கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நீ அமைதியாக உறங்க… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து நீ அமைதியாக உறங்க… வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான். எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை. நாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான். பின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்…
-
- 0 replies
- 655 views
-
-
ஜெயகாந்தனின் இந்த கதையை கன காலத்துக்கு முந்தி வாசித்து இருக்கிறேன் ..தற்செயலாக இப்ப வாசிக்க கிடைத்தது ...இப்பவும் நல்லாய் தான் இருக்குது வாசிக்கும் பொழுது அவர் கதை சொல்லும் பாணி ...அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் . நீங்களும் வாசி்த்து பாருங்களேன் நான் ஒண்ணும் 'லூஸ்' இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா... எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அதான் ஸார்... நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்... பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீ எங்கிருந்து வருகிறாய்?' வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட…
-
- 3 replies
- 1.5k views
-
-
செல்லிடபேசி கிணுகிணுக்க பதறி அடிச்சு எழுந்த வசன் நேரத்தைப் பார்த்தான். மணி நள்ளிரவு 12.30. வேலைக் களைப்பால் விழுந்து படுத்தவன் நித்திரைக் கலக்கத்தில், "எவண்டா இந்த நேரத்தில.." செல்லிட பேசியைக் காதில் வைத்தபடி மனதில் எண்ணத்தை ஓட விட்டான். "உங்கட அவாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. உடன வைத்தியசாலைக்கு வரட்டாம்" என்று சொன்னதோடு மறுமுனை இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறது. வேலை முடிச்சிட்டு இவ்வளவு நேரம் அங்க தானே நின்றிட்டு வந்தன். இப்ப பிறக்காது 48 மணி நேரம் ஆகும் எண்டாங்கள். அதுக்குள்ள... என்று மனசுக்குள் நினைத்துவிட்டு.. தனது குழந்தையின் முகத்தை காணுற சந்தோசம் மனசில பொங்க.. மனுசி தனிய என்ன பாடுபடுகுதோ என்று எண்ணியபடி பதறியடித்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி மகிழுந்தில்…
-
- 24 replies
- 3.3k views
-
-
வீடே நிறைந்திருந்து.. எல்லாரும் கலகலப்பாய் பேசி சிரித்து கொண்டார்கள்.. ராகவனுக்கு பெண் பார்த்து விட்டு வந்து இருந்தார்கள் சுந்தரம் பிள்ளையின் குடும்பம்.. ராகவன் எத்தினை நாள் நிக்க போகுறாய்.. அப்பா நான் போகணும் கல்யாணம் முடிந்த உடன் பெண்ணை கூட்டி கொண்டு.. ஏன் ராகவன் இந்த அம்மாவோட ஒரு மாதம் நிக்க கூடாதா? இல்லை அம்மா வேலைக்கு போகணும் அம்மா அதுதான்.. அடுத்த முறை வரும் போது நான் நிக்குறன் அம்மா.. அப்ப மாதவியய் ஒரு மாதம் எங்க கூட விடன் ராகவன்.. நீ எங்களுக்கு ஒரே பிள்ளை எவ்வளவு காலம்தான் நாங்கள் உன்னை விட்டு பிரிந்து இருக்குறது... என்னம்மா நாடு சரி வந்தால் நான் உங்கள் கூடதான் அம்மா வந்து இருப்பன்..அதுதான் சொல்லுறன் நீ…
-
- 14 replies
- 6.1k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!' - யாரோ ஒருவன். அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கி…
-
- 5 replies
- 3.2k views
-
-
நீக்கல்கள் – சாந்தன் அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்… வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகி…
-
- 5 replies
- 3.6k views
-
-
நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான். செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் த…
-
- 72 replies
- 5.3k views
-
-
நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான். அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....! நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;. இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு. எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஒரு அன்னையின் நீதிக்கான புலம்பல் பாகம் ஒன்று. http://youtu.be/1YnbpNK9Alg http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 962 views
-
-
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைத்தொகுப்பு: சமூக நீதி புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்து…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01 மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவ…
-
- 7 replies
- 1.4k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கங்கள் 1 தொடக்கம் 5 வரை வாசிக்க இங்கே சொடுக்கவும் நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 06 சங்கரசிவத்தின் கால்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டிருந்த போதிலும் அவனின் மனம் கணேசனையே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிராபத்தான நிலைமையைத் தாண்டாவிட்டாலும் போராளிகளுக்கு இயல்பாகவே உள்ள மனவலிமை அவனைக் காப்பாற்றிவிடும் என சிவம் முழுமையாக நம்பினான். அவன் மடுக்கோவிலைத்தாண்டியபோது வீதிக்கரையில் அமைந்திருந்த அந்தப் பெரிய கட்டுக்கிணற்றில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருபுறமும் நின்று குளித்துக்கொண்டிருந்தனர். அந்த அகதி வாழ்வு பகிரங்கமான இடங்களில் குமர்ப்பிள்ளைகள் கூட நின்று குளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டதை நினைத்த போது நெஞ்சில் ஏதோ…
-
- 29 replies
- 4.7k views
-
-
"அண்ணே எங்க போகவேணும்" பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு "தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ" "அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்" "என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்". . யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்…
-
- 25 replies
- 3k views
-
-
நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீராலானது உலகு! கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி…
-
- 52 replies
- 19.7k views
-
-
நுனி எம்.டி.முத்துக்குமாரசாமி “பிரதமர் உரையாட விரும்புகிறார். தயாராகுங்கள். ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம்” கலியின் அடுக்குப் படுக்கையின் மேல் இருந்த தொடர்புஒலிபெருக்கியில் கன்ணனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்த கலி தன் படுக்கையில் இருந்து மிதந்து இறங்கினாள். ஆஹ், ஒரு வழியாய் பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது! “ரோஜர். வருகிறேன். கல்கி எங்கே?” “வெளியே நடந்து கொண்டிருக்கிறாள். செய்தி அனுப்பிவிட்டேன். நீ வரும்போது வந்துவிடுவாள். வரும்போது வாயில் 7இல் அவள் திரும்பி வர உதவி தேவையா என்று பார்த்துவிட்டு வா” “சரி” கலிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லாமல் நிர்வாணமாய் தன் மார்புகள் குலுங்குவது பழக்கமாகியிருந்தது. ஆடையணிந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன…
-
- 4 replies
- 1.6k views
-
-
நெஞ்சம் மறப்பதில்லை அந்த அரச மரம் அங்கிருக்கிறதா? என்று என் கண்கள் தேடியது. ""அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா... புதர் மண்டிக் கிடக்கு'' என்றான் என் தம்பி. ""அது ரொம்பப் பெரிசாச்சே கொஞ்சம் தள்ளி நின்னு கூடப் பார்க்கலாமே. சுத்தி வரக் கல் பாவியிருக்கும் பாரு. அதப் பார்க்கணும் எனக்கு'' என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியை முகத்தில் கண்டிருக்கலாம். ""சரிண்ணா... வாங்க போவோம்'' அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான். ""இந்த எடம் எதுன்னு தெரியுதா?'' சுற்று மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1) பாகம் 1 தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்…
-
- 5 replies
- 5.7k views
-
-
நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…
-
- 4 replies
- 1.6k views
-
-
Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட…
-
- 2 replies
- 877 views
-
-
நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ........... புலம் பெயர் மண்ணில் , ஒரு மாசி மாத நாளிலே . மதியும் கணவனும் இரு பிள்ளைகளும் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக ,ஒரு சிறு உணவுப்பொருளை அருகிலிருந்த கடையில் வாங்கி கொண்டு , பயணத்தை தொடர்ந்தார்கள் . இவர்கள்வயது ஒத்ததா இரு சிறுவர்களும் அவ்வீடில் இருந்தார்கள். கனடாவின் ,பனிப்புயல் ,வீசியடித்து ஓரளவு ஓய்ந்து இருந்த காலம்,இன்னும் சில இடங்களில் இறுகிய கல்லாகவும் சில இடங்களில் வீட்டு தாழ்வார குழாய் மூலம் உருகி சொட்டு சொட்டாக ... வடிந்து கொண்டு இருந்தது .இவர்கள் அவ்வீட்டை அண்மித்ததும் ,சிறுவர்கள் இருவரும் இறங்கி ஓடி விட்டனர், மதியும் கணவனும் காரை விட்டு இறங்கி , ஒரு அடி எடுத்து வைத்தவள் , கதவு இ…
-
- 10 replies
- 2.1k views
-