கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
எனக்கு வேண்டும் விடுதலை............... சிறுகதை..... ''இதுக்கு தான் சொன்னனான் இங்கே நான் வரமாட்டேன் என்று இங்கே வந்து இவ்வளவு கஸ்ரப்பட்டும், பயந்து கொண்டும் இருக்கிறத்துக்கு நாங்கள் அங்கேயே இருந்திருக்கலாம்......! இங்க இருந்து ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைக்கிறத்துக்கு அங்க இருந்து ஒரு நாளில செத்துப்போனாலும் பரவாயில்ல.....'' என்ற படி தாய் தகப்பனைக் கோவித்தபடி உள்ளே இருந்து வெளியே கோபத்துடன் வந்தான் சுரேஸ். '' தம்பி கொஞ்சம் நில்லு... ஏன் கோவிக்கிறாய்..உயிருக்குப் பயந்து தானே இங்கே வந்தனாங்கள் அதுவும் உன்னை அங்க வச்சிருந்தா நீ ஏதும் தப்பா முடிவெடுத்திடுவியோ....! எண்டு பயந்துதானே அப்பா இங்க வர முடிவெடுத்தவர். உனக்குத் தெரியும் உன்ர தங்கச்சியும் போன…
-
- 4 replies
- 1.4k views
-
-
‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’ என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
மழை நின்ற காலத்தில்... குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு. யாரோ என் தோளைத் தொட திரும்பினேன். "நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...'' அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்…
-
- 3 replies
- 1.5k views
-
-
காதலென்னும் கற்பிதம்.... அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய் இந்தக் கடிதம்.) தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என…
-
- 3 replies
- 2.3k views
-
-
கிழவனின் உயிர் சயந்தன் “பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
காலத்துயர் காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது... உலகின் ஏதோ ஒரு மூலையில்... எங்கோ ஒரு நாட்டில்... தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல்... சேவலின் கூவல்... குருவிகளின் சங்கீத ஓசை... குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு... வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட... மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு... இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: அதுதான் காரணம் ‘‘இதப் பாரு விஜி. என்ன சொல்லுவியோ தெரியாது. உங்க அம்மாவை ஊருக்கு கிளம்பச் சொல்லு’’ - கத்தினான் ரமேஷ். ‘‘எங்க அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா போச்சோ?’’ - பதிலுக்கு கேட்டாள் விஜயா. வெளியே சென்று தண்ணீர்ப் பானையை தூக்கி வந்த விஜயாவின் அம்மா கங்கா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள். விஜயாவுக்கு தலைப் பிரசவம் முடிந்து பச்சை உடம்புக்காரி என்பதால் அவளுக்கு சில நாட்கள் துணையாக இருக்கலாம் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தாள். தான் இங்கே இருப்பது மருமகனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்த…
-
- 3 replies
- 735 views
-
-
அண்ணாச்சி ரிஷபன் அண்ணாச்சி கடை போட்டது எங்கள் ஏரியாவின் பணப்புழக்கத்தை நம்பித்தான். பெரும்பாலான நபர்கள் மாதக் கணக்கில்தான் வாங்கினார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து வாங்கியது அண்ணாச்சியின் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் உண்டாக்கவில்லை . ஒரு நாளைக்கு நூறு ரூபாயைத் தாண்டாது. அண்ணாச்சியின் முகத்தில் எப்போது மலர்ச்சி தான். 'வாங்க' என்று வாய் நிறைய கூப்பிடுவதில் ஆகட்டும். சின்னப் பசங்களுக்கு கை நிறைய பொட்டுக்கடலை அள்ளித் தருவதிலாகட்டும். பெரிய மனசுதான். முண்டா பனியனும் தொப்பைக்கு கீழ் விழாமல் நிற்கும் வேட்டியும் எப்போதும் பளிச் தான். 'அண்ணாச்சி.. நீங்க மளிகைக் கடை வச்சிருக் கீங்கன்னு சொன்னா நம்ப முடியாது. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்க' என்றால் பளீரென்று சி…
-
- 3 replies
- 694 views
-
-
ஒரு விதவையின் வெறி ஒரு அழகான கிராமம். நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள், மான்கள். இயற்கையின் அழகை இரசித்தவாறே, சுதந்திரமாக, மிக்க வளத்துடன் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கிராமத்துக்கும் அயல் கிராமத்துக்கும் இடையே உள்ள நீரோடை சம்பந்தமாக, இரண்டு கிராம மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இத் தகராற்றைத் தீர்த்;;து வைப்பதாக, வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவன் முன் வந்தான். ஏதோ பிரச்சினை தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தில், ஒப்புக்காக இரண்டு கிராம மக்களும் உடன்பட்டனர். ஒரு நாள் அதிகாரி, தன் உதவியாளர்கள் சகிதம் நீரோடைப் பக்கம் வந்தான். அங்கே, அந்த அழகான கிராமம் கண்ணுக்குத் தெரிய, அதற்குள் …
-
- 3 replies
- 24.4k views
-
-
அன்புள்ள மனோ உனது கடிதம் கிடைத்தது. உன்னைப்போலவே வேறு பலரும் "சேடம் இழுக்கும் பெரியவரின் வீட்டு சுகவிசாரிப்பு" போல விசாரிக்கிறார்கள். இன்று முன்னிரவில் அக்காவும் தொலைபேசியில் பேசினார். சிலரது விசாரிப்பு உண்மையில் என்னிடமிருந்து ஏதேனும் நம்பிக்கை தரும் வசனங்கள் வந்து தெம்பு தரலாம் எனும் ஆசையில் விளைந்தது. வேறு பலதின் பின்னால் உள்ள குரூர முகங்கள் என் அகக்கண்களுக்கு தெரியாமலும் இல்லை. சென்றல் - சென்ஜோன்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் தோற்றுப்போன அணிக்கு கைதட்டியவருக்கு ஏற்படும் நிலையை, எனக்கு உண்டு பண்ணும் குரூரம் நிறைந்தது அது. ஆனாலும் நான் மிகவும் நம்பிக்கையுடனும், மிகத்தெளிவுடனும் இருக்கின்றேன். இந்த நிலையில் சில விடயங்களை பேசிவிட வேண்டும் என்றே தோன்றுகின்றது. இன்று …
-
- 3 replies
- 1.3k views
-
-
கைப்பாவை வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மி…
-
- 3 replies
- 669 views
-
-
தங்கமாளின் தாயும் தந்தையும் 'தங்கம்' என்று பெயர் வைத்ததே அவள் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தான். தங்கம் என்ற பெயர் பெற்றதின் நேரப்பலன் அவள் காதில் இன்றுவரை ஒரு பொட்டுத்தங்கம் அணியும் புண்ணியம் கிடைக்கவில்லை, ஆனால் குணம் தங்கம். வாலிபத்தில் மஞ்சள்கயிறு கட்டியவன் கட்டிய கடமைக்கு வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்தவனும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போனான். கூலி வேலை செய்தால் தான் அவளுக்குச்சாப்பாடு அல்லது அரைப்பட்னி தான். கடவுளே கதி என்று காலத்தை ஓட்டி வந்தால். காணாமல் போன மகன் ஒருநாள் திடீர் என்று வந்து நின்றான்...! வந்தவன் தனியாக வரவி…
-
- 3 replies
- 892 views
-
-
படிச்சன் பிடிச்சிருந்தது எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை) செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு. காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து எ…
-
- 3 replies
- 1.2k views
-
-
இங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்…
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி எம்.டி.முத்துக்குமாரசாமி மாதவன் அந்தக் கண்ணாடியை மதுக்கூடத்தில் கொண்டு வந்து வைத்த நாளிலிருந்துதான் அங்கே வியாபாரம் செழிக்கத் தொடங்கியது என்பது ஹோட்டலில் ஒரு பரவலான நம்பிக்கை. மாதவன் அந்த ஆளுயரக்கண்ணாடியை பழம்பொருள்கள் அங்காடியிலிருந்து வாங்கிவந்திருந்தான். தேக்கு மர ஃபிரேமுக்கு வார்னீஷ் அடித்தவுடன் அதற்கு ஒரு புதுப் பொலிவு வந்து விட்டது. ஆங்காங்கே ரசம் போய் சிறு சிறு வெள்ளைப்புள்ளிகள் கண்ணாடியெங்கும் விரவியிருந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் அந்த ஆளுயரக் கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்போது ரசம் போன புள்ளிகள் வேறொரு கோலத்தினை உங்கள் மேல் வரைந்தன. கோலத்தினை பார்ப்பவர்கள் தங்களைப் பார்க்க இயலுவதில்லை; தங்களைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒட்டகத்தைத் தேடி நேரம் 15.20 பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. 15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான். எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால், ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது. குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ் ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப் பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 15.27 கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன். ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது, இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி. நடை மெல்ல ஓட்டமாக மாறியது. நேரம் 15.33 மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன் ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாச…
-
- 3 replies
- 1.2k views
-
-
சட்டவிரோதக்குடியேற்றவாசியி
-
- 3 replies
- 1.2k views
-
-
இமயம் நோக்கி மீண்டும்… மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம். ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்…
-
- 3 replies
- 814 views
-
-
தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…
-
- 3 replies
- 1.9k views
-
-
வீட்டுக்கு விருந்தாளி வந்தாலே……! பகீரென்கிறது மனசு… அய்யோ……! கூரைமீதிருந்த…… காகம் கரைகிறதே…! இதயத்துடிப்பு இன்னும் அதிகரிக்கிறது.. ! நிச்சயம் இன்றைக்கு விருந்தாளி யாராவது வருவாங்க….! என் சுற்றத்தை சுற்றும் முற்றும் வாஞ்சையடன் பார்க்கிறேன்…! ஆபத்து நெருங்குகிறது…! இன்று- யாரோ ஒருவர் காலி நிச்சயமாகத் தெரிந்துவிட்டது ..! விருந்தாளி வந்தேவிட்டார்…! வீட்டில் ஏற்பட்ட களேபரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்…! நன்றி முகநூல் பக்கம்
-
- 3 replies
- 691 views
-
-
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் க…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஹே ராம் காலபைரவன் பேருந்தில் உடன் பயணிக்கும் ஒருவர் தன்னை, “அயோத்தி ராமர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடல் முழுவதும் மெல்ல நடுக்கம் பரவியது. அவர் கூறியதிலிருந்து சுலபத்தில் மீள முடியவில்லை. “நீங்கள் கூறுவது உண்மைதானா?” எனும்படி அவரை ஆழ்ந்து பார்த்தேன். தனது காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்து, செல்லமாகக் கிள்ளிய போது தான் சுயநினைவுக்கு மீண்டேன். மட்டமான மதுவை அவர் அருந்தி இருக்கக் கூடும் என்பதை அவரிடமிருந்து வந்த நாற்றத்தை வைத்து ஓரளவு யூகிக்க முடிந்தது. பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கோடைகால மாதலால் ஒரே உஷ்ணம். வேர்த்துக் கொட்டியது. உறவினர்களைப் பார்ப்பதன் பொருட்டு கு…
-
- 3 replies
- 2k views
-
-
அனாதை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொன்று, 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த மருதப்பன் மீதான வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. வழக்கின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்த நீதிபதி, இருதரப்பு நியாயங்களையும் கேட்டபிறகு பேச ஆரம்பித்தார். ‘‘மருதப்பனின் கைரேகையும், அவருடைய இருப்பிடத்திலிருந்து எடுக்கப்பட்ட நகைகளும், மருதப்பன்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறது. மருதப்பன் ஆறுமாத கைக்குழந்தையின் உயிரைக்கூட விட்டு வைக்கவில்லை. அந்த ஆறு மாத கைக்குழந்தை இவர் கொள்ளையடிப்பதை தடுக்கப்போவதில்லை. இது மிகவும் கொடூரமான செயல். மருதப்பனிடம்…
-
- 3 replies
- 1.9k views
-
-
அந்தரங்கம் புனிதமானது "புவனா! என்ன சொல்றதுன்னே தெரியலே...... இதைப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைத்தேன்... ஆனால் யாரிடமாவது பேசினால் மனம் கொஞ்சம் லேசாகும்னு தோணுது.... அம்மாகிட்ட பேசமுடியாத பல விஷயங்களை உன்கிட்ட பேசி இருக்கேன்.... வா காபி சாப்டுண்டே பேசலாம்" புவனா கை பிடித்து கூட்டிப் போனாள் சுமிதா... " சரி வா.... " இருவரும் கான்டீன் பக்கம் சென்றனர்.... அங்கு கூட்டம் அதிகம் இல்லை... இவர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்... "சொல்லு சுமிதா... என்ன? " குழப்பத்துடன் இருந்த புவனா கேட்க.... " எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 மாசம்தான் ஆறது....சந்தோஷமாத்தான் இருக்கோம்.... நேத்திக்கு அவர் வாக்கிங் போயிருந்தப்போ மெசேஜ் வந்தது அவருக்கு ..... …
-
- 3 replies
- 2.1k views
-
-
[size=5]பனங்கொட்டை பொறுக்கி[/size] குரு அரவிந்தன் உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்…
-
- 3 replies
- 1.1k views
-