம் அன்ரி. இவரும் வந்து அசைலம் கேட்டு இப்ப 12 வருசம் ஆகுது. இப்ப ஒரு வருசமாத்தானே எங்கள் எல்லோரும் பாஸ்போட் தந்திருக்கிறாங்கள். நானும் கனடாவில உள்ள அண்ணா அண்ணிட்ட கூடப் போக முடியாமல் இவ்வளவு காலமும் இந்த லண்டனுக்கையே சிக்குப்பட்டு கிடக்கிறன். அதுதான் இந்தக் கொலிடேக்கு என்றாலும் ஒருக்கா ஊருக்கும் கனடாவுக்கும் போகத்தான் இருக்கிறம். ஏன் அன்ரி.. ஏதேனும் விசயமே... இல்லப் பிள்ள.. ஊருக்குப் போறதுக்கு எனக்கும் விருப்பமா இருக்குது. ஒரு மாதமாவது போய் நின்றிட்டு வருவம் என்றிருக்கிறன். அதுதான் நீங்கள் போறதெண்டால் உங்களோட சேர்ந்து வந்தால் உதவியா இருக்கும் தானே.. என்று தான…
-
- 23 replies
- 4.7k views
-
-
அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது. தாழ் விலக்கிப் பார்த்தபோது வாசற்படியில் கலவரத் துடன் அப்புச்சி நின்றிருந்தார். கையில் தீப்பந்தம். ‘‘பெருமாள் போயரைப் பூச்சி தொட்டிருச்சு...’’ …
-
- 0 replies
- 4.1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், முன்பு எழுந்தமானமாக எழுதத்தோன்றும் போதெல்லாம் எழுதமுடிந்தது. இப்போது காலம், சூழ்நிலை பார்த்தே எழுதவேண்டியுள்ளது. இதனால் முன்புபோல் நம்மால் அடிக்கடி அங்கும் இங்குமாக ஆக்கங்களை படைக்க முடியவில்லை. ஆயினும்.. யாழ் இணையத்துடன் - நம்மைப்போன்ற வலைத்தள கருத்தாளர்களுடன் நீண்டதூரம் பயணம் செய்து அண்மையில் அமரத்துவம் அடைந்த 'வசம்பு' என அழைக்கப்படும் மதிப்புக்குரிய ‘சிவஞானசுந்தரம் கிருபானந்தன்’ அவர்களை நினைவுகூர்ந்து ஓர் ஆக்கத்தை படைக்கவேண்டிய கட்டாயத்தை எனது உள்ளம் கடந்த சில நாட்களாக வலியுறுத்தியது. ஆரம்பத்தில் இரண்டு வரிகளாயினும் ஓர் கவிதையாக - அஞ்சலிப்பா எழுதலாம் என்று பார்த்தேன். கவிதை எழுதுவதற்குரிய உளநிலை எனக்குள் ஏற்படவில்லை. எனினும்.. …
-
- 46 replies
- 5.8k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த இழப்பும் குழப்பமும் இல்லை. தங்கள் வீட்டில் ஏதேனும் களவு போனால் அடுத்த வீட்டிலிருந்து திருடிக்கொள்ளலாம் …
-
- 3 replies
- 2.3k views
-
-
இந்நாவலின் வாசிப்பின்போத ு வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. தரவிறக்கம் செய்ய: http://books.sharedaa.com/2008/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-karuvachi-kaviyam.html நன்றி
-
- 0 replies
- 2.1k views
-
-
கர்ப்பப்பை - அனோஜன் பாலகிருஷ்ணன் “இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத் தன் சுட்டு விரலால் நீட்டித் தொட்டு கேட்டாள். அவளின் கைகளை தட்டிவிட்டேன். “சொல்லு” “ஓம்” என் கண்களை வெறித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்து சென்று தன் குளிரங்கியை அணிந்துகொண்டு புறப்பட்டாள். அவளைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான சமாதானத்தையும் என்னால் சொல்ல இயலவில்லை. …
-
- 3 replies
- 1.2k views
-
-
கர்ப்பம்: நொயல் நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர். சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன்பின் அவை மயக்கம் தெளியும்வரை காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா? “என்னத்திற்காக எக்ஸ்ரே?” “பெண் நாய், கர…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
கறங்கு - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் இருந்து தேங்காய் நெற்றுக்கள் முற்றி, அடந்து கீழே தொப்பென ஒலி எழுப்பி வீழ்ந்தாலும், எவரும் சென்று பொறுக்குவதில்லை. சுடுகாட்டுப் பேய்களும் தென்னை நெற்றுக்கள் எனச் சுருண்டுக…
-
- 0 replies
- 1.7k views
-
-
அண்று முழுவதும் நல்ல மழை. இப்படி சொல்லத்தான் மன துடிக்குது. ஒருவேளை மழை பெய்திருந்தால் இந்த கதை வேற மாதிரி இருந்து இருக்கும்... என் குடும்பம் அப்ப கொழும்பு "சிலேவைலன்" பகுதியில் "பரக்ஸ் லேனிலை" வசித்து வந்தது. முன்னாலை பொலீஸ் குவாட்டஸ், பின்னாலை "வத்தை", இல்லை "தோட்டம்" எண்று சொல்லும் சேரி பகுதி. கொழும்பு-2 கொம்பனி தெருவின் ஒரு ஒழுங்கை எண்ட வகையில் சுறு சுறுப்புக்கும் வாகன நெரிசலுகும் பஞ்சமே இல்லை. அதிகமாய் தமிழர் வசிக்கும் பகுதி, அனேகமானோர் இந்திய வம்சாவளிகள். அங்கை வெட்டு குத்து குழுக்களுக்கும் பஞ்சம் இல்லைத்தான்... 'காலை வேளை' நான் வெள்ளனவே தூக்கத்தால் எழுந்து குளித்து பள்ளிக்கு வெளிக்கிட்டு தயார்... வழமை போலவே காலை ஏழு மணிக்கு படசாலை, ஆறு மணி பஸ்ஸை பிடிக்க வேணும்…
-
- 17 replies
- 3.3k views
-
-
கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி தமிழ்நதி -கனடா மூத்த மகனுடைய கையால் கொள்ளி வாங்குவதற்காக அருணாசலத்தார் நடுக்கூடத்தில் காத்துக் கிடந்தார். மகன் கந்தசாமி செய்தி கேட்ட அன்றிரவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். வெள்ளைவேட்டி சால்வை, அருணாசலத்தாருடைய கறுப்பு நிறத்தை அடர் கறுப்பாக்கிக் காண்பித்தது. தலைமாட்டில் குத்துவிளக்கின் சுடர் காற்றின் திசைக்கேற்ப சாய்ந்து மாய்ந்து அழுதுகொண்டிருந்தது. நகரத்திற்குப் போகும்போது மட்டும் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கமுள்ள அவருடைய கால்களில் வெள்ளைக் காலுறைகள் மாட்டப்பட்டு, இரண்டு பெருவிரல்களும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. ஆள் திடகாத்திரன்தான். இருந்துமென்ன… நெஞ்சுவலி சாய்த்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் விடிகால…
-
- 2 replies
- 721 views
-
-
-
- 1 reply
- 795 views
-
-
பாங்காங்கிலி ருந்து டெல்லி நோக்கி அந்த ஏர் இந்தியா விமானம் பறந்துகொண்டிருந்தது. அதன் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவன் பாங்காங்கின் மிகப்பெரும் போதைப் பொருள் வியாபாரி. ஆனால் அவன் தாய்லாந்து நாட்டுக்காரன் அல்ல. இந்தியாவின் ஒரு பிரபலமான அரசியல் புள்ளியின் வாரிசு. சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வந்த தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ``அவனுடைய தந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. பிழைப்பது கடினம்"என்ற செய்தி அவனை உலுக்கியது. தந்தை மீது அவனுக்கு அதீத பாசமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், அவன் தனது போதை மருந்து வியாபாரத்தில் இதுவரை சம்பாதித்த பணம் முழுக்க அவனுடைய தந்தையின் பொறுப்பில்தான்…
-
- 1 reply
- 829 views
-
-
ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்…
-
- 13 replies
- 2.2k views
-
-
கற்சிலை!… – நவாலியூர் சோ.நடராஜன். சிறப்புச் சிறுகதைகள் (13) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – நவாலியூர் சோ.நடராஜன் எழுதிய ‘கற்சிலை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கல்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல. இந்த முறுவலின் வனப்புத்தானென்ன! புதிதாய் உலகத்தைக் கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன்றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்யமுடியாத கற்சிலை! “என் உள்ளக் கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விள…
-
- 2 replies
- 1.5k views
-
-
கற்படிகள் - சிறுகதை ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம் ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது. நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியத…
-
- 0 replies
- 1.9k views
-
-
கற்பு! 'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம். ''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், உருவம் மாறி, கேசம் நரை கண்டிருந்தது. ''ஆரம்பிச்ச இடத்துலேயே ஆரம்பிக்கலாமா...'' குழந்தையின் குதுாகலத்துடன் கேட்டார், செல்வம். முகவுரையையும், முடிவுரையையும் குழந்தைத்தனமாய்தான் படைத்திருக்கிறான், இறைவன். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கற்பு!… ( சிறுகதை ) வரதர். July 03, 2018 சிறப்புச் சிறுகதைகள் (6) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தி.ச.வரதராசன் எழுதிய ‘கற்பு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். ”மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர். ”ஓமோம், ஆரப்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏ…
-
- 4 replies
- 1.8k views
-
-
கலசம் – கருணாகரன் அன்று காலை தபால் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரைப் பார்த்தேன். உள்ளே அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் இருந்த கதிரையின் காலோடு அவர் எப்போதும் கொண்டு திரியும் தூக்குப் பை சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவருடைய அடையாளங்களில் இந்தப்பையும் ஒன்று. மிக முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய்வந்த நாட்களிலும் அவர் இந்தப்பையைக் கைவிடவில்லை. அவருடைய தொண்டு ஆர்வம் காரணமாக வாய்த்த அந்தப் பயணங்கள் எத்தனை முக்கியமானவையாக இருந்தன? தன்னுடைய பயணங்களின் வழியாக, அங்கே நிகழும் சந்;திப்புகளின் வழியாக தன் காலடியில் தேங்கியிருக்கும் கண்ணீரைத் துடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பிய பிறகு ச…
-
- 0 replies
- 1.1k views
-