கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
உப்பு மூட்டை க ளைத்து வீட்டுக்கு வந்த கதிரிடம் ஓடி வந்தாள் குழந்தை ஷாலினி. ‘‘அப்பா! உப்புமூட்டை..!’’ என ஆவலோடு அவனை நோக்கிக் கை உயர்த்தினாள். ‘‘அவ கிடக்கிறா விடுங்க! நாள் பூராவும் வேலை செஞ்சு களைப்பா வந்திருக்கீங்க. பாவம், நீங்க ஓய்வு எடுங்க’’ என்ற கமலா, ‘‘ஏய், நீ வாடி இங்கே! அப்பாவைத் தொல்லை பண்ணாதே!’’ என்று ஷாலினியை இழுக்க முயன்றாள். ‘‘பாவம், அதைத் தடுக்காதே கமலா! குழந்தைக்கு என்ன தெரியும்... அங்கே அந்தப் பாரம் பொழப்பு. இந்த பாரம் சுகம்!’’ எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
விதியை வென்ற மதி! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலி…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஏ.டி.எம் இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன் மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான். ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின் கண்ணில…
-
- 1 reply
- 1.3k views
-
-
கதையும் கவிதையும்... தமிழீழத்தில் விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட தமிழீழ அரசு வெளிநாட்டவர்கள் பாராட்டும்படி நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இக் காலகட்டத்தில், இங்குள்ள செயற்பாட்டாளர்கள் போராளிகளின் கட்டளைக்கு அமைவாக, அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை பல கஸ்டங்களுக்கு மத்தியில் அங்கு கொண்டுசென்று, போராளிகளுக்கு கொடுத்துக் கொண்டாடினார்கள். போராளிகளுடன் கைகுலுக்கி, போட்டோ எடுத்து, இதனை இங்கு கொண்டுவந்து மற்றவர்களுக்கு காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். தலைவருடன் சேர்ந்து நின்று, புகைப்படம் எடுத்தவர்கள் தங்கள் வீட்டு வரவேற்பறையில் அதனை மாட்டி வைத்து, வீட்டுக்கு வந்தவர்களுக்கு, தங்களின் செல்வாக்கினை பறைசாற்றி புகழ்ந்து திரிந்தார்கள். இவற்றைக் கேட்டும், பார்த்தும் எ…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு சித்திரம் பேசுகிறது ............... சக்கர நாற்காலியில் இருந்து .........ஒரு சித்திரம் பேசுகிறது .....அண்மையில் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்ற பின் என் மனப்பதிவு :.......... நான் பிறந்த நாடு என் மண், என் வீடு பழகிய நட்பு படித்த பாடசாலை, திசைமாறிய பள்ளிக்காதல் ,உறவுகள் .நட்புகள் ,யாவரும்ற ஒரு தன்னந்தனியனாக ஒரு சக்கர நாற்காலியில் , உணவுண்டு , உடையுண்டு , வங்கியில் மாத மாதம் பணம் வ்ரும் . புலம் பெயர் நாட்டில் தன்னந்தனியனாக ஒரு முதியோர் இல்லத்தில் , குளிக்க ,உதவி செய்ய , மருந்து தர என்று பணியாட்கள் , ஆனாலும் எதோ ஒன்று ...........இல்லவே இல்லை . என் சம்சாரமும் காlaமாகிவிட மகனும் தன் மனை வி , குடும்பம் வேலை பிள்ளைகள் , என்று அவனும் அவனது…
-
- 4 replies
- 1.3k views
-
-
இனுமு கொறடு... ‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாவல் எழுதும் கலை - அபிலாஷ் ஜெயமோகனின் பெரும்பாலான எதார்த்த நாவல்கள் படிக்க சுவாரஸ்யமானவை, இரண்டு மூன்று முறைகள் மீளப் படித்தாலும் அலுக்காதவை; அதற்குக் காரணம் அவரது மொழியோ விவரணையோ மட்டுமல்ல அல்ல, மாறாக அவரது வடிவ நேர்த்தியே. அவருடைய எந்த 300 பக்கங்களுக்கு உட்பட்ட நாவலை எடுத்துக் கொண்டாலும் கதை முதல் சில அத்தியாயங்களுக்குள் ஒரு தீவிரமான சம்பவத்துடன் ஆரம்பித்து வேகமெடுத்து பிறகு நிலைகொண்டு பல விசயங்களில் லயித்து, சிக்கல்களை வளர்த்து இறுதியில் மீண்டும் தீவிரமாகி ஆடிக்களைத்து பொட்டில் அடித்தாற் போல ஒரு முடிவுக்கு வரும். “ஏழாம் உலகம்”, “ரப்பர்”, “காடு” போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். இந்நாவல்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் மறக்க முடியாதவை! இக்காட்சிகள் – ஒரு மரணம், துரோ…
-
- 0 replies
- 1.3k views
-
-
"குஞ்சம்மா" ரிஷபன் சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்.. ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி.. இன்று யாரும் வேணாமென்று தனியே. 'நிஜமாத்தான் போறியா..' "ஆமா' 'ஒரு வாரத்துக்கா' 'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்புள்ள மனோ உனது கடிதம் கிடைத்தது. உன்னைப்போலவே வேறு பலரும் "சேடம் இழுக்கும் பெரியவரின் வீட்டு சுகவிசாரிப்பு" போல விசாரிக்கிறார்கள். இன்று முன்னிரவில் அக்காவும் தொலைபேசியில் பேசினார். சிலரது விசாரிப்பு உண்மையில் என்னிடமிருந்து ஏதேனும் நம்பிக்கை தரும் வசனங்கள் வந்து தெம்பு தரலாம் எனும் ஆசையில் விளைந்தது. வேறு பலதின் பின்னால் உள்ள குரூர முகங்கள் என் அகக்கண்களுக்கு தெரியாமலும் இல்லை. சென்றல் - சென்ஜோன்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் தோற்றுப்போன அணிக்கு கைதட்டியவருக்கு ஏற்படும் நிலையை, எனக்கு உண்டு பண்ணும் குரூரம் நிறைந்தது அது. ஆனாலும் நான் மிகவும் நம்பிக்கையுடனும், மிகத்தெளிவுடனும் இருக்கின்றேன். இந்த நிலையில் சில விடயங்களை பேசிவிட வேண்டும் என்றே தோன்றுகின்றது. இன்று …
-
- 3 replies
- 1.3k views
-
-
திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அழகி - க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன். ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
தோட்டம் எனது பிள்ளைகள் அடிக்கடி, தோட்டத்தைப் பற்றியும் மரங்கள் நடுவது, பழங்கள் பிடுங்குவுது, வளர்ப்பு மிருகங்களுக்கு தண்ணீர் வைப்பது எனப் பலவாறு பேசிக்கொண்டே இருப்பார்கள். கேட்க எனக்கு சந்தோசமாகத்தான்; இருக்கும். தாய்தகப்பன்ரை காசை செலவளிச்சுக்கொண்டு. வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுத்திக்கொண்டு பெடியள் பெட்டையள் இருக்கேக்கை என்ரை பிள்ளையள் இப்படியெண்டாலும் கஸ்டப்படுகுதுகளே என எண்ணும்போது சந்தோசம்தானே… எண்டாலும் இப்படித் தோட்டம் செய்யிறவை… ஒருநாள் பார்தது ஒருநாள் தாய் தகப்பன் இருக்கிறார்கள் என்று ஒரு பழமாவது கொண்டுவந்து தாறதுமில்லை. கூட்டிக்கொண்டுபோய் காட்டுறதுமில்லை… இதை நினைச்சால்தான் எங்களுக்கு உள்ளாற வருத்தம்.;… என்ன செய்வது பிள்ளையளை என்னண்டு கேட்கிறது,.. அத…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்? அவன் ஒரு ஞானி நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்? கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் …
-
- 1 reply
- 1.3k views
-
-
காலத்தின் சாட்சிகள் – ஆதிலட்சுமி சிவகுமார்…. உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை On May 17, 2020 வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தின் சுற்றாடலில் ஒரு கல்வீடு. அந்த வீட்டைச் சுற்றியிருந்த வெளிமுமுவதும் சனங்கள். திருவிழாக்கால வீதிகள்போல தோற்றங்காட்டியது அந்நிலப்பகுதி. மேலே வானம் வில்லாய் வளைந்திருந்தது. ஒவ்வொரு இடத்திலும் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய…. நகர்ந்து நகர்ந்து வலைஞர்மடம் என்ற இந்த கடலோரக் கிராமத்தை வந்தடைந்துவிட்டோம். மேலே அடிக்கடி வந்து சுற்றிச் சுழன்று மிரட்டிவிட்டு… எங்காவது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும் விமானங்கள். கூடவே எறிகணைகளின் இரைச்சலும் வெடிப்புகளும்….. தூரத்தே இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் வேட்டொலிகள்….. சனங்கள் ஆற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆசை கனவே... அதிசய நிலவே! ஆசை கனவே... அதிசய நிலவே! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் க ண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிட்டிருந்தா தூக்கம் வரும்’ என்று யாரோ கூறியது ஞாபகத்துக்கு வர, மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன். ‘‘ஒண்ணு...’’ …
-
- 1 reply
- 1.3k views
-
-
பூரணம் - சயந்தன் May 8, 2019 பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவி…
-
- 3 replies
- 1.3k views
-
-
துணையானாள் எஸ். கருணானந்தராஜா தமிழ்நாடு காவியன் இலக்கியப் பரிசுத்திட்டத்தில் தெரிவான சிறுகதை இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முத…
-
- 1 reply
- 1.3k views
-
-
கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்! வணக்கம் உறவுகளே! என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
நட்சத்திரங்களின் வாக்குமூலம் by பிரசன்ன கிருஷ்ணன் இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான். …
-
- 2 replies
- 1.3k views
-
-
கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் "சொல்லச் சொல்ல இனிக்குதடா - முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை...' அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்த பாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். "முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று...'' "வாங்க சார் !''- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. "என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?'' ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பேனாவின் சிவத்த மை ......... அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது ,கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று ,மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று ,சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது. அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார். பக்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
ரொறன்ரோவில் அது ஒரு கோடைகாலம் வானொலிகளும் டிவிக்களும் மார்க்கம் மைதானத்தில் மாறி மாறி போட்டி போட்டு பண்டிகை செய்யும் காலம்.. ஆம்... வளமைபோல அந்த குடும்பமும் பண்டிகை காண உற்றார் உறவினரோடு பண்டிகை நடைபெறும் மார்க்கம் மைதானத்தை வந்தடைந்தது.. அவர்களைக் காணும் நண்பா்களும் உறவினா்களும் இந்தியாவிலிருந்து அந்த நடிகையும் வந்திட்டாவாம் - அந்த பாடகரும் வந்திட்டாராம் என்ன..! என குசு குசுத்தபடி தமது தமது பிள்ளைகளுக்காக சவாரிகளுக்காக பற்றுச் சீட்டுக்களை பெற்று தமது பிள்ளைகளை சந்தோசப்படுத்தியவாறு அந்த மைதானத்தின் ஒரு பக்கத்தை சுற்றிவருகிறார்கள்.. மைதானத்தினுள் மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் அந்தச்சிறுவனது தாயாருக்கு எச்சரிக்கை உணா்வு மேல…
-
- 0 replies
- 1.3k views
-