Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. தெணியான் என்ற நாவலாசிரியர் எழுத்தாளர்: நா சுப்பிரமணியன் தெணியான் என்ற புனைபெயர் தாங்கிய கந்தையா நடேசன் அவர்கள் ஈழத்தின் சமகாலத் தமிழிலக்கிய வரலாற்றிலே தனிக்கவனத்துக்குரிய இலக்கியவாதிகளுள் ஒருவருமாகத் திகழ்ந்து வருபவர். இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்தி நிற்கும் முற் போக்குப் பார்வை கொண்ட இலக்கியவாதியான இவர், புனைகதைப் படைப்பாளியாகவும் விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் சிந்தனையாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஒரு படைப்பாளி என்ற வகையில் இவர் தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் முரண்பாகள், சிறுமைகள் மற்றும் அறியாமைசார் அவலங்கள் முதலியவற்றைத் தோலுரித்துக்காட்ட முற்பட்டு வருபவர். இவ்வகையில், ஒரு நாவலாசியருமாக அவர் புலப்படுத்தி நிற்கும் …

  2. இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.-கற்சுறா கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம்…

  3. நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன் தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக 2008/2009 இல் பதவி வகித்த இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்று தற்பொழுது …

  4. தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம். லெனின் அவர்கள் இயக்க…

  5. இனிய வணக்கங்கள், நீண்ட நாட்களின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி. இன்று ‘வேரும் விழுதும்’ பகுதியில் - கனடா நாட்டில், ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ள கலைஞர் ராகவன் அவர்கள் பற்றி சில எண்ணவோட்டங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். +++ சில வருடங்களின் முன்னர் யாழ் இணையத்தின் ஊடாக நமது கலைஞர்கள், நம்மவர் படைப்புக்கள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை உங்களுடன் பரிமாறினேன். அச்சமயத்தில் யாழ் இணையம் சார்பாக ராகவனையும் பேட்டிகண்டு வலைத்தளத்தில் பிரசுரம் செய்ய விரும்பினேன். இதுபற்றி ராகவனுடன் முகநூலினூடாக தொடர்புகொண்டேன். ஏனோ தெரியவில்லை, எதுவித பதிலும் அவரிடம் இருந்து அப்போது கிடைக்கவில்லை. ஆனாலும்.. இன்று …

    • 120 replies
    • 12.5k views
  6. வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுக…

  7. ‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன் தீபச்செல்வன் ‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போ…

    • 3 replies
    • 1.8k views
  8. சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. துயிரில் இருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்குதத்துவம் ஏற்புடைய ஒன்றே. ஆனால், எமக்காக எமது பெயரால் நடப்பவற்றை எல்லாம் நன்மையானவை என்று பேசாது ஏமாளிகளாக இருந்து விடமுடியாது. உள்ளூர் கொண்டாட்டங்கள், தேசியக் கொண்ட…

  9. தகவல் மூலம்: மின்னஞ்சல்

  10. டிசே தமிழனின் கேள்விகள் டிசே தமிழன் Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க நான் க…

  11. ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம். "யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?” என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத…

  12. அய்யைய்யோ.. சீமான் விடுதலையா. I SUPPORT wikileaks JulianAssange (உலக தாதா அமெரிக்காவின் டவுசரை கழட்டும் விக்கிலீக்ஸை பாராட்டுகிறேன். இதுக்கு பேர்த்தான் புலனாய்வு.. லோக்கல் புலனாய்வு புலிகளே.. பாடம் படிங்க.) பிரமாண்ட ஊழல் யாருக்காக.. எல்லாம் மக்களுக்காக.. ஆஹா... சொல்றதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்னு அடிக்கடி கருணா சொன்ன மேட்டர் இப்பத்தானே புரியுது.. புத்தாண்டு வாழ்த்துகள்.. நல்லகாலம்.. தமிழுக்கு சேவை செய்யத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சோம்னு சொல்லல. ஐ.பி.எல். ஏலம் முடிஞ்சுடுச்சு.. கேப்டன் ஏலத்துக்கு ரெடி..

  13. தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது! -நாஞ்சில்நாடன்- ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன். எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!'' சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. 'தலைகீழ்விகிதங்கள்’, 'எட்டுத்திக்கும் மத யானை’, 'என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். 'சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் ச…

  14. ஈழக் கலைஞரும் நடிகையுமான இசைப்பிரியா சிறீலங்கா சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு படைகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் அண்மையில் சனல் 4 என்ற பிரித்தானிய ஊடகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

  15. 1999 பிந்திய செய்தி: தகவல் மூலம்: மின்னஞ்சல் +++ இனிய வணக்கங்கள் லெனின், நீங்கள் உங்கள் குழுவினருடன் சேர்ந்து கனடாவில் உருவாக்கிய ஓர் அழகிய படமாகிய 1999ஐ பார்த்த பூரிப்புடன், முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1999 படம் உருவாக காரணமாக அமைந்த கலைஞர்களுக்கும், 1999 திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ஊக்கம் கொடுத்த மக்களிற்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றேன். கலைஞன்:நம்மவர் படைப்புக்களிற்கு அதிகளவு ஊக்கம் தராத, நம்மவர் படைப்புக்களை பெரிதாக கண்டுகொள்ளாத - முக்கியமாக நம்மவர் படைப்புக்களிற்கு பொருளாதார ஆதரவு தருவதற்கு பின்நிற்கும் ஓர் மக்கள் கூட்டத்…

    • 33 replies
    • 11.1k views
  16. தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி - லெ.முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் 'மல்லிகை' இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான 'சுமையின் பங்காளிகள்' என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் 'பறவைகள்' நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனிய…

  17. இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாகத் தனது எழுத்துகளாலும் அரசியற் செயற்பாடுகளினாலும் ஈழச் சமூகத்திலும் அனைத்துலகத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் தனது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அறிமுகம் தேவையற்றது. எனினும் இளைய வாசகர்களிற்காகச் சில குறிப்புகள்: 1944ல் ஈழத்தின் உடுவில் கிராமத்தில் பிறந்தவர் ஜெயபாலன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். மரபு அளித்த கொடையாக சந்தங்களாலும் ஓசைநயத்தாலும் நவீன கவிதையை எழுதிய ஈழத்தின் முதன்மையான கவிஞன். 1984ல் ' தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்' என்ற ஜெயபாலனின் முதல் நூல் வெளியாகியது. சூரியனோடு பே…

  18. முறிகண்டி பிள்ளையார் சிறிய ஆலயம் என்றாலும் - உன் மகத்துவம் பெரியது விநாயகனே வேற்று மதத்தவுறும் பயபக்தியுடன் வழிபட்ட சிறப்பான ஆலயம் அன்று அந்நிய ஆக்கிரமிப்பிலும் தலை நிமிர்ந்த பெருமைக்குரிய சந்நிதி பிரயாணம் செய்பவர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்த செல்ல கடவுள் காலம் காலமாக நீ சேர்த்த பணத்துக்கு இன்று வன்னித் திருப்பதியாக தங்க கோவிலுக்குள் குடி இருக்கலாம் - ஆனால் நீ பக்தரோடு பக்தராக இருந்தாய் இவ்வளவு பெருமை உள்ள உனக்கு இன்று சோதனைக் காலமா? அந்நிய சிறைக்குள் சிக்கி தவிக்கின்றாய் ஆக்கிரமிப்பாளர்களின் அழுங்குப் பிடி உன் கழுத்துக்குமா வேழ முகத்தானே பிள்ளையாரப்பா, நாங்கள் எங்களை காப்பாற்ற சொல்லவில்லை நீ உன்னையே காப்பாற்றி கொள் உன்ன…

    • 2 replies
    • 2.8k views
  19. அஞ்சலி : அனுராதா ரமணன் என்றொரு மனுஷி அம்பை பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மே 16 அன்று காலமானார் என்னும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஏகப்பட்ட உபாதைகளால் அவஸ்தைப்பட்ட அவர் மருத்துவமனைக்குப் போவதும் வருவதும் சகஜமாக நடைபெறும் ஒன்று. ஒவ்வொரு முறையும் திரும்பி வந்து அதைக் கிண்டலும் கேலியும் கலந்த ஓர் அனுபவமாக எழுதுவார். ஸ்பாரோ சார்பில் அவரைப் பேட்டி கண்டபோது அவர் சுவாரசியமான நபராகத் தெரிந்தார். அக்கால நடிகர் ஆர். பாலசுப்பிரமணியத்தின் பேத்தியான அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று. அவ…

    • 1 reply
    • 1.3k views
  20. கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம் ஷாஜி “யேசுதாஸ் மிக அழகான குண்டுப் பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தார். ஒரு கொடூரமானவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அப்போது யேசுதாஸ் தனது வாளை எடுத்துச் சுழற்றி சண்டையிட்டு அவனைக் கொன்று விட்டார். நீ அவசியம் அந்த வாள் ‘ஃப்ளெயிட்டைப்’ பார்க்கவேண்டும்! என்னா ஒரு ஃப்ளெயிட்!வாள் சண்டையில் யேசுதாஸை அடிக்கவே முடியாது” தான் முதன் முதலாகப் பார்த்த சினிமாவின் கதையை வசீகரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தங்கன். ஊரில் சில்லறை வேலைகளைப் பார்த்துத் திரிந்துகொண்டிருந்த பதினாறு வயதான அவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பத்து வயதான எனக்கு ஊர்க்கதைகளையும் பாலியல் அறிவையும் தங்கு தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தவன். வயல்களில் சின்னச் சி…

    • 1 reply
    • 2.3k views
  21. சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் ம…

  22. திரு. அப்துல் ஹமீது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் என்று சொல்லும் போது, திரு. அப்துல் ஹமீது அவர்களின் பெயர் ஞாபகத்திற்கு வராதவர்கள் மிகவும் சொற்பம் என்று கூறலாம். தனது காந்தக் குரலினால் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றிப் பிற பல தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எண்ணிலா ரசிகர்களைக் கவர்ந்தவர் திரு அப்துல் ஹமீது. வானொலி மட்டுமல்ல, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், பல்வேறு தமிழ் மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பல நாடுகளுக்கும் சென்று ஈடில்லாப் புகழ் ஈட்டிக்கொண்டிருப்பவர். கடந்த வருடம் லண்டனில் இவரது ஒலிபரப்புத் துறையின் பொன்விழா நடைபெற்றது. நிலாச்சாரல் வாசகர்களுக்காகத் திரு. அப்துல் ஹமீது வழங்கிய சிறப்புப் பேட்…

    • 12 replies
    • 4.8k views
  23. கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர். வாழ்க்கைக் குறிப்பு இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார். மெல்லிசைப் பாடல்கள் இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிக…

    • 1 reply
    • 1.5k views
  24. கவிஞர் கந்தவனம் பவளவிழாக் காணும் எங்கள் பாவலன் சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும். இவருக்கு கவிமணி, மதுரகவ…

    • 12 replies
    • 2.6k views
  25. http://www.youtube.com/watch?v=xTLwfbDzvRQ&feature=related

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.