கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
வடுகநாதம் சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு இருள் அடர்ந்த பனி இரவு. நடுச்சாம வேளை. தோட்டத்து வீட்டின் உள் அறையில் படுத்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு, கண்விழித்தேன். நாய்கள் குரைப்பதும், ஆட்கள் விசில் அடிப்பதும் மாறி மாறிக் கேட்கத் தொடங்கின. கிழக்குப்புறத்தில் இருந்துதான் சத்தம். நான் அவசரமாக எழுந்து ஆசாரத்துக் கயிற்றுக்கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். எழுந்ததும் ஏதோ ஆபத்து என உணர்ந்துகொண்டார். வெளித்திண்ணை விட்டத்தில் செருகியிருந்த குத்தீட்டியை உருவி எடுத்துக்கொண்டு, விசில் சத்தம் கேட்கும் கிழப் புறத்துத் தோட்டத்தை நோக்கி ஓடினார். அதற்குள், வடக்கே செங்கா…
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு மனைவியின் கதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி. அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள். ‘ஹலோ’ ‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது. ‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் …
-
- 0 replies
- 767 views
-
-
பிலோமி டீச்சர் கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா? சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகள் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா?
-
- 313 replies
- 33.1k views
-
-
நிலமை.(நிமிடக்கதை) அசோவனச் சிங்கங்கள் முயல்களையும் மான்களையும் அழைத்து நாமெவரும் மாமிசம் உண்ணக்கூடாது. அது பாவமான செயலென்று, இரத்தம் காயாத வாய்களோடு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றன.
-
- 2 replies
- 1.1k views
-
-
சாய்வு அனோஜன் பாலகிருஷ்ணன் நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் திறந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலைய…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள்! ராஜேஷ்குமார் இரண்டாவது இன்னிங்ஸ் நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள். ‘‘என்ன ஷிவா… ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, அவளோட பி.சி-யில் உன் போட்டோ..! டூயட் பாடாதது ஒண்ணுதான் குறையாம்! ஆபீஸே புகையுது!’’ ‘‘பேத்தல்!’’ ‘‘நம்ப மாட்டேன். இன்னிக்கில்லேன் னாலும் என்னிக்காவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்துடும்…’’ என்றபடி மெர்ஸி எழுந்து போக, அந்த இடத்தில் வந்து உட்கார்ந்தாள் ரீட்டா. ‘‘மெர்ஸி பேசியதை நானும் கேட்டேன். எனக்குத் தெரிஞ்சு அதுல பாதி நிஜம்! ந…
-
- 0 replies
- 511 views
-
-
கடுகு கதை - மருமகள் ராசாத்தியம்மா ...... வச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் . தொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் "மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் " . கண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....!!! ராசாத்தி ...ராசாத்தி ....!!! கூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் . கடும் வெய்யில் நடுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....!!! அந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ... உரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்…
-
- 0 replies
- 2k views
-
-
கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த இழப்பும் குழப்பமும் இல்லை. தங்கள் வீட்டில் ஏதேனும் களவு போனால் அடுத்த வீட்டிலிருந்து திருடிக்கொள்ளலாம் …
-
- 3 replies
- 2.3k views
-
-
நீதிமன்றம் கூடுகின்றது. குற்றவாழிக் கூண்டில் கடவுள் நிறுத்தப்படுகின்றார்!. நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்றும் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு படைத்தீர்? கடவுள்:- நான் படைக்கும்போது அனைவரையும் சமமாகத்தான் படைத்தேன். அவர்கள்தான் தமக்குள் ஆசைகளையும் பொறாமைகளையும் வளர்த்துக்கொண்டு ஒருவரைக் கீளே தள்ளி இன்னொருவர். முன்னுக்கு வரும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். நீதிபதி- ஒருவருக்கு ஆசையையும் மற்றவருக்கு ஆசையுடன் சேர்த்து அதை அடையும் திறமையையும் படைத்தது நீர்தானே? கடவுள்:- இல்லை! ஆசை என்னால் படைக்கப்பட்டது அல்ல? அவர்களே உருவ…
-
- 3 replies
- 1.5k views
-
-
BY: லதா சரவணன் என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். …
-
- 1 reply
- 1k views
-
-
எதிர்ப்பு - ஈழநாதன் "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு ம…
-
- 1 reply
- 564 views
-
-
கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும், ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள். O/L முடித்து கொமர்ஸ் படிக்க வாற குறூப்புகள் பலவகை. முதலாவது குறூப் கொமர்ஸில் கண்டதும் கொண்ட காதலால் படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம். இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பா…
-
- 5 replies
- 1.8k views
-
-
# நம் மனமும் இக்கதையைப் போலதான்! கோவணம்! எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன். ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக …
-
- 0 replies
- 1.3k views
-
-
பலி அனோஜன் பாலகிருஷ்ணன் ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும். குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…
-
- 1 reply
- 1.6k views
-
-
NH - 79 - ஐந்து கிலோ மீட்டர் - சிறுகதை எல்லா நாளையும்போல கார்த்திக் அதிகாலையில் தனது காக்கி நிற கிளாசிக் ராயல் என்பீல்ட் புல்லெட்டில் நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்திற்குள் நுழைந்தான். முந்தைய நாள் இரவு மழை பெய்திருந்ததால் நிலம் முழுக்கக் குளுமை அடைந்து நெகிழ்ந்திருந்தது. நவம்பர் மாத இறுதி என்பதால் கொஞ்சம் குளிரும் பனி மூட்டமுமாயிருந்தது. அந்த நேரத்திலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தெளிவற்ற பனிமூட்டத்திற்கு நடுவிலிருந்து ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது உத்தேசமாய் தெரிந்தது. பொதுவாய் காலையில் இங்கே மூன்றுவகையான மனிதர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் விருப்பமும் , ஆர்வமு…
-
- 3 replies
- 3.9k views
-
-
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - சிறுகதை இன்னமும் பொழுதுவிடியவில்லை. வடமேடு எஸ்டேட்டின் உள்ளாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். குளிர்காலத்தின் விடிகாலைக்கென்றே தனியழகு இருக்கிறது. பெருகியோடும் நதிபோலப் பனிப்புகை. பனி ஈரம்படிந்த தேயிலைச்செடிகள். வழுக்கிவிடும் மண். சரிவில் தெரியும் கண்காணிவீட்டின் சிறிய மஞ்சள் வெளிச்சம். உயரம் மறைத்துக்கொண்ட மரங்கள். சாலை தெரியாத புகைமூட்டம். காக்கி பேன்ட்டும் உல்லன் ஸ்வெட்டரும் அணிந்து தலையில் மப்ளரைக் கட்டியிருந்தான் மூசா. நாற்பத்தைந்து வயதிருக்கும். ஆள் நாலரை அடிக்கும் குறைவான உயரத்திலே இருந்தான். பிறவியிலேயே வலதுகால் இடதுகாலைவிடச் சிறியது. ஆகவே இழுத்து இழுத்து நடக்கக் கூடியவன். பிலாத்து முதலாளி நல்ல உயரம…
-
- 0 replies
- 2.3k views
-
-
நியாயத்தை கேளுங்கோவன்!? கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது. சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? என்ன என்று கேக்கிறியள் போல? நானும், என்ட மனிசனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். பல்கலைக்கழகத்துக்கு போன காலத்தில இவரை பார்த்து, பழகி, மனசு ஒத்து போனதால் திருமணம் செய்யலாம் என நினைத்து என்ட அப்பரிட்ட கேட்டா.. தாம் தீம் தான். யோசிக்காமலே "வேண்டாம் இவன்". எனக்கு சரியான கோவம் பாருங்கோ. நான் சரி என்று இருப்பேனா? கேட்டனே "அவருக்கு நல்ல மனம்,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்..நல்லத எல்லம் சொல்லி பார்த்தேன். …
-
- 17 replies
- 3k views
-
-
சுவருக்குள்ளே மறையும் படுக்கை! சுவருக்குள்ளே மறையும் படுக்கை! அ.முத்துலிங்கம் எ ல்லாமே விசித்திரமாக இருந்தது. கனடா விமான நிலையத்தில் அவரை அழைத்துப் போக மகன் வரவில்லை; மருமகள்தான் வந்திருந்தாள். மகன் வராததற்கு அவள் சொன்ன காரணமும் நம்ப முடியாததாக இருந்தது.கம்பெனி விஷயமாக அவசரமாக அடுத்த மாநிலம் போக வேண்டி இருந்ததாம். நாளை காலை வந்துவிடுவானாம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
அழியாக் கோலம் “பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ”“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்! ”மௌனம்.அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம்.அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம்…
-
- 2 replies
- 768 views
-
-
ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம் 1 சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை. அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போ…
-
- 0 replies
- 770 views
-
-
இன்னொரு தடவை மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்....- Jeya Sellappah ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்... திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அ…
-
- 4 replies
- 702 views
-
-
என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு ஒன்றும்விதிவிலக்கல்ல. நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள் கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம். நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னு…
-
- 1 reply
- 1k views
-