Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. தொடர் 1 வதனிக்கு ஒரே குழப்பமாக இருந்தது... இவளுக்கு என்ன நடந்தது... அந்தப் பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு... ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கிறாள்... கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன... மாதுரியையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நேரம் காலை 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.. வதனியின் பிள்ளைகள் பாடசாலைக்கும், கணவன் வேலைக்கும் போய் விட்டால் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டுக்குள்ளே நிரம்பிக் கொண்டிருந்த குளிர், அறையின் நிசப்தத்தை உறுதிப்படுத்தும் கடிகாரத்தின் துடிப்பொலி, எப்பொழுதும் அந்த வீட்டில் கமழ்ந்து கொண்டிருக்கும் மல்லிகை வாசனை, அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொத்துக்கள்... சிறிய மேசை மீது அமைதியாகவே அமர்ந்திருக்கும் சிறி…

    • 33 replies
    • 3.3k views
  2. சாரி டார்லிங் கொஞ்சம் லேட்டாயிட்டு..... அவன் கெஞ்சிக் கொண்டே நின்றான். டிலோ.. பார்க்கின் பெஞ்சில்.. கோபத்தின் உச்சியில் இருந்து கொண்டிருந்தாள். என்ன.. வழமையா டார்லிங் என்றாள் கூலாகி குலாவுவாளே.. இன்றைக்கு என்ன காறாரா இருக்கிறாள்... என்று நினைத்த நிலோசன்.. அவளை நெருங்கி.. என்ர செல்லமெல்லே.. பப்புச்சுக்குட்டியில்ல.... என் கூட என்னம்மா கோவம்.. என்று வானத்தை அங்கலாய்த்திருந்தவளின் முகத்தை தொட்டு.. தன்னை நோக்கி திருப்ப முயல.. கோபத்தில் அவன் கையை தட்டிவிட்டாள் டிலோ. என்ன பண்ணுறது.. இன்றைக்கென்று கடுப்பேத்திறாளே.. ம்ம்.. கொஞ்சம் மெளனமா இருப்பம். அடங்கிடுவாள். வீட்டில அம்மா அப்பா முன்னாடி நான் தான் ராஜா.. இவ முன்னாடி இப்படி ஜீரோவா இருக்க வேண்டி இருக்கே.. என்று தன்…

  3. நிழலாடும் நினைவுகள். வெளித்தெரியாத வேர். M.S.R சாத்திரி ஒரு பேப்பர். ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே இந்த எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான் எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு …

  4. சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது. .நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன். திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சி…

    • 33 replies
    • 3.8k views
  5. ஃபைவ் ஸ்டார் துரோகம்... க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் அதிரடி அரசியல் த்ரில்லர்! கடந்த ஓராண்டு காலமாக ஒன்இந்தியா தமிழில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் தொடரான ஒன்+ஒன்=ஜீரோ தொடர் இடம் பெற்றது. லட்சக்கணக்கான வாசகர்களால் ரசிக்கப்பட்ட தொடர் இது. அந்தத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு புதிய தொடரை ராஜேஷ்குமார் ஒன்இந்தியா தமிழில் எழுதுகிறார். இந்தத் தொடருக்கு தனது பாணியில் 'ஃபைவ் ஸ்டார் துரோகம்' என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பே, தொடருக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறதல்லவா? ரொம்ப நாள் காத்திருக்கத் தேவையில்லை... ஜஸ்ட் 24 மணி நேரம்தான். நாளை இதே நேரம் ஃபைவ் ஸ்டார் து…

    • 32 replies
    • 13k views
  6. பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக ப…

  7. வசந்த் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். வதனியிடம் காதலைச் சொல்லிவிட்ட பின் நடக்க இருக்கும் முதல் சந்திப்பை எண்ணி எண்ணி அவன் மனம் பூரித்துப் போயிருந்தான். இருக்கத்தானே செய்யும்.. இந்தக் காதலைச் சொல்ல அவன் பட்ட பாடு. அவளை பின் தொடர்ந்த நாட்கள்.. நாளிகைகளுக்கு கணக்கே இல்லையே. அவளைக் காண..கோவில்கள்.. தெருக்கள். பள்ளிக்கூடங்கள் என்று அவன் அலையாத இடங்களும் இல்லை. சிங்கள இராணுவத்தின் அந்த பொம்பர் அடிக்குள்ளும்.. ஷெல் அடிக்குள்ளும் அவன் அவளைத் தேடிப் போன நாளிகைகள்.. அந்த நாளிகைகளில் மனம் கொண்டிருந்த அசாத்திய துணிச்சல்களை அவன் கண்டு வியந்திருக்கிறான். புலிப் போராளிகளுக்கும் இப்படித்தான் மண்ணின் மீது காதல் இருக்குமோ. அதனால் தான் சாவை எண்ணாது.. எதிரியைத் தேடிச் சென்றனரோ.. எ…

  8. இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. தமிழர் நிலங்கள் பறிபோகின்றது. புலம்பெயர் தமிழர்களின் நிலங்களை இலங்கையரசு கையகப்படுத்த முயற்சி. இடம் பெயர்ந்த மக்களின் காணிகளில் இராணுவம். மீள் குடியேற சென்ற மக்களை இராணுவம் விரட்டியது.....இவை அண்மைக்காலங்களாக தமிழ் ஊடகங்களிலை வெளிவாற செய்தித் தலைப்புக்கள். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலை இருக்கிற தமிழரின்ரை காணியள் பற்றின விபரங்களை இலங்கையரசு சேகரிச்சுக்கொண்டும் இருக்கினம். இந்த வருச வக்கேசனுக்கு என்ரை சொந்தக்காரன் ஒருத்தர் லண்டனுக்கு வந்து இருவத்தைஞ்சு வரியமாகிது போனமாதம் ஊருக்கு போனவர்.ஊருக்கெண்டால் கொழும்புக்கு... அங்கை அவர் ஒரு அப்பாட்மென் வாங்கிவிட்டிருக்கிறார். வருசா வருசம் வக்கேசனுக்கு அங்கைபோய் தங்கிட்டு வருவார்…

    • 32 replies
    • 3.6k views
  9. தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…

  10. Started by nedukkalapoovan,

    ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி. எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள். 15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள். 15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் ச…

    • 32 replies
    • 5.5k views
  11. லண்டனில் இன்று தமிழ் புத்தக சந்தை ஒன்று நடைபெற்றது .நல்ல முயற்சி என்று நினைத்து நானும் எனது வலைபதிவில் அது பற்றிய விபரம் போட்டிருந்தேன்.காலை பத்துமணியிலிருந்து இரவு 7 மணிவரையும் நிகழ்வு என்று அறிவித்திருந்தார்கள்.எனது எதிர்பார்ப்பு பிழையோ தெரியாது அப்படி எதிர்ப்பாத்து போன அளவுக்கு அங்கு புத்தங்கள் பார்வைக்கோ விற்பனைக்கோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு …

  12. வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும். நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும். வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரி…

    • 32 replies
    • 4.4k views
  13. Started by Justin,

    சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது. இந்த இரு செய்திகளும் சில யானைக் கதைகளையும் சிறி லங்காவில் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த அரிய விலங்குகளுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பற்றி என் நினைவுகளைக் கிளறி விட்டது. யானை, அனேகமான பல காட்டு விலங்குகள் போல, முழுவதுமாக அடர் காட்டில் வாழப் பிறந்த ஒரு விலங்கு. தனியனாகத் திரியும் யானைகள் அரிது-அப்படித் தனியனாக அலையும் யானை அனேகமாக மூர்க்கமான ஆட்கொல்லியாகவே இருக்கும் (செங்கை ஆழியானின் "யானை" நாவல் ஒரு தனியன் யானையைப் பற்றியது). கூட்டமாக இந்த ராட்சத விலங்குகள் வாழ, சில நூற…

  14. Started by Jamuna,

    டைகர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்.................உலக புகழ் ஜம்மு பேபியின் மற்றுமொரு திரை காவியம் "மடல்கள்" கதாநாயர்களாக *அல்டிமேட் ஸ்டார் பிரசாந்தன் (புனைபெயர் :சிநேகன்) அவுஸ்ரெலியா *அறிமுக நாயகன் இளையதிலகம் சுரேஷ் கதாநாயகிகள் *அறிமுக நாயகி கவர்ச்சி கன்னி லக்சிகா (புனைபெயர் :தாமரை) இலங்கை *இளம்புயல் உமா இவர்களுடன் *மக்கள்திலகம் கந்தப்பு *சனதிரள் நடிகர் கலைஞன் *அழகுதாரகை நிலா வில்லன் நடிகர் தொடர்ந்து பல விருதுகளை பெற்று வரும் வலைஞன் அண்ணா........... இவர்களுடன் சூப்பர்ஸ்டார் ஜம்மு கதை,திரைகதை,வசனம் ,பாடல்கள்,இசை அமைத்து வெளியிடும் திரைகாவியம் "மடல்கள்" சுறுசுறுப்பாக நகரமே இயங்கி கொண்டிருகிறது …

    • 31 replies
    • 4.7k views
  15. ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்…

  16. வயலும் வைரவரும். இந்தவார ஒரு பேப்பரில் வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரே…

  17. எனது பாடசாலை நாட்களில் எழுதிய சிறுகதை (பாடசாலை மலர் ஒன்றில் வெளிவந்தது) கதையும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று நான் சொல்லுவேன் என்று எதிர்பார்காதீங்க.... (அப்ப... ???) ------------------------------------------------------------------------------------------- கண்களை கட்டிப் போட்டுவிட்டு கருத்தினுள் போதையை வார்த்துக் கொண்டிருந்தாள் இயற்கை நல்லாள். இதுவரை நாளும் செயற்கைத் தனத்தின் செழிப்பைச் செம்பு செம்பாக பருகிய எனக்கு இயற்க்கைத் தனத்தின் அந்தக் குறும்பு... புட்டி புட்டியாக மது கிடைத்தது போல் போதையை ஊட்டியது. கொழும்பு பஸ் சற்று முன் தான் கம்பளைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஒரு வித உற்சாகமும்... ஒரு வித குறும்புத்தனமும் பள பளக்க என் கண்கள் மின்னின.…

    • 31 replies
    • 7.2k views
  18. கொம்பியூட்டர் படிக்க போன விசுகு....... அது 1995 இல். ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று. அப்போ இரண்டு நேர வேலை. ஆனால் தெரிந்து கொள்ளணும். இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு. 1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.) வகுப்பும் தொடங்கியாச்சு. கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Print…

    • 31 replies
    • 5.3k views
  19. சிவா நேற்று இரவு தனது மகன் சுரேஷ் சொன்ன வார்த்தையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாம குழம்பி போய் இருந்தான் 24 வயசு தான் சுரேசிற்கு, 22 வயசு தான் சுரேசின் தங்கைச்சியான சுதாவிற்கு.சுரேஷ் புலத்தில் பிறந்து ஏனைய தமிழ் பிள்ளைகளை போல் நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது ஒரு அழகான வீடும் வாங்கி விட்டான். இவா தான் என்னுடைய கேள் பிரண்ட் இவா தான் கல்யாணம் கட்ட போறேன் என்று தன்னுடைய கேள் பிரண்டை அறிமுகபடுத்தினான் தன் தகப்பனிற்கு,சிவாவும் மிச்சம் நல்லம் என்று புன்முறுவலுடன் கை கொடுத்தான்,சுரேஷின் காதலியை முதலே சிவாவிற்கு அறிமுகமானவள் தான்.ஆனால் சுரேசின் காதலி என்று அல்ல நண…

    • 31 replies
    • 5k views
  20. யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவ…

  21. வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில். நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன். நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்…

  22. தண்ணீரிலே தாமரைப் பூ (1) 'வசந்தங்கள் வாழ்த்துரைக்க வான்மேகம் பூத்தெழிக்க சொந்தங்கள் சூழ்ந்து நிற்க சொர்க்கமே அருகிருக்க மங்கள மேளமது சங்கமம் என ஒலிக்க தங்கமாய் வந்ததொரு தரமான வசந்தவிழா' விடிந்தால் திருமணம். வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்…

  23. இஞ்சாருங்கோ என்ன நித்திரையோ அல்லது மெடிட்சேசன் செய்றியகளோ என்று கேட்டபடியே மனைவி சூடான தேத்தனியுடன் சுரேசிற்கு அருகில் வந்து அமர்ந்தாள்.ஒருத்தன் கண்ணை மூடி கொண்டு ஏதாவது பற்றிய் யோசித்து கொண்டு இருந்தாள் உடனே மெடிட்சேசன் என்று நீங்கள் முடிவெடுத்து என்னுடைய "கஸ்பன்ட்" மெடிடேட் பண்ணி கொண்டிருக்கிறார் என்று நாலு பேருக்கு சொல்லுறது இப்ப ஒரு பஷனா போச்சு. உமக்கு தெரியும் எனக்கு உந்த மெடிட்சேசன்,தியானம்,யோகம்,ஞா

    • 30 replies
    • 3.6k views
  24. பிரான்சிலிருந்து டென்மார்க் பயணம். அத்தானின் ஒரு வருட துவசம் என்பதால் பொருட்களையும் வாங்கி அவசரமாக புறப்படுகின்றோம். இரவு ஓட்டம் பலகாரச்சூடு சமையல் என ஆட்கள் தேவை என்பதால் யேர்மனி சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு பயணம் தொடங்குகிறது..... நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன். ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்.. வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.. நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன். திடீரென எனது பாதை முடிவடைவதற்கான பதாதை ஒன்று கண்ணில் தெரிகிறது. பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை. முன்னால் பார்க்கின…

  25. பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என்ன இது தொண்டை அடிக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள். அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.