கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கண்ணன் - சிறுகதை சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம் லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது. இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந…
-
- 1 reply
- 1.8k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
அதிகாலை ஆஸ்பத்திரி கூச்சலும் குக்குரலுமாக பதறிக்கொண்டிருந்தது பிறப்பு , இறப்பை தீர்மானிப்பதல்லவா இந்த ஆஸ்பத்திரி பிரசவத்திற்காக சர்மிதாவும் தனது முதல் பிரசவத்திற்காக அலறியே துடிதுடித்துக்கொண்டிருந்தாள் அவளுடனும் பல பெண்கள் அன்றைய நாள் பிரசவத்திற்க்காக கையில் கட்டப்பட்ட இலக்க மட்டைகளை அணிந்து படுத்திருந்தனர் அவளின் முதல் பிரசவம் அவளை கட்டிலில் உளத்த செய்தது அவளோ ஐயோ ஐயோ அம்மா என துடிதுடித்துக்கொண்டிருந்தாள். அவள் கணவனோ ஆறுதல் சொல்ல முடியாமல் அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான் வலி அதிகரிக்கும் போது அவளோ அவன் கைகளை கடிக்க தொடங்கினாள் வலியின் வேதனையால் பிரசவ விடுதியின் முன்பு அவளை அழைத்து செல்ல ஆயத்தமாக அவனோ ஆயிரம் கடவுள்களை வேண்டி நின்றான் அவளுக்காகவும் அவள…
-
- 8 replies
- 1.8k views
-
-
மூன்று சீலைகள் - நரன் ஓவியங்கள் : ரவி உச்சி வெயிலில் கருநாயொன்று அண்ணாந்து, ஆகாசத்தை நோக்கி மூஞ்சியைத் தூக்கி ஊளையிட்டது. பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஊளையிட்டபடியே காசியின் நிழலைத் தொடர்ந்தது. கண் முன்னே வெயில் அலைபோலத் திரிந்துகொண்டிருந்தது. கருவேலம் மண்டிக்கிடக்கும் நீரற்ற கண்மாய்க்குள் இறங்கி, முழங்காலுக்குக் கீழே முட்கள் காலில் கிழிப்பதைப் பொருட்படுத்தாது, சுரத்தே இல்லாமல் நடந்துகொண்டிருந்தான் காசி. காசியின் செருப்பில்லாத கால்களில் புழுதி அப்பிக்கிடந்தது. எப்போதோ கால்கள் கல்லில் எத்தி, பெருவிரலில் ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. மூன்றோ, நான்கோ அழுக்கேறிப்போன கிழிந்த வேஷ்டிகளை இடுப்பில் சுற்றியிருந்தான். கிழிசல்கள் நடுவே கட்டம்போட்ட லுங்கி ஒன்று.…
-
- 1 reply
- 1.8k views
-
-
காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது போல் இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன் தாய் நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார். தாயார் வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர். .தாயார் ஆண்பிள்ளை என்று அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்படியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம…
-
- 13 replies
- 1.8k views
-
-
எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” என என்னைப் பார்த்து கேட்டாள். எனக்கு அது நன்றாகவே நினைவிருந்தது. அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும். “அன்று நாங்கள் உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா.. ஜெப வீடு, ப்ளுபெர்ரி தோட்டம், இவ்வளவு ஏன் கிணற்றி…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை பொள்ளாச்சி அபி, ஓவியங்கள்: ஸ்யாம் ''ஏய் சரசு... மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!'' - சிவகாமி இரைந்தாள். அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ''தள்ளுங்க... தள்ளுங்க... கொஞ்சம் இருங்க வர்றேன்...'' என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள். சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்... அப்படியே அம்மாவுக்கு நேர் எதிர். என்ன... நிறத்தில் அம்மாவைவிட கொஞ்சம் கம்மி. அவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
புரிதல்: ஒரு நிமிடக் கதை "பாலு! இந்தக் காலத்துல சாதி மதம் எல்லாம் ஏது? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சிருக்குது." - திவ்யாவின் பெரியப்பா முருகேசன் தம்பி பாலுவிடம் சொன்னார். "அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத்கிட்டே இருக்குது. நாம ஒத்துக்கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?" திவ்யாவின் சித்தப்பா பிரபாகரும் தன் பங்குக்கு சொன்னார். ‘பெரியப்பாவும் சித்தப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக்கிறார…
-
- 3 replies
- 1.8k views
-
-
அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன். அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். ...... என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும். பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம் சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனா…
-
-
- 28 replies
- 1.8k views
- 1 follower
-
-
அழகுக்குட்டி செல்லம் சென்ற வார விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு சென்று இருந்தேன்..அவளுக்கு பெண குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை, அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார். நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன் வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள். கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில் எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருப்பாள். . இதனால் தாயும் காலயில் சேர…
-
- 6 replies
- 1.8k views
-
-
(இது சிறுகதைதான் ஆனால் நீளமான சிறுகதை) வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம். அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது. அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்…
-
- 20 replies
- 1.8k views
-
-
நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது. இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஸ்பரிசம் - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: செந்தில் சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த சாயம்போன இருட்டிலும் உடலின் மீது போர்த்தியிருந்த வெள்ளை வேட்டி மட்டும் பளிச்செனத் தெரிந்தது. சுமைதாங்கிக் கல்லைப் பக்கவாட்டில் தாங்கியிருந்த புங்கமரம், வழக்கத்துக்கு மாறாக தன் நீண்ட கிளைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு நின்ற…
-
- 1 reply
- 1.8k views
-
-
கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம் பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. " இந்தமுறையாவது ஓப்பிறேசனைச்செய்து விடுங்கோ" " அவளைப்பார்கிறதோ இவளைப் பார்ப்பியளோ நல்லாய்த்தான் கரைச்சல் படப்போறியள்". " அப்படி என்ன பார்வை, என்ன கரைச்சல், சனம் எதுக்கு மூக்கால அழுகுது?' ஒன்றுமாய் புரியவில்லை. எட்டாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடு அட்வைஸ் செய்யலாயினர். அத்தை மாத்திரம் மகளிடம் "அஞ்சு பிள்ளைதான்டி அதிஷ்டம்... இன்ன…
-
- 1 reply
- 1.8k views
-
-
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், "ஹலோ" சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். "என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ?" "நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க?" தலையாட்டினாள். "ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை." "நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான்." " அதனால? " " பொதுவா இங்க ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் விரோதி மாதிரிப் பார்ப்பான். அதிலும் L1 விசாவில் வந்திருக்கும் அவுட் ஸோர்சிங் ஆள்ன்னு தெரிஞ்சா பரம விரோதி மாதிரிப் பார்ப்பான்.…
-
- 4 replies
- 1.8k views
-
-
தட்டான்பூச்சிகளின் வீடு..(மாரிசெல்வராஜ்) கோவில் கொடை கொடுத்தாயிற்று இன்னும் பலி மட்டும் கொடுத்துவிட்டால் சாமி திருப்தி ஆகிவிடும் அதோடு கொடையையும் முடித்து விடலாம். ஆனால் பலி ஆடுகளுக்கு நாம் எங்கே போவது அதையும் சாமிதான் கொடுக்க வேண்டும் . இதோ என்னிடம் மூன்று பலி ஆடுகள் இருக்கின்றன உனக்கு வேண்டுமானால் ஒன்றை கடனாக தருகிறேன் ஆனால் அடுத்தக்கொடையில் அதை நீ எனக்கு திருப்பித்தர வேண்டும். “ஐயோ ச் சீ பாவம் தட்டான்பூச்சிகளை எப்படி ஆடுகளாய் கொல்வது ?” “சாமிதான் சொல்லிச்சு எனக்கு இந்த கொடைக்கு தட்டான் பூச்சிகளை பலி கொடு என்று “ “இல்ல நீ பொய் சொல்லுற சாமி அப்படி சொல்லிருக்காது நான் விளையாட்டுக்கே வரல போ” “பலி கொடுக்காமல் நீ கொடையை முடிக்காமல் போனால…
-
- 3 replies
- 1.8k views
-
-
முருகா நீ ஏன் இப்படிக்... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரங்கன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு …
-
- 6 replies
- 1.8k views
-
-
லவ் ‘‘என்னடா, தரணி! நீ லதாவை ஒன் சைடா லவ் பண்றதா சொன்னே... ஆனா, எப்பவும் ஸ்கூல், படிப்புன்னே சுத்திட்டு இருக்கே? அவ பின்னாடியே சுத்தினாதானே சரியான சமயத்துல ‘ஐ லவ் யூ’ சொல்ல முடியும்?’’ - என் அட்வைஸைக் கேட்டு தரணி ஒன்றுமே சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். நாங்கள் +2 முடித்தபோது தரணி நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது லதா அவள் வகுப்புத் தோழன் ஒருவனைக் காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை தரணியிடம் சொன்னபோதும் சிரிப்புதான் பதில். கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான் தரணி. சில மாதங்களிலேயே கல்யாணப் பத்திரிகையோடு வந்தான். கூடவே லதாவும். அவள்தான் மணப்பெண்ணாம். ‘‘எப்படிடா?’’ - ரகசியமாய்க் கேட்டே…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம் ஓவியங்கள் : ரமணன் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’ …
-
- 1 reply
- 1.8k views
-
-
வேண்டாம் அருண் ....விடுங்க ப்ளீஸ்.... நாம பழகி சில நாட்கள் தானே ஆகுது..கல்யாணத்துக்கு முன்ன இதெல்லாம் வேண்டாம் அருண்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!!! ஹேய்! நம்ம காதலப்பத்தி வீட்ல சொல்லிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க..அப்ரம் ஏன் கவலைப்புடுற? கண்டிப்பா உன்ன நான் கல்யாணம் பன்னிப்பேன் இது சத்தியம் என்றான் அருண்..!! மீண்டும் சிணுங்கினாள் மோனிகா.... இன்பம் முடிந்தது பொழுதும் விடிந்தது. சில நாட்களுக்கு பிறகு.. அருணின் அலுவலகத்துக்குள் புகுந்தாள் மோனிகா.. ”என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துது அருண்.. நான் அப்டியா பழகினேன்? இப்டி பண்ணிட்டியே” நீ நல்லாவே இருக்க மாட்டடா...பாவி. கண்ணீர் வடித்தாள் கூச்சலிட்டாள்... ஹேய் நிறுத்து ! 1000 ரூபாய் கட்டொன்றை எடுத…
-
- 12 replies
- 1.8k views
-
-
மாட்டு வண்டி.... ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தின…
-
- 0 replies
- 1.8k views
-
-
உயிர் நண்பன் ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற் பட்டது. அப்போது ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால் அறை வாங் கியவன் அதற்கு கோபப் படாமல், அமைதி யாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்” என்று எழுதினான். அதைப் பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். அங்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
எனக்குப் பிடித்த கதைகள் 30 மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் •• இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு நிமிடக் கதை பிறந்தநாள் இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்…
-
- 0 replies
- 1.8k views
-