கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
"சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள்…
-
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில் ஓவியங்கள் : வேல் அது, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந…
-
- 2 replies
- 2.7k views
-
-
ஸ்கிரிப்ட் ஆதவனே கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவனது பேய்ப்பட ஸ்கிரிப்ட், தயாரிப்பாளரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.‘‘சூப்பர் தம்பி, இப்போதைய ட்ரெண்டுக்கு இந்தப் படம் பெரிய ஹிட்டாகும். நாளைக்கே வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோ. நீ நல்ல வார்த்தைகளா போட்டுப் பேசறே! அதனால டயலாக்கும் நீயே எழுதிடு. படம் தொடர்பான எல்லா வேலைகளையும் உடனே ஆரம்பிச்சிடுவோம்’’ என்று தயாரிப்பாளர் சொல்ல, ஆதவனின் இதயம் பேயைப் போலத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. மறு நாள்...அட்வான்ஸ் வாங்கிக்கொள்ள தயாரிப்பாளரின் ஆபீஸுக்கு உற்சாகமாகப் போனான் ஆதவன்.ஆபீஸ் பூட்டியிருந்தது.அந்த அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தன்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகளை இந்த ஆபீஸிலும் அதைச் சுத்தியுமே வைத்துக்கொள்ளலா…
-
- 2 replies
- 1k views
-
-
நேரம் கிடைக்கும் போது படியுங்கள். தீபாவளி சிறப்புச் சிறுகதைதான். ராணியில் வந்தது. (பெண் குழந்தைகள் தினத்திற்கும் பொருத்தமாக இருக்கக் கூடும்) வந்தாள் மகாலக்ஷ்மி “மகாலஷ்மி இல்லாமல் தீபாவளியா? கூடவே கூடாது” அம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். மகாலஷ்மி என்று அம்மா குறிப்பிட்டது பத்மா அண்ணியை. பெரிய அண்ணன் ஹரியின் மனைவி. அம்மா அப்படிச் சொன்னதும் அண்ணாவின் முகத்தில் ஏமாற்றம். தன் நான்கு வயது பெண் குழந்தைக்கு ஆசை ஆசையாய் புது கவுனும், விளையாட்டு பொருட்களும், வாண வேடிக்கைகளும் வாங்கி வந்திருந்தான். எல்லோரும் சேர்ந்து கொண்டாடினால்தான் அது பண்டிகை. குழந்தைக்கும் முழு சந்தோஷமும் கிடைக்கும். அனால் அம்மா சொன்னால் சொன்னதுதான். அவள் பேச்சை மீறி யாரும் பண்டிகை கொண்டாட மாட்டார…
-
- 2 replies
- 1.5k views
-
-
யுகக்குருதி: சித்தாந்தன் “நீ எங்கே இருந்து வருகின்றாய்” “நான் இன்மையிலிருந்து வருகின்றேன்” “இன்மையிலிருந்தா” “ஆம் இன்மையிலிருந்துதான்” அவர்களின் உரையாடல் எனக்கு விசித்திரமாகப்பட்டது. அந்த மண்டபத்துள் அவர்கள் மட்டுந்தான் அமர்ந்திருந்தனர். அவர்களை எனக்கு யார் என்றே தெரியாது. ஊருக்குப் புதியவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று இழை பிரிந்த, முற்றிலிலும் புதியதான சங்கீதம் போல அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இன்னும் நாகரீகம் தீண்டாத இடங்களிலிருந்து வந்தவர்கள் போல இருக்க வேண்டும். ஆதிமனிதச் சாயலோடு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்பு மேலிடப் பார்க்கும் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக் கொண்டி…
-
- 2 replies
- 816 views
-
-
சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்கள் எழுதிய அவரது கண்ணீர்த்துளிகள். வாசித்து முடிந்தும் இன்னும் தந்தையின் கண்ணீரை வெல்ல முடியாது தோற்றுப்போகிறேன். சில முடிவுகள், சிலநிமிடக்கோபம் சிலரது வாழ்வை எவ்வளவு துயரங்களால் நிரப்பியிருக்கிறது என்ற உண்மையை தனது வாழ்வை அப்படியே ஒளிவு மறைவின்றி பலருக்கான பாடமாக எழுதி துணிச்சலோடு வெளியிட்டுள்ளார். இனி சஞ்சயனின் எழுத்துக்களை வாசியுங்கள். அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி மாசி மாதம் 2014 ல் மலைகள் இணையத்தளத்தில் வெளிவந்த எனது பதிவினை இங்கு இணைத்திருக்கிறேன். ------------------------------------------------------------------------------------------- அன்பான எனது பூக்குட்டிக்கு! நாளை உனக்கு பிறந்தநாள். வாழ்க்கையின் அற்புதமான பதின்மக…
-
- 2 replies
- 866 views
-
-
இன்ஜினீயரம்மா!' ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை 'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர். சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூ…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமா…
-
- 2 replies
- 1.2k views
-
-
பழனி மலை பூக்காரி | சிறுகதை | பொன் குலேந்திரன். ஆறு படைகளில் மூன்றாம் படைவீடான பழனி மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரம் உள்ள மலையை 690 படிகள் எறி பக்தர்கள் கடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. அந்த மலையில் பல பூக்கடைகள் இருந்தாலும் பூக்காரி வள்ளியம்மையிடம் பூ வாங்க வரும் பக்தர்கள் அனேகர். அதுக்கு பல காரணங்கள் இருந்தன. அவைகளில் முக்கியம் அவளின்முத்து சிரிப்பழகு. இரண்டாவது தேன் சொட்டும் பேச்சழகு. மூன்றாவது கண் சிமிட்டும் போது அவளின் பார்வையின் அழகு, நான்காவது அவளின் இடையழகு, ஐந்தாவது அவள் மாலை கட்டும் அவளின் விரல்களின் அசைவின் அழகு. ஆறாவது அவளின் நீண்ட கருங் கூந்தல் அ…
-
- 2 replies
- 2k views
-
-
ஆக்காட்டி கோமகன் திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது . 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு எலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப் பரக்க பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்கு பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் …
-
- 2 replies
- 2.7k views
-
-
அது நான்தான் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது. வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
மனதைத் தொட்ட பதிவு...! பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், …
-
- 2 replies
- 1.6k views
-
-
மெல்லுணர்வு (சிறுகதை) 13/01/2014 நடேசன் குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானத…
-
- 2 replies
- 825 views
-
-
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது October 21, 2025 வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author). தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation: எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்த…
-
-
- 2 replies
- 492 views
-
-
நடுநிசி நட்சத்திரங்கள் - சிறுகதை ஆனந்த் ராகவ், ஓவியங்கள்: அனில் கே.எஸ். மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின் படுக்கையில் இருந்து இயற்கையின் அந்த கேன்வாஸை நகர்ந்துகொண்டே ரசிப்பது... பரவச அனுபவம். மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு உடல் சோர்வாக இருந்தாலும், நட்சத்திரச் சிதறல் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் ஆர்வத்தில் தூக்கம்கூடப் பிடிக்கவில்லை. கேமராவும் கையுமாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றும் எனக்கு, நட்சத்திரங்கள் மட்டும் இல்லாவிட்டால் பயணங்கள் சலிப்புற்றுவிடும். வனவிலங்குக் காப்பகங்களிலும், அடர்ந்த காடுகளி…
-
- 2 replies
- 1.5k views
-
-
மரியா மதலேனா - இலங்கையர்கோன் அவள் ஒழுக்கம் தவறியவள். மோக்ஷ வீட்டை நோக்கிச் செல்லும் மனித வர்க்கத்தின் ஞானப் பாதையில் குறுக்கே படம் விரித்தாடும் கொடிய விஷசர்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகனைத் தன் மாயா சக்தியால் வலிந்து இழுத்து மீட்சியில்லாத காமப் படுகுழியில் வீழ்த்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடிமண்டி ….சீ! ஆமாம்! அவள் நிலை தவறியவள் தான். ஆனால் ஏன்? அவளுடைய நடத்தையைக் கண்டனம் செய்த சுத்தப் பிரமுகர்களால் இந்தக் கேள்விக்கு மட்டும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய இருதயத்தின் மேல் கையை வைத்துத் தங்களுடைய மனச் சாட்சிகளைப் பரிசீலனை செய்யவும் அவர்களுக்குத் தைரியமில்லை. மற்றவர்களைக் கண்டனம் செய்யும் பொழுது மட்டும் தாங…
-
- 2 replies
- 605 views
- 1 follower
-
-
நான் கண்ணாடிக்காரன்! "இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு செய்தால் முதலில் அடிப்பார் பிறகு விலாவரியாக சிறப்பு விசாரணையை தொடங்குவார். அவர் வருகிறார் என்றாலே ஒரு பயலும் இருக்கிற இடத்தினை விட்டு அசைய மாட்ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறு வயதிலிருந்து கதை கேட்க பிடிக்கும் கதை வாசிக்க பிடிக்காது . அப்படி கதை வாசிக்க வெளிக்கிட்டாலும் சட்டு பிட்டன்று கதையை சொல்லி முடித்து விட வேணும் . கதை சொல்லுறது என்று வெளிக்கிட்டு உந்த ஆலாபனை எல்லாம் செய்து வாறது எல்லாவற்றவையும் கேட்டு அதுக்குள்ளை கதையின் மையக்கரு எங்கை இருக்கு என்று தேடற பொறுமை இல்லாததால் கதை வாசிக்கிறதில் அதிகம் ஆவல் இல்லாமால் போச்சு. எங்கையாவது படம் காட்டி கார்ட்டூன் படம் காட்டி கதை சொன்னால் ரசிச்சு பார்ப்பது உண்டு . இப்படி எனது கதை இருக்கும் பொழுது .சும்மா நடந்து போற நேரங்களிலை என்னுடன் கதைத்து கதை சொல்ல வெளிக்கிட்டான் ஒருவன் .இவனை இவ்வளவு நாட்களாக காணலை யார் இவன் என்று கூட தெரியாது .தெரியாத ஆளான எனக்கு கதை சொல்ல வெளிக்கிடுறான் என்று யோசித்தத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். எம்.கே.முருகானந்தன் என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதை…
-
- 2 replies
- 1.4k views
-
-
புத்தா சயந்தன் ஸ்ரீபெரும்புத்தூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டுச் சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தக் கதை ஆரம்பிக்கின்ற கும்மிருட்டில் தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டு நரம்பை நசித்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். மேடும் பள்ளமுமான பழங்காலத்துத் தரையில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிளைபிரிகிற அருவியென மூத்திரம் மற்றுமொரு பாதையில் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். நீரில் மெதுவாக முங்குவதைப்போல புலன்கள் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: சொத்து ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு. பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது. தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்… ‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசி…
-
- 2 replies
- 1k views
-
-
வலைபதிவர் தமிழ்நதி சென்னை தமிழில் கதை எழுதி இருக்கார். அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வே…
-
- 2 replies
- 1.1k views
-
-
செல்லம்மாப்பாட்டி. (சிறுகதை) செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான் காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும் அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும். ச…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்க…
-
-
- 2 replies
- 761 views
-
-
2010 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஒரு சனிக்கிழமை காலை நேரம் வேலையில் நிண்டு கொண்டிருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு "ஹலோ நான் ஜொனிகதைக்கிறன் உங்க university க்கு முன்னால தான் நிக்கிறன்" " நான் u .k la இருந்து விடுமுறைல இங்க வந்திருக்கன் என் நண்பன் ஒருவனை தேடி வந்தன் இப்போது அவனின்ட தொடர்பும் அட்ரஸ் ம் இல்லை எனக்கு தங்குவதற்கு கூட இடம் இல்லை நடுதெருவில நிக்கிறன்" என்ன செய்கிறதெண்டு தெரியல எண்டு அழுவாரை போல சொல்லி கொண்டே போனது மறுமுனை எனக்கோ யோசனை லண்டன்ல இருந்து ஒருத்தன் வாரான் இவ்வளவு தூரம் அட்ரஸ் போன் நம்பர் ஏதும் இல்லாமலா ஒருவரை தேடி வருவான் சரி எதற்கும் வேலை முடிச்சு போய் கதைப்பம் எண்டிட்டு அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு அவனின் சொந்த இடங்களை பற்றி விசாரிச்சன்…
-
- 2 replies
- 2.3k views
-