Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.

  2. பூதக்கண்ணாடி கதையாசிரியர்: ஜே.பி.சாணக்யா பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப…

  3. பூதக்கண்ணாடி ஜே.பி. சாணக்யா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு …

    • 2 replies
    • 980 views
  4. எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள் கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் நிறைய பூ வைத்திருந்தாள். தெருவி…

  5. மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார். “ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது. “ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர். அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் …

    • 4 replies
    • 1.3k views
  6. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்......... ஏதாவது எழுதுவோம் என்று உட்கார்ந்தால் மூளை நரம்பு மண்டலம் ஏதோ ஒரு அமுக்கத்திற்குள் சிறைப்பட்டதுபோல் விடுபட முடியாத.. வார்த்தைகளால் புனைய முடியாதவையாக மூழ்கடித்துவிடுகின்றன. எழுத்து வெளிகளில் அப்பட்டமாக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இக்காலம் நகர்கிறது. மனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் ஒரு பேரவா முறுக்கெடுத்து சிலசமயங்களில் தொண்டைக்குழியை திருகுவதுபோல் உயிரையே உலுப்பி விடுகிறது. அடடா கதைகதையாம் பகுதில் வந்து என்னுடைய புலம்பலை எடுத்துவிடுகிறேன் மன்னிக்கவும். தொடர்கிறேன், இனி, இங்கு எழுதப்போது எழுத்துக் குவியலுக்கு பொதுத் தலைப்பாக "தொலையா முகம்" இருக்கும் மற்றப்படி அதற்கு உட்பட்டுவரும் ஆக்கங்கள் அதனதற்குரிய தலைப்புகளு…

  7. வாங்கோ.. தம்பியவை.. பிள்ள.. ரஞ்சினி.. இந்த நாய்களைப் பிடிச்சு வைச்சிரு.. தம்பியவையை உள்ள வர விடுகுதில்ல... அயலில் இருந்த அந்த ஆன்ரியின் வீட்டு கேற்றடியில்.. வரவேற்பில் நெகிழ்ந்த படி.. நானும் என் உடன்பிறவாத தம்பியும்.. நாங்கள் என்றுமே போயிராத அந்த வீட்டுக்குள் நுழைகிறோம்.. சுற்றும் முற்றும் இருந்த வகை வகையான பூமரங்களை.. விடுப்புப் பார்த்தப்படி... வீட்டு வாசலை அடைந்த நாங்கள்.. ஆன்ரி.. இந்த என்வலப்பை அம்மா உங்களட்ட கொடுக்கச் சொல்லி தந்து விட்டவா என்று சொல்லி நான்.. அதை நீட்ட.. நாங்கள் வந்திருக்கின்ற நோக்கத்தை அறிந்து கொண்ட ஆன்ரி.. நீங்களே அதை அக்காட்டை கொடுங்கோ.. என்று சொல்லி.. எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றா. என்ன.. அக்காவோ.. எங்கட வயசை ஒத்தவா.. பள்…

  8. பூமாதேவி சிரிக்கிறாள் பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்…

  9. அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி

    • 2 replies
    • 1.5k views
  10. இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது... புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?! புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும். இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது.. சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது... சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்... கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??! சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது.. அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அத…

  11. பூரணம் - சயந்தன் May 8, 2019 பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவி…

    • 3 replies
    • 1.3k views
  12. தெரிந்த விடயம், நாம் எல்லோரும் நாளாந்தம் அனுபவிக்கும் ஒரு விடயமென்றாலும் அதை சுவைபட எழுதுவது என்பது எல்லோராலும் இயலுவதில்லை...அப்படி சுவைபட எழுதக்கூடியவராக இருந்தும் அத்தி பூத்தாற்போல் எப்பவாவது எழுதும் நண்பர் சாய் பிரசாத்தின் பதிவொன்று... __________________________________________________________________ பூவரச மரமும் சில பின்னிரவுகளும்.... யாழ்ப்பாணத்தின் புழுதி மண்டிய கிரவல் வீதிகளில் கழிந்தது என் பால்யம். கிரவல் வீதியும், அது சார்ந்த ஊரும் தேவதைக்கனவுகளின் மிச்சம்போல் இன்னும் நினைவிலிருக்கிறது. மருதங்குள வெளிகளில் நீந்தியும் ,கிட்டிப்புல்லு அடித்தும், விடிய விடிய கண்விழித்தும் கோஸ்டிபார்த்த நண்பர்கள் நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கிறார்கள…

  13. Started by நவீனன்,

    பெட்டை "லொள் லொள் லொள்'' அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்து, கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான். வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வை கறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்…

    • 1 reply
    • 1.4k views
  14. கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் த…

  15. பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! | சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் | பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான்.

  16. பெண் பாவம் வேண்டாம்! கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இடைப்பட்ட ஊரில் திருமணம் ஒன்றுக்கு நானும் என் தோழியும் கிளம்பினோம். பெண்ணின் தாயார் எங்களின் தோழி. திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது. மறுநாள் விடிந்ததும் திருமணம். எல்லோரும் உற்சாகமாகப் பேசிவிட்டுப் படுத்தோம். விடிகாலை மாப்பிள்ளை வீட்டார் இருந்த பகுதியில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் தாய் மாமா இரவு படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. மணப்பெண் குளித்து பாதி அலங்காரத்தில் இருக்கிறாள். சமையல் வேறு பாதியில் நிற்கிறது. அரசல் புரசலாக பெண்ணின் ராசி பற்றி விமர்சனம் எழுகிறது. என் தோழியின் குடும்பத்தினர் கையைப் பிசைந்து…

  17. கல்யாணி என்றாலே எல்லாருக்கும் பிடித்த விஷயம்.. ஆமாம் இந்த கல்யாணியும் அந்த கல்யாணி பூவை போல மணம் வீசியவர்தான்.. .கல்யாணிக்கு ஒரு தங்கை கவிதா.. அப்பா அம்மாவோட யாழில் இருந்தார்கள்.. அவர்களின் வீடு கடல் ஒராமாய் இருந்த படியால் அவள் கடல் அழகை பார்த்து ரசிப்பாள்...எவ்வளவு அமைதியாக இருக்குறது கடல் இப்போது ஆனால் சில நேரம் இந்த சிங்கள வெறி யாளர் களால் கலங்கி போவாது உண்டு..? கல்யாணி பாடசாலையிலும் தென்றலாய் மணம் வீசினாள்.. அவள் வீட்டில் மட்டும் இல்லை படிப்பிலும் சுட்டி பெண்தான்.. எந்த துறையிலும் கல்யாணி பூவை போல மணம் வீசி கொண்டுதான் இருந்தாள்... தாய்க்கு தனது மகள் எல்லா துறையிலும் சிறந்து விழங்குவதை நினைத்து பெரு மிதம் அடைந்தாள்..பெத்த மனசு சந்தோசத்தில் இ…

    • 8 replies
    • 3.3k views
  18. Started by வீணா,

    வணக்கம். என் பெயர் சரேஜா." கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். "உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் ... " பாதிலேயே நிறுத்திவிட்டாள். "வாங்க ... வாங்க" என்று வெளியே வந்தாள் சத்யவதி. முன் பக்கத்தில் இருந்த சாமந்தி பூஞ்செடிகளுக்கு நடுவில் இருந்த பாதை வழியாக பக்கத்தில் இருக்கும் போர்ஷனுக்கு அழைத்துப் போனாள். சாத்தியிருந்த தாழ்பாளை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். "மூன்று அறைகள். கடைசியில் இருப்பது சமையல் அறை. கொல்லையில் குழாய் இருக்கு." "வாடகை எவ்வளவு?" சரோஜா கேட்டாள். "அறுநூறு. கரெண்ட் சார்ஜ் தனி." "எனக்குப் பிடித்திருக்கு. நாளைக்கே வந்துவிடுகிறேன்" என்றாள் சரோஜா. சரோஜாவின் பு…

  19. பெண்ணாய் பிறந்தால் என்னவாம்? ''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா. ''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா வழியுது பாரு...'' என்று அவள் தலையில் குட்டி,''நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போறவ நீ, இப்படி வீட்டு வேலை செய்தா, 'பொண்ணை சரியா வளர்க்கல'ன்னு என்னையதானே உன் மாமியார் கொறை…

  20. பெத்த அம்மா...வளர்த்த அம்மா... கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி பெற்ற குஷியுடன் மட்டையைச் சுழற்றியபடி வீட்டில் நுழைந்தான் கார்த்திக். சமையலறையில் எண்ணெய்யில் பொரியும் பூரியின் மணம் வாசலிலேயே வரவேற்றது. "ஹை... பூரி ...'' மட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்தான்... கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டபடி கத்தினான்... " அம்மா டிபன்'' "மல்லிகா கார்த்திக் வந்துட்டான் பாரு.இந்தா அவனுக்கு கொண்டுபோய் கொடு''...ஒரு தட்டில் நாலைந்து பூரிகளை வைத்து குருமாவையும் ஊற்றி நீட்டினாள் வனஜா. "வேண்டாண்டியம்மா உன் பிள்ளைக்கு நீயே பரிமாறு. சொல்லிட்டேன்...'' "உனக்கும்தான…

  21. பெத்த மனசு ( சிறுகதை) செந்தமிழ்ச்செல்வி தம்பி மதியழகா... நான் உன் கிளி சின்னம்மா பேசுறன்பா.... உன் அம்மாவ ஒருதடவ வந்து பார்த்துட்டு போயிடப்பா... மருந்து மாத்திரை எதுவும் சரியாகல... எதுவும் சொல்லமுடியாதுப்பா.... என்று பேசிய கிளி சின்னம்மாவின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்தன் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது... சரிம்மா... நான் சீக்கிரமா வரன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு எனது அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் அப்பா எனக்கு ஆறு வயசிலயே விபத்தில இறந்திடாரு... அப்போ தங்கை றேனுவிற்கு மூனு வயசு. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அம்மாதான்... அம்மா படிகல ஆனா பக்குவமானவங்க.. நல்லது கெட்டது எல…

  22. பெய்யெனப் பெய்யும் மழை குமரன் கிருஷ்ணன் முன் குறிப்பு: 1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி. 2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால‌ அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத‌ மனிதர்கள்…

  23. பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............ அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை. பண்ணை வீட்டுக்கு போகும் பிரதான நீர் வழங்கல் குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை …

  24. Started by nunavilan,

    பெரியாத்தா வீட்டுவாசலிலேயேபெரியாத்தாஉட்கார்ந்திருப்பார்.வீட்டுக்கு வருபவர்களின்கண்களில் சட்டென படவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம்.தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு. தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை. “வாங்க தம்பி! உட்காருங்க” “நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க” “நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியேசெத்துட்டாருயா” “எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?” “எல்லாம் குடிதான…

  25. கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…

    • 2 replies
    • 943 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.