கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பார்த்துப் பார்த்து... அம்மாவுக்குப் பட்டுப்புடவை, தங்க வளையல், அப்பா வுக்கு விலை உயர்ந்த கைக் கடிகாரம், பாலியெஸ்டர…
-
- 0 replies
- 1.2k views
-
-
10 செகண்ட் கதைகள் கெடுதல் ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா! - சி.சாமிநாதன் வீடு “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் . - எம். விக்னேஷ் கல்வி ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி! - கே.சதீஷ் அறிவுரை ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார். - கே.சதீஷ் ரகசியம் பஸ்சில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். ""ஏம்பா ரமேஷ்... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?'' பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். ""நான் கேட்டுட்டேயிருக்கேன்... ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?…
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=3][/size] [size=5]றஞ்சியின் கதையைச் சொல்ல வேணும். அதன்மூலம் அவருடைய நிலைமையை, அவர் சந்திக்கின்ற பாடுகளையெல்லாம் நாலு பேருக்கு அறியப்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது இதையெல்லாம் அறிகின்றவர்களிடமிருந்து பிறக்கின்ற கருணையினால், அன்பினால், இரக்கத்தினால் அவருக்கு ஆதரவும் உதவியும் கிட்டக்கூடும் என்று நீண்ட நாட்களாக யோசித்திருந்தேன். ஆனால், அந்தக் கதையை எழுதும்போது அது சிலவேளை றஞ்சிக்குச் சங்கடங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் தயக்கத்தோடு அதைத் தவிர்த்தேன். ஒரு காலத்தில் யாரிலும் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்த்திருக்காமல் வாழ்ந்த நிலை மாறி, இப்ப பிறரை எதிர்பார்த்து, பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு, அதுவும் இப்படி பலருக்கும் தெரியக்கூடிய பகிரங…
-
- 4 replies
- 1.2k views
-
-
கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டிSEP 11, 2015 | 8:59by புதினப்பணிமனைin அறிவித்தல் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ – வள்ளுவராண்டு 2047 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகள…
-
- 0 replies
- 1.2k views
-
-
என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு மு…
-
- 3 replies
- 1.1k views
-
-
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று மெல் புன்னகையிட்டவன்… சட்டென்று சொன்னான் “வெயில்தான் அழகு. வெயில்தான் நம்மோட அடையாளம். வெயில் ஒரு இனத்தின் குறியீடு. வெயிலை பழகு…. சரியா ???? என்று. அவன் தலையில் தட்டி சொல்ல தோன்றியது “பக்கி…..மழை படிடா முதல்ல” என்று. அனால் சொல்லவில்லை. அவனுடனான முதல் சந்திப்பே எனக்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
முள்முருக்கை: நெற்கொழுதாசன் நீண்டு கிடந்த தெருவில் நாய் தன்பாட்டில் படுத்துக்கிடந்தது. கண் எட்டும் தொலைவு மட்டும் வேறு எந்த உயிரினங்களையும் காணமுடியவில்லை. பாலை வெய்யில். தொலைவில், தெருவின்மேல் நிரலைகள் தோன்றியது. புளுதி உறைந்த ஓரங்களில் அனல்காற்று மெல்ல மண் துணிக்கைகளை அங்குமிங்குமாக உருட்டிக் கொண்டிருந்தது. தெருவில் ஊற்றியிருந்த தார் நைந்து செருப்பை உள்வாங்கியது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். மறைவுகளிலிருந்து யாரோ கூர்ந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன். என்னையறியாமல் மனம் கூனிக்கொண்டது. திரும்பிப்போ என்று ஒரு குரலும், இல்லை உன் பாட்டில் நீ போ. அன்றும் இப்படித்தான். சிறு அசைவுகூட எழவில்லையே. எதற்காக நீ தயங்குகிறாயென்று, ஒரு குரலும் எதிரெதிராக ஒலித்துக் கொண்…
-
- 6 replies
- 1.1k views
-
-
செயல்! அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான். …
-
- 0 replies
- 1.1k views
-
-
கற்பு! 'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம். ''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், உருவம் மாறி, கேசம் நரை கண்டிருந்தது. ''ஆரம்பிச்ச இடத்துலேயே ஆரம்பிக்கலாமா...'' குழந்தையின் குதுாகலத்துடன் கேட்டார், செல்வம். முகவுரையையும், முடிவுரையையும் குழந்தைத்தனமாய்தான் படைத்திருக்கிறான், இறைவன். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை எழுப்பி பர…
-
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
எங்கட | நெற்கொழு தாசன் ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து விலகிவர முடியவில்லை. அரைகுறை மனதோடு அவரது கதையினைக் கேட்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தேன். எனது நினைவெல்லாம் விடுமுறைக் காலம் முடிய இன்னும் நான்கு நாள்கள் தான் இருக்கிறது என்பதாகவே இருந்தது. அவர் அறிமுகமாகிய அந்தக் காலத்தில், நான் உடுப்பிட்டியில் இருக்கும் பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து செல்வதுதான் வழமையானது. சில தினங்களுக்கு ஒருமுறை, அம்மா ஒருரூபாய் காசு தருவார். வீடு தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
காபி - இள.சிவபாலன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு லலிதா புரண்டு படுத்தாள். அதிகாலையின் வெளிச்சம், மூடப்பட்டிருந்த சன்னல் கதவுகளுக்கிடையே கசிந்து கொண்டிருந்தது. மெலிதாக போர்வையை விலக்கிப் பார்த்தாள். கணவன் அந்த கட்டில் முழுக்க அலங்கோலமாக படுத்துக் கிடந்தான். அவனிடமிருந்து நன்றாக விலகி அவள் ஓரமாகப் படுத்திருந்தாள். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். யாரும் திறப்பது போல் இல்லை. யாரும் எழுந்து விட்ட மாதிரியும் தெரியவில்லை. அவளுக்கு சுடச் சுட காபி குடிக்கவேண்டும் போலிருந்தது. இதே அவளது வீடாக இருந்தால் அப்பா காபி போட்டு கொண்டு வந்து அத்தனை வாஞ்சையுடன் அவளை எழுப்பியிருப்பார். திருமணம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேற்றிரவுதான் அவளது வீட்டில் இருந்து கிளம்பி கணவனோடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத த…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்தத் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும…
-
- 4 replies
- 1.1k views
-
-
உங்களுக்குக் கேட்டதா? கார்த்திக் பாலசுப்பிரமணியன் என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். அந்த நோட்டைப் பார்த்ததை விட என்னை நோட்டம் விட்டதுதான் அதிகம். ” ஐயா.. நீங்க பயப்படுற மாதிரி…
-
- 4 replies
- 1.1k views
-
-
கலசம் – கருணாகரன் அன்று காலை தபால் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரைப் பார்த்தேன். உள்ளே அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் இருந்த கதிரையின் காலோடு அவர் எப்போதும் கொண்டு திரியும் தூக்குப் பை சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவருடைய அடையாளங்களில் இந்தப்பையும் ஒன்று. மிக முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய்வந்த நாட்களிலும் அவர் இந்தப்பையைக் கைவிடவில்லை. அவருடைய தொண்டு ஆர்வம் காரணமாக வாய்த்த அந்தப் பயணங்கள் எத்தனை முக்கியமானவையாக இருந்தன? தன்னுடைய பயணங்களின் வழியாக, அங்கே நிகழும் சந்;திப்புகளின் வழியாக தன் காலடியில் தேங்கியிருக்கும் கண்ணீரைத் துடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பிய பிறகு ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீ…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்க்கை - 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம். ம…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ராமசாமி .................வாரானா?................. அது ஒரு பள்ளிகூட பருவம் ....வீட்டிலிருந்து ....... ...பாடசாலை செல்ல மூன்று கிலோ மீட்டர் நடக்க வீண்டும் . நானும் எனது நண்பி கலைவாணி உம் சேர்ந்தே போவம் .. போகும் வழியில் ..வீதிகள் ...வீடுகளில் உள்ள மா மரத்தில் கண் போகும் ..ஒரு பணக்கார வீட்டில் ...நிறைய மா மரங்கள் வகைக்கு ஒன்றாக ..நட்டு ..காய்த்து... குலுங்கும் காலம் .. அவர்கள் வீட்டுக்கு ... காவலாக ஒரு வேலைக்காரன் .....ராமசாமி .. .சில சமயம் ..அவனை கண்டு கேட்டால் ..ஆளுக்கு ஒன்று பிடுங்கி தருவான். ..மத்தபடி ..கள்ள மாங்காய் ..தான் . ஒரு நாள் என் நண்பி துணிந்து மதிலால் பாய்ந்து ...நிலம் முட்ட ..இருந்த காய்களில் சிலதை பிடுங்கி கொண்டு இருக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
விருந்தா – ஜி. விஜயபத்மா கைலாசத்திற்கு போகும் வழியெல்லாம் விஷ்ணுவுக்கு குழப்பமாகவே இருந்தது .. “என்றுமில்லாமல் எதற்க்காக பார்வதி தன்னை அழைக்கவேண்டும். :” என்ற சிந்தனையினூடே ,,எதுவோ தவறாக நடக்கப்போகிறது என்ற கலக்கம் அவருள் தோன்றியது . கைலாசத்தில் பார்வதி ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள் .. அவள் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள் என்பதை அவள் நிலை உணர்த்தியது . விஷ்ணுவைப் பார்த்ததும் கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள் . எனக்காக இதை செய்வியா என்ற கேள்வியும், கெஞ்சலும் அவள் முகத்தில் விரவி இருந்தது . அன்பு தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவள் எதை யாசிக்கிறாள் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது .அவர் மிக தயக்கத்துடன் பார்வதியை ஏறிட்டார் . அவர் பேச துவங்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பார்வை தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள். ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா. அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற…
-
- 0 replies
- 1.1k views
-
-
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா (பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர் வெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.) இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது. இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார். உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண். தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகள…
-
- 1 reply
- 1.1k views
-