Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. விடுதலை வேங்கை குயிலி - உலகின் முதல் தற்கொடைப் போராளி கு.ஜக்கையன் இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையொட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே. நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளிகளுக்கென தனிப்பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களி…

  2. காதல் வானம் - தொடர்கதை 01 “சக்தியை நோக்க சரவணபவனார் திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிங்கினியாட…” பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது. “திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால் எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுட…

    • 19 replies
    • 4.1k views
  3. (2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.) அது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளா…

    • 15 replies
    • 1.7k views
  4. காதலுக்கு ஒரு கும்பிடு சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு மணமுடித்து வைப்பது பற்றிய பேச்சு, இரு தரப்புக் குடும்பங்களிலும் உள்ளது. சொந்தத் தம்பியின் மகள் என்பதால், தம்பி தன் வசதிப்படி, எது செய்தாலும், அதை அன்புடன் ஏற்க, தயாராக …

  5. பிறை நிலா சிறுகதை பிறை நிலா நியதி வரதன் காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது . சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் ப…

    • 1 reply
    • 2.6k views
  6. கவுண்டிங் இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.... க்ரிஷ், காதர், ஹனி மூவரும் டென்ஷனாக இருந்தார்கள்.... அவர்கள் இருந்தது ஒரு விண்கலம்... விண்வெளி உடையில் இருந்தார்கள்.... க்ரிஷ் அந்தக் கலத்தின் கமாண்டர்.... கலத்தின் பெயர் ராம்-பாபர்.... காதர் ராம்-பாபரைச் செலுத்தப் போகிறவன்... ஹனி கமாண்டரின் வலதுகை.... இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் இவர்கள் தான்.... ராக்கெட் ஒன்று பூமியின் புவியீர்ப்பு எல்லை வரை இவர்கள் கலத்தை இழுத்துச் செல்லும்.... அதன் பின்னர் காதர் தான் கலத்தைச் செலுத்த வேண்டும்... மூன்று பேரின் உயிரும் அவன் கையில் இருக்கிறது.... சுமார் 5 ஆண்டுக்கால அசுரப் பயிற்சி அவன் கண்களில் தெரிந்தது.... க்ரிஷ்-ன் சிறுவயது கனவு நிறைவேறப் போக…

  7. பிரேமலதா 1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டதுகாலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான் நு…

  8. Started by nunavilan,

    சிலை ஆட்டம் விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம். -விஷ்ணு வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் க…

    • 0 replies
    • 1.1k views
  9. "டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன். ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள். நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு . "ஏன்டா...! பள…

  10. [01] நல்ல நித்திரையில் இருந்தவனுக்கு லைற் வெளிச்சம் கண்ணில அடிக்க... "என்னடி இந்த நேரத்தில.... வந்து படு! குளிருதடி.... ஏசியைக் கொஞ்சம் குறையன்! என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?" என்று அரைக்கண்ணால பார்த்து.... நித்திரை முறியாமல் சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு, அவள் சாறிகட்டி வெளிக்கிட்டுக்கொண்டிருந்தது தெரியவேயில்லை! வழமையாக அவள் ஆறரைக்குத்தான் எழும்புவாள். எழும்பவிடாமல் இன்னும் அரை மணித்தியாலம் மினக்கெடுத்திப்போட்டுத்தான் விடுதலை குடுக்கிறவன் இவன். இன்றைக்கு அவள் முன்னதாகவே எழும்ப ஒரு காரணம் இருந்தது. அவளின் நண்பி ஒருத்தியின் திருமணம் அன்றைக்கு. நல்ல நேரம் காலை 8.09 மணிக்கு என்று கலியாணா கார்ட்டிலயே அடிச்சிருந்தவையள் என்று அவளுக்கு நல்ல ஞாபகம்!.எந்த சாறியை உடுக்கோணும் …

    • 73 replies
    • 15.3k views
  11. வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும். இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள். எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்…

    • 37 replies
    • 4.9k views
  12. [size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…

    • 0 replies
    • 991 views
  13. இரண்டு "மணி" கெலிகள் வானில் உயர இருந்து தாழப் பறக்க இறங்குவதைக் கண்டிட்டு கண்ணன் கத்தினான். கெலி வருகுது... வாங்கோ போய் பார்ப்பம். வழமையா கெலி என்றாலே கிலி தான். அமெரிக்க தாயாரிப்பில வந்த "பெல்" கெலிகளில சிங்களப் படை வந்து இரவு பகல் என்றில்லாம வட்டமடிச்சு வட்டமடிச்சு சுடுவது தான் எங்களுக்குப் பரீட்சயம். அது பொறுக்கிப் போடும் வெற்று ஐம்பது கலிபர் கோதுகளை பொறுக்க, அது எங்க கொட்டுண்ணுது என்று பார்க்க வாயைப் பிளந்து கொண்டு அண்ணாந்து திரியிறது தான் அப்ப திரில். ஆனால் இப்ப கொஞ்சக் காலமாக யாழ்ப்பாண வான் வெளியில் புகையடிச்சுக் கொண்டு பறக்கும் அன்ரனோக்களும், தாழப் பறந்து திரியும் எம் ஐ 8 கெலிகளும், கிலுக்கிக் கொண்டு வரும் இந்திய ஜவான்களின் "மணி" கெலிகளும்.. எங்களுக்கு கொ…

  14. ஒரு ஊரிலை ஒரு றவுடி இருந்தானாம். அவனும் ஊரிலை இருக்கிற கொஞ்ச றவுடிகளுமாச் சேர்ந்து ஒரு அப்பாவியைக் கொண்டு போட்டாங்களாம். இவ்வளவு நாளும் தாங்களும் தங்கடை வேலையுமா இருந்த ஊர்ச்சனம் இனியும் பொறுத்தால் றவுடி ஒருநாள் தங்களையும் கொண்டு போடுவான் எண்டு நினைச்சிட்டு கொலை செய்தங்களைப் பிடிச்சு ஜெயிலிலை போடுங்கோ எண்டு மெல்ல மெல்லச் சத்தம் போடத் தொடங்கீட்டுதாம். இதென்னடா இவ்வளவு நாளும் நானும் ஒரு பிரச்சினை இல்லாமல் களவு பாலியல் வல்லுறவு கொலை எண்டு செய்து கொண்டு தானே இருந்தனான். சனம் சத்தம் போடாமல் தானே இருந்தது. இந்த முறையும் ரெண்டு மூண்டு நாள் கத்திப் போட்டு சனம் இடங்கிப் போடும் எண்டு நினைச்சு றவுடி சத்தம் போடாமல் இருந்திட்டான். சனம் ரெண்டு மூண்டு நாNhளடை விடேல்லை.தொடர்ந…

  15. காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்...’’ மூச்சுவிடாமல் பேசினாள். ‘‘ரொம்ப நன்றி!’’ ‘‘உங்களை ஒரு முறை... ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங…

    • 1 reply
    • 2.1k views
  16. பெங்களூரில் வீடு கட்டிக் கொண்டிருந்த போது அனுமந்தா என்ற ஒரு மனிதருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. கன்னடத்தில் ஹனுமந்தாதான். ஆனால் கட்டட வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அனுமந்தா ஆக்கிவிட்டார்கள். பழுத்த பழத்திலிருந்து, சித்தாள் வேலை செய்யும் பிஞ்சு வரைக்கும் எல்லோருக்குமே அனுமந்தாதான். பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். சில பெண்கள் மட்டும் அவரைக் கிண்டலடிப்பார்கள்- அனு, கண்ணு என்றெல்லாம். ‘எங்கிட்ட இதெல்லாம் வெச்சுக்காதீங்க..இழுத்து வெச்சு அறுத்து உட்டுடுவேன்...’ என்று அவர் கத்தினால் அடங்கிக் கொள்வார்கள். எதை அறுப்பார் என்று நாம் கன்ஃப்யூஸ் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ‘கொண்டையை....’ என்று முனகுவார். நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டடத்தில் போட்டு வைத…

    • 3 replies
    • 2.6k views
  17. ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே? இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாட…

  18. வாசித்ததில் பகிர விரும்பியது அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக) புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார். ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் வி…

    • 5 replies
    • 1.5k views
  19. ஜன்னல் திட்டில் சில காக்கைகள் சமையலறையில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். காலை நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? அனு யோசித்தாள். அவள் கணவன் அரவிந்த் வேலை விஷயமாக தில்லி போயிருந்தான். அஞ்சு, ஆதித்யா இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, தெருக்கோடியிலிருந்த தன் சிநேகிதி சுபஸ்ஸ்ரீயின் வீட்டில் நடந்த யோகா வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பிய அனு, தன் தாயைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் உடன் கொண்டு வந்திருந்த வீட்டுச்சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது. அனு சப்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தாள். அம்மாவின் கையில் கரண்டித…

  20. முள்முருக்கை: நெற்கொழுதாசன் நீண்டு கிடந்த தெருவில் நாய் தன்பாட்டில் படுத்துக்கிடந்தது. கண் எட்டும் தொலைவு மட்டும் வேறு எந்த உயிரினங்களையும் காணமுடியவில்லை. பாலை வெய்யில். தொலைவில், தெருவின்மேல் நிரலைகள் தோன்றியது. புளுதி உறைந்த ஓரங்களில் அனல்காற்று மெல்ல மண் துணிக்கைகளை அங்குமிங்குமாக உருட்டிக் கொண்டிருந்தது. தெருவில் ஊற்றியிருந்த தார் நைந்து செருப்பை உள்வாங்கியது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். மறைவுகளிலிருந்து யாரோ கூர்ந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன். என்னையறியாமல் மனம் கூனிக்கொண்டது. திரும்பிப்போ என்று ஒரு குரலும், இல்லை உன் பாட்டில் நீ போ. அன்றும் இப்படித்தான். சிறு அசைவுகூட எழவில்லையே. எதற்காக நீ தயங்குகிறாயென்று, ஒரு குரலும் எதிரெதிராக ஒலித்துக் கொண்…

  21. கடவு திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர். அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை இதுதான். அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம். விவரிக்க விருப்பமில்லை, படித்துக் கொள்ளுங்கள்! - ஆர்வி திலீப் குமார் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து: •••••••••••••••••••••••••••••••••••• இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துத்தான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும் போல அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம் போல கால்களை நீட்டி…

  22. பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை. சடம் - ஜெயமோகன் olaichuvadiJanuary 1, 2022 “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” “அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது” “மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண…

    • 4 replies
    • 1.1k views
  23. Started by கிருபன்,

    ஆண் மழை எஸ். ராமகிருஷ்ணன் வெளியே மழை பெய்யத் துவங்கியிருந்தது. இன்று விடுமுறை நாள். சுனந்தாவும் வீட்டி லிருந்தாள். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் கருத்தமேகங்களைப் பார்த்த படியே அவசரமாக வீட்டின் வெளியே சென்று மழையை அளப்பதற்கான மழைமானியை வைத்தேன். சிறிய தோட்டமது. சுனந்தா நிறைய பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறாள். வானிலிருந்து மழைத் துளிகள் வேகமாக இறங்கத் துவங்கின. அப்பாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒன்றே ஒன்று, மழை பெய் யும்போது அதை அளவிட வேண்டும் என்பது தான். எனக்கு இந்தப் பழக்கம் திருமணத்தின் பிறகுதான் துவங்கியது. எதற்காக இப்படி மழையை அளவிடுகிறேன் என்று புரியவில்லை. ஆனால் அதில் இனம் புரியாத ஈடுபாடு குவிந்து விட்டது. அப்பா தான் வேலை பார்த்த ஊர்களில் பெய்த …

    • 2 replies
    • 2.5k views
  24. 'எதுவும் தெரியாது!' உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன். சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி. அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா? மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது. கையில் காபியுடன் வந்தாள் ஜானகி. ''எனக்கு வேண்டாம்; எடுத்துட்டு போ...'' ''நீங்க என்ன சின்ன குழந்தையா... எதுக்கு தேவையில்லாமல் கோபப்படறீங்க?'' ''ஆமாம்... எனக்கு எதுவும் தெரியாது. இந்த குடும…

    • 1 reply
    • 1.3k views
  25. நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.