கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
[size=1]மரணம், [/size]இதோ இந்தக்கணத்திலும் என் மூக்கருகில் வந்து சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போது இரவு ஒன்பது மணி. ‘மிக் 27’ விமானங்கள் பேரிரைச்சலோடு குண்டு வீச அலைகின்றன. காதைப்பிளக்கும் இரைச்சல். உயிரைக்கரைக்கும் இரைச்சல். எந்த வீட்டிலும் வெளிச்சம் இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. எந்த வீட்டிலும் யாருமில்லை. எல்லோரும் பங்கருக்குள். குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. எல்லோருக்கும் அழுகை வருகிறது. ஆனால் அழமுடியுமா. அழுதால் இந்தப் பயம் நீங்கி விடுமா? இந்த அபாயம் தொலையுமா? பயம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமா? எல்லோருடைய கால்களும்தான் நடுங்குகின்றன. இதயத்தின் நரம்புகளில் மரண நடனம். பிரமாண்டமான பாம்பாக அலைகிறது மரணம். அது எங்கே கொத்தப்போகிறது? யாரைக்…
-
- 5 replies
- 848 views
-
-
[size=4] சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை. ‘அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள்’ என்று மேதை லெனின் சொல்லி…
-
- 3 replies
- 766 views
-
-
ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?! நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை. அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்க…
-
- 29 replies
- 4.1k views
-
-
தாயகத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றது. நான் தாயகத்தை விட்டு வெளியேறும் போது அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களில் பலர் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் சிதறிப் போய் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. சிலர் உயிருடன் இல்லை. இப்பொழுது பலர் தாயகத்துக்கு சென்று வருகிறார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் ஒரு செவ்வியில் நல்லூர் திருவிழாவுக்கு ஐம்பதினாயிரம் வெளினாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு தற்பொழுது செல்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல வருடங்களா…
-
- 65 replies
- 12.8k views
- 1 follower
-
-
எனக்கு அவவை பார்க்கும் போது திக் என்றது. அவவுக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது என்பதை அவவின் முகத்தில் தெரிந்து கொண்டேன். முந்தைய நாள் இரவு தான் எனக்கு அவவை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்த்தவர்களை திரும்ப பார்க்க செய்யும் அழகு அவ. எனது அக்காவின் உயிர் நண்பி அவ. பழைய நினைவுகளை ஒருமுறை மீட்டி பார்க்கிறேன். தலையை பின்னியபடி, கைகளிலே சொக்கிலேட்களுடன், நெஞ்சிலே கோல்சரும், கைகளிலே இறுக்க பிடித்தபடி சுடுகருவிகளும் அவர்கள் நடந்துவரும் அழகே தனி அழகுதான். அக்கா ஏ எல் படிக்கும்போது, ஒரு நாள் அம்மாவிடம் பயித்தம் பணியாராம் சுட்டு தர சொல்லிவிட்டு, எப்படியும் அம்மா எடுப்பா என்று மா பேணிக்குள் கடிதம் எழுதி வைச்சிட்டு இயக்கத்துக்கு போனவ தான். அன்றைய நாள் வ…
-
- 10 replies
- 7.2k views
-
-
காலமும் கோலங்களும்............... [size=4]பாஸ்கரன் புலமைப்பரிசு பெற்று அமெரிக்காவுக்கு வந்த போது ....தனிமையை முதலாவதாக் உணர்ந்தான். முதலில் உணவு தேவை பெரும் சிரமமாக் இருந்தது. அத்துடன் இடமும் புதிது அங்கு மனிதர்களும் அன்னியமாக் தெரிந்தார்கள் . கடின் முயற்சிக்கு பின் சமைக்கவும் தன் தேவைகளை சரி செய்து கொள்ளவும் கற்று இருந்தான் காலம் உருண்டோடி மூன்று வருடங்கள் ஆனது மனைவியும் ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் நாட்டில் அவனுக்காய் காத்து இருந்தார்கள். அப்போதெலாம் அதிகம் தொலைபேசி வதியும் கணனியும் அதிகம் நடை முறையில் இலகுவாக இல்லாத காலம். அடிக் கடி தங்களை அழைத்து கொள்ளும்படி கடிதத்தின் மேல் கடிதம் வரும். வெளி நாடு சுவர்க்கம் என எண்ணி இருந்தார்கள் அவர்கள். இங்குள்…
-
- 7 replies
- 1.1k views
-
-
சுவையான தேநீர் போடுவது எப்படி? சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுத…
-
- 2 replies
- 2.4k views
-
-
Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்….. அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான். ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாத…
-
- 22 replies
- 3.4k views
-
-
அடுத்த வீடு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, “என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே! பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா?…
-
- 1 reply
- 1k views
-
-
டிட்வாலின் நாய் சாதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர் ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன. ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=6]மழையின் கொலை....[/size] [size=5]- மாறணி[/size] [size=4]வானுக்கு பூமியிடம் என்ன கோபமோ தெரியவில்லை. அதிகாலை 3மணிக்கு பெய்யத் தொடங்கிவிட்டது மழை. இடியும் மின்னலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க அந்த சத்தத்தால் வந்த தூக்கமும் பறந்து போனது. தூக்கம் வரவில்லை. பலயோசனைகள் எழ கண்ணை மூடியும் உறங்காது விழித்திருந்தேன். அப்போதுதான் ஆற்றோரம் வாழும் லலிதாப் பாட்டியின் ஞாபகம் மூளைக்குள் தட்டியது. ஐயோ அந்தப் பாட்டி பாவம். பெய்த மழைக்கு வெள்ளம் பாறைகளையும் புரட்டிக்கொண்டல்லவா போகும். இந்த முறை நிச்சயம் லலிதா பாட்டியின் வீடு வெள்ளத்துக்குள் அகப்பட்டுப்போயிருக்கும். அவளால் ஓடவும் முடியாதே. கடவுளே லலிதா பாட்டியைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டியவாறு அருகில் படுத்திருந்த …
-
- 0 replies
- 585 views
-
-
[size=5]ஹரியால் எப்பொழுதோ எழுதப்பட்ட கட்டுரை..இப்பொழுதும் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் இன்றி எமது சமூகக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் இன்றி,எங்கள் அடிமை நிலையில் மாற்றம் இன்றி,சிங்கள மேலாதிக்கதனத்தில் மாற்றமின்றி,எம்மவர்களின் மனங்களில் நிலவும் சாதிய மேலாதிக்க எண்ணங்களில் மாற்றமின்றி..எதுவுமே மாறாமல்..எதையும் மாற்றாமல் எங்கள் போராட்டம்.... [/size][size=5]நங்கள் மாறாததால் எங்கள் போராட்டத்தால் எதையும் மாற்றமுடியவில்லையா..?[/size] [size=5]-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-நன்றி ஹரி இராசலெட்ச்சுமி... ‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தணலோடும் கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது மறுபடியும் -தவ.சஜிதரன்- ‘Corpses …
-
- 1 reply
- 889 views
-
-
இது தமிழக அரசியல் இதழில் புலவர் புலமைபித்தன் எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும்?? தொடர் (அரசியல் தொடர் ) இந்த தொடர் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணைக்க முடியுமா தெரியவில்லை என்னால் முடிந்தவரை இணைக்கிறேன் குறைகள் இருப்பின் மன்னிக்கவும் ******************************************************************************************************************************************************************* [size=4]நெஞ்சமும் இல்லாமல்; நீதியும் இல்லாமல் இருக்கிறவர்கள் எல்லாம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்று சுயசரிதம் எழுதிக் குவிக்கிறார்களே! ‘[/size] [size=4]அதனால்தான் நெஞ்சத்துக்குள்ளேயே இருட்டில் கிடந்த ஒரு சிலவற்றையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைத்து எழுதுகிறேன். [/size…
-
- 7 replies
- 1.2k views
-
-
[size=4]தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.[/size] [size=4] [/size] [size=4]அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங…
-
- 2 replies
- 670 views
-
-
ஆன்டன் செகாவ் 'பந்தயம்' மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது. பந்தயம் பனி பொழியும் ஓர் இரவில் தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3] பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனாக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.[/size][size=3] எங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.[/size][size=3] இது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பா…
-
- 2 replies
- 1.4k views
-
-
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது. மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அtவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தன…
-
- 7 replies
- 983 views
-
-
ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: மொழிபெயர்ப்பு: சுரா மூலம்: லேகா புத்தகங்கள் http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது. …
-
- 4 replies
- 34.2k views
-
-
மிகவும் அருமையான எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கதை ,இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை .யாராவது முடிந்தால் இணைத்து விடவும் . . அம்ருதா யூன் இதழில் வெளிவந்த கதை இது .
-
- 13 replies
- 2.3k views
-
-
[size=4]கடற்காற்று குளிராக வீசிக்கொண்டிருந்தது! கிடுகு வேய்ந்த, தனது தோணிக்குள், அரிக்கன் விளக்கைக் கொஞ்சம் தூண்டி எரியவிட்ட சிங்கன், தனது வலது காலின் விரல்களை மெதுவாக, நீவி வீட்ட படி, ஒரு பீடியைப் பத்த வைத்துக்கொண்டான்! சீ! இந்தக் கண்டறியாத 'சரளி வாதத்தாலை' ஒண்டும் ஒழுங்காச் செய்யேலாமல் கிடக்கு! தனக்குத் தானே புறு புறுத்துக் கொண்டான்! வேறெவரும் தோணிக்குள் இருக்கவில்லை! சிறிது முன்னர்தான், களங்கண்டித் தடிகள், ஊன்றும் வேலையில் பாதியை முடித்து விட்டிருந்த வேளையில், இந்தச் சரளிவாதம், அவனது கால்விரல்களை இழுத்து விட்டது! கொஞ்ச நேரம் செல்லச் சரிவரும், என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன், பீடிப் புகையை நன்றாக, இழுத்துவிட்ட வேளையில், அவனது நினைவுகள், கொஞ்சம் பின்னோக்…
-
- 19 replies
- 2.1k views
-
-
கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின். எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! …
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=1][/size] [size=4]கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.[/size] [size=4]'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை![/size] [size=4]மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப…
-
- 24 replies
- 2.2k views
-
-
இறந்து விடுவது இயல்பு... அது முடிவானது . யாராலுமே தவிர்க்க முடியாதது. இது இயல்பாய் நடந்துவிட வேண்டுமா ? எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவது போல உங்களுக்கும். நீங்கள் யார் ? எல்லோரையும் போலசா..தா..ர..ண..மா..ன..வ..ர்..க..ளா ? நீங்கள் சாதாரணமாக இறந்து போகலாமா ? இறந்தும் வாழ வேண்டும் . இறப்பு அதன் பின்பே உன்னத வாழ்க்கை இறந்தும் நீங்கள் எல்லோரும் வாழ்வீர்கள் . திட்டுக்கிட்டு விழித்தான் அவன். அன்று தத்துவ உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்தும் அவன் நினைவுகளிலும் கண்களை மூட கனவுகளிலும் " இறத்தல் " பற்றி விளக்கமளித்து கொண்டிருந்தார். பக்கத்தில் அதனை அணைத்தபடி படுத்திருந்தான் இரண்டு நாள் நண்பன். அவனும் வெறித்த பார்வையுடன் இருந்தான். நேற்று இவனுக்கும் உரை நிகழ்த்தி இருப்பார்க…
-
- 3 replies
- 956 views
-
-
MSN இல் சாத்திரியும் சோழியனும் ... இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டி
-
- 33 replies
- 4.9k views
-
-
எதுவரை சஞ்சிகையில் இருந்து நன்றியுடன் கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன் தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு முதலே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிலிருந்தனர். சரி. ஏன் அபூர்வமாகக் கிடைக்கிற விடுமுறையை …
-
- 2 replies
- 1.1k views
-