Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. துணையானாள் எஸ். கருணானந்தராஜா தமிழ்நாடு காவியன் இலக்கியப் பரிசுத்திட்டத்தில் தெரிவான சிறுகதை இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முத…

  2. துண்டு நிலம் by தர்மு பிரசாத் • July 1, 2020 01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள் நடமாட முடிகிறது. அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் சொல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள் இறுகிக் கொள்கின்றன. சொற்களை நிதானமாகத் தேர்ந்தெடுத்துப் பதட்டத்துடன் பதில் சொல்கிறேன். அவை சரியான பதில்கள் இல்லை என்றாலும், …

    • 1 reply
    • 783 views
  3. துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …

  4. துயர் வெளியில் தனித்தவள் (நெடுங்கதை) இனியெதுவும் இல்லையென்ற உண்மையும் இனி எதையும் எண்ண முடியாதென்ற வெறுமையும் உறைத்தது. மனவெளியெங்கும் பரவிக்கிடத்திய நம்பிக்கை துகள் துகள்களாய் சிதறித் தூரமாய் தனித்துச் சிதைகிறது. ஊவென்ற இரைச்சலோடு ஓடிவந்து தழுவும் காற்றும் ஓயாத எறிகணை மழைக்குள்ளும் எல்லாரையும் மிஞ்சிய நம்பிக்கையில் மேமாதத்து நாட்களை நம்பிக்கையோடு நம்பியவள். மனம் தளராமல் மன்னார் போய் கிளிநொச்சியின் தொடராய் முல்லைமண்ணில் எதிரி கால்பதித்த பின்னாலும் முள்ளிவாய்க்கால் மோட்சத்தின் மறைவிடமென்று காவலிருந்த கடைசிக்களம் போலிருந்தது இரவு. எப்படி….? ஏன்….? எதனால்…? எதுவும் பிடிபடவில்லை…..சூனியம் முற்றிய தெருக்களில் பிணங்கள் குவிவது போல நகர நகர அவர்கள் வெற்ற…

  5. துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சி…

  6. துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…

  7. துரோகி ஒரு ஊரில், சிறு தொழில் செய்யும் வியாபாரி பறவைகளைப்பிடித்து சந்தையில் விற்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக சந்தை கூடும் ஒரு நாளில் தன் விற்பனைக்காக ஐந்து கெளதாரி பறவைகளை கொண்டு சென்று இருந்தான் . நான்கினை ஒரு கூட்டிலும் ஒன்றை தணிக் கூட்டிலும் வைத்திருந்தான். அந்த வழியே வந்த ஒருவன் பறவைகளின் விலை என்ன என்று கேட்க நான்கு பறவைகள் இருந்த கூட்டினை காட்டி ஒன்று நான்காயிரம் ரூபா என்றான் . மாற்றியதை காட்டி ஐந்தாயிரம் ரூபா என்றான். என் அதற்கு விலை அதிகம் என்று கேட்க்க ..எல்லாவற்றுக்கும் உணவு கொடுப்தேன் அதற்கு விசேடமாக தயாரித்து உணவு கொடுக்கிறேன் . என்றான் ..ஏன் அப்படி என்று கேட்க இதை தனியே வைத்து பழக்கி ஒரு கூட்டிலை விட அது தன் குரல் எழு…

  8. Started by நவீனன்,

    துர்சலை - கணேசகுமாரன் ஓவியங்கள் : செந்தில் இரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு கொண்டிருந்தது. ‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன…

  9. Started by நவீனன்,

    துறவு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார். காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று... பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார். பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார். வழியிலி…

  10. நீண்டு வளைந்து திரும்பி பாம்பு மாதிரி செல்லுகின்ற அந்த மெயின் ரோட் பிரபல சந்தியில் முடிவடைகிறது. காலை ஏழு ஏழரை ஆனதும் பரபரப்பு அடையும்.தெரு ஒன்பது மணியானதும் அடங்கி விடும். மீண்டும் இதே பரபரப்புடன் மாலை ஆனவுடன் தோற்றம் அளிக்கும்.200 யார் ஒரு இடைவெளிக்கு பஸ்தரிப்பிடம் .பஸ்தரிப்பிடம் என்றதுக்கான அறிவுப்பலகையோ அடையாளமோ இல்லை. அது தான் என்று வழக்கமாக்கி கொண்டார்கள்.அங்கு கூட்டமாக நிற்கும் வெள்ளை உடை அணிந்த பள்ளி மாணவிகள் ஸ்கூல் பஸ்க்காக காத்திருப்பது ஒரு புறம். சந்தியில் சென்று டவுன் பஸ் பிடித்து அலுவலக வேலை செல்பவர் மறு புறம் சைக்கிளிலும் கால் நடையாகவும் அறக்க பறக்க சென்று கொண்டிருக்கிறார்கள் http://sinnakuddy.blogspot.com/2007/07/blog-post_17.html

    • 30 replies
    • 5.2k views
  11. BY: லதா சரவணன் என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். …

    • 1 reply
    • 1k views
  12. துவக்குப்பிடியால் வாங்கிய அடி இராமேஸ்வரக் கோவிலின் கோபுரம், அதிகாலை மங்கல் ஒளியில் கருஞ்சிறு மலைபோல் எழுந்து நின்றது. சுதந்திரா அந்த மணல் வெளியில் அமர்ந்தவாறு, எதிரே கிடந்த கடலை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளோடு கூட வந்த பிள்ளைகள், உறவினர்கள், இன்னும் உதவ வந்த பணியாட்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் தாம் வந்த வேலை முடிந்த நிலையில் , அன்னதானம் முடிந்ததும் அங்கிருந்து போவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் மும்மரமாயிருந்தனர். சுதந்திராவின் கணவன் பாரத் இறந்து 14வது ஆண்டு நிறைவு தினம் இம்முறை இராமேஸ்வரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. காலைக்கதிர் கடலுக்கு மேலால் தலைகாட்டும் நேரம். அதற்கு முன்னரே எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு, அங்கு குழுமும் சனங்க…

  13. துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் 1 இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்த…

  14. தூங்காத கண்ணென்று ஒன்று சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்... ''எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்...'' - அவள் மேற்கொண்டு சொன்ன எதையும் நான் காதில் வாங்கவே இல்லை. திருமணமான 30 வயதுப் பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தனியே இருந்தால், அம்மாவின் புலம்பல்கள் எதுவாக இருக்கும் என உங்களுக்குத் தெரியும்தானே? இரவு உணவு சாப்பிட்டதும் அறைக்குத் திரும்பினேன். எட்வினின் நினைவு, கடந்த ஒரு வாரமாகவே மனதைப் போட்டுப் பிசைந்தது. இப்போது ஏன் அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறது... அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து? எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் வேதா அக்கா வீட்டின் மொட்டைமா…

  15. 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் வானொலிகளை திருப்பி கொண்டு, அடுக்கப்பட்டு கிடந்த துணிகளால் ஆன மண் மூடைகளுக்கு நடுவே கிடந்த அந்த பொழுது. அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே பாதுகாப்பாக படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று. நாங்கள் வழமையான சில பணிகளில் கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ”…

    • 0 replies
    • 1.7k views
  16. சென்ற வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது.. தொடர்ச்சி**** இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எம…

    • 1 reply
    • 2.4k views
  17. வணக்கம் வாசகர்களே!!!!! கள உறவுகளே !!!! மீண்டும் " தென்கிழக்குச் சீமையிலே " என்ற ஒரு வரலாற்று தொடர் கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . அண்மையில் நீண்ட காலங்களின் பின்பு பிரான்ஸ்சின் தென் கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மறைற்ரும் மானிலத்தின் தலைநகராம் நீஸ் மாநகரிற்கு குடும்பமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன் . அங்கு நான் கண்ட கேட்ட வரலாற்றுக் கதைகளையும் , நகைச்சுவையான சந்திப்புகளையும் இருவேறு பாணிகளில் பதிகின்றேன் . உங்கள் ஆதரவை நாடும் ................ நேசமுடன் கோமகன் *************************************************************************** நீசில் இருந்து கடந்த பலமாதங்களாக வந்த பலத்த நெருக்குவாரங்களினால் நானும் மனைவியும் நீஸ் புறப்படத் தேவ…

  18. வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!! இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை…

  19. “ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...” வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்த…

    • 0 replies
    • 1.8k views
  20. தெய்வம் தந்த பூவே ''மீனாட்சி...'' ''என்னம்மா?'' ''குழந்தை எங்க?'' ''பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடிட்டு இருக்கான்.'' ''நீ இங்க கொஞ்சம் வா... உன்கிட்ட பேசணும்.'' அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று புரிந்து போனது மீனாட்சிக்கு! ''நாலாவது வீட்டு பொண்ணுக்கு காலேஜ்ல பங்ஷனாம்... அவளுக்கு அர்ஜென்டா பிளவுஸ் வேணும்ன்னு சொன்னா... அதுதான் துணி வெட்டிட்டு இருக்கேன்; எதுக்கு கூப்பிடறீங்க... அங்கிருந்தே சொல்லுங்க...'' வராண்டாவில் அமர்ந்திருந்த மாமியார், ''எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்பே... உனக்குன்னு ஒரு துணை வேண…

  21. தெய்வானை-சிறுகதை-கோமகன் February 8, 2020 நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்த…

  22. உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம் தெரியாத பாதை தெளிவானபோது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கி…

    • 189 replies
    • 26k views
  23. பரந்து விரிந்து கடல்,கரை கழுவிச் செல்லும் அலைகள்,வளைந்து நெளிந்த தென்னைகள்,இருந்த தென்னைகளுல் ஓங்கி நேராய் வழர்ந்த தென்னைகள் அதிகம்.கவிட்டு வைத்த படகுகள்,என்னதான் கடலோடு நீந்தி வந்தாலும் கவிட்ட பின்னே மணல் ஒட்டித்தான் கிடந்தது.தொடை தெரிய மடித்து கட்டிய சாரம்.தோளில் ஒரு தும்புத்துவாய்.ஏதொ மகாறாஜா தோரணையில் நடை. அந்தோனிபிள்ளையார் படகுகளூடு மணலில் கால் புதைய புதைய நடக்கையில் சிப்பியும், ஊரியும் ஈரபாதத்தை உறுத்தினாலும், உரத்துப்போன பாதத்தோலை ஊடறுக்க முடியாது மண்ணுல் புதையுண்டு கொண்டிருந்தன. சின்னையன் இப்பத்தான் கொண்டுவந்தது,ஒரு பொரியல் ஒரு குழம்பு வைச்சால் போதும்.2 முட்டையையும் அவிச்சு விடு.மணி ஆறாகுது,தம்பிமார் வரப்போறங்கள், மினக்கெடாமல் சமையலை முடி என்ன, நிக்கிலசை வ…

    • 9 replies
    • 2.2k views
  24. தெரிவு - சோம.அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பான்…! என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே த…

  25. தெளிவான தேர்வு மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான். அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’ ‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.