Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. மனதின் அடியில் கிடந்த ஒரு பெரிய பாராங்கல்லை உருட்டிவிட்டதை போலவும் இருக்கிறது. அதே இடத்தில் ஒரு முள் செடியை என் விருப்பபடியே யாரோ நட்டுவிட்டு போனது போலவும் இருக்கிறது. வெகுநாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பியது. சிறுவயதில் அம்மணமாய் நின்ற என்னை பார்த்து ஒரு பூச்சாண்டியை போல சுழித்து சுழித்து பயம்காட்டிய தாமிரபரணி தன் இரு கைகளையும் நீட்டி தாரளமாய் என்னை அழைக்கிறது. ஆயிரமாயிரம் சிறகுகள் இருந்தும் எங்கும் பறந்து செல்லாமல் இன்னும் அதே இடத்தில் இருக்கிறது அந்த சின்ன ஆலமரம். நாக்கை துருத்தி பயம் காட்டி விரட்டிய ஆச்சிமுத்தா கோவில் பூவரசம் மரம் தன் மஞ்சள் பூக்களை என் தலையில் கொட்டி சிரிக்கிறது. அவ்வப்போது என் கை செலவுக்கு காசு கொடுத்த அந்த சுடலைமாட சாமி…

    • 1 reply
    • 1.6k views
  2. குகைவாய் கழுகு - ப.தெய்வீகன் சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள். வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை காட்டியடி, மண்டபத்தை நோக்கி…

    • 1 reply
    • 728 views
  3. மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை ஓவியம் : ரமணன் புறநகர்ப் பகுதியின் கடைசி வீட்டில் வசிப்பவன் நான். என் வீட்டையடுத்து விரியும் புதர்மண்டிய நிலக்காட்சியையும், கைவிடப்பட்ட தூரத்துக் குவாரியின் தனிமையையும் ரசிப்பதற்கென்றே கடைசி வீட்டுக்காரனானேன். நகரங்கள் மென்று துப்பும் எச்சங்களின் மீது அருவருப்படைந்து மரங்கள் நடந்து விலகிச் செல்வதையும், துர்கனவின் வரைபடம்போல நகரின் சித்திரத்தை அஞ்சியபடி எளிய பறவைகள் தத்தி ஓடுவதையும், வழியின்றி பார்த்தபடியிருக்கும் கடைசி வீட்டுக்காரர்களின் முகத்தில், புத்தனின் மிகவும் தேய்ந்த நிழலை அவ்வப்போது காண முடியும். மேலும், இங்கே பன்றி வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டை நாய்களை, பருவங்கள் தீர்ந்து கிழடான பின் அவ…

    • 1 reply
    • 1.3k views
  4. Started by நவீனன்,

    கங்கம்மா "பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. "இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.'' மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது. "இந்த…

    • 1 reply
    • 1.2k views
  5. அம்மாவின் காதல் சிறுகதை: விநாயகமுருகன் நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டி, ஜன்னலுக்கு வெளியே இருந்து வீசிய கடல்காற்று மோத படபடத்துக் கொண்டிருந்தது. நாள்காட்டியில் இருந்த கன்னிமேரி, கையில் இருக்கும் தனது குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் முழு கருணையும் மேரியின் கண்களில் தெரிந்தது. நான் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தேன். `இன்று காலை அம்மா இறந்துவிட்டார். உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே நீங்கள் கிளம்பி வரவும்’ என இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து எத்தனை முறை இந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. அவளுக்கு நான் செய்திருக்கவேண்டிய நியாயமான இறுதிக் கட…

    • 1 reply
    • 4.6k views
  6. அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…

  7. சாப்ட்வேர் சீதை வா.மு.கோமு திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தும் நம்மைப் பார்த்தும் புன்னகை சிந்துவாள். காபி டம்ளரை பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க அனுப்ப கணவனை முதுகில் தட்டி, ‘எழுந்திருங்க கதிர், இன்னும் என்ன தூக்கம்?’ என்பாள். நாயகியின் குரல் கேட்டதும் பொய்யாய் தூங்கிக் கொண்டிருந்த கதிர் படுக்கையில் உருண்டு திரும்பி நாயகியை பாய்ந்து பிடித்து தன்னோடு இழுத்து கட்டிக் கொள்வான்.…

  8. சொக்கப்பானை - கோமகன் காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல…

  9. பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொ…

  10. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. கொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23

    • 1 reply
    • 565 views
  11. 23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா (பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர் வெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.) இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது. இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார். உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண். தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகள…

    • 1 reply
    • 1.1k views
  12. Started by nunavilan,

    ஓரிரவு ஞானசேகர் மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவ…

    • 1 reply
    • 1.1k views
  13. எம்பாவாய் September 5, 2020 அகரமுதல்வன் இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறா…

  14. ஒரு நிமிடக் கதை செல்லினம்! பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்! சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல…

    • 1 reply
    • 1.6k views
  15. Started by கிருபன்,

    சைக்கிள் -தர்மினி- மூன்று பக்கங்களும் கடல்களும் ஒரு பக்கம் மணற் கும்பிகளும் என எங்கள் ஊர் ஒடுங்கியதும் சிறியதும். ஆகவே, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஞாயிறு தேவாலயம் என எங்கே போவதென்றாலும் (இந்த இடங்கள் தவிர வேறெங்கும் போறதேயில்லை) கால்நடை தான். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது. வழியில் எங்கேயாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய் கண்டால் கல்லெறிவதோடு சரி. சைக்கிள் ஓடும் யாரைப்பார்த்தும் ஆசையே வரவில்லை. எப்பிடித்தான் ஓடுறார்களோ? என ஆச்சரியம் தான். பக்கத்து ஊரிலிருந்து விஞ்ஞானம் படிப்பிக்க வரும் ரீச்சர் தங்களைத் திட்டுவதைக் காரணமாகக் கொண்டு ரீச்சரின் சைக்கிளை என் வகுப்புப் பொடியங்கள் சிலர் ரயறை வட்டாரிக் கூரால் குத்திக் காற்றை …

    • 1 reply
    • 2.3k views
  16. சென்ற வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது.. தொடர்ச்சி**** இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எம…

    • 1 reply
    • 2.4k views
  17. உதவி ‘‘பத்மா, இந்த ‘பேன்ட் ஷர்ட்டெல்லாம் பழசாயிடுச்சு.. அக்கம் பக்கத்து ஏழைங்களுக்குக் குடுத்துடு!’’‘‘என்ன பீரோவுல பழைய புடவை நிரம்பி வழியுது? ஒவ்வொண்ணா எடுத்து வேலைக்காரிக்குத் தந்துட வேண்டியதுதானே!’’ - இப்படித்தான் சொல்வார் கார்த்திகேயன். ஆனால் இன்று அவரே சொல்கிறார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் கொடுக்க வேண்டாமாம்!பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாயிற்று இவருக்கு?’ கேட்டே விட்டாள். ‘‘என்னங்க... கட்டின துணியோட உயிர் பிழைச்சா போதும்னு நடுரோட்டுல வந்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க ஜனங்க. சாப்பாடு இல்ல... குடிக்கிற தண்ணி இல்ல... பலவீனப்பட்டு வேதனையோட நிக்கிறாங்க. எப்பவும் பழைய துணிகளைக் கொடுக்கச் சொல்ற நீங்க இப்ப வேண்டாம்ங்கறீங்களே ஏன்?’’ …

    • 1 reply
    • 1.6k views
  18. நிலங்கீழ்வீடு பொ.கருணாகரமூர்த்தி எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்…

    • 1 reply
    • 1k views
  19. ஜெர்மன் விசா - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம் ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும், ‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியி…

  20. பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை சிறுகதை: சுகா, ஓவியங்கள்: செந்தில் பரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது. `‘யார் வீ…

    • 1 reply
    • 20.3k views
  21. காய்ச்சல்காரன் வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. வெளியில் நல்ல வெயில். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று. முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது. "குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என வி…

  22. *நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் ச…

  23. நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…

    • 1 reply
    • 897 views
  24. உறவுகளின் சங்கமம் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், மேரி மற்றும் பீட்டர் இருவரும் வாழ்ந்து வந்தனர். மேரி, ஒரு புத்தகப் பிரியா. கடற்கரையில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பதே அவளது பொழுதுபோக்கு. பீட்டர், ஒரு திறமையான கலைஞர். கடற்கரையின் அழகை ஓவியங்களாக வரைவது அவனது ஆர்வம். ஒரு அற்புதமான மாலை, மேரி தனது புத்தகத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது, அருகில் வந்து தனது ஓவியத்தை காட்டிக்கொண்டான் பீட்டர். அவர்களது உரையாடல் இயல்பாகவே ஆழமானது. இருவரும் ஒரே விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து, அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களது நட்பு காதலாக மாறியது. பீட்டர், மேரியின் புன்னகையைப் பார்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.