கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?! நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை. அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்க…
-
- 29 replies
- 4.1k views
-
-
“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி….” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்…
-
- 11 replies
- 1.9k views
-
-
ராஜ்சிவா- இதோ 2012ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான். “சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது. இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.அது….! ‘மாயா’. மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன…
-
- 67 replies
- 35.3k views
-
-
இன்றைக்கு தந்தையர் நாள் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதிலே இருந்து என்னுடைய ஈழப் பயணக் கட்டுரையை தொடர்கிறேன். பல குழப்பங்களுக்கு மத்தியிலும் நான் ஊருக்குப் போவதற்கு முடிவெடுத்ததற்கு என்னுடைய தாயும் தந்தையும் முக்கிய காரணம். என்னுடைய தாய் ஜேர்மனிக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போய் விட்டார். ஆயினும் அவருக்கு வேறு ஒரு கவலை. அவரை பல விதமான நோய்கள் ஆட்கொண்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பேயே அவர் இறந்து விடுவார் என்று வேறு அவரிடம் ஒரு சோதிடன் சொல்லியிருந்தான். இரண்டு மகன்களும் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், இருவருமே இதுவரை தாயகத்திற்கு வந்து போகாத நிலையில், அதற்கான வசதிகள் இல்லாத நிலையில், தனக்கு ஒன்று என்றால் யார் எல்லாவற்றையும் செய்வார்கள் என்…
-
- 17 replies
- 1.8k views
-
-
[size=5]வருடம்: 1976, [/size] [size=5]மாதம்: ஜூன்[/size] [size=5]நாள்: 27 [/size] குவைத் நாட்டில் இருந்து பகரைன் வழியாக வந்த, SQ763 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய நேரம் காலை 6 மணி 45 நிமிடங்கள். விமானத்தில் இருந்து வெளியேறிய ஐந்து பயணிகளில் நால்வர் நேராக transit பகுதிக்கு சென்று சென்று பாரிஸ் நோக்கிச் செல்லும் Air France AF139 விமானதிற்க்கான check in முடித்து, அங்கிருந்த இருக்கைகளில், ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் வெவ்வேறு இடங்களில், அமர்ந்தார்கள். அதே காலை 8:59 மணியளவில் Air France 139 விமானத்தின் பைலட், கப்டன் Michel Bacos, இஸ்ரேலிய நாட்டின் Ben Gurion விமான நிலையத்தில் இருந்து ஏதன்ஸ் வழிய…
-
- 47 replies
- 11.8k views
-
-
ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…
-
- 137 replies
- 12.2k views
-
-
அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்ட…
-
- 12 replies
- 1.4k views
-
-
அச்சக் காடு - கிருஷ்ணா டாவின்ஸி கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில்…
-
- 1 reply
- 645 views
-
-
கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்தமடத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட புத்தமடத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிழவரிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பைத்தியமா? தெய்வத்தையே எரித்து விட்டீர்களே” என்று கோபத்தில் கதறினார். உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார், ''நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண…
-
- 0 replies
- 737 views
-
-
விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01 மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள். உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை. அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அர…
-
- 1 reply
- 863 views
-
-
“சேர் உதால போகலாமோ” என நான் கேட்க, ம், ம் போங்க போங்க என அந்த ஆமிக்காரன்; கூறினான். நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் வெள்ளந்தியாய் சிரித்தபடி , “தாங்கியூ சேர்” என்று கூறியபடி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கி விரைகின்றோம். யாழ். இந்து மைதானத்தை நெருங்கும்போது மைதானத்தில் ஒரே கூட்டம். வழமையாகப் பூட்டிக் கிடக்கும் மைதானத்து வைரவர் கோவில் கேற்றுக்கள் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சகிதம் நிறைய பேர் கவலை தோய்ந்த முகத்துடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்குது என்று, நானும் நண்பனும் மின்னல் நேரத்தில் மோட்டார் சைக்கிளை நீராவியடி பிள்ளையார் கோவிலடி வீதிக்கு திருப்பினோம். சந்திய…
-
- 0 replies
- 768 views
-
-
உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரி…
-
- 38 replies
- 3.2k views
-
-
வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும். இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள். எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்…
-
- 37 replies
- 5k views
-
-
தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…
-
- 32 replies
- 7k views
-
-
இது கதையில்லை அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார். உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....? வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத…
-
- 6 replies
- 1.3k views
-
-
"மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?" தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்துவிட்டான். இனி அவன் இருக்கும் வரை எழுத ஓடாது. "புதுப் பறவையா?" சுவாமிநாதன் கேட்டான். விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். இயலாமையை நல்லதனம் என்று நினைத்துக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்பவர்கள். சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்கமாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப் பிடிக்காது. அவனைக் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமி நாதனுக்கும் இரக்கம்தான். " பெண்களுக்கே இல்லாத …
-
- 0 replies
- 751 views
-
-
அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் …
-
- 12 replies
- 4.8k views
-
-
நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான். அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....! நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;. இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு. எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக…
-
- 9 replies
- 1.9k views
-
-
[21] அஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான். எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது. உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான். 'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்... "நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன். வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மா…
-
- 9 replies
- 2.9k views
-
-
1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டா வெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இ…
-
- 64 replies
- 8.7k views
-
-
விரும்பிக் கேட்டவள் எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : எஸ்.இளையராஜா ''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான். ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு. 'சினிமா பாட்டைக் கேட்டு யாராவ…
-
- 2 replies
- 5.8k views
-
-
பூதக்கண்ணாடி ஜே.பி. சாணக்யா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு …
-
- 2 replies
- 987 views
-
-
-
- 1 reply
- 811 views
-
-
இது முற்று முழுதாக ஒரு அரசியல் தொடர் அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்-1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந…
-
- 146 replies
- 20k views
-