Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம், குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை. சரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது. இதை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்? நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!! ஏழாம் உலகம்- ஜெயமோகன் த…

  2. விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து… (இவ்விடயம் ஊர்ப்புதினம் பகுதியில் இணைத்தேன். ஆனால் கதைப்பகுதியில் இந்தக் கைதியின் விடயம் கடந்த வருடம் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. கடந்தவருடம் கதையில் வந்து கருத்தாடிய இதயங்கள் மனமிரங்கி இவனுக்காக உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு இணைக்கிறேன்.) சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 200…

    • 7 replies
    • 2.2k views
  3. லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்…

    • 9 replies
    • 1.3k views
  4. எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…

  5. தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…

  6. 5. அரசி "......பசிக்குப் பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...." - மெளனி நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க…

  7. Started by nunavilan,

    குஞ்சுகள் இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது. "எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன். "இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன். "ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் …

  8. ஜெக் கெவார்க்கியன்! இந்தப் பெயரைக் செய்திகளில் கேள்விப் படும் போதெல்லாம் என் மனதில் பலவாறான எண்ணங்கள் இழையோடும்.இந்த எண்ணங்களில் வியப்பும், விரக்தியும் சில சமயம் மனித வாழ்க்கையின் நொய்மையான தன்மை பற்றிய சலிப்பும் கலந்திருக்கும். இன்று காலை முதல் "டாக்டர் டெத்" என்று அழைக்கப்படும் ஜெக் கேவார்க்கியனின் பெயர் மறுபடியும் ஊடகங்களில் மிதந்து வருகிறது-அதுவே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. டாக்டர் ஜெக் கேவார்க்கியன் 83 வயதில் இன்று இயற்கையான காரணங்களால் காலமானார் என்பது தான் செய்தி. ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மானிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை தீர்ப்பளிக்க முதலே தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி மரணத்தை அளித்த ஒருவர் தான் ஜெக் கேவார்க்கியன். ஆர்மேனியப்…

  9. சீட்டாட்டம் by எஸ். ராமகிருஷ்ணன் இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும், அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற…

  10. அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர…

    • 15 replies
    • 2.7k views
  11. கள நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா …

  12. http://www.youtube.com/watch?v=yl7bif0d7Vc நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றிய வைரமுத்து புரட்சி பெண்ணோ அல்லது புதுமை பெண்ணோ அல்ல, சாதாரணமான யதார்த்தமான பெண் தான்..அங்கு பங்கு பற்றிய வைரமுத்து திரைபடங்களில் உருவகபடுத்துகின்ற பெண்ணொன்று புயலாகிறது என்ற புரட்சி பாணியில் இல்லை தான்.மேலும் தொடர்புசாதனங்களினால் உருவகபடுத்தபட்டு உரு கொண்டு இருக்கும் நகர் புற பெண்களின் தங்களுக்குள் கொண்டிருந்த பொய்மையான ஆளுமையை அதில் உடைத்து எறிந்து இருக்கிறார் அவ்வளவு தான் அந்த நிகழ்ச்சியை மட்டும் பொருத்தவரையில் .அதை விட்டு விட்டு நகர் புற பெண்கள் இழந்த பண்பாடு கலாச்சாரம் அடக்கம் வெட்கம் அச்சம் போன்றவற்றை வைரமுத்து அதில் காட்டிவிட்டார்.அதனால் இந்த வைரமுத்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்த…

  13. எனக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது... கீழ் உள்ள விபரங்களுள்ளவரை யாருக்கும் தெரிந்தால் தகவலை தெரிவித்து விடுங்கள்...வலைபதிவுயூடாக இந்த செய்தியை பார்ப்பவர்கள் சம்பந்த பட்டவர்களை அடையாளம் கண்டு சில நேரம் உதவுவார்கள் என்ற நோக்கி இதை பிரசுரிக்கிறேன் அன்பு உறவுகளே கனடாவில் இருந்து இந்தியாவுக்கு சென்றிருக்கும் திரு திருமதி செல்வதுரை இளையதம்பி ( ஆனந்தலச்மி ) தம்பதியர்களின் Passport மெட்ராஸ் இல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது . இவர்கள் பளையை சேர்ந்தவர்கள் நல்லுரிலும் இருந்திருக்க வேண்டும் இவர்களை தெரிந்தவர்கள் அவர்களுக்கு அறிவித்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும் . சிவா 416 493 6117 SIVA RATNASINGAM VERICO The Mortgage Practice SENIOR MORTGAGE CONSULTANT TEL:…

    • 9 replies
    • 2.5k views
  14. தங்கச்சி.. புள்ள.. என்னம்மா.. எங்க புள்ள போயிட்டு வாறா..?! உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன். ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன். ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு…

  15. பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும் டிசே த‌மிழ‌ன் ப‌குதி-01 1. பொலித்தீன் பையைத் த‌ன்னுட‌ல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் ந‌ண்ப‌னைப் ப‌ற்றிய‌ க‌ன‌வு அவ‌னைத் திடுக்குற‌ச்செய்து விழிப்ப‌டைய‌ச் செய்த‌து. நேர‌ம் என்ன‌வாயிருக்குமென‌ சிவ‌ப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த‌ அலார‌மைப் பார்த்த‌போது 3.25 A.M என்றிருந்த‌து. இனி விடியும் வ‌ரைக்கும் நித்திரை வ‌ராது என்ற‌ நினைப்பு அவ‌னுக்கு இன்னும் எரிச்ச‌லைக் கொண‌ர்ந்த‌து . இப்போதுதான் முத‌ற்த‌ட‌வையாக‌ ந‌ண்ப‌ன் எரிந்துகொண்டிருக்கும் க‌ன‌வு வ‌ருகின்ற‌து என்ப‌த‌ல்ல‌; முன்ன‌ரும் ப‌ல‌முறை வ‌ந்திருக்கின்ற‌துதான். ஒவ்வொருமுறையும் அல‌றிக்கொண்டு அத‌ல‌பாதாள‌த்திற்கு விழும் க‌ண‌த்தோடு ஓர் உறைநிலை…

  16. குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது. அவளின் பிரச்சினை (சிறுகதை) -ஆனதி- தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்க…

  17. "-------" கள் தினம். காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது. வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று…

  18. குமாரசாமியின் பகல் பொழுது பிரபஞ்சன் குமாரசாமி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தெருவில் நின்றார். அவர் ஆச்சரியப்பட்டுப் போகும்படியாக இருந்தது, அந்தப் பகல் பதினொரு மணிப் பொழுது. தெருவில் அரக்கப்பரக்க அடித்துக் கொண்டு ஓடும் மனிதர்களைக் காணோம். எல்லோரும் அலுவலகக் கூண்டுக்குள் போய் முடங்கிக்கொண்டார்கள் போலும். அதிர்ஷ்டவசமாக வானம் மந்தாரமிட்டுக் கிடந்தது. மாலை நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் மட்டும் கிடைக்கும் தண்ணீர்க் காற்று அப்போது வந்து அவரைக் குளிப்பாட்டிற்று. உலகம் ரொம்பப் புதுசாய் இருந்தது குமாரசாமிக்கு. அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப் போல. அடைக்கலசாமி நேற்று இறந்து விட்டாராம். சுமார் முப்பது வருஷங்களாகக் குமாரசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார…

  19. இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:- முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். முன்னுரை நான் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் 2006ம் ஆண்டு காயமடைந்து இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளி. எனது வயது25. 2009யுத்தம் முடிந்து நான் சரணடைந்து பல இன்னல்கள் நடுவில் இன்று உயிர்வாழ்கிறேன். தடுப்பிலிருந்து வெளி வந்த பின்னர் நான் தனிமைக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது பல நிஐங்களின் நினைவுகள் என்னுள் நிழலாடி என்னைத் துயரங்களால் சுற்றிக் கொண்டது. என்னை நான் அழிக்கும் நிலையிலும் இருந்தேன். எனக்காக அக்கறைப்பட்டு எனது சோகங்களைக் கேட்க யாருமில்லாத அந்த நாட்க…

  20. நான் முதல் முதல் கர்ப்பமான போது எனக்கு 16வயதும் 5மாதங்களுமே நிரம்பியிருந்தன. திருமணமாகிய முதல் மாதமே நான் கர்ப்பமாகி விட்டேன் என்ற போது எனது வயதை நினைத்து எல்லோரும் பயப் பட்டார்கள். எனக்கு அதன் விளைவுகள் ஒன்றும் அப்போது பெரிதாகத் தெரியவில்லை. போகப் போகத்தான் குமட்டல், சத்தி, ஏதோ ஒரு வித அசௌகரியமான தன்மை.. என்று எல்லாவற்றையும் உணர்ந்தேன். அப்போது மனதில் பெரிதளவான சிந்தனைகள் இல்லை. முதல் 5மாதங்களும் எப்போதும் சோர்வு. பசிக்கும். சாப்பிட மனம் வராது. நேரம் காலம் தெரியாமல் ஆழ்ந்த நித்திரை. முதல் மாதம் முற்றாக உடல் மெலிந்து விட்டது. இரண்டாம் மூன்றாம் மாதங்களில் வயிற்றின் அடிப்பகுதி எனது பார்வைக்கு மட்டும் மெதுவாக வெளித் தெரியத் தொடங்கியது. நான்காவது ஐந்தா…

  21. இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்ப…

  22. இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்…

  23. கடைசிச் சடலம் யோ.கர்ணன் ஓவியங்கள் : ஸ்யாம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளதுஇ ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டுஇ வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர்இ ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதுஇ பிளந்த வயிறுஇ மரண ஓலம்இ அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிரஇ வேறு எதுவும் நினைவில் இல்லை. நா…

  24. மனசுக்குள் என்ன..?! "என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார். ஏன் ஆச்சி சாப்பிடாமல் இருக்கிறீங்கள். சாப்பிடுங்கோ. " கன காலமப்பு இப்படிச் சாப்பாடுகள் கண்டு.. நீ நல்லாய் இருப்பாய் மோனை" மீண்டும் மீண்டும் ஆச்சியின் வார்த்தைகள் எங்களைப் பாராட்டுவதிலையே குறியாய் இருக்குதே தவிர கொடுத்த உணவை கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. இதை அவதானித்தப்படியே நான் சற்று அப்பால் நகர்ந்தேன். அப்படி என்ன தான் இருக்கு அந்த ஆச்சிக்கு எங்களில பாசம் காட்ட, மனதுக்குள் நானே எனக்குள் பேசி ஏக்கத்தை வளர்த்தப்படி மற்றவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினேன். அவை பரிமாறப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.