Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by அபிராம்,

    இனிய உறவுகளே !. இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள். அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன். பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்த…

  2. ஒரு நிமிடக் கதை: டிவி பக்கத்து பிளாட்டில் அந்த பாட்டி குடிவந்து சில மாதங்கள் ஆகிறது. அவர் வீட்டில் எப்போதும் டிவி அலறிக்கொண்டு இருக்கும். காதைப் பொத்திக் கொள்ளாத குறையாக நான் நாள் முழுவதும் டென்ஷனில் இருப்பேன். இந்த சத்த அலர்ஜியால் நான் டிவி பார்ப்பதோ, ரேடியோ கேட்பதோ இல்லை. சுத்தமாக விட்டுவிட்டேன் என்றே சொல்லலாம்! கடந்த சில நாட்களாக என்ன நடந்ததோ தெரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்து டிவி சத்தம் வரவே இல்லை. என் கணவரிடம் அதை சொன்னேன். “என்னம்மா சொல்ற?... அவங்க வீட்டு டிவி ரிப்பேர் ஆயிருக்குமோ?... பாவம், அந்த பாட்டி என்ன செய் வாங்க?... டிவியை ச…

    • 1 reply
    • 1.8k views
  3. முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து…

  4. உறவும் வரும் பகையும் .வரும் ..... பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர் .மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள் .தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களு…

  5. அர்த்தம் அற்ற பிழை அனோஜன் பாலகிருஷ்ணன் கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள். அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களி…

  6. பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்... (வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?! கோலியாத்: ஆம்.. நானே தான் அது. முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??! கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?! முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??! கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும். (முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். …

  7. பருவத்தே செய்யும் பயிர் .............. அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் . சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்…

    • 8 replies
    • 1.8k views
  8. முற்றுப் பெறாத கனவுகளின் கதை... பாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவாரஸ்யமும்,புதிரும் பூத்துக்கிடக்கும் அவளின் அனுபவங்களை வார்த்தைகளாக அசை போட்டுக்கொண்டிருப்பாள்... பாட்டியின் வர்ணனைகளில் மயங்கி நின்றபடி அவள் வார்த்தைகளில் இருந்து தெறிக்கும் தலைமுறைகளின் கதைகளை நான் சேகரித்துக்கொண்டிருப்பேன்... எங்கள் கிராமம் தலைமுறைகள் கூடிக் கூடி விளைந்த முற்றம்...அவர்களின் பேச்சும்,சிரிப்பும்,அழுகையும்,சந்தோசம்களும் ,துக்கம்களும் கால நிழல்களாக அந்தக் கிராமத்தின் முற்றங்கள் முழுவதும் படிந்திருக்கின்றன...மனிதர்களின் காலடித்தடங்களும்,பிம்பங்களும்,பேச்சொலிகளும் படிந்துபடிந்து தலைமு…

    • 14 replies
    • 1.8k views
  9. “ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...” வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்த…

    • 0 replies
    • 1.8k views
  10. கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும், ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள். O/L முடித்து கொமர்ஸ் படிக்க வாற குறூப்புகள் பலவகை. முதலாவது குறூப் கொமர்ஸில் கண்டதும் கொண்ட காதலால் படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம். இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பா…

  11. மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம

  12. அடோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே. கியபங். (அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா) அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது. எனக்கு தெரியாது. அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான். தலையை நீரினுள் அமிழ்த்தி, முகத்தில் பெற்றோல் பை கட்டி, மூக்கிலே மிளகாய் தூள் தூவி, வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி, உடம்பிலே மின் பாய்ச்சி, தலைகீழாக கட்டி அடிச்சு, குறட்டினாலே நகம் புடுங்கி, கையிலே ஆணி அடிச்சு, ஆணுறுப்பை உயிர் போக அழுத்தி, கால்களை அமில வாளிக்குள் தோய்த்து, அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்…

    • 16 replies
    • 1.8k views
  13. மனிதநேயம் என்றபெயரில் புகழ்ச்சி தேடும் கரங்கள் ******************************************* மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..? ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கிள் தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..? ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கிள் தந்த போட்டோவை பத்திரிகையி…

  14. இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல! இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்; உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும…

    • 2 replies
    • 1.8k views
  15. மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி செப்ரெம்பர் 17, 2012 மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி , கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன். “அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்ற…

  16. அகல்யை புதுமைப்பித்தன் வேதகாலம் சிந்து நதி தீரத்திலே... இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது. அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் கு…

  17. அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன் ஓவியங்கள் : செந்தில் சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன். நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை. அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிற…

  18. நினைவழியா நாட்கள் அந்த விடிகாலைப் பொழுதின் அமைதியைக் குலைத்தபடி விமானச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த நிலையால் அரைத் தூக்கத்தில் எழுந்த எமக்கு என்ன செய்வது? எதை எடுப்பது? ஓடுவதா? அல்லது பங்கருக்குள் ஒளிவதா? எதையும் சிந்தித்துச் செயலாற்ற சந்தர்ப்பம் இதுவல்ல. கையிலகப்பட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு விரைந்தோம். வீதியெங்கும் மக்கள் தம் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை குத்திட்ட விமானங்களிலிருந்து குண்டுமழை பொழியும் போது குப்புறப் படுத்து விழுந்து எழும்பி ஓடிக்கொண்டிருந்தோம். எப்படியோ பக்கத்துக் கிராமத்திலிருந்த ஓர் ஆலயத்தை அண்மித்து அதற்குள் அடைக்கலமாகிக் கொண்டோம். அன்றுமுதல் ஆலயம் அகதிமுகாமாகியது…

  19. வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …

  20. சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி ..... புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் , ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில் கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் . பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம் அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் . மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது . அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன் ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் .. இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை.. என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு …

    • 3 replies
    • 1.8k views
  21. Started by நவீனன்,

    கடை - சிறுகதை ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமைய…

  22. கற்பு!… ( சிறுகதை ) வரதர். July 03, 2018 சிறப்புச் சிறுகதைகள் (6) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தி.ச.வரதராசன் எழுதிய ‘கற்பு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். ”மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர். ”ஓமோம், ஆரப்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏ…

    • 4 replies
    • 1.8k views
  23. இன்றைக்கு தந்தையர் நாள் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதிலே இருந்து என்னுடைய ஈழப் பயணக் கட்டுரையை தொடர்கிறேன். பல குழப்பங்களுக்கு மத்தியிலும் நான் ஊருக்குப் போவதற்கு முடிவெடுத்ததற்கு என்னுடைய தாயும் தந்தையும் முக்கிய காரணம். என்னுடைய தாய் ஜேர்மனிக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போய் விட்டார். ஆயினும் அவருக்கு வேறு ஒரு கவலை. அவரை பல விதமான நோய்கள் ஆட்கொண்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பேயே அவர் இறந்து விடுவார் என்று வேறு அவரிடம் ஒரு சோதிடன் சொல்லியிருந்தான். இரண்டு மகன்களும் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், இருவருமே இதுவரை தாயகத்திற்கு வந்து போகாத நிலையில், அதற்கான வசதிகள் இல்லாத நிலையில், தனக்கு ஒன்று என்றால் யார் எல்லாவற்றையும் செய்வார்கள் என்…

    • 17 replies
    • 1.8k views
  24. அவளுக்குள் ஒரு மனம் .... கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை முடித்து தேநீருடன் பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன் செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய உணவையும் சிற்றுண்டி களையும் கொடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.