கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
குணா “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே. ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை. நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கை…
-
- 1 reply
- 1.7k views
-
-
காமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா ஓவியம் : ரமணன் அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் ம…
-
- 2 replies
- 1.7k views
-
-
அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …
-
- 2 replies
- 1.7k views
-
-
வணக்கம் அன்பின் கதாசிரியர்களிற்கான அன்பான வேண்டுகோள். உங்கள் ஆக்கங்களை உங்கள் உரிமையுடன் வானலை வழியாக இசையும் கதையுமாக ஒலிபரப்ப எண்ணியுள்ளேன் . அதற்கு தங்கள் ஓத்துழைப்பு மிகமகி அவசியம். இதுவரை எழுதிய கதைகளை உங்கள் பெயர்களுடன் எனக்கு ஈமெயில் செய்யலாம். கதைக்கு உகந்த பாடல்களையும் உங்கள் விருப்பிற்கேற்ப தெரிவுசெய்து அனுப்பலாம். நிகழ்ச்சி மாதத்தில் இரு தடவைகள் எண்ணியுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே என்பதையும் அறியத்தருகின்றேன். எனது ஈமெயில் nparaneetharan@gmail.com இப்படிக்கு நட்புடன் உங்கள் பதிலை ஆக்கங்களுடன் விரைவில் எதிர்பார்த்து பரணீதரன்
-
- 10 replies
- 1.7k views
-
-
யேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தினால் இ.த. இராஜனின் (யாழ்கள மணிதாசனின்) நெறியாள்கையில் பொங்கல் விழா (தை 2007) அன்று மேடையேற்றப்பட்ட நாடகம். இது ஒரு சற் கதையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. இங்கே இணைத்து உங்களது கருத்துக்களை இதுபறற்றி அறிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.ன். http://tamilamutham.net/amutham/index.php?...3&Itemid=30
-
- 4 replies
- 1.7k views
-
-
நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. இது நடந்து இன்றிலிருந்து 13 வருடங்கள் இருக்கும். அன்றைய வருடமும், வழமை போல் வருடத்தின் இறுதியில் அப்பாவும், நானும் தாயகத்தை நோக்கி செல்கின்றோம். இந்த முறை பயணத்திற்கான காரணம் என் அப்பாச்சிக்கு நடக்கவிருந்த சத்திரசிகிச்சை. கண்ணில் சிறு கோளாறு, எம்மிடத்தில் தான் மருத்துவத்திற்கு தேவையானவை இருப்பதில்லை…
-
- 7 replies
- 1.7k views
-
-
அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் . அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக…
-
- 9 replies
- 1.7k views
-
-
கௌரவம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் ``மோகன் இல்லாம எப்படிடா விளையாடுறது? பெரிய டீம் வேற.” “அதுக்காக அவனை எப்படிக் கூப்புடுவ? ஒரு வாரம் நாயா சுத்தி, நேத்துத்தான் கண்டுபிடிச்சுத் தூக்கிட்டு வந்திருக்கானுக அவன் தங்கச்சிய. வர மாட்டான் மாப்ள!” சக நண்பனின் தங்கை, காதல் கல்யாணம் செய்து ஊரைவிட்டு ஓடியது நேற்று வரை பெரிதாகப் பேசப்பட்டாலும், இன்று கபில் புல்லட்ஸ் அணியினருடன் கிரிக்கெட் மேட்ச் என்பதே முக்கியத்துவம் பெற்ற உணர்வாக இருந்தது எங்களுக்கு. ஜெயவிலாஸ் பாலத்துக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள், கபில் புல்லட்ஸ் அணியினர். அடுத்த ஏரியா. சற்று திகிலாக இருந்தாலும் உற்சாகம் மிதமிஞ்சி இருந்தது. `கபில் புல்லட்ஸ்’ அணியினருடன் இன்று மோதப்போகிறோம்…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனதைத் தொட்ட பதிவு...! பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், …
-
- 2 replies
- 1.7k views
-
-
என் வலைப்பூவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நான் எழுதி வரும் ஒரு சிறு அனுபவப்பதிவு..என்னை எழுத தூண்டிய யாழில் பதியும் ஆசையுடன்.. தமிழ்மணத்தில் இணைந்த பின்னர் உங்களில் பலரின் வலைப்பூக்களை பார்த்தேன். அதில் பெரும்பாலனவை அனுபவப்பதிவுகளாகவே இருக்கின்றது. பெரும்பாலும் நான் எழுதுவதும் எனது அனுபவங்களையோ, அல்லது என்னை சுற்றி நடப்பவையாகவே இருக்கும். ஈழத்தில் வருடக்கணக்கில் வாழாவிடினும், எனக்கும் பங்கருக்குள் தொடர்ந்து பல நாட்கள் வசித்த அனுபவம் உண்டு. சாவையும், இரத்தத்தையும் நானும் பார்த்திருக்கின்றேன். காயம்பட்டவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கின்றேன். வெளிநாட்டு மண்ணிலேயெ இருந்த எனக்கு, ஊர் செல்லும் காலம் வந்தால் இருக்கும் மனநிலையை எழுத்தில் …
-
- 8 replies
- 1.7k views
-
-
ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே.…
-
-
- 11 replies
- 1.7k views
-
-
2007 ஆவணி காலை 7.30 மணி, 27 வருடத்திற்கு பிறகு கோண்டாவில் சந்தியில் கொண்டுவந்து நண்பன் என்னையும் மனைவியையும் இறக்கி விட்டு எதற்கும் முதல் நந்தவனம் போய் பாஸ் எடுங்கள்,பிறகு மற்ற அலுவல்கள் எல்லாம் என்றான். எனது சந்தி,நான் காலகாலமாக உழுது திரிந்தசந்தி அந்நிய பிரதேசமாக காட்சி அழித்தது.தெரிந்தவர் எவருமில்லை.சனங்ககள் திரியுது எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.பான்ஸ்சோட திரியிற எனது மனுசி புலி அலுவலகம் என்று சல்வார் அணிந்து வந்தார், எல்லாம் ஒரு நடிப்பு அதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். நந்தவனத்தில் போய் இருக்கின்றேன்.சற்று தள்ளி எங்களது தோட்டக்காணி,அருகில் நான் சிக்சர் சிக்சர் ஆக அடித்து தள்ளிய விளையாட்டு மைதானம்.யாருடனாவது கதைக்க வேணும் போலுள்ளது தெரிந்த முகம் எதுவு…
-
- 9 replies
- 1.7k views
-
-
திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?
-
- 0 replies
- 1.7k views
-
-
மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்' கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது. கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
அவர்கள் ஏன் அந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினமோ என்று தெரியவில்லை என்று புலம்பினார்கள்.. அந்த புலம்பலில் அவர்களுக்கு பட்ட மனரீதியான வேதனை உடல் ரீதியான வேதனை இல்லாமால் போனது என்று இல்லை, வாடகை விடும் வாகனத்தின் நிறுவனத்தின் முதலாளி தான் இவர்களுக்கு சாரதியாக லண்டனிலிருந்து பிரான்ஸ் போகும் வரை .அதுவே அவர்களின் பிரச்சனையாக உருவெடுத்து அலைக்கழித்து சீரழிந்த பிரயாணமாக முடிவுற்றது. இந்த 17 பேர் கொண்ட குழுவினர் பாரிஸ் நகரத்தில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளுவதற்க்காகவே இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் ,பொதுவாக இறுதி நிகழ்வுக்காக கலந்து கொள்ள போவதால் அவர்களுக்கு முகத்தில் ஒரு இறுக்கம் மற்றும் சலனம் இருப்பது வழமை அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் அந்த வாகனத்த…
-
- 7 replies
- 1.7k views
-
-
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…
-
- 13 replies
- 1.7k views
-
-
1. ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான். ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவன…
-
- 3 replies
- 1.7k views
-
-
அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…
-
- 14 replies
- 1.7k views
-
-
குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் … குட் மோர்னிங் கும.. கொட்டாவியால் “ரன்” சொல்லியவாறே என்னுடைய தலையணையையும் இழுத்து அணைத்துக்கொண்டே மற்றப்பக்கம் ஒருக்களித்துப்படுக்கும் மேகலாவுக்கு சென்றவாரத்தோடு இருப்பத்தேழு வயது முடிந்தது என்று நம்புவதற்கு அம்மாளாச்சிக்கு தலையில் வைத்து சத்தியம் செய்யவேண்டும். கொஞ்சம் குட்டை முடி. மிஞ்சிப்போனால் தோளின்கீழ் அரையடி நீண்டாலே அதிகம் தான். ஸ்லீக்காக சென்று, முடிவில் கேர்லியாக வளைந்து நிற்பது எப்படி என்று கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. சொல்லுகிறாள் இல்லை பாவி. அனிச்சையாக முடியை தவழவிட்டு மீண்டும் தலையணைக்குள் முகம் புதைக்கிறாள். பிரவுண் ப்ளெய்ன் கலரில் போர்வை. இழுத்துப்போர்த்துக்கொண்டு, மேகலா விண்டர்…
-
- 10 replies
- 1.7k views
-
-
மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில்…
-
- 1 reply
- 1.7k views
-
-
அளவோடு ஆசைப்படு ! ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? எ…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில…. அம்மா….அம்மா…அம்மா….எனக்கு அம்மாட்:டைப் போகவேணும்….. அவள் கதறக்கதற கொடிய கரங்கள் அவளை இழுத்துக் கொண்டு போகின்றன……என்ர பிள்ளை….என்ரை பிள்ளையை விடுங்கோ……என்ற அவளது கதறலையும் கேட்காமல் கார்த்தினி இழுபட்டுக் கொண்டு போனாள்….அவள் நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும் உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிற அவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்து நொருங்குகிறது. கமலினி…கமலினி….என்ன….பக்கத்த ில் படுத்திருந்த கணவனின் குரல் அவளை மீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவான அணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை….. என்ர பிள்ளையப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஆசி பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி! - கே.மணிகண்டன் ஓய்வு “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்! - பிரகாஷ் ஷர்மா நாடகம் ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்! - இரா.இரவிக்குமார் ஸ்டேட்டஸ் நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்! - பெ.பாண்டியன் சண்டை “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே…
-
- 0 replies
- 1.7k views
-
-
கி.ரா. கதைகள் கி.ரா. கதைகள் ஒரு தலை அவளைப் பார்த்தான் அவன். …
-
- 0 replies
- 1.7k views
-
-
முற்றத்து ஒற்றைப் பனை 'செங்கை ஆழியான்' -------------------------------------------------------------------------------- முற்றுத்து ஒற்றைப் பனை நகைச்சுவை நவீனம் 'செங்கை ஆழியான்' ஒரு 'சிரித்திரன்' பிரசுரம் ------------------------------------------------------------- முதலாம் பதிப்பு, யூன், 1972 முற்றத்து ஒற்றைப் பனை. © செங்கை ஆழியான், (க. குணராசா, B. A. Hons, C. A. S.) அச்சுப்பதிவு: ஸ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம். ஓவியம்: 'கணேஷ்' ஆசிரியரின் ஏனைய நு}ல்கள் 1) ஆச்சி பயணம் போகிறாள் 2-00 2) நந்திக்கடல் 2-00 3) சுருட்டுக்கைத்தொழில் 1-00 4) அலைகடல்தான் ஓயாதோ? 1-25 5) சித்திரா பௌர்ணமி -/80 6) ஒரு பட்டதாரிய…
-
- 14 replies
- 1.7k views
-