கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: சமையல்காரர் திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கனகசபை. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “கனகா! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் கனகா. நாட்கள் ஓடின. மகன் சிவராமன் பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான். “ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் வாங்கியிருக்க?” என்று கேட்டார் கனகசபை. “மன்னிச்சிருங்கப்பா. நான் இன்ஜினீயரிங் படிக்க விரும்பலை.” …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு செம லவ்வும் சுமார் எதிரியும் வா மணிகண்டன் பத்து வருடங்களுக்கு முன்பாகக் கூட இந்த இடம் பொட்டல் காடாகத்தான் இருந்திருக்கும்.இப்பொழுது பாருங்கள்- நெடு நெடுவென வளர்ந்த மூன்று நான்கு பனைமரங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக நட்டுவைத்த உயரத்திற்கு கட்டடங்கள். அதுவும் துளி இடைவெளி இல்லாமல் வதவதவென கட்டி வைத்திருக்கிறார்கள். இங்கு ஒவ்வொரு சதுர அடியுமே காசுதான். மூன்றுக்கு மூன்று இடத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்தால் கூட சிகரெட்டும், ப்ளாஸ்க்கில் டீயும் விற்று வெகு சுலபமாக பிழைத்துக் கொள்ளலாம். பிறகு எப்படி இடைவெளி விடுவார்கள்? சந்து பாக்கியில்லாமல் வளைத்துவிட்டார்கள். இதெல்லாம் பாக்மெனி டெக் பார்க் வரும் வரைக்கும்தான். இருங்கள். எந்த ஊர், எந்த ஏரியா என்ற எந்தத் தகவலுமே சொல்லாமல் நான் …
-
- 1 reply
- 811 views
-
-
மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! இரு வார சிறுகதை கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால், கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா..? மதுரை அருகே திருமங்கலத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர் சாமியப்பன். டாக்டர் என்றால்... மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடுபவர் அல்ல. ஊசிக்கும், இவருக்கும் ஊசிமுனையளவு கூட சம்பந்தமில்லை. இவர் விஞ்ஞான விஷயங்களில் எக்கச்சக்கமாய் ஆராய்ச்சி செய்து, தலையெல்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது த…
-
- 1 reply
- 1.3k views
-
-
FROM MY UNFINISHED SHORT NOVEL "LOVE BEFORE THE WAR" போருக்கு முந்திய காதல் என்கிற குறுநாவல் எழுதி வருகிறேன். அதில் இருந்து ஒரு சிறு பகுதி. நான் அம்மா வளர்த்த பிள்ளை. அம்மா பிள்ளையாக வளர்ந்ததில் சின்ன வயசில் இருந்தே எனக்கு பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் அமரிக்கன் மிசனறிகளின் செல்வாக்கில் வளர்ந்தவள் என்பதால் பெண்கள்மீதான என்னுடைய அளப்பரிய நேசத்தை புரிந்துகொண்டாள். ஆனால் ‘கொடியில் காயப்போட்ட சேலையைக் கண்டால்கூட ராசன் அதுக்கப்பால் நகரமாட்டான்’ என நண்பர்கள் எப்போதும் என்னைக் கிண்டலடித்தார்கள். சேலைகள் மீதான என் மோகம் காமத்தை முழுமையாக உணராத சின்ன வயசுகளில் இருந்தே ஆரம்பித்தது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.. அப்போதெல்லாம். அம…
-
- 1 reply
- 1.1k views
-
-
அகல்யை புதுமைப்பித்தன் வேதகாலம் சிந்து நதி தீரத்திலே... இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது. அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது. பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.5k views
-
-
மண்வெட்டி- கோமகன் சம்பவத்தில் இவர்கள் : பெயர் : லூக்காஸ் யாகோப்பு தொழில் : விவசாயம் உப தொழில் : தேவாலயத்தில் மணியடித்தல் மற்றும் சேமக்காலையில் குழி வெட்டல் அம்மா பெயர் : எலிசபெத் யாகோப்பு மகள் பெயர் : ஜெனிஃபர் 0000000000000000000000 பிருந்தாஜினி பிரபாகரன் “இந்தா……. காலங்காத்தாலை அடக்க ஒடுக்கமாய் வீட்டிலை வேலைவெட்டியளை செய்வமெண்டில்லை பூசி மினுக்கி வெளிக்கிட்டுட்டாள் வே*********. பெத்த கொப்பன் கோத்தைக்கும் ஒரு அறிவில்லாமல் கிடக்கு. எக்கணம் இனி என்ன வில்லங்கத்தை வாங்கப்போறாளோ என்ரை ஏசப்பா ……..” என்ற எலிசபெத்து கிழவியின் குரல் அந்தக் காலைவேளையை மாசுப்படுத்தியதுமில்லாமல், அழகாக வெளிக்கிட்டு வெளியே வந்த ஜெனிஃபரை ஒரு நிமிடம் நிறு…
-
- 1 reply
- 910 views
-
-
அப்பா புகைக்கிறார் - எஸ். ராமகிருஷ்ணன் தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை. மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள். அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை …
-
- 1 reply
- 885 views
-
-
விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01 மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள். உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை. அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அர…
-
- 1 reply
- 857 views
-
-
கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க! - சூர்யபுத்திரன் அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்! காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது. அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியத…
-
- 1 reply
- 2.6k views
-
-
இடமும் வலமும் ஆர். அபிலாஷ் கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான். அர்ஜுனனின் இருப்பு துரியோதனனை தூங்க விடாமல் பண்ணுகிறது. அவன் பாதி கண்ணை திறந்து பார்க்…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசை முகம் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ரஞ்சிதா எந்த நம்பிக்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள் எனத் தெரியவில்லை. அவளைத் தோளில் தாங்கியிருந்த ராஜனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. காருக்குள் ஜன்னல் காற்று ஆவேசத்தோடு வீசியது. அவள் தலைமுடி அலைந்து, ராஜனின் முகத்தில் சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. காரின் கண்ணாடியைப் பாதி மூடி, காற்றைக் கட்டுப்படுத்தினான் ராஜன். அவனுடைய அசைவு அவளுடைய உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்ற யத்தனிப்பையும் மீறி, அவள் தன் கண்களை லேசாகத் திறந்து, அவனோடு மேலும் நெருங்கி அமர்ந்து புன்னகைத்தாள். துப்பட்டாவைப் போர்த்திக்கொள்ளும் சாக்கில் தோளில் மெள்ளக் கடித்தாள். காலையிலேயே கிளம்பியது, வழியில் சாப்பிட்ட வெண்பொங்…
-
- 1 reply
- 5.3k views
-
-
வெளிச்சக்கொடி - சிறுகதை சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில் திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும். கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில விஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய …
-
- 1 reply
- 319 views
-
-
ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார். பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு. ‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. …
-
- 1 reply
- 1.5k views
-
-
-
காணாமல் போனது யார்? கதையாசிரியர்: பரமார்த்த குரு பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார். ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட், பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று மணி நேரம் நடைபெறக்கூடியது, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபான தயாரிப்பில் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம், ஸ்ட்ராட்போர்ட்டில் ஆண்டு முழுவதும் …
-
- 1 reply
- 788 views
-
-
காட்டில் ஒரு மான் அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
முப்பது லட்சம்! புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை முறை கேட்ப...'' என்றவன், ''நீ இங்கேயே இரு... நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,'' என்றான். அவன் கூறுவது சரியென்று படவே, ''சரி சரி... அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,'' என்றாள், சிரித்தபடி! அவள்…
-
- 1 reply
- 701 views
-
-
க்ளிஷே - போகன் சங்கர் ஓவியங்கள்: செந்தில் குளிமுறிக்குள் நுழைந்த அனில், “மரியம்மே” என்று அலறினான். “இது என்ன?” மரியம்மை எட்டிப் பார்த்தாள். பிறகு, “அய்யே” என்றாள். “நீ கொஞ்சம் வெளியே போ. க்ளீன் பண்ணிடறேன்.” அவன் “இதெல்லாம் பார்த்துப் பண்ண மாட்டியா?” அவள் “போடா போடா... எல்லாரும் இதிலிருந்துதான் வந்தீங்க.” கரகரவென்று தேய்க்கும் சப்தம். கிருஷ்ணமாச்சாரி வழக்கம்போல cognitive psychology in literature எடுக்கும்போது, வைஷ்ணவ தந்திர ஆகமங்கள் பற்றி எடுப்பதை விட்டுவிட்டு அதையே எடுத்துக் கொண்டிருந்தார். உடம்பு சரியில்லைபோல. நன்றாக உறக்கம் வந்தது. உறக்கத்தின் நடுவில் மரியம்மை வந்து `நீ ஒரு ரத்தக் கட்டி’ என்றாள். உடனே சிவப்பு சிவப்பாய்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிரு…
-
- 1 reply
- 837 views
-
-
ஒரு நிமிடக் கதை சாட்டிங் சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத். ‘‘டே சிவா, பிஸியா?’’ ‘‘இல்லை பரத், சொல்லு!’’ ‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’ ‘‘ஆமா!’’ ‘‘எனக்கொரு ஹெல்ப்...’’ ‘‘சொல்லுடா?’’ ‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க...’’ ‘‘நைஸ்... கங்கிராட்ஸ்!’’ ‘‘பொண்ணு ெடல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’ ‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’ ‘‘இல்லை... அவ சென்னைக்கு வந்துடுவா!’’ ‘‘நான் என்ன பண்ணணும்?’’ ‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’ ‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’ ‘‘டன்!’’ ஒரு வாரம் கழித்து... ‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’ ‘‘ம்...’’ ‘‘எப்படி இருக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல்…
-
-
- 1 reply
- 351 views
- 1 follower
-